சோழ பரம்பரை - மதுராந்தகன்

633 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Oct 3, 2015, 4:02:10 PM10/3/15
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Banukumar Rajendran, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, ara...@gmail.com, Raji M, Vasudevan Letchumanan
நூ த லோ சு 
மயிலை 



திரு தேமொழி  மதுராந்தகன் தொடர்கின்றது 

மதுராந்தகன் எனும் சோழர்  பெயர் 

சோழ பரம்பரை வரலா ற்று ஆசிரியர்களால் 
வல்லுனர்கலால் இவ்வாறு   காட்டப்படுகின்றது 

from net 

              Early chozhas 
 Ilamcetcenni 270 BC.
Karikala Chola son
Nedunkilli . son.
Killivalavan .son. 
Kopperuncholan 
Kocengannan
Perunarkilli 

Medieval Cholas

Vijayalaya Chola 848 – 871 
Parantaka Chola I .907 - 950 
Sundara Chola or Parantaka II 957-93
Rajaraja I .son.985 -1018 AD.
Rajendra Chola 1018-1044. Son.
Rajadhiraja Chola 1044-1053 AD.Son
Rajendra Chola 1053-1063.Brother. 
Virarajendra 1063-1070 son
Adhirajendra.Son. 1070 
Kulotunga I 1070-1118 AD
Vikrama Chola 1118-1135 son.
Kulothunga Chola II 1135-1150 son
Rajaraja Chola II son.1150-1163.
Rajadhiraja Chola II .son.1163-1178
Kulotunga Chola III.son.1178-1218
Rajaraja III.son.1218-1256
Rajendra Chola III. 1256-1279

கீழ் காணும்  இரண்டாம் இ ராஜேந்திரனின் மெய்கீர்த்தி யில் சில முன்னுக்குப்பின் முரணாக இருப்பினும் 
தன முன்னோர்களின் பெயர்களின் மர்ற்றுப் ப்பெயர்கள் காட்டப்படும் வரிகளில்  மதுராந்தகன் எனும்
பெயரில் ஒரு மன்னன் உள்ளான் இந்தபெயர்த்தன் ராஜராஜன் காலத்தும் பயன்கொள்ளப்பட்டுள்ளது ஆகும் 

 மெய்கீர்த்தியில் காணும் இரண்டாவதாக  உள்ள மதுராந்தகன் எனும் பெயரை உடையவன் ராஜரா ஜனுக்கு
ப்பிறகு வந்தவன் ஆகையால் இந்த மதுராந்தகன் எனும்சொல் முன்னதை விட மிக பிற் காலத்தியது 

இரண்டாம் இ ராஜேந்திரனின் மெய்கீர்த்தி 
அவன் காலத்து பல கல்வெட்டுகளில் காணலாம் 
இதனில் முன்னோர்களை எப்படி பெருமையுடன்
மாற்றுப்பெயருடன் அழைத்தனர் என விளக்கமுள்ளது alias  


2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 4
2.4.4 (33)

