தமிழக அரசு ஆணைகளில் வடமொழி ஆண்டுப் பெயர்

19 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 14, 2026, 1:45:46 PMMay 14
to மின்தமிழ்
தமிழக அரசு ஆணைகளில் வடமொழி ஆண்டு பெயர் 
rathan-appointment.jpeg

rathan-appointment2.jpg
மாநில மொழிக்கு முதன்மை, தமிழுக்கு முக்கியத்துவம், இருமொழிக் கொள்கை பாதுகாப்பு என்ற உறுதிமொழிகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கிறது தமிழ்நாட்டின் புதிய அரசு. 
ஆகவே, அரசு ஆணைகளைத் தமிழில் வெளியிடலாம்.  அரசு வெளியிடும் அரசு ஆணைகளில் தேவையற்ற நிலையில் உள்ள  வடமொழி ஆண்டு பெயர்களைத் தவிர்க்கலாம்.  
திருவள்ளுவர் ஆண்டு, மாதம், நாள் என்ற அளவில் ஆணைகளை வெளியிடலாம்.  அவ்வாறு செயல்படுவது கொடுக்கப்பட்ட உறுதிமொழியைப் பின்பற்றுவதாக அமையும். 

தேமொழி 
திருவள்ளுவராண்டு 2057, சித்திரை 31

தேமொழி

unread,
Jul 2, 2026, 9:18:21 PM (3 hours ago) Jul 2
to மின்தமிழ்
14 பக்கங்கள் கொண்ட G.O. (Ms.) No.166  தமிழ் நாட்டு அரசாணையில்  இடம் பெரும் தமிழ் எழுத்துருவில் இருக்கும் செய்தி இவை மட்டுமே. 
தமிழ்நாட்டு அரசுக்கு ஏனிந்த தமிழ்ப் புறக்கணிப்புக் கொள்கை?
அரசுக்கு ஒரு வேண்டுகோள் :  நாள் குறித்த குறிப்பு தமிழ் மாதத்திலும் திருவள்ளுவர் ஆண்டிலும் இருப்பதால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
வேண்டாம்,  கண்துடைப்பு தேவையில்லை. இனி தமிழ்நாட்டு  அரசு அதிகாரப்பூர்வமான  அரசாணைகளை இனி தமிழே கலக்காது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடுக.   
go.jpg
இணைப்பில் அரசாணை . . . 

G.O. (Ms.) No.166, dt 23.06.2026 - Thaimaaman Thanga Mothiram Thittam.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages