திருவாய்மொழி 1-1-2

410 views
Skip to first unread message

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 9, 2009, 1:25:38 PM4/9/09
to minT...@googlegroups.com
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
 
மனனகமலமற மலர்மிசையெழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே!!    (1-1-2)
 
மனன் அகம் மலமற - மனன் என்று மனம். மனத்திலுள்ள மலம் நீங்க
 
மனனகம் என்றது மனத்திலே/மனத்தின்கண் (ஏழாம் வேற்றுமை) என்றபடி. மலம் - குற்றம். மனத்திலுள்ள மலம்தான் என்ன? ஏதோ தன் முயற்சியால் இறைவனை அடைகிறோம் என்ற எண்ணம்தான் இந்த மலம்.  தன் முயற்சி என்ற எண்ணம்தான் எவ்வாறு வந்த்து? விருப்பு, வெறுப்பு, கோபம் என்ற குற்றக் குணங்களால் உண்டாவது. சிலர், "மலம்" என்ற வார்த்தைக்கு இக்குணங்களையே பொருளாக உரைப்பர். ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகையாலே, இருவிதமாகவும் கொள்ளத் தட்டில்லை.
 
ஆனால், அனைத்துக் காரியமும் இறைவனுடையதாய் இருக்க, தன் காரியம் என்ற எண்ணமே "மலம்" என்ற சொல்லுக்கு நேரிடையாகப் பொருந்தும்.
 
மலர் - மலர்ந்த
  
இவ்விடத்தில் "மலர்" என்றது பெயர்ச்சொல்லல்ல. வினைத்தொகையாகச் சொல்லப்பட்டது. மலர்ந்த என்ற பொருள்
 
மிசை எழுதரும் மனன்- மேலே மேலே உயரும் மனம்
 
(மலர்ச்சியடைந்து)  மேலே எழும் என்றது, முதல் பாசுரத்தின் தொடர்ச்சி. "தொழுதெழு" என்றதில் "அவனால் அளிக்கப்பட்ட உன் அடித்தன்மை என்ற அறிவாகிய மதிநலத்தால் எழுவாய்" என்றபடி, இங்கும், மனத்திலுள்ள தன் முயற்சி என்ற மலம் நீங்கப்பெற்று, அதனால் மலர்ந்து மேலே எழுச்சியை அடைந்த மனம், என்று பொருள். "மலர்மிசை எழுதரும்" என்றது மனதிற்கு அடைமொழி.
 
உணர்வு அளவிலன் - உணர்வால் அளவிடப்படாதவன்
 
மேலே சொல்லப்பட்ட தூய்மையான மனதினாலும், உணரும் அளவு இல்லாதவன் என்று பொருள்
 
பொறியுணர்வு அவையிலன் - செவி, வாய், கண், மூக்கு, உடல் ஆகிய ஐம்புலன்களாலும் அளவிடப்படாதவன்
 
குற்றமற்ற மனத்தாலேயே உணரப்படமுடியாதவன், இக்கரணங்களாலும் அளவிடப்படாதவன் என்றபடி
 
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -
 
இதொடரில் "இலன்" என்ற வார்த்தையை "இனன் உணர் முழுநலம் - இலன்" என்றும் "எதிர் நிகழ் கழிவினும் இனன் - இலன்" என்றும் தொடர்பு கொள்ளவேண்டும்.
 
இனன் என்றது "இப்படிப்பட்டவன்" என்றபடி. "இப்படிப்பட்டவன்" என்றதால் ஒப்புமையைக் குறிக்கிறது.
 
"இனன் உணர் முழு நலம் இலன்" என்றது - இப்படிப்பட்ட முழுமையான உணர்வதற்குரிய நலமுடையவன் மற்றொருவனில்லை என்றபடி.
 
"எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்"  என்றது - எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலமாகிய முக்காலத்திலும் இப்படிப்பட்டவன் (இனன்) இல்லை என்றபடி
 
மிகுநரையிலனே - இருவகையாகப் பிரித்து ஒருபொருள் கொள்வர்
 
1) மிகுநரை இலனே = அதாவது, மேலடியில் இவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை என்று சொன்னதால், இவனுக்காட்டிலும் உயர்ந்தவர் உளரோ என்ற சந்தேகம் வராமலிருக்க, மிகுநர் - மிகுந்தவர் - பெருமையுடையவர் யாருமில்லை என்று பதம் பிரிப்பர்.
 
2) மிகு நரையிலனே - நரை என்பது மூப்பைக் குறிக்கும். மூப்பேற முடிவுறுமாதலால், இவன் மூப்பே இல்லாதவன் என்றும் பொருள் கொள்வர்.
 
அப்படிப்பட்டவன் யாரெனில் - எனன் உயிர் - என்னுடைய உயிராய் விளங்குபவன் என்றபடி.
 
"மனத்திலுள்ள தன் முயற்சி என்ற குற்றம் நீங்கப்பெற்று அடிமைத்தனமே தன் இயல்பு என்று அவனால் மதிநலம் அளிக்கப்பெற்று, அதனால் மலர்ச்சியடைந்து மேல் நோக்கி எழுச்சியுடைய மனதின் உணர்வளவு இல்லாதவன். பொறிகளாகிற செவி, வாய், கண், மூக்கு, மற்றும் உடலின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். இப்படியாகப்பட்ட முழுமையான உணர்வுக்கு அப்பாற்பட்டவனாகிறான். அவன் முக்காலத்திலும் ஒத்தாரில்லாதவனாக விளங்குகிறான். அவனைக்காட்டிலும் பெரியவன் இல்லாமலிருக்கிறான். அவன் தான் என்னுடைய உயிராகவும் இருக்கிறான்."
 
அடியேன்
வேங்கடேஷ்.


Get perfect Email ID for your Resume. Get before others grab.

devoo

unread,
Apr 9, 2009, 2:48:00 PM4/9/09
to மின்தமிழ்
இன்று நாலாயிர அனுபவம் ஆனந்த அலைகளாக அடுத்தடுத்து வந்து
திக்குமுக்காட வைக்கிறது.
அண்ணன் ஸ்வாமியின் பாணியில் 'ஸுஉ ஷா ச மே! ஸு திநம் ச மே !!'
என்று மனம் ஆர்ப்பரிக்கின்றது, இந்த இரவுப் போதிலும்.

தேவ்

devoo

unread,
Apr 9, 2009, 2:52:48 PM4/9/09
to மின்தமிழ்
மிகு நரையிலனே - நரை என்பது மூப்பைக் குறிக்கும்//

மிகு நரையிலன் : 'விஜரோ விம்ருத்யு:' உபநிஷத்

shivan .

unread,
Apr 9, 2009, 4:12:39 PM4/9/09
to minT...@googlegroups.com
நரை என்பதற்கு தமிழில் பெருமை என்ற நேரடி பொருள் உண்டு.  மிகு நரை இலனே என்பதற்கு உன்னைக் காட்டிலும் பெருமை வேறொருவருக்கு இல்லை எனவும் வரும்.




2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 9, 2009, 4:41:11 PM4/9/09
to மின்தமிழ்
அருமையான வரி விளக்கங்கள் வேங்கடேஷ் ஐயா!
சென்ற மாறன் பதிவும் வாசித்தேன்! சு-வாசித்தேன்! தேன்!

//மனனகம் என்றது மனத்திலே/மனத்தின்கண் (ஏழாம் வேற்றுமை) என்றபடி//
அப்படியும் கொள்ளலாம்! ஆனால்...

எதுக்கு மனன்+அகம்-ன்னு சொல்லணும்?
உணவு+அகம் = உணவகம் = உணவு இருக்கும் இடம்!
மனன்+அகம் = மனனகம் = மனம் இருக்கும் இடம்!

மனசு எங்க இருக்கு? அது தெரிஞ்சாத் தான் ஈசியா அடக்கிறலாமே!
அது தெரியாததால் தானே இவ்வளவும்!
அதான் ஆழ்வார் மூலத்துக்கே செல்கிறார்! நோய் நாடி, நோய் முதல் நாடி
என்பது போல்!

மனத் தாமரையில் வசிப்பவன் அவன்! அந்தர்யாமி! சர்வ அந்தர் ஆத்மனே!
அந்த மனத்தில் மலம் இருக்கு என்று சொல்ல ஆழ்வார் மனசு ஒப்பவில்லை!

அதான் அவன் அந்தர்யாமியாய் வசிக்கும் மனத்தில் மலம் இருக்கு-ன்னு
சொல்லாமல்....
அந்த மனம் அலையும் இடத்தில் மலம் இருக்கு,
அந்த மனம் "இருக்கும்" இடத்தில் மலம் இருக்கு,
மனன் "அகத்தில்" மலம் இருக்கு என்கிறார்!

அவன் இருக்கும் இடத்தை அவன் தானே சுத்தப்படுத்தணும்? அதான் மனன்
"அகத்தில்" மலம் அறுக்கிறான்!
அறுத்த பின், மலம் இல்லாத நல்ல நிலத்தில், மலர் மிசை எழு தரும்
என்று...
மனசும் (மலர்ச்சியடைந்து) மேலே எழுகிறது! தொழுது எழு என் மனனே!

anbudan
krs


On Apr 9, 4:12 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> நரை என்பதற்கு தமிழில் பெருமை என்ற நேரடி பொருள் உண்டு.  மிகு நரை இலனே
> என்பதற்கு உன்னைக் காட்டிலும் பெருமை வேறொருவருக்கு இல்லை எனவும் வரும்.
>

> 2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor_venkat...@yahoo.com>


>
>
>
> > ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
>

> > *மனனகமலமற மலர்மிசையெழுதரும்*
> > *மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்*
> > *இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்*
> > *இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே!!    (1-1-2)*
>
> > *மனன் அகம் மலமற - மனன் என்று மனம். மனத்திலுள்ள மலம் நீங்க*


>
> > மனனகம் என்றது மனத்திலே/மனத்தின்கண் (ஏழாம் வேற்றுமை) என்றபடி. மலம்
> > - குற்றம். மனத்திலுள்ள மலம்தான் என்ன? ஏதோ தன் முயற்சியால் இறைவனை அடைகிறோம்
> > என்ற எண்ணம்தான் இந்த மலம்.  தன் முயற்சி என்ற எண்ணம்தான்
> > எவ்வாறு வந்த்து? விருப்பு, வெறுப்பு, கோபம் என்ற குற்றக் குணங்களால்
> > உண்டாவது. சிலர், "மலம்" என்ற வார்த்தைக்கு இக்குணங்களையே பொருளாக உரைப்பர்.
> > ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகையாலே, இருவிதமாகவும் கொள்ளத் தட்டில்லை.
>
> > ஆனால், அனைத்துக் காரியமும் இறைவனுடையதாய் இருக்க, தன் காரியம் என்ற
> > எண்ணமே "மலம்" என்ற சொல்லுக்கு நேரிடையாகப் பொருந்தும்.
>

> > *மலர் - மலர்ந்த*


>
> > இவ்விடத்தில் "மலர்" என்றது பெயர்ச்சொல்லல்ல. வினைத்தொகையாகச் சொல்லப்பட்டது.
> > மலர்ந்த என்ற பொருள்
>

> > *மிசை எழுதரும் மனன்- மேலே மேலே உயரும் மனம்*


>
> > (மலர்ச்சியடைந்து)  மேலே எழும் என்றது, முதல் பாசுரத்தின் தொடர்ச்சி.
> > "தொழுதெழு" என்றதில் "அவனால் அளிக்கப்பட்ட உன் அடித்தன்மை என்ற அறிவாகிய
> > மதிநலத்தால் எழுவாய்" என்றபடி, இங்கும், மனத்திலுள்ள தன் முயற்சி என்ற மலம்
> > நீங்கப்பெற்று, அதனால் மலர்ந்து மேலே எழுச்சியை அடைந்த மனம், என்று பொருள்.
> > "மலர்மிசை எழுதரும்" என்றது மனதிற்கு அடைமொழி.
>

> > *உணர்வு அளவிலன் - உணர்வால் அளவிடப்படாதவன்*


>
> > மேலே சொல்லப்பட்ட தூய்மையான மனதினாலும், உணரும் அளவு இல்லாதவன் என்று பொருள்
>

> > *பொறியுணர்வு அவையிலன் - செவி, வாய், கண், மூக்கு, உடல் ஆகிய ஐம்புலன்களாலும்
> > அளவிடப்படாதவன்*


>
> > குற்றமற்ற மனத்தாலேயே உணரப்படமுடியாதவன், இக்கரணங்களாலும் அளவிடப்படாதவன்
> > என்றபடி
>

> > *இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்* -


>
> > இதொடரில் "இலன்" என்ற வார்த்தையை "இனன் உணர் முழுநலம் - இலன்" என்றும் "எதிர்
> > நிகழ் கழிவினும் இனன் - இலன்" என்றும் தொடர்பு கொள்ளவேண்டும்.
>
> > இனன் என்றது "இப்படிப்பட்டவன்" என்றபடி. "இப்படிப்பட்டவன்" என்றதால்
> > ஒப்புமையைக் குறிக்கிறது.
>
> > "இனன் உணர் முழு நலம் இலன்" என்றது - இப்படிப்பட்ட முழுமையான உணர்வதற்குரிய
> > நலமுடையவன் மற்றொருவனில்லை என்றபடி.
>
> > "எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்"  என்றது - எதிர்காலம், நிகழ்காலம்,
> > கடந்தகாலமாகிய முக்காலத்திலும் இப்படிப்பட்டவன் (இனன்) இல்லை என்றபடி
>

> > *மிகுநரையிலனே -* *இருவகையாகப் பிரித்து ஒருபொருள் கொள்வர்*


>
> > 1) மிகுநரை இலனே = அதாவது, மேலடியில் இவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை
> > என்று சொன்னதால், இவனுக்காட்டிலும் உயர்ந்தவர் உளரோ
> > என்ற சந்தேகம் வராமலிருக்க, மிகுநர் - மிகுந்தவர் - பெருமையுடையவர் யாருமில்லை
> > என்று பதம் பிரிப்பர்.
>
> > 2) மிகு நரையிலனே - நரை என்பது மூப்பைக் குறிக்கும். மூப்பேற முடிவுறுமாதலால்,
> > இவன் மூப்பே இல்லாதவன் என்றும் பொருள் கொள்வர்.
>

> > அப்படிப்பட்டவன் யாரெனில் - *எனன் உயிர் - *என்னுடைய உயிராய் விளங்குபவன்


> > என்றபடி.
>
> > "மனத்திலுள்ள தன் முயற்சி என்ற குற்றம் நீங்கப்பெற்று அடிமைத்தனமே தன் இயல்பு
> > என்று அவனால் மதிநலம் அளிக்கப்பெற்று, அதனால் மலர்ச்சியடைந்து மேல் நோக்கி
> > எழுச்சியுடைய மனதின் உணர்வளவு
> > இல்லாதவன். பொறிகளாகிற செவி, வாய், கண், மூக்கு, மற்றும் உடலின்
> > உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். இப்படியாகப்பட்ட முழுமையான உணர்வுக்கு
> > அப்பாற்பட்டவனாகிறான். அவன் முக்காலத்திலும்
> > ஒத்தாரில்லாதவனாக விளங்குகிறான். அவனைக்காட்டிலும் பெரியவன்
> > இல்லாமலிருக்கிறான். அவன் தான் என்னுடைய உயிராகவும் இருக்கிறான்."
>
> > அடியேன்
> > வேங்கடேஷ்.
>

> > ------------------------------
> > Get perfect Email ID for your Resume. Get before others grab.<http://in.rd.yahoo.com/tagline_dbid_13/*http://in.promos.yahoo.com/ad...>- Hide quoted text -
>
> - Show quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 9, 2009, 5:10:19 PM4/9/09
to மின்தமிழ்
மிகுநரை இலனே, மிகு நரை இலனே விளக்கம் சிறப்பு!
நரை-ன்னா மூப்பு மட்டுமில்லை! கேடு என்றும் பொருள்!
நல்ல மரத்தில் நரை விழுந்தாற் போலே-ன்னு சொலவடை உண்டு!
மிகு நரை இலனே - எந்தக் கேடும் இல்லாதவன்!
மன மலத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் அவன் ஈடுபட்டாலும், மலம் அவனிடம்
ஒட்டாது! கேடு (நரை) அவனிடம் ஒட்டாது!

இந்த மனச் சுத்திகரிப்புப் போராட்டத்தில்,
நாமே நம் பிரயத்தனாதி முயற்சிகளால் ஈடுபட்டால் (கர்ம, ஞான
யோகாதிகளால்)....
பிறவி பிறவியாய் எதிர்த்துப் போராடித் தான் வெற்றி பெற
வேண்டியிருக்கும்! அதுக்குள்ள நமக்கு நரையும் விழுந்துரும்!

ஆனால்...என்னால் தனியாக ஒன்றும் முடியாது என்று சரணாகதியாய் அவனிடம்
சேர்ந்து விட்டால்...
பிறவி பிறவியாய் எதிர்த்துப் போராடித் தான் வெற்றி பெறணும்-ன்னு அவசியமே
இல்லாமல், அவனே மலம் நீக்கி விடுவான்! யாருக்கும் நரையும் விழாது!

அவன் மிகு நரை இலனே! மலம் நீக்குவதில் அவனை ஒத்த மிகுநரும் இலனே!

anbudan
krs

On Apr 9, 4:41 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> ...
>
> read more »- Hide quoted text -

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 7:23:09 PM4/9/09
to மின்தமிழ்
ஆகா! ரெட்டைக் கொட்டுமேளக் கச்சேரியாக அல்லவோ இருக்கு.

சபாஷ்! கண்ணபிரான்.

இன்று சத்சங்கம் சத்தியமாய் கூடிவிட்டது.

தேவ் வார்த்தைகளில் “'ஸுஉ ஷா ச மே! ஸு திநம் ச மே !!'
(அதன் பொருள் என்னவென்று தெரியாவிடினும்).

மனத் தாமரையில் வசிப்பவன் அவன்!  அந்தர்யாமி!  சர்வ அந்தர் ஆத்மனே!
> அந்த மனத்தில் மலம் இருக்கு என்று சொல்ல ஆழ்வார் மனசு ஒப்பவில்லை!
>
> அதான் அவன் அந்தர்யாமியாய் வசிக்கும் மனத்தில் மலம் இருக்கு-ன்னு
> சொல்லாமல்....
> அந்த மனம் அலையும் இடத்தில் மலம் இருக்கு,
> அந்த மனம் "இருக்கும்" இடத்தில் மலம் இருக்கு,
> மனன் "அகத்தில்"  மலம் இருக்கு என்கிறார்!
>
>

அற்புதம்..அற்புதம்..
இதுதான் மாறன் மனம். ஆச்சார்ய ஹிருதயம். ஆகா!!

கண்ணன்
”நரை” என்பதற்கு வேங்கடேஷ், சிவா, கண்ணபிரானின் விளக்கங்கள் கனபொருத்தம்!

kamaladevi aravind

unread,
Apr 9, 2009, 8:07:39 PM4/9/09
to minT...@googlegroups.com

வெங்கடேஷ், கண்ணபிரான்,சிவன், குமரன், தேவ்,முனைவர்கண்ணன்,
என்ன அற்புதமான இழை இது.
வெங்கடேஷ், நிங்ஙளின் மெளன ரசிகை ஞான்,
மின் தமிழில் அவ்வப்போது எனை மறந்து ஞான் பரவசப்பட்ட சில இழைகளில் இதுவும் ஒன்று.
எப்படிப்பாராட்ட என்று கூடத்தெரியவில்லை. அருமையான இழை இது
மின்தமிழ் வெறும் சர்ச்சைக்கூடம் மட்டுமல்ல. அவ்வப்போது பிரியமான ஸ்ரீலப்புஷ்பம் மணக்கும் இழையும் கூட , என்பதற்கு இதுவே சாட்சி
வாழ்த்துக்களுடன் கமலம்








Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 8:41:06 PM4/9/09
to மின்தமிழ்
On Apr 10, 6:10 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

<shravan.r...@gmail.com> wrote:
>
> ஆனால்...என்னால் தனியாக ஒன்றும் முடியாது என்று சரணாகதியாய் அவனிடம்
> சேர்ந்து விட்டால்...
> பிறவி பிறவியாய் எதிர்த்துப் போராடித் தான் வெற்றி பெறணும்-ன்னு அவசியமே
> இல்லாமல், அவனே மலம் நீக்கி விடுவான்!  யாருக்கும்  நரையும் விழாது!
>


மிக, மிக எளிதாகத்தோன்றுவது போலுள்ள மிக, மிகக் கடினமான காரியம்.
சாதகப்பறவை போல் காத்திருக்க வேண்டியதுதான்.

க.>

devoo

unread,
Apr 9, 2009, 9:40:45 PM4/9/09
to மின்தமிழ்
Apr 10, 4:23 am, நா.கண்ணன்

“'ஸுஉ ஷா ச மே! ஸு திநம் ச மே !!'

'இன்று எனக்கு நல் விடிவு ! எனக்கு நன்னாள்'
பிறர்தம் அருமையான வ்யாஸங்களை வாசித்து விமர்சனம் செய்ய நேர்ந்தால்
அண்ணன் ஸ்வாமி இவ்வாறு எழுதுவார்.

தேவ்

நா.கண்ணன்

unread,
Apr 9, 2009, 9:56:03 PM4/9/09
to மின்தமிழ்
நன்றி
பெரியோர்களுக்குத்தான் இந்த அடக்கமும், பணிவும் வரும்.
அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு.

க.>

LNS

unread,
Apr 9, 2009, 10:46:55 PM4/9/09
to மின்தமிழ்
அருமையான வியாக்கியானங்கள். வெங்கடேஷ் சார் அரிய சேவையை செயது வருகிறார்.
வாழ்த்துக்கள்.

மலர்மிசையெழுதரும் - என்ற சொற்றொடர் மிக ருசிகரமானது. அது சித்தர்களும்
யோகிகளும் அடிக்கடி சொ்ல்லும் ஹ்ருதயகமலத்தை குறிக்கும். பொதுவாக
ஹ்ருதயகமலம் சோர்ந்து இருக்கும். ஆத்மவிசாரம் செய்து ஞானநிலையை
அடையும்போது அது மலர்ந்து நிமிரந்து இருக்கும். இதெல்லாம்
யோகாப்யாஸத்தின் சாதனைகள்.

ஹ்ருதயகமலம் பூத்தால் ஜீவனுக்கு அவன் நிலை புரியும் - அது இறைநிலை இல்லவே
என்பது கருத்து. பெருமாளுக்கு பரத்துவம் என்ற முக்கியமான் ஒரு தன்மையால்
அவனை ஆத்மவிசாரம் செய்து அறிந்து கொள்ள முடியாது என்பதை 'மலர்மிசை
எழுதரும் மனனுணர்வளவிலன்' மூலம் அறிவிக்கிறார்.

ஆகையினால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எப்போதும் ஆத்மவிசாரத்தை தட்டி
அடைக்கலத்தையே பெரிதாக சொல்வர். அடைக்கலமோ உபாயமும் உபேயமும் ஒன்றாய்
வந்த ஒன்று.

ஸ்ரீமன் நாதமுனி யோகத்தில் மிக தேர்ச்சி பெற்றவர். 'யோக ரஹஸ்யம்' என்ற
ஒரு அரிய நூலையும் இயற்றியவர். ஒரு முறை அவர் தன் சீடரான
உய்யக்கொண்டாருக்கு யோக ஸாஸ்திரம் கற்றுக் கொடுப்பதற்கு முன்வந்தார்.
அப்போது உய்யக்கொண்டார் தனக்கு அந்த கல்வி வேண்டாம் என்று சொல்லி குருவை
மறுத்து விட்டார்! அவர் சொன்னது ' பிணம் கிடக்க மணம் புணரலாமோ, சுவாமி?"

ஆளவந்தாரும் அதேபோல் யோகம் கல்லாமலே சரணாகதி சம்பிரதாய்த்தில்
புகுந்தார். அதுக்கும் ஒரு கதை குருபரம்பரையில் இருக்கிறது.

அன்புடன்,

LNS

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 1:38:02 AM4/10/09
to minT...@googlegroups.com
சிவன் சார்,
 
திருத்தியமைக்கு நன்றி. பெருமை என்று தான் எழுத விழைந்தேன். அடியேனுடைய ஆச்சார்யரும் அவ்விதமே கூறினார். எப்படியோ, சற்றே மாறுபடும் அர்த்தத்துடன் "பெரியவன்" என்று எழுதிவிட்டேன்.
 
தங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்பது அவன் திருவுள்ளம் போலும்.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: shivan . <siva...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, 10 April, 2009 1:42:39 AM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Unlimited freedom, unlimited storage. Get it now

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 1:45:53 AM4/10/09
to minT...@googlegroups.com
கண்ணபிரான் சார்,
 
அருமை. இவ்வர்த்தம் மிக இனிமையாக இருக்கிறது. இவ்வர்த்தத்தை முதல் முறையாகக் கேட்கிறேன். உண்மையில் சுவையாக இருக்கிறது. நன்றி இராமாநுசருக்குத் தான்.
 
ஒரு நாள் அவருடைய சீடர்கள் அவரை அணுகி, தாங்கள் திருவாய்மொழிக்கு ஓர் உரை செய்திட வேண்டும் என்று விண்ணப்பிக்க, அவர் அதை மறுத்தருளி, அவருடைய சீடர்களில் ஒருவரான "திருக்குருகைப் பிரான் பிள்ளான்" என்பவரை எழுதுமாறு பணித்தார். ஏன் என்று கேட்டதற்கு, "அடியேன் எழுதினால், அது முதலும் முற்றுமாகக் கொண்டுவிடுவர். மேலும் பல சுவையான பொருட்கள் வெளிப்படாது" என்றாராம்.
 
எவ்வளவு உண்மை. இன்று தாங்கள் கூறியது எவ்வளவு சுவைக்கிறது.
 
அடியேன்
வேங்கடேஷ்
 
Regards,
Venkatesh



From: Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 10 April, 2009 2:11:11 AM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2


Add more friends to your messenger and enjoy! Invite them now.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 1:47:29 AM4/10/09
to minT...@googlegroups.com
தேவ் சார்,
 
நடு இரவு 12:18:00 க்கு இம்மடல் அனுப்பியுள்ளீர்கள். தங்கள் தாகம் பெருந்தாகமாகவன்றோ இருக்கிறது.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: devoo <rde...@gmail.com>

To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, 10 April, 2009 12:18:00 AM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 1:52:41 AM4/10/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
 
<”நரை” என்பதற்கு வேங்கடேஷ், சிவா, கண்ணபிரானின் விளக்கங்கள் கனபொருத்தம்!>
குழந்தைக்கு, முதலில் அறிவைத் தருபவள் அன்னையேயன்றோ. ஈன்ற முதல் தாயான சடகோபனின் அருளும், மொய்ம்பால் வளர்த்த இதத்தாயான இராமாநுசரின் அருளும் இருக்கும் பொழுது, விளக்கங்கள் அனைத்தும் அவர்களுடையதே! அடியோங்கள் கருவி மட்டுமே.
 
அடியேன்
வேங்கடேஷ்.

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 2:01:40 AM4/10/09
to மின்தமிழ்
On Apr 10, 2:45 pm, Thirumalai Vinjamoor Venkatesh

<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
>
> எவ்வளவு உண்மை. இன்று தாங்கள் கூறியது எவ்வளவு சுவைக்கிறது.
>

சத்தியமான வார்த்தை.
இராமானுஜர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை இப்படிப் பல விஷயங்களில்
அறிந்து கொள்ளலாம்.
இல்லையெனில் எதற்கு இப்படி மாஞ்சு, மாஞ்சு 'இராமானுஜதாசன்' என்று
சொல்லிக்கொள்வதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
கண்ணபிரான் ஒரு gifted person.

கண்ணன்

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 2:03:49 AM4/10/09
to மின்தமிழ்
On Apr 10, 11:46 am, LNS <lns25...@gmail.com> wrote:
> ஸ்ரீமன் நாதமுனி யோகத்தில் மிக தேர்ச்சி பெற்றவர். 'யோக ரஹஸ்யம்' என்ற
> ஒரு அரிய நூலையும் இயற்றியவர். ஒரு முறை அவர் தன் சீடரான
> உய்யக்கொண்டாருக்கு யோக ஸாஸ்திரம் கற்றுக் கொடுப்பதற்கு முன்வந்தார்.
> அப்போது உய்யக்கொண்டார் தனக்கு அந்த கல்வி வேண்டாம் என்று சொல்லி குருவை
> மறுத்து விட்டார்! அவர் சொன்னது ' பிணம் கிடக்க மணம் புணரலாமோ, சுவாமி?"
>

இது கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படிப் பொருந்துகிறது என்று
விளக்கமுடியுமா?

க.>

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 2:05:31 AM4/10/09
to minT...@googlegroups.com

<வெங்கடேஷ், கண்ணபிரான்,சிவன், குமரன், தேவ்,முனைவர்கண்ணன்,
என்ன அற்புதமான இழை இது.
வெங்கடேஷ், நிங்ஙளின்  மெளன ரசிகை  ஞான்,
மின் தமிழில் அவ்வப்போது எனை மறந்து ஞான் பரவசப்பட்ட சில  இழைகளில் இதுவும் ஒன்று.
எப்படிப்பாராட்ட என்று கூடத்தெரியவில்லை. அருமையான இழை இது
மின்தமிழ் வெறும் சர்ச்சைக்கூடம் மட்டுமல்ல. அவ்வப்போது பிரியமான ஸ்ரீலப்புஷ்பம் மணக்கும் இழையும் கூட , என்பதற்கு இதுவே சாட்சி
வாழ்த்துக்களுடன் கமலம்
>


ஊக்கங்களுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே! (காப்பியடித்த வசனம் தான் :-) )

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 2:22:08 AM4/10/09
to minT...@googlegroups.com
LNS சார்
 
<அவர் சொன்னது ' பிணம் கிடக்க மணம் புணரலாமோ, சுவாமி?>
 
ஆம், ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அடைக்கலத்தையே இயல்வாகக் கொண்டிருந்தனர். தங்கள் முயற்சி என்ற ஒன்று இருப்பதாகவே அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக நேற்று குமரன் சார் எழுதியிருந்த திருவிந்தளூர்ப் பாசுரத்தில்.... "உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்" என்றவிடத்தில், இது ஏதோ தன்னுடைய முயற்சியாகத் தோற்றுகின்றதாகையாலே "அயர்வு" மட்டுமே மிச்சமாயிற்று என்கிறார். அதாவது, தாங்கள் சொன்னது போல், ஆண்டானான அவன் நினைத்தால் மட்டுமே நடக்கும் என்றும், அடிமையான தங்கள் முயற்சியால் ஏதும் பயனில்லை என்றபடி..
 
யோகம் என்றதில் "தங்கள் முயற்சி" என்ற ஒன்று இருப்பதாகத் தோன்றவே, அதை விடுத்தனர். 
 
அருமையான மேற்கோள்கள். மிக்க நன்றி சார்.
 
"மலர் மிசை எழுதரும்" என்ற தொடருக்கு, அடியேன் எழுதியிருந்ததைக் காட்டிலும் மிகத் தெளிவான விளக்கம் அளித்துத் தெளியப்படுத்தியிருக்கிறீர். அடியேனுடைய வணக்கங்கள்.
 
அடியேன் 
வேங்கடேஷ் 

 

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 3:23:08 AM4/10/09
to மின்தமிழ்
On Apr 10, 3:22 pm, Thirumalai Vinjamoor Venkatesh

<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> LNS சார்
>
> <அவர் சொன்னது ' பிணம் கிடக்க மணம் புணரலாமோ, சுவாமி?>
>  
> யோகம் என்றதில் "தங்கள் முயற்சி" என்ற ஒன்று இருப்பதாகத் தோன்றவே, அதை விடுத்தனர். 
>

இருப்பினும் இங்கு 'பிணம்' என்று எதைச் சொல்கிறார் என்று விளங்கவில்லை.
இது சரணாகதி குறித்து சொன்ன சொல்தானா? அப்படியெனில் எப்படிப்
பொருந்துகிறது என்று விளங்கவில்லை. முன்பு அரங்கனாருடன் பேசும் போது
வேறொரு சம்பவத்துடன் இணைத்து இதைச் சொன்னதாக ஞாபகம். அதனால் கேட்டேன்.

அநேகமாக இன்று இரவு அவருடன் பேசுவேன். தெளிந்தால் சொல்கிறேன்.

வேங்கடேஷ்! மேலும் இந்த 'அடிமைத்தனம்' என்பதை விரிவாக அலசவேண்டும்.
இதைத்தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

தமிழ் எழுச்சி காணும் இக்காலக்கட்டத்தில் இப்புரிதல் அவசியமும் கூட.
வேறொரு சமயம், வேறொரு இழை என்றால் கூட பரவாயில்லை.

கண்ணன்

devoo

unread,
Apr 10, 2009, 3:37:22 AM4/10/09
to மின்தமிழ்
Apr 10, 12:23 pm, நா.கண்ணன்

இருப்பினும் இங்கு 'பிணம்' என்று எதைச் சொல்கிறார் என்று விளங்கவில்லை.//

' பிணம் கிடக்க மணம் புணரலாமோ'

இங்கு பிணம் என்றது சுற்றியுள்ள உலகைக் குறிக்கும் சொல்.
உலகோர் அஜ்ஞானத்தில் மூழ்கி, இறைவனை மறந்து, இழந்தோம் என்ற
இழவுமின்றிக்கே
உண்டியே, உடையே என்று உலகியலில் ஆழ்ந்திருந்த நிலை உய்யக்கொண்டாரின்
திருவுள்ளத்தை மிகவும் வருத்தியது.

யோக ரஹஸ்யத்தை அறிந்தால் தாம் மட்டும் உய்ந்து போகலாம்;
நாலாயிரம் கொண்டு உலகுக்கு உய்வு தராலாம் என்ற நோக்கத்தில் அவர்
நாதமுனிகளிடமிருந்து நாலாயிரத்தையும் அதிகரித்தருளினார் என்பது குரு
பரம்பரைச் செய்தி.

தேவ்


V, Dhivakar

unread,
Apr 10, 2009, 3:38:57 AM4/10/09
to minT...@googlegroups.com
பிணம் கிடக்க மணம் புணரலாமோ - என்பது புரியவில்லை. பின்னாளில் சேர்க்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம்.

நாதமுனிகள் தன்னுடைய இரண்டு பிரிய சிஷ்யர்களை அழைத்து ' குருவாக நான் உங்களுக்கென என்ன தரமுடியும். அடியேனிடம் இருப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று.. பகவானையே நினைந்து நினைந்து யோகத்தில்  கிடப்பது. இன்னொன்று இதோ இருக்கும் ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள்' என்று சொல்ல அந்த இரு சீடர்களில் மணக்கால் நம்பி தன் குருவிடம் ஆழ்வார் பாசுரங்கள் அருளிச் செய்யுமாறு வேண்ட, அதன்படியே உபதேசித்த நாதமுனிகள், அவருக்கு ஆழ்வார் பாசுரங்களை நாடெங்கும் பரவும் வகை செய்யவும் அப்படி செய்ததால் அவருக்கு 'உய்யக் கொண்டான்' எனவும் அவரைக் கட்டி மகிழ்ந்ததாகவும் குரு பரம்பரை - மஞ்சரியின் செய்தி.

இது படித்த ஞாபகத்தில்; எழுதுகிறேன்.

திவாகர்

2009/4/10 நா.கண்ணன் <nka...@gmail.com>

V, Dhivakar

unread,
Apr 10, 2009, 4:35:20 AM4/10/09
to minT...@googlegroups.com
ஆகா! இதோ ஆசார்ய வைபவ மஞ்சரி - உய்யக் கொண்டார் வைபவம் கிடைச்சாச்சு: அதை அப்படியே தருகிறேன்

ஸ்ரீமந்நாதமுனிகளின் சிஷ்யர்களில் ஸ்ரீபுண்டரீகாக்ஷரும் குருகைக் காவலப்பனும் முக்கியமானவர்கள். ஸ்ரீமந்நாதமுனிகளிடம் இரண்டு நிதிகள் இருந்தன. பகவத்ப்ராப்திக்கு உறுப்பான பக்தியோகம் ஒன்று; பகவத் ஸ்வரூப ரூபகுண விபூதிகளைத் தெளியப் பேசும் நாலாயிரம் பாசுரங்களடங்கிய திவ்யப் பிரபந்தங்கள் மற்றொன்று. முதல் நிதியாலே சேதனன் தானொருவன் மோட்சமடைய முடியும். இரண்டாவதாலே உலகையே உய்விக்கமுடியும். இவற்றில் எது வேண்டும் - என்று குருகைக்காவலப்பனை வினவினார். பக்தியோகத்தைப் பெற்ரு உய்ந்து போகிறேன் என்றார் குருகை. அப்படியே உபதேசம் பெற்று உஜ்ஜீவனமடைந்தார்.

"நீரும் யோகத்தையே பெற்றுப் போகிறீரோ என்று ஸ்ரீபுண்டரிகாக்ஷரை வினவ, அவரோ 'பிணம் கிடக்க மணம் புணர்வாருண்டோ? உலகமே ஆத்மநாசமடைந்து பிணக்காடாயிருக்கும்போது, அடியேன் ஒருவன் எம்பெருமானோடு ஆத்ம விவாஹம் செய்து கொண்டு மோட்சமடைவது சரியாகுமோ? அடியேன் எப்படி ஆனாலும் பரவாயில்லை.. உலகம் உய்யும்படி திவ்யப்பிரபந்தங்களை உபதேசிப்பீர்! என்றார் அப் பெரியவர்.

இதைக் கேட்ட ஸ்ரீமந்நாதமுனிகள் அவரை வாரியணைத்து, 'புண்டரிகாக்ஷரே! நீரே உலகையும், உலகை உடையவனான நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச் செயல்களையும், அதைப் பெற்ற என்னையும் உய்யக் கொண்டவர். உம்மாலேயே நான் அரு்ம்பாடுபட்டுப் பெற்ற அத் தமிழ் மறைகள் உலகெங்கும் பரவி அனைவரையும் உய்விக்கப்போகின்றன. இன்றுமுதல் நீர் 'உய்யக்கொண்டான்' என்ற திருநாமத்தில் பிரசித்தி பெற்று விளங்கக் கடவீர்.

----------------------------------- ஒரு சிறு மாற்றம் - முந்தையப் பதிவில் மணக்கால் நம்பி என பதிவு செய்துள்ளேன். இவர் உய்யக் கொண்டாரின் சிஷ்யர்.

திவாகர் 

2009/4/10 V, Dhivakar <venkdh...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 7:03:04 AM4/10/09
to மின்தமிழ்
ஆகா! அற்புதம்! விளங்கிவிட்டது. தேவ், திவாகருக்கு நன்றி.

பிணம் என்று ஜீவனைச் சொல்லுகிறாரோ என்றொரு சம்சயம். அவரது
வார்த்தைப்பிரயோகத்தைப் பாருங்கள். பின்நவீனத்துவ எழுத்து போன்ற நேரடி,
நெத்தியடி எழுத்து. பிணத்தை வீட்டில் வைத்துக்கொண்டு புணர மனம் வருமா?
அது போல் அல்லவோ நமது நிலமை இப்போது என்று சொல்வதிலிருந்து, சொல்ல வந்த
கருத்தின் தீவிரம் புரிகிறது.

உய்யக்கொண்டார் இப்படி என்றால் இதே போன்று செய்துதானே, `எம்பெருமானார்`
என்ற பட்டத்தை இராமானுசர் பெருகிறார். இவர்கள் சரித்திரத்தைப் படித்தாலே
நமக்கு உஜ்ஜீவனம்தான் (உய்தல்தான்).

குருபரம்பரா வைபவம் முழுவதும் இப்படி பரவிக்கிடக்கும் முத்துக்கள்
எத்தனையோ! இதை நினைவிற்குக் கொண்டுவந்த LN சாருக்கு நன்றி.

க.>

V, Dhivakar

unread,
Apr 10, 2009, 7:34:01 AM4/10/09
to minT...@googlegroups.com
உடையவர் வாழுங்காலத்தில் உடையவர் இதற்கு உயரே எதுவும் இல்லை என்ற உன்னத ஸ்தானத்தில் இருந்துவிட்டபடியால் அவருக்குப் பின் வந்த ஆச்சாரியர்கள் (தேசிகர், மணவாள முனிகள் தவிர) சரித்திரங்கள் உடையவர் புகழுக்குக் கீழேயே விளக்கப்படுகின்றன.
 
ஆனால் உடையவருக்கு மூத்தவர்கள் சரித்திரங்கள் ஒவ்வொன்றும் எத்தனையோ சாதனைகள் படைத்த ஞான சரித்திரங்களைப் பேசும். குறிப்பாக குருகைக்காவலப்பர் வைபவத்தில் யாமுனாச்சாரியார் (ஆளவந்தார்) அவரை சந்திக்கும் முன் ஆளவந்தாரைப் பார்க்காமலே யோகநிலையிலேயே அதுவும் நாராயணனை அனுபவித்துக் கொண்டே பேசுவதும், ஆளவந்தார் சிறு பிள்ளை பிராயத்திலேயே சோழராஜாங்கம் பெற்றதும், அவரை மணக்கால் நம்பி திரும்ப அழைத்துவந்ததும் வைபவத்தில் மிக முக்கிய கட்டங்கள்.
 
ஆளவந்தார் சோழ அரண்மனையில் வாதம் செய்து வென்ற கதையை தேவ் அவர்களோ அல்லது தி.வா அவர்களோ இன்னொரு இதழில் எழுதலாம். உடையவர் ஞானபோதனை பெற்றதே இந்தப் பெரியார்களின் வாழ்க்கையிலிருந்துதானே. 
 
திவாகர்

2009/4/10 நா.கண்ணன் <nka...@gmail.com>
ஆகா! அற்புதம்! விளங்கிவிட்டது. தேவ், திவாகருக்கு நன்றி.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 7:36:41 AM4/10/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
<வேங்கடேஷ்! மேலும் இந்த 'அடிமைத்தனம்' என்பதை விரிவாக அலசவேண்டும்.
இதைத்தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

தமிழ் எழுச்சி காணும் இக்காலக்கட்டத்தில் இப்புரிதல் அவசியமும் கூட.
வேறொரு சமயம், வேறொரு இழை என்றால் கூட பரவாயில்லை
>.
நிச்சயம் அலசலாம். எவ்வாறு என்பதைத் தெரிவிக்கவும். "குரங்குக் குட்டி பாவம்" இழையில் இதைப் பற்றித்தான் அலசினோம். இதில் இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
 
1. உயிருக்கு, இறைவன் ஒரு தருணத்தில் சுதந்திரம் அளித்து, அந்த சுதந்திரத்தினால் அவ்வுயிர் செய்யும் காரியத்தைக் கொண்டு, அருள்புரிகிறான். அது கொண்டு பாவ புண்ணியங்களும் ஏறிடுகின்றன என்பது ஒரு சாரார் கருத்து
 
2. இல்லை. "எல்லாம் அவன் செயலே" என்று சோம்பியிருத்தலே உண்மையான அடிமையின் நிலை என்பது இன்னொரு சாராரின் கருத்து.
 
மேற்சொன்னவற்றில், அடியேன் தெளிந்திருப்பது 2வது கருத்தையே. இதுதான் ஆழ்வார்களின் நிலை என்றபடியால். "குரங்குக் குட்டி பாவம்" இழையில், இதற்காக அடியேன் ஆழ்வார்களின் பாசுரங்களை மேற்கோள் காட்டிய பொழுதுதான் தேவ் சார், திருவாய்மொழி உரை எழுதும் படி பணித்தார். உண்மையில் அடியேனுக்கு அவ்வளவு அறிவு இல்லாத போதிலும், மறுக்காமல் ஏற்றுக் கொண்டதற்கு ஒரே காரணம், "அதுவும் அவனது திருக்குறிப்பே" என்றபடியால்.
 
ஆகையால்தான், திரும்பத் திரும்ப அடியேன் சொல்லும் வசனம் "அடியேன் ஒரு கருவி மட்டுமே". அடியேன் வெறும் அடக்கத்தின் அடியாக இதைச் சொல்லவில்லை. உண்மையில் தாங்கள் அனைவரும் திருவாய்மொழியின் முதலிரண்டு பாசுரத்தின் உரையைப் படித்து, அனுபவித்தது, அடியேனால் எழுதப்பெற்றதாலா?  இல்லவே இல்லை. ஒருவர் அடியேனுடைய "சொற்திறனை"ப் போற்றியிருந்தார். முறையாகப் பயிலாத அடியேனுக்கு எங்கிருந்து இந்த சொற்திறன் வந்தது. "மயர்வற மதிநலம் அருளினன் யவன்"?
 
ஆக, "இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள்ளே வைத்தான்" என்றிருப்பதே அடியேனுக்கு உண்மையான இயல்பு. இக்கருத்தை அடியேன் மூலம் தெரிவிக்கவே அவன் தேவ் சார் மூலமாக அப்படி ஒரு நியமனம் செய்தான் என்றே கொண்டேன். அதனால்தான் "இட்ட வழக்காயிருக்கைக்கு" பாத்திரமாக, மறுப்பேதும் சொல்லாமல் எழுதுகிறேன்.
 
"என்னையும் பார்க்கில், என் இயல்வையும் பார்க்கில், எண்ணில் பல்குணத்த தங்களைப் போல்வாரையும் (கண்ணன் சார், தேவ் சார், குமரன் சார், கண்ணபிரான் - அப்பா இவர்களின் சொற்திறன் முன் அடியேனுடையது எங்கே?) பார்க்கில்", அடியேன் ஒரு கருவி மட்டுமே என்பது திண்ணமாய் விளங்கும்.
 
அடியேனுடைய (அவன் நியமனத்தால் அடியேனால் எழுதப்படும்) உரைகள் இவ்விரண்டாம் நிலையை ஒட்டியே இருக்கும். அதுதானே அவன் திருவுள்ளமும்?
 
மேலும் அலசுவோம்.
 
அடியேன்
வேங்கடேஷ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 10, 2009, 7:39:53 AM4/10/09
to minT...@googlegroups.com
திவாகர் சார்,
 
மிக்க நன்றி. கண்ணன் சாருக்குப் விடையிருக்க, இப்புத்தகத்தைத் தேடிவிட்டு, மடல்களைப் பார்த்த்பொழுது, அடியேனுடைய வேலையை அவன் மிச்சமாக்கிவிட்டது தெரிந்தது.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: "V, Dhivakar" <venkdh...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, 10 April, 2009 2:05:20 PM
Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

shivan .

unread,
Apr 10, 2009, 7:51:53 AM4/10/09
to minT...@googlegroups.com
அன்பு கண்ணன்

செயல் நின்ற நிலையான அகர்மா எனும் நிலையை பிணம் என்பர்.  அகர்ம நிலையில் எவ்வினையிலும் மனம் ஈடுபடாது.  மேலான ஒன்றின் செயலுக்கு அனைத்தையும் காட்டிக் கொண்டு இருக்கும்.  அந்நிலையில் யோகம், ஞானம் என எதனிலும் சித்தம் ஈடுபடாது. சாதக பறவை மழை நீருக்காய் தொண்டை வறண்டு காத்திருப்பது போல அவன் செயல்பட உடல்,பொருள், ஆவி அனைத்தையும் காட்டிக்கொண்டு காத்திருக்கும்.

இதையே பிணம் கிடக்க மணம் புணரலாமோ  என்கிறார். யோகம் என்பது ஜீவன், புருஷனின் ஐக்கியம். இதை மணம் என்பர்.  இங்கு அசையா நிலையான அகர்மா நிலை இருக்கு எங்கிருந்து யோக மணம் புரிவது என்கிறார்.

மேலே எழுதியதில் தெரியும் ஆணவத்தை  சான்றோர்கள்  மன்னித்து, பொருள் சரியாக இருப்பின் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

2009/4/10 நா.கண்ணன் <nka...@gmail.com>
On Apr 10, 11:46 am, LNS <lns25...@gmail.com> wrote:

devoo

unread,
Apr 10, 2009, 8:00:38 AM4/10/09
to மின்தமிழ்
Apr 10, 4:36 pm, Thirumalai Vinjamoor Venkatesh

//2. இல்லை. "எல்லாம் அவன் செயலே" என்று சோம்பியிருத்தலே உண்மையான
அடிமையின் நிலை என்பது இன்னொரு சாராரின் கருத்து//

ஒரு ஜீவன் எந்த நிலையில், எந்த இடத்தில் இருந்தாலும் ஸ்வரூபத: ஈச்வரனோடு
அதற்கு இயல்பாக அமைந்துள்ள
ஸம்பந்தம் மாறாது; அந்த ஜீவன் ஸ்வர்கத்தில் இருப்பினும், அருநரகில்
வீழ்ந்து கிடப்பினும், மண்ணுலகில் வாழ்ந்தாலும்,பரம பதம் சென்றாலும்
அந்தர்யாமி ஜீவனைவிட்டு ஒருகாலும் பிரிவது கிடையாது.
ஈச்வரனுக்கும், ஜீவனுக்குமான சேஷ, சேஷி பாவம், ஆதார ஆதேய ஸம்பந்தம்
எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாதது.

ஜீவன் இந்த உறவை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
இச்சைக்கு மேற்பட இவனிடம் ஈசன் எதிர்பார்ப்பது யாதொன்றுமில்லை.
இத்தகைய ஞானம் வாய்க்கப்பெற்ற ஒரு ஜீவன் அதன் பிறகு செய்வது அனைத்துமே
கைங்கர்யத்தோடு சேரும். ஸாதன கோடியோடு அவற்றைச் சேர்ப்பது ஸ்வரூப
விருத்தம் என்று மேலோர் பகர்வர்.

அடியேன் புரிந்துகொண்டது சரிதானே வேங்கடேஷ் ?

தேவ்

நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 8:11:37 AM4/10/09
to மின்தமிழ்
திவாகர்:

உடையவர் ஒப்புயவர் அற்றவர் என்பது அவர் காலத்திலும் அவருக்குப் பின்னும்
இக்காலம்வரை செல்லுபடியாகும் ஒரு விஷயம். அதில் யாருக்குமே
மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அவர் மேரு மலைபோல் மழைத்தடுத்து மழை மறைவுப் பிரதேசங்களை என்றும்
உருவாக்கியதில்லை. அவர் வாழ்ந்த காலத்திலும், அவருக்குப் பின் வந்த
ஆச்சார்ய புருஷர்களின் வைபங்கள் முழுவிவரமாகப் பதிவாகியுள்ளன
(வியாக்கியானங்களில் இதைக் காணலாம்). அவை எவ்வளவோ மேன்மையானவை. அவற்றை
யாரும் மறைத்ததில்லை. உடையவரே எப்போதும் ‘அடியேன்’ என்று இருந்தவரே.
(உடையவருக்காக அரங்கன் சோறு சுமந்த கதையொன்று சொல்ல ஆசை, கதை
மறந்துவிட்டது)

எனவே அவருக்கு முன்தான் கீர்த்தி உடைய பெரியோர் இருந்தனர், அதன் பின்
இருந்த பெரியோரின் வாழ்வு எம்பெருமானாரின் நிழல் பட்டதால் மங்கி இருந்தது
என்பது ஏற்றுக்கொள்ள இயலாத கூற்று. உண்மையில் மணவாள மாமுனிகளின் பிறப்பே
குருபரம்பரா பிரபாவம் குறைந்து, ஜீனித்துப் போயிருப்பதை மீண்டும் அதன்
பழைய நிலைக்கு உயர்த்தப் பிறந்ததே.

என்னுடைய எதிர்பார்ப்பு, மீண்டுமொரு மணவாளன் தமிழ் மண்ணில் பிறந்து
ஆச்சார்யர்களின் வைபவத்தை பிரகாசிக்க வைப்பான் என்பதே.

தாழ்வாது மில்குரவர் தாம் வாழி! ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

என்பதில் இராமானுசருக்கு முன்னும், பின்னும் இருந்த எல்லாக் குரவர்களும்
வந்து விடுகின்றனர்.

வாழ்க.

கண்ணன்

LNS

unread,
Apr 10, 2009, 8:52:26 AM4/10/09
to மின்தமிழ்
திவாகர், தேவ் சார் அவர்களுக்கு நன்றி. நான் கதையை முழுதாக சொல்லாமல்
போய் விட்டேன்:)

யோக ஸாஸ்திரத்தை பொருத்த வரை - ஸ்ரீமன் நாதமுனி குருகை காவலப்பனை யோக
ஸாஸ்திர கல்விக்கு அதிபதியாக (ஒராண்வழியாக) நியமித்திருந்தார். அவரே
ஆளவந்தாருக்கு யோகம் சொல்லி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆளவந்தார்
"ஆடி அசைந்துக்கொண்டு" பாடம் கேட்க வந்த போது குருகை காவலப்பன்
திருநாட்டிற்கு எழுந்தருளி விட்டார்.

இந்த கதைகளிலிருந்து புரியும் விஷயம் - ஸ்ரீவைஷ்ணவ பரம்பரையில் யோக
வித்தையை deliberately புறக்கணித்து அடைக்கல ஸாஸ்திரமான நாலாயிரத்தின்
கிரந்த பரம்பரையை பராமரித்தனர். ஸ்ரீராமாநுஜரும் காஞ்சியில்
வடகலைகளையெல்லாம் கற்று கரைகண்டு ஸ்ரீரங்கத்திற்கு விஜயம் செய்த போது
அவருக்கு திருவாய்மொழி டியூஷன் ஏற்படுத்தினர் அங்குள்ள பெரியவர்.
யோகத்தைப் பற்றி பேச்சே காணோம். யோகத்தின் கிரந்த பரம்பரை ஆளவந்தாருக்கு
ஒரு தலைமுறை முன்னரே குருகை காவலப்பனுடன் க்ளொஸ் ஆகிவிட்டது.
ஓராண்வழியில் ஏதாவது கிரந்தத்தை lapse ஆக விடணும் என்று சொல்லுங்கள் அதை
விட சுலபம் ஏதும் கிடையாது :)

குருபரம்பரையில் சுற்றிவளைத்துக் கொண்டு நிறைய செய்திகள சொல்வார்கள்.
அருளிச்செயல்களில் ஒரு சீரில் அதை சொல்லி விட்டு அடுத்த காரியத்தை
கவனிக்க தொடங்கி விடுவார்கள்.

திருவாய்மொழி முதல் பாசுரத்தில் 'உயர்வற உயர்நலம்' என்று பெருமாளின்
பரத்துவத்தை நிலைநாட்டி விட்டு அடுத்த பாசுரத்தில் அப்பேர்பட்ட பரனை
யோகத்தினால் அறிந்து கொள்ள முடியாது என்று casual ஆக சொல்லி விட்டு
போய்க்கொண்டே இருக்கிறார் ஆழ்வார்.

வடமொழிஸாஸ்திரத்தில் வரும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம்,
பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை. அது
தான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!

LNS

Kumaran Malli

unread,
Apr 10, 2009, 9:39:17 AM4/10/09
to minT...@googlegroups.com


அழகான விளக்கங்களும் ஆசார்யர்களது பெருமைகளும் இந்த இழையில் அருமையாக வெளிப்படுகின்றன. அனைவருக்கும் நன்றிகள்.

LNS ஐயா 'மனனகம் மலம் அற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்' என்பதற்கு மலம் அறுந்ததால்  மலர்ந்து எழும் மனத்தால் அறியப்படுபவன் சேதனமான ஜீவன்; ஜீவனைப் போன்றவன் இல்லை பரமன் - என்பதைச் சொன்னார். அதன் தொடர்ச்சியாக 'பொறி உணர்வு அவை இலன்' என்றது ஐம்பொறிகளுக்குப் பொருளாக நிற்கும் அசேதனமான இயற்கையும் (பிரகிருதியும்) இல்லை பரமன் என்று ஆழ்வார் சொல்வதாகப் படித்திருக்கிறேன்.

எனன் உயிர் என்ற போது அவன் ஆத்மாவிற்கு ஆத்மாவாக சித், அசித் இரண்டிற்கும் சரீரியாக இருப்பதைச் சொல்வதாகவும் படித்துள்ளேன்.

அன்பன்,
குமரன்.

2009/4/9 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
 
"மனத்திலுள்ள தன் முயற்சி என்ற குற்றம் நீங்கப்பெற்று அடிமைத்தனமே தன் இயல்பு என்று அவனால் மதிநலம் அளிக்கப்பெற்று, அதனால் மலர்ச்சியடைந்து மேல் நோக்கி எழுச்சியுடைய மனதின் உணர்வளவு இல்லாதவன். பொறிகளாகிற செவி, வாய், கண், மூக்கு, மற்றும் உடலின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். இப்படியாகப்பட்ட முழுமையான உணர்வுக்கு அப்பாற்பட்டவனாகிறான். அவன் முக்காலத்திலும் ஒத்தாரில்லாதவனாக விளங்குகிறான். அவனைக்காட்டிலும் பெரியவன் இல்லாமலிருக்கிறான். அவன் தான் என்னுடைய உயிராகவும் இருக்கிறான்."
 

Tirumurti Vasudevan

unread,
Apr 10, 2009, 9:56:30 AM4/10/09
to minT...@googlegroups.com
நீங்க பேசுற பல விஷயங்கள் என் சிறு தலைக்கு மேலே போய் விட்டாலும்....

சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?
அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை ஓங்கி இருக்கணும்?
தெளிந்த மனசோட ¨எல்லாம் அவனுக்குத்தெரியும். அவன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்திலே செய்வான்¨ என்கிற திட சித்தம் இல்லையா இவனுக்கு வேணும்?

தி.வா

10 ஏப்ரல், 2009 5:06 pm அன்று, Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com> எழுதியது:

சோம்பியிருத்தலே



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Kumaran Malli

unread,
Apr 10, 2009, 10:13:55 AM4/10/09
to minT...@googlegroups.com
நல்ல கேள்வி திவா ஐயா. வழக்கம் போல் அது ஆழ்வார் பாசுரத்தில் வரும் ஒரு வரி. வேங்கடேஷ் வந்து சொல்லுவார். :-)

2009/4/10 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

devoo

unread,
Apr 10, 2009, 10:32:55 AM4/10/09
to மின்தமிழ்
Apr 10, 5:11 pm, நா.கண்ணன்

//அவர் வாழ்ந்த காலத்திலும், அவருக்குப் பின் வந்த


ஆச்சார்ய புருஷர்களின் வைபங்கள் முழுவிவரமாகப் பதிவாகியுள்ளன

(வியாக்கியானங்களில் இதைக் காணலாம்). //

மாறநேர் நம்பி, திருக்கச்சி நம்பி போன்ற மெய்யடியார்களில்
யாருடைய வரலாறும் ஒளிக்கப்படவில்லை; இவர்களுக்கு
ஆசார்ய பரம்பரையில் நேரடித்தொடர்பு இல்லாத நிலையிலும்.

கோயிலொழுகில் மொகலாயர் கலாபத்தில் அரங்கனுக்காக
இன்னுயிரீந்த ஆடல் மகளிரின் தொண்டும் உள்ளபடி
கூறப்படுகிறது.

தேவ்

LNS

unread,
Apr 10, 2009, 10:35:11 AM4/10/09
to மின்தமிழ்
> 'பொறி
> உணர்வு அவை இலன்' என்றது ஐம்பொறிகளுக்குப் பொருளாக நிற்கும் அசேதனமான
> இயற்கையும் (பிரகிருதியும்) இல்லை பரமன் என்று ஆழ்வார் சொல்வதாகப்
> படித்திருக்கிறேன்.

பொறி உணர்வு அவை இலன் என்பது உபநிஷத் வாக்கியம்.

न तत्र चक्षुर्गच्छति, न वाग्गछति नो मनः etc etc (கேநோபனிஷத் 1.3)

The eye does not go there nor speech nor mind (Eight Upanishads,
Ramakrishna Mission)

அதாவது, இறைவன் காணப்படுகின்ற உயிரல் பொருள்களின் தன்மையில்
வேறுபட்டிருத்தலைப் போலவே காணப்படாத உயிரின் தன்மையிலும் வேறுபட்டவன்
என்கிறார். இந்த 'மேட்டரில்' பிறவிக்குருடனும் தெளிந்த பார்வையுடையவனும்
சரி சமம் என்பது கருத்து.

இவ்வாறு இரு பொருள்களினும் வேறுபட்டவனாக இருப்பானாயின் அவனை அறிவது தான்
எப்படி என்றால் அதற்கு 'இனனுணர் முழு நலம்' என்று தொடர்கிறார்.

> எனன் உயிர் என்ற போது அவன் ஆத்மாவிற்கு ஆத்மாவாக சித், அசித் இரண்டிற்கும்
> சரீரியாக இருப்பதைச் சொல்வதாகவும் படித்துள்ளேன்.

எனன் உயிர் என்றது இப்படிப்பட்டவன் எனக்கு தாரகன் என்று சொல்லுவது.
உபலக்ஷணத்தால் (by analogy) எவனுக்கு உயிர்கள் அனைத்தும் சரீரமோ என்று
அமைகிறது.

LNS

devoo

unread,
Apr 10, 2009, 11:05:08 AM4/10/09
to மின்தமிழ்
Apr 10, 7:35 pm, LNS
//பொறி உணர்வு அவை இலன்
न वाग्गछति नो मनः etc etc (கேநோபனிஷத் 1.3)//

यतो वाचो निवर्तन्ते ह्यप्राप्य मनसा सह
என்பதும் ஒரு புகழ் பெற்ற மறைமொழி;
ஆம், அங்கு பொறி புலன்களுக்கு வேலை இல்லை.
முற்றிலும் அப்ராக்ருத, ஆன்மியமான தன்மை.

தேவ்


நா.கண்ணன்

unread,
Apr 10, 2009, 11:11:21 AM4/10/09
to மின்தமிழ்
On Apr 10, 9:56 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?
> அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை ஓங்கி
> இருக்கணும்?
> தெளிந்த மனசோட ¨எல்லாம் அவனுக்குத்தெரியும். அவன் செய்ய வேண்டியதை செய்ய
> வேண்டிய நேரத்திலே செய்வான்¨ என்கிற திட சித்தம் இல்லையா இவனுக்கு வேணும்?
>

இதுதான் பேசவேண்டிய விஷயம். இப்போ 12 மணிக்கு மேலே. நாளைக்கு கொரியன்
வகுப்புக்குப் போகணும்.
இந்த அடிமை, சோம்பேறி இவை குழப்பம் தரக்கூடிய பிரயோகங்கள்.
ஞானத்தெளிவில்தான் ஜீவனின் சுயரூபம் புலப்படுகிறது. அவனுக்கும்
பரமனுக்குமுள்ள உறவு புலப்படுகிறது.
புரியாதவர்கள் எளிதாக அறிவின்மையை, சோம்பி இருத்தலை இதனுடன் ஒப்பிடுவர்.
எனவேதான் இது பற்றிப் பேச வேண்டுமென்றேன். நான் பாசுரமடல்களில் சொன்னபடி,
நாலாயிரமும் ஜீவனை உய்ய வைக்கும், எழுப்பும், எழுச்சி கீதங்கள். அவை
ஒன்றுதான் கட்டற்ற முழு மனித விடுதலைக்குக் காரணிகள்.
பேசுவோம். சுவாரசியாகப் போகிறது.

க.>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 10, 2009, 12:18:56 PM4/10/09
to மின்தமிழ்
//சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?

அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை
ஓங்கி இருக்கணும்?//

திவா சார்!
எதுக்கு "சாத்வீகம் ஓங்கி இருக்கணும்"-ன்னு ஒரு Stipulation-ஐ போடணும்?
தாமசம் என்பது விலக்கப்படணும்! சாத்வீகம் என்பதே போற்றப்படணும்-ன்னு
உருவாக்கி வச்சிக்கிட்டா,
அது ரூல்ஸ் புத்தகத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுமே அன்றி, அன்றாட
வாழ்வில் இயையாது!

அதனால் தான் ஜகதாச்சார்யரும், ஜகத்குருவுமான இராமானுசர், உலகம் மாயை
அல்ல! உலகம் உண்மை என்று எடுத்துரைத்தார்!
தாமசமும் ஒரு குணம்! சாத்விகமும் ஒரு குணம்!
மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி, தாமசத்துக்கு அடையாளப்படுத்தப்
படுகிறார் அல்லவா?
அப்படியென்றால் தாமசம் ஒதுக்கப்பட வேண்டியதா என்ன? இல்லை அல்லவா?

தாமசம், ராஜசம், சாத்வீகம் கலந்ததே வாழ்க்கை! = எது எது எப்போதோ, அது
அது அப்போது!

தேசத்தை எதிரி கைப்பற்ற வரும் போதோ, மாலிக்காபூர் கோயிலைச் சூறையாட
வரும் போதோ,
சாத்வீகம் பேச முடியாது! தாமசம் தான் செயலாற்றும்!
சண்டை போட்டு முடித்த பின்பு, உற்சவம்/அலங்காரம்-ன்னு சாத்வீகம்
செயலாற்றும்!
அது போல இறைவனுடனான ஏகாந்தத்தில், இயற்கையான எல்லாக் குணங்களுமே,
அங்கும் தலை தூக்கும்!

இறைவன் பரிசுத்த ரூபம் என்பதற்காக, எல்லாமே பரிசுத்தம் என்ற Ideal State-
இல் இருக்கணும்-ன்னு அவசியம் இல்லை!
தாய் பரிசுத்தமானவள் என்றாலும், குழந்தையைத் தூக்கி விடச் சேற்றிலும்
இறங்குவாள்!
குழந்தையை மண்ணில் ஆடாதே என்று எத்தனை முறை சொன்னாலும், அது மண்ணி"லும்"
ஆடிக் கொண்டு தான் இருக்கும்! :))

//"எல்லாம் அவன் செயலே" என்று சோம்பியிருத்தலே//

சோம்புதல் என்பது தீய குணம் அன்று! அதுவும் மனித குணம் தான்!
கடமையைச் செய்யும் போது வரும் சோம்பல் தவறு!
ஆனால் அம்மா ஆசை ஆசையாய் சமைக்கும் போது, வெளியில் இருந்து அவளிடம்
பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சோம்பி இருப்பது தவறல்ல! :)

எல்லாம் அவன் செயலே என்று சமையலை அவனிடம் விட்டு விட்டு,
அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் சோம்பலைத் தான் இங்கு ஆழ்வார்/
ஆச்சார்யர் சொல்கிறார்!

கண்ணனுக்கே உரியது காமம் என்னும் போது, காமமும் தவம் ஆகிறது அல்லவா?
கண்ணனுக்கே உரியது சோம்பல் என்னுமிடத்து, சோம்பலும் தவம் ஆகிறது!

முன் சொன்ன சோம்பல் = மடி! பின் சொன்ன சோம்பல் = ரசம்!
வெறுமனே ஞானம்+கர்மம் என்பதோடு மட்டுமில்லாமல், இந்த வாழ்க்கை ரசமும்,
திராவிட வேதத்தில் கொட்டிக் கிடக்கும்! :))

anbudan
krs


On Apr 10, 9:56 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> நீங்க பேசுற பல விஷயங்கள் என் சிறு தலைக்கு மேலே போய் விட்டாலும்....
>
> சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?
> அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை ஓங்கி
> இருக்கணும்?
> தெளிந்த மனசோட ¨எல்லாம் அவனுக்குத்தெரியும். அவன் செய்ய வேண்டியதை செய்ய
> வேண்டிய நேரத்திலே செய்வான்¨ என்கிற திட சித்தம் இல்லையா இவனுக்கு வேணும்?
>
> தி.வா
>
> 10 ஏப்ரல், 2009 5:06 pm அன்று, Thirumalai Vinjamoor Venkatesh <

> vinjamoor_venkat...@yahoo.com> எழுதியது:


>
> > சோம்பியிருத்தலே
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 10, 2009, 12:37:17 PM4/10/09
to மின்தமிழ்
"சோம்பல்" குறித்து, அடியேனின் மேலும் சில "உளறல்கள்" :)

ஞான/கர்ம/தியான யோகாதிகள் என்று நம் சாமார்த்தியத்தை நாமே மெச்சிக்
கொண்டு...சமையலறையில் புகுந்து வம்படி பண்ணுவது ஒரு வகை!
எல்லாம் அவன் செயலே என்று சமையலை அவனிடம்(அவளிடம்) விட்டு விட்டு,
அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் "சோம்பல்" இன்னொரு வகை! இதைத்
தான் இங்கு ஆழ்வார்/ஆச்சார்யர் சொல்கிறார்!

"எனக்கு ஞான பரமான விஷயம் தான் பிடிக்கும்"-ன்னு சிலர் சொல்லலாம்!
நாமும் செயலாற்ற வேண்டாமா என்று கேட்கலாம்! தவறில்லை!
ஆனால் நம்ம ஞானத்தால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று எண்ணி விட


முடியாது!

வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம்ம ஞானத்தால் ஆராய்ச்சி பண்ணி, சடங்குகளால் கர்மா பண்ணி....
அவனைத் தேடி அறிந்தோம் = இந்த ஞானச் செருக்குக்கு, தீனி போட வேண்டுமானால்
பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது!

ந தர்ம நிஷ்டோஸ்மி! நச் ஆத்ம வேதி!
ந பக்திமானு! த்வத் சரணார விந்தே...
அகிஞ்சனஹ: அனன்ய கதிஹி

இந்த "என்னால்" இயலாது என்னும் ஆகிஞ்சன்யம் = "சோம்பல்"!

நோற்ற நோன்பிலேன்! நுண்ணறிவு ஒன்றிலேன்!
ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = "சோம்பல்"!

அடியேன் "சோம்பு ஏறி"
krs :))))


On Apr 10, 12:18 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> > My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot....blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
>
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!- Hide quoted text -
>
> - Show quoted text -

Kumaran Malli

unread,
Apr 10, 2009, 12:49:29 PM4/10/09
to minT...@googlegroups.com

மேம்பொருள் போகவிட்டு மெய்மையை மிக உணர்ந்து
ஆம்பரிசு அறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

இது விப்ரநாராயணரான தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலையில் வரும் பாசுரம். பாசுரத்தின் சுருக்கமான விளக்கம் இதோ:

காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் வாழ்பவனே (சூழ்புனல் அரங்கத்தானே)! சாதாரண மக்கள் விரும்புகின்ற பொருட்களை எல்லாம் போகவிட்டுவிட்டு (மேம்பொருள் போகவிட்டு) தமது உண்மை நிலையை - ஆத்ம சொரூபத்தை, இறைவனுக்கே அடிமையாக இருப்பதை - உள்ளபடி உணர்ந்து (மெய்மையை மிக உணர்ந்து) அந்த உண்மை நிலைக்கு ஏற்றவற்றையும் அறிந்து கொண்டு (ஆம் பரிசு அறிந்து கொண்டு) ஐம்புலன்களையும் இறைவனுக்கே என்று மாற்றி (ஐம்புலன் அகத்து அடக்கி) சிறிதும் மிச்சம் இல்லாமல் (காம்பற) தான் சுதந்திரன், தன்னுடைய தனி முயற்சியால் ஆத்மானுபவமோ இறையனுபவமோ  பெறலாம் என்றென்னும் அபிமானத்தை அகற்றி (தலை சிரைத்து) உன்னுடைய கட்டளைக்காகவே கத்திருக்கும், உன் திருக்கோவில் வாசலில் உன் திருமுகக்குறிப்பை எதிர்நோக்கிக் கிடக்கும் (உன் கடைத்தலை இருந்து வாழும்) தம்முடைய சுயநலத்திலும் தமது முயற்சியால் மட்டுமே உன்னைக் காணலாம் என்று தொடங்கும் முயற்சிகளிலும் சோம்பியிருக்கும் அவர்களை, ஸர்வாரம்ப பரித்யாகியாக இருக்குமவர்களை (சோம்பரை) நீ விரும்புகின்றாய் அல்லவா (உகத்தி போலும்).

2009/4/10 Kumaran Malli <kumara...@gmail.com>

devoo

unread,
Apr 10, 2009, 2:09:35 PM4/10/09
to மின்தமிழ்
Apr 10, 6:56 pm, Tirumurti Vasudevan

//நீங்க பேசுற பல விஷயங்கள் என் சிறு தலைக்கு மேலே போய் விட்டாலும்....


சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?
அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை

ஓங்கி இருக்கணும் ?//


உங்கள் ஐயப்பாடு நியாயமானதே.
கீதைப்படி நித்ரா, ஆலஸ்யம், ப்ரமாதம் (உறக்கம், சோம்பல்,
குழப்பம்) ஆகியவை தமோ குணத்தின் விளைவுகள்.

ஆனால் இங்கு கூறப்படு சோம்பல் அதுவன்று.
’....................................உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத்தானே’
என்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

இங்கு சோம்பர் என்பது தன் உய்வுக்கென்று முனைப்புக் காட்டாத
ப்ரபந்நனைக் குறிக்கும் சொல். ஒரு சேதனன் முக்தி பெற்றால்
கிடைக்கும் ஆத்ம லாபம் எம்பெருமானுக்கன்றோ!

ஒரு சேதனன் முக்த தசையில் செய்யும் கைங்கர்யத்தால்
விளையும் பயனும் எம்பெருமானதே.உண்மை இவ்வாறிருப்பதால்
ஒருவன் வீடு பேற்றுக்கான ஓர் உபாயத்தைக் கைக்கொண்டால்
அது ஸ்வரூபத்துக்குப் பொருந்தாமல் போய்விடும். தன் ஆனந்தத்துக்காக ,ஒரு
பயனை எதிர்பார்த்து முயற்சி செய்வதாக
அமைந்துவிடும்.

‘தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே’
என்பார் நம்மாழ்வார். இதைப் பரகத ஸ்வீகார நிஷ்டை
என்று பகர்வர்.

ஒருவன் யாதொன்றும் செய்யாமல் சோம்பி இருக்க வேண்டுமா
என்னும் கேள்வி எழும். ஓர் உண்மையான ப்ரபந்நனால்
அவ்வாறிருக்க இயலாது. அவன் எப்போதும் பகவத் கைங்கர்யத்திலும், பகவத்
விஷயத்திலும் ஊற்றம் கொண்டிருப்பான். தன் ஸ்வரூபத்துக்குப் பொருந்தாத
செயல்களில் ஈடுபடான்.சாதகம் போல் அவனருளையே எதிர் நோக்கியிருப்பான்.
இச்செயல்களையும் அவன் மேற்கொள்ளும் உபாயம் என்று கருதலாமே என்றால், அவை
உபாயங்களாகா. அவற்றை ஓர் உத்தம அதிகாரிக்கான தகுதிகளாகவே கருத வேண்டும்;
இதை அதிகாரி விசேஷணம் என்பர்.

குமரன் கூறுவதுபோல் உலகியல் இன்பங்களைப் பொருத்த மட்டில் ஸர்வாரம்ப
பரித்யாகியாக இருந்து விடுவான்.
எளிதாக விளக்க முயன்றுள்ளேன்; தவறுகள் இருக்கலாம்.

நமக்கு வேங்கடேஷ் இருக்கிறாரே, சரி செய்து விடுவார்.


தேவ்

shivan .

unread,
Apr 10, 2009, 2:34:33 PM4/10/09
to minT...@googlegroups.com
சோம்பியிருத்தல்  என்பதற்கு மயங்கியிருத்தல் (stupor) என்ற நேரடி பொருளும் தமிழில் உண்டு.  பிரபத்தியில் செயலற்று ஜீவன் என்னால் ஆவதொன்றில்லை இனி நீதான் செய்ய வேண்டும் என இருக்கும்.  இந்த செயலற்று மயங்கி நிற்கும் நிலையையே ப்ரப்பத்தியின் முக்கிய தன்மையாக கருதுவர்.


இன்னொரு சோம்பல் lazinesss. இது நிச்சயமாக தீய குணமே. இதை யாரும் குறிப்பிடவில்லை. செய்ய கூடிய திறனிருந்தும் செயல்பட விருப்பமின்றி இருத்தல் ப்ரபத்தி ஆகாது.




2009/4/10 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Apr 10, 2009, 2:51:37 PM4/10/09
to மின்தமிழ்
தொண்டரடிப்பொடிகளின் பாசுரத்தைத் தக்க சமயத்தில் கொடுத்தமைக்கு நன்றி
குமரன்!

இங்கே இன்னொரு சூட்சுமமும் உண்டு!
"வெறும்" சோம்பலைச் சொல்லவில்லை ஆழ்வார்!
"வாழும்" சோம்பலைச் சொல்கிறார்!

காம்பறத் தலை சிரைத்து,
உன் கடைத்தலை இருந்து,
***வாழும் சோம்பரை***** உகத்தி போலும்


சூழ் புனல் அரங்கத்தானே

கெடும் சோம்பலைச் சொல்லாது,
"வாழும்" சோம்பலைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்!

அதாச்சும் தம் ஹிதத்துக்கான வழிகளைத் தாமே தேடிக் கொள்ளாத சோம்பல்!
தம் ஹிதம் எம்பெருமான் மட்டுமே என்னும் சோம்பல்!

இந்தச் "சோம்பலை" திருமூல நாயனாரும் திருமந்திரத்தில் பேசுகிறார்!
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே!
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே!
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டார் அச் சுருதிக்கண் தூக்கமே.

இன்னும் ஒரு படி மேலே போய், "சோம்பலாய்த் தூங்கியவர்கள்" சிவயோகம்
கண்டார் என்றும் பேசுகிறார்!
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே

அடியேன் முன்பே சொன்னது போல்...


சமையலை அவனிடம் விட்டு விட்டு,

அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டும்,
அவனுடன் வாழ்ந்து கொண்டும்,
அவனுடன் தூங்கிக் கொண்டும், இருக்கும் "சோம்பல்"!

***வாழும் சோம்பரை***** உகத்தி போலும்


சூழ் புனல் அரங்கத்தானே

anbudan
krs

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 11, 2009, 1:30:28 AM4/11/09
to minT...@googlegroups.com
LNS சார்,

<வடமொழிஸாஸ்திரத்தில் வரும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம்,
பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை. அது
தான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!
>

ஆகா! அற்புதம்! மனம் திறந்து சொல்கிறேன். இவ்வளவு ஆணித்தரமாக தற்கால உபன்யாசகர்கள் கூட, இவ்வுண்மையை தெரிவிப்பதில்லை.
 
தாங்கள் சொன்னது போல, ஞானத்திற்கும், அவனால் அளிக்கப்பட்ட கல்விக்கும் உள்ள வித்யாஸம் இதுதான்.
 
வடமொழிசாஸ்த்திரங்கள், பெரும்பாலும் கர்மா-theory-ஐச் (ஜீவன் செய்யும் முயற்சியை)  சார்ந்திருப்பதால், அதில் ஒவ்வொன்றிற்கும், பூர்வபஷம், சித்தாந்தம், ப்ரமாணம் என்பவைத் தேவைப்படுகிறது,
 
ஆனால், அவனால் அடிமையாக்கிக்கொள்ளப்பட்டு, அறியாக்காலதுள்ளே அடிமைக்கண் அன்பு செய்யப்பட்டு அவனைப் பற்றிய அறிவான கல்வி எனும் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் திறத்து இந்த "பஜனை" எல்லாம் இருக்கவே இருக்காது. அவர்களுடைய "பஜனை" எல்லாம் " எம்மானைச் சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளுவதாகவே" இருக்கும்.
 
நம் கண்ணபிரான் சார் மொழியில் சொல்லவேண்டும் என்றால்  " நச்"..
 
அடியேன்
வேங்கடேஷ்.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 11, 2009, 2:07:13 AM4/11/09
to minT...@googlegroups.com
தி.வா சார்,
 
இக்கேள்விக்கு கண்ணபிரான் சார், அருமையான விடையை அளித்துள்ளார். குமரன் சார் சொன்னதுபோல், இந்த சோம்பர் என்ற அடைமொழியை அடியேன் ஆழ்வார்களிடமிருந்தே எடுத்துள்ளேன்.
 
தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்
 
" மேம்பொருள் போகவிட்டு, மெய்மையை மிகவுணர்ந்து
  ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
  காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
  சோம்பரை உகத்தி போலும் அரங்கமாநகருளானே"
 
இப்பாசுரத்தில், "சோம்பர்" என்பவர் யாரென்றும் அச்சோம்பல் எவ்வகைப் பட்டதென்பதையும் அவர் தெளிவுறுத்துகிறார். 
 
மேம்பொருள் போகவிட்டு - இவ்வுலகில் காணக்கிடைக்கும் மேலெழுந்த வாரியான பொருட்களை விட்டு
 
மெய்மையை மிக வுணர்ந்து - நாம் அவனுக்கு அடிமை. இட்ட வழக்காயிருத்த்லே நம்  இயல்வு என்ற உண்மையை தெரிந்துகொண்டு
 
ஆம்பரிசறிந்து கொண்டு - அப்படிப் பட்ட உண்மையை உணர்ந்து, அவனுக்கும், அவன் அடியாருக்கும் சேவகம் செய்தலையே அருமையான பரிசு என்று அறிந்து கொண்டு,
 
ஐம்புலன் அகத்தடக்கி, காம்பறத் தலை சிரைத்து - தலை என்றதால் அஹங்கார மமகாரங்கள் சொல்லப்பட்டது. "காம்பற" என்றதால் மீளவும் ஒட்டிக்கொள்ளாதபடி, அஹங்கார மமகாரங்களை, சிரைத்து - ஒதுக்கி என்று பொருள்.
 
அஹங்கார மமகாரங்கள் நீங்கினால், தன் முயற்சியால் விளைவது யாதொன்றுமில்லை என்ற தெளிவு ஏற்படும், அதனால் உண்மை இயல்வான "அடிமைத்தனம்" பளிச்சிடும். அதனால், இறைவன் மற்றும் அவன் அடியாருக்குச் சேவகம் செய்வதே பரிசு என்ற புரிதல் தோன்றும்.
 
இவ்வாறு இருப்பவர்களை வெறும் சோம்பர் என்று சொல்லவில்லை, மாறாக, "வாழும்" சோம்பர் என்கிறார். நாம் வழக்கமாகச் சொல்லும் "சோம்பர்" வேறு, இச்சோம்பர் வேறு. இறைவனின் உண்மையான "ஆண்டான்" என்ற இயல்வையும், தன்னுடைய "அடிமை" என்ற இயல்வான உண்மையையும் தெளியப்பெற்றவரே "வாழும் சோம்பர்" ஆவர். "சோம்பர்" என்றதனால் ஏதும் செய்ய மாட்டார்களாவென்றால், இல்லை. அவர்களும் நம்மைப் போலவே சில காரியங்களைச் செய்துகொண்டிருப்பர். ஆனால் அக்காரியங்கள் யாவும் எந்த பலனையும் தரமாட்டா என்று தீர்க்கமாக அறிந்திருப்பர். இறைவனை அடையும் விஷயத்திலேயே அவர்களுடைய சோம்பல் புலப்படும். அஃதாவது, அவனை அடைய நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. "நம்மை உடையவன் நாராயணன் நம்பி" ஆகையாலே நம்மை அடைய அவனே முயற்சியை மேற்கொள்வான் என்பதால், தங்கள் பக்கலில் ஏதும் செய்யாதிருப்பர்கள்.  இவர்கள்தான் "வாழும் சோம்பர்".
 
இக்கருத்தையே பேயாழ்வாரும் " பொருப்பிடையே நின்றும், புனல் குளித்தும், ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா" என்கிறார். இவற்றையெல்லாம் அவனே செய்து நம்மை அவன் அடைவான் என்றபடி.
 
இதைத்தான் கண்ணபிரான் சாரும் "ரசமான சோம்பல்" என்கிறார்.
 
இரசிக்கும் என்று நினைக்கிறேன்!!
 
அடியேன்
வேங்கடேஷ்


From: Tirumurti Vasudevan <agni...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, 10 April, 2009 7:26:30 PM
Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 11, 2009, 2:31:40 AM4/11/09
to minT...@googlegroups.com
சற்றே அவசரப்பட்டுவிட்டேன் என்று தோன்றுகிறது.
 
கண்ணபிரான் சாரின் ஒரு விடையை மட்டும் பார்த்துவிட்டு அடியேனுடைய இம்மடலை அனுப்பிவிட்டேன். அப்பப்பா, குமரன் சார், தேவ் சார், சிவன் சார், ஏற்கெனவே விளக்கியிருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.
 
"சோம்பியிருத்தலுக்கு" "மயங்கியிருத்தல்" என்ற பொருள் எவ்வளவு பொருத்தம். இம்மயக்கம் தான் ஆழ்வாரை, " காலாழும், நெஞ்சழியும், கண் சுழலும்," என்று புலம்ப வைத்தது. மயக்கத்தில் இருப்பவர்கள் சோம்பர்தானே?
 
அடியேன்
வேங்கடேஷ்


From: Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
To: minT...@googlegroups.com
Sent: Saturday, 11 April, 2009 11:37:13 AM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

தி.வா சார்,
 
இக்கேள்விக்கு கண்ணபிரான் சார், அருமையான விடையை அளித்துள்ளார். குமரன் சார் சொன்னதுபோல், இந்த சோம்பர் என்ற அடைமொழியை அடியேன் ஆழ்வார்களிடமிருந்தே எடுத்துள்ளேன்.
 
தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்
 
" மேம்பொருள் போகவிட்டு, மெய்மையை மிகவுணர்ந்து
  ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
  காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
  சோம்பரை உகத்தி போலும் அரங்கமாநகருளானே"
 
 

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 11, 2009, 2:45:49 AM4/11/09
to minT...@googlegroups.com
தேவ் சார்,
 
<நமக்கு வேங்கடேஷ் இருக்கிறாரே, சரி செய்து விடுவார்.>
குருவி தலையில் பலாப்பழமா!!!!
 
அடியேன்
வேங்கடேஷ்

devoo

unread,
Apr 11, 2009, 3:33:54 AM4/11/09
to மின்தமிழ்
மனனகமலமற மலர்மிசையெழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே!! (1-1-2)

//"இனன் உணர் முழு நலம் இலன்" என்றது - இப்படிப்பட்ட முழுமையான
உணர்வதற்குரிய நலமுடையவன் மற்றொருவனில்லை என்றபடி.

"எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன்" என்றது - எதிர்காலம், நிகழ்காலம்,
கடந்தகாலமாகிய முக்காலத்திலும் இப்படிப்பட்டவன் (இனன்) இல்லை என்றபடி.//

// மலம் இல்லாத நல்ல நிலத்தில், மலர் மிசை எழு தரும்
என்று... மனசும் (மலர்ச்சியடைந்து) மேலே எழுகிறது! தொழுது எழு என்
மனனே!//

//அதன் தொடர்ச்சியாக 'பொறி உணர்வு அவை இலன்' என்றது ஐம்பொறிகளுக்குப்


பொருளாக நிற்கும் அசேதனமான

இயற்கையும் (பிரகிருதியும்) இல்லை பரமன் என்று ஆழ்வார் சொல்வதாகப்
படித்திருக்கிறேன்.//

//இந்த மனச் சுத்திகரிப்புப் போராட்டத்தில், நாமே நம் பிரயத்தனாதி
முயற்சிகளால் ஈடுபட்டால் (கர்ம, ஞான யோகாதிகளால்).... பிறவி பிறவியாய்
எதிர்த்துப் போராடித் தான் வெற்றி பெற வேண்டியிருக்கும்! அதுக்குள்ள
நமக்கு நரையும் விழுந்துரும்!//

//மிக, மிக எளிதாகத்தோன்றுவது போலுள்ள மிக, மிகக் கடினமான காரியம்.
சாதகப்பறவை போல் காத்திருக்க வேண்டியதுதான்.//

//ஆகையினால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எப்போதும் ஆத்மவிசாரத்தை தட்டி
அடைக்கலத்தையே பெரிதாக சொல்வர். அடைக்கலமோ உபாயமும் உபேயமும் ஒன்றாய்
வந்த ஒன்று.//

//அவர் அதை மறுத்தருளி, அவருடைய சீடர்களில் ஒருவரான "திருக்குருகைப்
பிரான் பிள்ளான்" என்பவரை எழுதுமாறு பணித்தார். ஏன் என்று கேட்டதற்கு,
"அடியேன் எழுதினால், அது முதலும் முற்றுமாகக் கொண்டுவிடுவர். மேலும்
பல சுவையான பொருட்கள் வெளிப்படாது" என்றாராம்.//

//ஸ்ரீமந்நாதமுனிகள் அவரை வாரியணைத்து, 'புண்டரிகாக்ஷரே! நீரே உலகையும்,
உலகை உடையவனான நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச் செயல்களையும்,
அதைப் பெற்ற என்னையும் உய்யக் கொண்டவர். உம்மாலேயே நான்


அரு்ம்பாடுபட்டுப் பெற்ற அத் தமிழ் மறைகள் உலகெங்கும் பரவி அனைவரையும்

உய்விக்கப்போகின்றன. இன்றுமுதல் நீர் 'உய்யக்கொண்டான்' என்ற
திருநாமத்தில் பிரசித்தி பெற்று விளங்கக் கடவீர்.//

//வடமொழிஸாஸ்திரத்தில் வரும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம்,


பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை.

அதுதான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!//

//கண்ணனுக்கே உரியது காமம் என்னும் போது, காமமும் தவம் ஆகிறது அல்லவா?
கண்ணனுக்கே உரியது சோம்பல் என்னுமிடத்து, சோம்பலும் தவம் ஆகிறது!//

//உன் திருமுகக்குறிப்பை எதிர்நோக்கிக் கிடக்கும் (உன் கடைத்தலை இருந்து
வாழும்) தம்முடைய சுயநலத்திலும் தமது முயற்சியால் மட்டுமே உன்னைக்


காணலாம் என்று தொடங்கும் முயற்சிகளிலும் சோம்பியிருக்கும் அவர்களை,
ஸர்வாரம்ப பரித்யாகியாக இருக்குமவர்களை (சோம்பரை) நீ விரும்புகின்றாய்

அல்லவா (உகத்தி போலும்).//

//ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அடைக்கலத்தையே இயல்வாகக் கொண்டிருந்தனர்.
தங்கள் முயற்சி என்ற ஒன்று இருப்பதாகவே அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.//
* * * *
அன்பர்கள் தரும் அரிய விளக்கங்கள்; தனித்தன்மையும்
மறைவுபடவில்லை. குரு பரம்பரையின் முக்கியமான கட்டங்களின் விளக்கம் !
இத்தனை அறிவும், ஆற்றலுமா ?
ஆனால் இவர்கள் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; உயர்வற உயர்
நலமுடையவனையே சுட்டுவர்.அதுவே இவ்விழையின் தனிச்சிறப்பு. கருணை கூர்ந்து
நேர நெருக்கடி நேர்ந்தாலும்
யாரும் பங்கு பெறாமல் இருந்து விடாதீர்கள். மேலும் பலரும்
இணந்துகொள்ள வேண்டும்.

தேவ்

நா.கண்ணன்

unread,
Apr 11, 2009, 3:40:49 AM4/11/09
to மின்தமிழ்
On Apr 11, 2:31 pm, Thirumalai Vinjamoor Venkatesh

<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> "சோம்பியிருத்தலுக்கு" "மயங்கியிருத்தல்" என்ற பொருள் எவ்வளவு பொருத்தம். இம்மயக்கம் தான் ஆழ்வாரை, " காலாழும், நெஞ்சழியும், கண் சுழலும்," என்று புலம்ப வைத்தது. மயக்கத்தில் இருப்பவர்கள் சோம்பர்தானே?
>


இறையனார் களவியல் தந்தது போல் நம் சிவனார் தரும், `மயங்கியிருத்தல்,
ஸ்தம்பித்து இருத்தல்` கன பொருத்தமாக அமைகிறது. இந்த `தான்` எனும்
சிந்தனை தடைப்பட்டு, விஸ்வநாதனின் நிலைகண்டு `பிரம்மித்து` இருத்தல்
என்பதைத்தான் பௌத்தமும் (குறிப்பாக ஜென்), சமகால சிந்தனையாளர்களில்
ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சொல்கின்றனர்.

வாழும் சோம்பர் என்று சொல்வதற்குக்காரணம் நீ முயன்றாலும்,
முயலாவிட்டாலும் இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது, மூக்கு மூச்சு
வாங்குகிறது, ரத்தம் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. இவை நம்மைக் கேட்டு
செயல்படுவதில்லை. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் ஒரு
ரட்சகன் இருக்கின்றான். அவன்தான் உண்மையில் வாழ்வை நடத்திக்கொண்டு
போகிறான். இதை உளப்பூர்வமாக, அறிவு பூர்வமாக உணர்ந்தால் `சரணாகதி`
நடந்துவிடுகிறது. பின் `பிரம்மிப்பு (வாழும் சோம்பல்)` மட்டுமே
எஞ்சுகிறது. அது சமயம், கஷ்டமானாலும், நஷ்டமானாலும் `அவனிஷ்டம்` என்று
உணரத்தோன்றுகிறது. அப்போதுதான் உண்மையில் `அவன் விட்ட வழி`யில் வாழும்
கலை கைவரப்பெறுகிறது. இதுவொரு obsolutely relaxed state! தாய் இருக்கும்
தைர்யத்தில் குதிபோடும் கன்றுபோல் நம் வாழ்வு அமைந்துவிடுகிறது. இது
~அடிமை~ வாழ்வா? எவ்வளவு சுதந்திரமான வாழ்வு.

மேலும் பேசுவோம்...

க.>

நா.கண்ணன்

unread,
Apr 11, 2009, 4:11:20 AM4/11/09
to மின்தமிழ்
On Apr 10, 7:36 pm, Thirumalai Vinjamoor Venkatesh

<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> கண்ணன் சார்,
>
> <வேங்கடேஷ்! மேலும் இந்த 'அடிமைத்தனம்' என்பதை விரிவாக அலசவேண்டும்.
> இதைத்தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
>
> தமிழ் எழுச்சி காணும் இக்காலக்கட்டத்தில் இப்புரிதல் அவசியமும் கூட.
> வேறொரு சமயம், வேறொரு இழை என்றால் கூட பரவாயில்லை>.
>
> நிச்சயம் அலசலாம். எவ்வாறு என்பதைத் தெரிவிக்கவும்.


வேங்கடேஷ்:

பரமனுக்கும் அடியாருக்குமுள்ள உறவு மிக விசேஷமானது. `அடிமை` என்ற சொல்
அழகான சொல்தான். ஆயினும் அது வியாக்கியானங்கள் எழுத்த 10-13ம்
நூற்றாண்டுகளில் பாந்தமாகப் பொருந்தி வந்தது. அப்போது நல்ல அரசர்கள்
ஆண்டு வந்தனர், ஒரு கிழவர் `நல்ல அரசன், நல்ல மனைவி, நல்ல பிள்ளை
இருப்பதால் எனக்கு நரை விழவில்லை` என்கிறார். அப்போது கற்பு நெறி
கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டது. மேலும் அந்தணர்களின் வாழ்வை அரசு
கவனித்து வந்தது. இச்சூழலில் அடிமையாய் கிடத்தல் என்பது ஒரு பாஸிசிட்
அனுபவம். ஆனால், காலங்கள் மாறி, ஆண்டான் - அடிமை முறைகள் தூள்தூளாகி,
பெண்விடுதலை கண்டுவிட்ட 21ம் நூற்றாண்டில் இவ்வாசகத்தை வாசிக்கும்
uninitiated person அதிர்ச்சியடைவான். இந்த கோஷ்டியிலே எல்லோரும்
சேர்ந்து அடிமை வியாபாரம் பண்ணச் சொல்லுகிறார்கள்! என்று முடிவு
எடுத்துவிடுவான். எனவே அவ்வாசகத்தை வேறு விதத்தில் கையாளமுடியுமா? என்று
பார்க்க வேண்டும். உண்மையில் `அடிமைத்தனம்` என்றால் என்னவென்று நம்
யாருக்கும் தெரியாது! நாம் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள்.

தாய்மடிப்பிள்ளை போல் என்று சொல்லிப்பார்க்கலாம், கணவன் கை மனைவி போல்
என்று சொல்லிப்பார்க்கலாம், ஏன்? நான் முன்பு சொன்ன physiological model
கொண்டும் விளங்கிக்கொள்ளலாம். நித்ய வஸ்துக்களான ஆத்துமா, அசித் இவைகளை
இருப்பிடமாகக் கொண்டவன் இறைவன் என்பது சூத்திரம் (நாரண சப்தம்). எனவே
நாம் அவனது அங்கம். நமக்கு அந்தர்யாமி அவன். இது ஆண்டான் - அடிமைக்கும்
மேலான ஒரு சூட்சும நிலை.