ஸ்வஸ்திஸ்ரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதே வியர் களாக மீதொளிர்
வெண்குடை உயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
சிறிய தாதை யாகிய எறிவலி
கங்கை கொண்ட சோழனைத் பொங்கிகல் - - - - - - - - - 5
இருமுடிசோழ னென்றும் பொருமுரண்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழ¨த் தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க் - - - - - - - - - 10
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலி தடக்கைமதுராந் தகனைச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகல் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய இராசனென்றும் - - - - - - - - - - - - - -15
திருஉளத்து அன்பொடு கருது காதலருள்
இத்தலம் புகழ் ராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றும் தொத்தணி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து - - - - - - - - - 20
ஏழுஉயர் களிற்றுச் சோ¡ழ கேரளனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராச னென்றும் கனைகடல் - - - - - - - - - - - - - - - -25
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றும் செந்தமிழ்
பிடிகலி இரட்ட பாடிகொண்டசோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கன்ன
குச்சி ராச னென்றும் பின்னும்தன் - - - - - - - - - - - - - - - 30
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப என்றும்
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச் - - - - - - - - - - -35
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினுள் இகல்வேட்டெழுந்துசென்
றொண்திறல் இரட்ட மண்டல மேய்தி
நதிகளும் நாடும் பதிகளு னனேகமும்
அழித்தனன் வளவனென்று மொழிப்பொருள் கேட்டு - - - -40
வேகவெஞ் சளுக்கி ஆகவ மல்லன்
பரிபவம் எனக்கீதென் றெரிவிழித்து எழுந்து
செப்பருங் கிர்த்திக் கொப்பத் தகவையில்
உடன்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினும் - - - - - - - - - - - -45
தன்திருத் தொடையிலுங் குன்றுறழ் புயத்திலும்
தைக்கவுந் தன்னுடன் கதகளிறு ஏறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையுற்
றொருதனி யனேகம் பொருபடை வழங்கியும்
மொய்ம்பமர்சளுக்கி தம்பிஜய சிங்கனும் - - - - - - - - - -50
போரபுலி கேசியும் தார்தச பன்மனு
மானமன் னவரில் மண்டலி அசோகையனும்
ஆன வண்புகழ் ஆளுமா ரையனும்
தேனமர் மட்டவி ழலங்கல்மொட் டையனும்
திண்திறல் நன்னிநுளம்பனு மெனுமிவர் முதலியர் - - - - -55
எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படை துத்தனும்
கொன்னவில் படைக்குண்ட மயனும் என்றின
வெஞ்சின் வரைசரோ டஞ்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து - - - - - - - - - - -60
முன்னுற நெளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பறிந் தோடிமேல்கடல் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதப் பகட்டரை சனேகமும் - - - - - - - - - - - - -65
எட்டுவடை பரிகளும் ஒட்டக நிரைகளும்
வராகவெல் கொடிமுதல் இராசபரிச் சின்னமும்
ஓப்பில் சத்தியவ்வை சாங்கப்பைஎன் றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு - - - - - - - - - - -70
விசையாபிஷேகம் செய்துதென் றிசைவயிற்
போர்படை நடாத்திக் கார்கட லிலங்கையில்
விறற்படைக் கலிங்கமன் வீரசலா மேகனைக்
கதக்களிற் றொடும்படக் கதிர்முடி கடிவித்து
இலங்கையற் கிறைவன் மான்¡ பரணன் - - - - - - - - - - - -75
காதலரி இருவரை களத்திடைப் பிடித்து
மாப்பெரும் புகழ்மிக வளர்த்த
கோப்பர கேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ இராசேந்திர தேவர்க்கு யாண்டு -   -   -   -   -  -

தேமொழி

unread,
Oct 3, 2015, 5:17:45 PM10/3/15
to மின்தமிழ்
தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.  

உங்கள் ஆர்வம் அளப்பரியது, வியக்க வைக்கிறது.

நீங்கள் முன்னர் கொடுத்த இணைப்பிலும், இரு இடங்களில் 

The two names Kandaraditta (505) and Madurantaka (504) probably refer to the two Chola kings Gandaraditya and Madhurantaka.[11] 
504. For one carpenter, to Gu[na]van Maduranta[kan], alias Nittavinoda-Perundachchan, three quarters of a share.
இவ்வாறு காணாப்படுகிறது.

எனக்கு www.varalaaru.com கிடைத்தவை கீழே: 
[1]
இறந்தவர் நினைவாக இது போல் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது காலங் காலமாய்த் தமிழ்நாட்டில் இருந்துவரும் மரபாகும். சிவலோகத்துக்கு எழுந்தருளின முதலாம் இராஜேந்திரசோழருக்கும் அவர் தேவி வீரமாதேவிக்கும் செய்யாறு வட்டம், பிரம்மதேசத்தில் வீரமாதேவியின் உடன்பிறந்தாரான மதுராந்தகன் தண்ணீர்ப்பந்தல் அமைந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு நினைக்கத்தக்கது (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 30: 184).



[2]

இறைவன் நாளும் சேனா நடை (சென்னடை?) எனும் முகத்தலளவையால் அளக்கப்பெற்ற நான்கு நாழி பால் கொள்வதற்காக, இராஜராஜரின் 32ஆம் ஆட்சியாண்டில் மதுராந்தகன் சுந்தரசோழரான இராஜராஜ இளங்கோ வேளார் நூறு பசுக்களைக் கொடையளித்தார். கொடைப் பொறுப்பேற்ற அரங்கத்து சபையார் நிலவும் கதிரும் உள்ளவரை இவ்வறம் தொடருமென உறுதியளித்தனர். மன்னரின் மெய்க்கீர்த்தி ஓரளவிற்கேனும் இடம்பெற்றுள்ள முன்று கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்றாகும். 

[3]
மேலும் எயிற்கோட்டத்துக் கோநேரி என்ற ஊரைச்ச் சேர்ந்த அரசூர் கிழவன்வேளான மதுராந்தகன் வைத்த நந்தாவிளக்கு எரிப்பதற்காக 95 ஆடுகள் பெற்றுக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் தானும் தன் வர்க்கத்தாரும் அளிப்பதாக பங்கிபுஞ்சையன் என்பான் சம்மதம் அளித்துள்ள செய்தியை மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

[4]

மதுராந்தகன் என்று வழங்கப்பட்ட உத்தமசோழனால் வழங்கப்பட்ட சென்னை அருங்காட்சியகச் செப்பேடு அவனுடைய சாஸன சுலோகத்தைக் கொண்டுள்ளது. அந்தச் சுலோகமாவது
न्यायानां शासनं कुर्वत्शा(*च्छा)सनं चक्रभूभृता(*तः) 
शासनं भूपतेरेतत् राजकेसरिवर्मणः।।
ந்யாயானாம் ஶாஸனம் குர்வத் – ஶாஸனம் சக்ரபூப்ருத: 
ஶாஸனம் பூபதே: ஏதத் பரகேஸரிவர்மண: 
(* - இக்குறியிட்டவை என்னுடைய திருத்தங்கள்)
நியாயங்களை எடுத்துச் சொல்லுவதான இந்தச் சாஸனம் பூமி வளையத்தைத் தாங்கும் பரகேஸரிவர்மனான மன்னனின் சாஸனமாகும் என்பது இதன் பொருள்.



[5]
கல்வெட்டுகளில் சிறுபழுவூர் என்று அழைக்கப்படும் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் மகா மண்டப வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு (காலம் உத்தம சோழர், கி.பி. 981).
1) ஸ்வஸ்திஸ்ர் கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு 12 ஆ
2) வது குன்றக் கூற்றத்து ப்ரஹ்மதேயம் சிறுபழூவூர் மஹா
3) தேவர்க்கு திருவாலந்துறை உடையார்க்கு
மதுராந்தகன் கண்டரா
4) தித்தந்
வை(ய்)த்த விளக்கு 1 ஒந்றும் நொந்தா விளக்கு எரிய வை(ய்)த்த
5) சாவா மூவாப் பேராடு தொண்ணூற்றிநால் நிசதி உழக்கு நெய் இது பந்மா
6) கேச்வர ரக்ஷை"

செய்தி: மதுராந்தகன் கண்டராதித்தர் இக்கோயில் இறைவர்க்கு விளக்கு ஒன்றும், நாள்தோறும் உழக்கு நெய் கொண்டு நந்தா விளக்கொன்று எரிக்கத் தொண்ணூறு ஆடுகளும் (சாவா மூவாப் பேராடு - ஆடு) கொடையாகத் தந்தார். 

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=62


[6]

பிற்காலச் சோழர்களில் விஜயாலயன், ஆதித்தன், முதலாம் பராந்தகன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன், ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜராஜன், மதுராந்தகன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் இராஜேந்திரசோழன் ஆகியோரது பெயர்கள் காணப்படுகின்றன.

