தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏
நமது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் செயலி வெளியீட்டில், அடுத்ததாக அறிவறி எனும் செயலியை இன்று வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
உலக பொது அறிவு, இந்திய பொது அறிவு இதில் இருக்கப் போவதில்லை. முழுக்க முழுக்க தமிழ் அறிவு மட்டுமே.
முதல் முறையாக, தமிழ் மொழி, இனம், நாடு, அரசியல், வரலாறு, இலக்கணம், இலக்கியம், தமிழ்நாடு, திருக்குறள், இசை, பெயர், பொருள் என்று முழுக்க முழுக்க தமிழர்களின் அடையாளத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வண்ணம், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கேள்விகளை தொகுத்து இந்த செயலியை உருவாக்கியுள்ளோம்.
இதுவரை தமிழ் உலகில் இல்லாத ஒரு தனித்துவமான தொகுப்பாக இது உருவாகியுள்ளது.
நீங்கள் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். விளையாடும் போது பிழையாகும் கேள்வி–பதில்களை செயலி தனியாக சேமித்து காட்டும். அதன் வழி மீண்டும் மீண்டும் படித்து பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். இவ்வாறு பல பயனர்களுக்கும் உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் இதனை தரவிறக்கம் செய்து, தாங்களும் விளையாடி, அடுத்த தலைமுறை பிள்ளைகளையும் விளையாடச் செய்து, தமிழர் தம் இன அறிவை பெருக்கச் செய்வோம்.
கூகுள் ப்ளேயில் “வள்ளுவர் வள்ளலார் வட்டம்” என்று தேடினால், நமது செயலிகள் வரும் — பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.valluvarvallalarvattam.arivariquizதேடிப் பாருங்கள், தெரியும்; விளையாடிப் பாருங்கள், விளங்கும் 🙂
எங்கள் உழைப்பும், உங்கள் தமிழும் ❤️
விரும்புக! பிடித்திருந்தால் பகிர்க! 🙏
நன்றி.
இவண்,
இங்கரசால் (நார்வே) & அர்ச்சித்
வள்ளுவர் வள்ளலார் வட்டம்