[7]
மதுராந்தக உத்தம சோழனின் ஆட்சிமுறை, அவன்பால் மாமன்னன் இராஜராஜசோழன் கொண்ட பெருமதிப்பு, தன் புதல்வன் இராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டி அழைத்தது

ஆக....இடைக்காலச் சோழர்கள் பாண்டியர் மீது அளவிலா வன்மம் கொண்டு அவர்களை அழித்தொழித்து தங்களை மதுரையை அழித்த மதுராந்தகன் என்று பெயர் சூட்டி பெருமை கொண்டார்கள். 
கல்வெட்டு படி முதன்முதலில் இதுவரை தெரிவது உத்தமசோழன் பத்தாம் நூற்றாண்டில் (கல்வெட்டுகளில் சிறுபழுவூர் என்று அழைக்கப்படும் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் மகா மண்டப வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு (காலம் உத்தம சோழர், கி.பி. 981) ... மதுராந்தகன் கண்டரா
4) தித்தந் வை(ய்)த்த விளக்கு)
என்ற தகவல் கிடைக்கிறது. 

வீரபாண்டியன் தலைகொண்டதால் ஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969) கொலை செய்யப்பட்டதில் பாண்டியர் பங்கு உண்டு என்று உத்தமசொழனும் , இராஜராஜனும் மதுரையை அழித்திருக்கலாம் அதிலிருந்து உத்தமசோழன் மதுராந்தகன் என்று புகழப்பட்டிருக்கலாம்.  
சுந்தர சோழன் (கி.பி. 956-973)
ஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)
உத்தம சோழன் (கி.பி. 970-985) <<< கி.பி. 981   கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
சுந்தரசோழன் அதற்கு முன்னர் யாரேனும் மதுராந்தகர் என அழைக்கப்பட்டதாக இதுவரை கல்வெட்டு தகவல் கிடைக்கவில்லை என நினைகிறேன்.

- இதிலிருந்து மதுரையின் பெயர் முன்னர் எதுவாக இருப்பினும்... 
இடைக்காலச் சோழர்கள் காலத்தில் "மதுரை" என்று அழைக்கப்பட்டது என உறுதியாகக் கொள்ளலாம்.

- உத்தமசோழனுக்குப் பிறகு சோழகுடும்பத்தினரும், சோழ குடிமக்களும்  மதுராந்தன், மதுராந்தகி என்று பெயர் சூட்டிக் கொள்வதில் விருப்பம் கொண்டார்கள் எனத் தெரிகிறது 

தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. 

அன்புடன்
..... தேமொழி

N. Ganesan

unread,
Oct 3, 2015, 7:20:41 PM10/3/15
to மின்தமிழ், vallamai


On Saturday, October 3, 2015 at 2:17:45 PM UTC-7, தேமொழி wrote:

- உத்தமசோழனுக்குப் பிறகு சோழகுடும்பத்தினரும், சோழ குடிமக்களும்  மதுராந்தன், மதுராந்தகி என்று பெயர் சூட்டிக் கொள்வதில் விருப்பம் கொண்டார்கள் எனத் தெரிகிறது 


மதுராந்தகி என்ற பெயர் கல்வெட்டில் உண்டா?

மதுரை 4 முறை தேவாரத்தில் வருகிறது. மதிரை மதுரை என திருத்தப்பட்டதா? மதுரை பெருவழக்கு பல்லவர் காலத்தில் ஆகிவிட்டதா? - அறியக் கூடவில்லை. பல்லவர் கல்வெட்டுகளில் மதுரை - வடமொழியில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு -இருக்கலாம்.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 3, 2015, 8:58:31 PM10/3/15
to mintamil

மதுரை+அந்தகன்= மதுராந்தகன்

அந்தகன் = எமன், அழிப்பவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 3, 2015, 9:28:07 PM10/3/15
to mintamil


2015-10-03 17:58 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

//மதுரை+அந்தகன்= மதுராந்தகன்

அந்தகன் = எமன், அழிப்பவன்//

காளையாரே,

தாங்கள் எழுதியிருப்பது சரியே!  மதுரைக்கு எமனாக வரவேண்டும் என்ற பொருளில் சோழர்கள் "மதுராந்தகன்" என்ற பெயரச் சூட்டிக்கொண்டார்கள்.  இன்னும் வேறென்ன பொருள்படுகிறது என்று தெரிந்தவர் சொல்லலாம்.
 
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Oct 3, 2015, 10:48:30 PM10/3/15
to mintamil
மதுரைக்கு அந்தகன் என்ற பொருளே சரியானது

Reply all
Reply to author
Forward
0 new messages