இச்சிந்தனை எப்படி வந்தது எனில் முன்பொருமுறை பொன்னையா நாவுக்கரசர் ”ஆக!
அடிமை எண்ணம் பக்தி இயக்கத்தால் வந்ததோ? ” என்பது போல் கேள்வி
கேட்டிருந்தார். On the contrary பக்தி இயக்கம் வந்த பின் தான் தமிழுக்கு
மறுமலர்ச்சி வந்தது, பெண்ணடிமை ஒழிந்தது (ஆண்டாள், ஸ்ரீ சம்பிரதாயம்),
மனிதனுக்கு விடுதலை மார்க்கம் கிடைத்தது (வாழி மனமே கைவிடேல்! உடலும்
உயிரும் மங்கவொட்டே! - தி.மொழி). எனவே அடிமை, அடிமை என்று வார்த்தை
விழும் போது மாற்றுச் சொல் கிடைக்குமா? என்று பார்த்துப் போடுங்கள். இது
உங்கள் ஓட்டத்தைத்தடை செய்யவல்ல. நாம் பேசுகின்ற பெரிய விஷயத்தின் கனம்
குறைந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கை உணர்வு என்று கொள்க.

கண்ணன்

annamalai sugumaran

unread,
Apr 11, 2009, 8:05:23 AM4/11/09
to minT...@googlegroups.com
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
 
 
இவ்வாறு தானே அடிமைப் பட்டதை திருநாவுகரசரின் தேவாரம் கூறுகிறது

இந்தப் பதிகத்தை  தனது சிவகாமியின் சபதம் புதினந்த்தில் கூட கல்கி மிக சுவையாக சிவகாமியின் காதலை குறிப்பிட உபயோகிப்பார் .
காதலில் அடிமையாவது .இலக்கிய மரபு .
ஆனால் திரு கண்ணன் கூறுவது போல் தற்ப்போது  பக்தியில்
இந்த நிலையை சரிவர புரிந்து கொள்வார்களா என்பது சிறிது சந்தேகமே .இந்த வார்த்தை சரிவர புரிந்து கொள்ளப் படுமா ?
சரணாகதி தத்துவமும் ,இந்தக் காலத்தில் சரிவர புரிந்து கொள்ளப் பாடுமா ?
எனினும் சுவையான தங்களது விளக்கம் தொடரட்டும் .வேங்கடேஷ்!
தங்களது விளக்கங்களும் அதைத்தொடர்ந்து சான்றோரின் மறு மொழிகளும் புதிய கருத்துக்கள் சிந்தனையை தருகின்றன !
அன்புடன்
ஏ சுகுமாரன்



 

2009/4/11 நா.கண்ணன் <nka...@gmail.com>
On Apr 10, 7:36 pm, Thirumalai Vinjamoor Venkatesh
> கண்ணன் சார்,
>
> <வேங்கடேஷ்! மேலும் இந்த 'அடிமைத்தனம்' என்பதை விரிவாக அலசவேண்டும்.
> இதைத்தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
>
> தமிழ் எழுச்சி காணும் இக்காலக்கட்டத்தில் இப்புரிதல் அவசியமும் கூட.
> வேறொரு சமயம், வேறொரு இழை என்றால் கூட பரவாயில்லை>.
>
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

LNS

unread,
Apr 11, 2009, 10:55:20 AM4/11/09
to மின்தமிழ்
அழகான விளக்கம், வெங்கடேஷ் ஸார்.

LNS

On Apr 11, 1:30 am, Thirumalai Vinjamoor Venkatesh

>       Add more friends to your messenger and enjoy! Go tohttp://messenger.yahoo.com/invite/

shivan .

unread,
Apr 11, 2009, 2:30:49 PM4/11/09
to minT...@googlegroups.com
<வடமொழிஸாஸ்திரத்தில் வரும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம்,
> பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை. அது
> தான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!>>>>>>


எனக்கென்னமோ இது சரி என்று தோன்றவில்லை பெரியோர்களே.

ஒவ்வொரு மார்க்கம் ஒவ்வொரு விதம். பிற மார்க்கம் நமக்கு குறைவாய் தெரிந்தாலும் அதனால் அது குறை என்றாகாது.

அந்த 'பஜனை' என்ற சொல் கொஞ்சம் காட்டம் போல்தான் தெரிகிறது.

இறைவன் அளவற்றவன்; அவனை அடையும் வழிகளும் அளவற்றவை என்பார் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர்.  இதில் அவரவர் வழியை அவரவர் கெட்டியாக பிடித்துக் கொள்வதில் தவறில்லை. அதே சமயம் பிற வழிகள் 'பஜனை' போல் தெரிவது சரியுமில்லை என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.

2009/4/11 LNS <lns2...@gmail.com>

LNS

unread,
Apr 11, 2009, 4:11:30 PM4/11/09
to மின்தமிழ்
மன்னிக்கவும், சிவன் ஸார் :) நான் தமாஷாக சொன்னேன். நான் யாரையும் மட்ட
தட்ட வேண்டும் என்று அப்படி சொல்லவில்லை. தயவு செய்து கோபித்து கொள்ள

வேண்டாம்.

நேரிடையாக சொல்லி விடுவது ஆழ்வார்கள் பாணி. எல்லா புலவர்களும்
அப்படித்தான். ஸாஸ்திரம் அறிந்தவர்களும் கற்றோர்களும் தர்க்க முறையை
மேற்கொள்ள வேண்டியதால் வேறு பத்ததியில் அதே விஷயத்தை சொல்ல
வேண்டியிருக்கிறது. இவ்வாறு செய்கையில் பத்ததி உபதேசத்தை விட அதிகம்
முக்கியத்துவம் பெற்று விடுகிறது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது -
பெரும்பாலும் கவி தமிழிலும் ஸாஸ்திரம் வடமொழியிலோ அல்லது ஆங்கிலத்திலேயோ
கையாளப்படுகிறது. இந்த மொழிவேறுபாட்டினால் சொல்ல வர விஷய்த்தின்
அந்தஸ்தும் மாறுபட்டு விடுகிறது.

ஒரே சம்பிரதாயத்தில் இந்த இரண்டு விதங்களை நாம் பார்க்கும் போது நாமே இதை
அடையாளம் பார்த்து சொல்லி விடலாம். For example, பெரியாழ்வாரின்
திருப்பல்லாண்டு பாஞ்சராத்திர ஆகமத்தை நிலைநாட்டியதாக பொதுவாக யாரும்
சொல்ல மாட்டார்கள். அதற்கு உண்டான credit தேர்ந்தெடுக்கபட்ட சில
ஸம்ஸ்கிருத கிரந்தகளுக்கே பெரியோர் கொடுப்பார்கள். ஆனால்
திருப்பல்லாண்டில் தொண்டர்குல அறிகுறிகள் என்று அறுதியிட்டு சொல்லப்பட்ட
(அதாவது பாஞ்சராத்திர) பழக்கங்கள் தாம் ஸமஸ்கிருத கிரந்தங்களில்
விலாவாரியாக தர்க்கபூர்வமாக (அதாவ்து பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம்,
சித்தாந்தம், பிரமாணம் என்ற பத்ததியில்) பேசப்பட்டிருக்கும்.

கீழ்க்கண்ட திருப்பல்லாண்டு பாசுரங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் (அ-து
ஆட்செய்வது, முத்திரை தரித்துக்கொள்வது, நைவேத்ய மிச்சத்தை
ஏற்றுக்கொள்வது, 'மடியில்லா' துணி உடுத்துவது போன்ற இவை) தாம்
பாஞ்சராத்திர கிரந்த்ங்களிலும் கையாளப்படுகிறது

1. எந்தை தந்தை ... வழி வழி ஆட்செய்கின்றோம்
2. தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி
3. நெய்யிடைநல்லதோர் சோறும்
4. உடுத்துக் களைந்த நின் பீதகவாடை

இது ஒரு எடுத்துக்காட்டு. இதுபோல் பல உதாரணங்கள் சொல்லலாம்.

அன்புடன்,

LNS

On Apr 11, 2:30 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> <வடமொழிஸாஸ்திரத்தில் வரும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம்,
>
> > பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை. அது
> > தான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!>>>>>>
>
> எனக்கென்னமோ இது சரி என்று தோன்றவில்லை பெரியோர்களே.
>
> ஒவ்வொரு மார்க்கம் ஒவ்வொரு விதம். பிற மார்க்கம் நமக்கு குறைவாய் தெரிந்தாலும்
> அதனால் அது குறை என்றாகாது.
>
> அந்த 'பஜனை' என்ற சொல் கொஞ்சம் காட்டம் போல்தான் தெரிகிறது.
>
> இறைவன் அளவற்றவன்; அவனை அடையும் வழிகளும் அளவற்றவை என்பார் ஸ்ரீஇராமகிருஷ்ண
> பரமஹம்சர்.  இதில் அவரவர் வழியை அவரவர் கெட்டியாக பிடித்துக் கொள்வதில்
> தவறில்லை. அதே சமயம் பிற வழிகள் 'பஜனை' போல் தெரிவது சரியுமில்லை என்று
> பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
>

> 2009/4/11 LNS <lns25...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 11, 2009, 8:34:37 PM4/11/09
to மின்தமிழ்
On Apr 11, 8:05 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:

> முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
>     மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
> பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
>     பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
> அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
>     அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
> தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
>     தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
>

சுகுமாரன்:

இதுவொரு அற்புதமான பாடல்.
இப்பாடல் காதலனை நோக்கி ஓடும் காதலியின் நிலையைத்தான் காட்டுகிறது.
அப்படியே அச்சாக ஆண்டாளும் பாடியுள்ளாள்.
ஆனால், அடிமைத்தனம் என்பது வேறு. நாய் கிடக்கும் பாருங்கள், காலடியில்.
அது போன்ற நிலை.
ஆழமாக யோசித்தோமெனில் இந்த நிலையில் ஒன்றுமே செய்ய ஓடாது. சமாதி நிலைக்கு
கொண்டுவிடும்.
ஒரு கதை சொல்லுவார்கள் (வழக்கம் போல் பெயர்கள் மறந்துவிட்டன). ஒரு
பெரியவர் ஸ்ரீரங்கப்புறநகர் பகுதியில் பல்லக்கில் வருகிறார். இரண்டு
குரவர்கள் அடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்கள். என்ன விஷயமென்று
பார்த்தால், ஒருவனது நாயை இன்னொருவன் நாய் கடித்துவிட்டது. அந்த
நாய்க்காக பரிந்துகொண்டு இவர்கள் சண்டை போடுகையில் ஒருவன் மற்றவனைக்
கொன்றுவிடுகிறான். இதைக்கண்ணுற்ற பெரியவருக்கு ஒரு பெரிய தத்துவம் சட்டென
விளங்கியது. “தன் செயல்” என இனி எதுவும் கிடையாது என விட்டார்.
நடக்கமுடியவில்லை, உண்ணமுடியவில்லை. அவரை அப்படியே தூக்கி வந்து கோயில்
வாசலில் போட்டனர். சாகும்வரை அங்கேயே கிடந்தார்.
அவருக்குப் புரிந்தது என்ன?
ஒரு சாதாரண நாய். அது கொண்டவனிடத்தில் (ஆண்டான்) காட்டும் அடிமைத்தனம்
கண்டு உளமகிழ்ந்து அதற்காக ஒரு மனிதன் தன்னுயிரைக்
கொடுக்கத்தயாராகின்றான் எனில் “நம்மை உடையவன் நாராயணன் நம்பி” என்று
சொன்னால், அவன் நம்மைக் காக்க என்ன பாடுபடுவான். இதில் நாம் ஏதோ நம்மைப்
பாது காத்துக்கொள்கிறோம் என்று இடையே புகுந்து குழப்பியடித்து, நிலமையைக்
கெடுக்கிறோம். அவனே ரட்சகன். அவன் பார்த்துக்கொள்வான்! என்று தன் வாழ்வை
அவன் காலடியில் போட்டுவிட்டார். அதன் பின் அவர் ”ஒன்றும்” செய்யவில்லை.
என்னவொரு உந்நதமான நிலை. நம்மால் முடியுமா? அடுத்த வேளை சாப்பாட்டிற்கு
ஏற்பாடு செய்யமுடியாமல் நம்மால் இருக்கமுடியுமா? “நீ விட்டுப்பார், அவன்
நம்மைக் காக்கிறானா? இல்லையா? என்பது தெரியும்!” என்று பரனூர் பெரியவர்
சவால் விடுவார். மெய்சிலிர்க்கும்! நமக்கேது அந்த தைர்யம்? அந்த
திடநம்பிக்கை. நமக்கு கடவுள் தொட்டுக்க ஊறுகாய்தானே?
மெய்ஞானம் என்பது ‘சீரியஸ் பிசினஸ்’. நாம் ஏதோ அவ்வப்போது ஒரு மாற்று
மருந்தாக அதைப்பாவிக்கிறோம்.
இப்படி ‘அடிமைத்தனத்தின்’ உண்மைப் பொருள் விளங்கினால். அதைப்
பயன்படுத்துவதில் தவறில்லை. நமக்கிது புரியுமா?

கண்ணன்

நா.கண்ணன்

unread,
Apr 11, 2009, 8:39:07 PM4/11/09
to மின்தமிழ்
On Apr 12, 2:30 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:

> > பிரமாணம் என்று விதவிதமான 'பஜனை' யெல்லாம் ஆழ்வார்கள் செய்வதில்லை. அது
> > தான் ஞானத்திற்கும் கல்விக்கும் உள்ள வித்தியாஸம் போலும்!>>>>>>
>
> எனக்கென்னமோ இது சரி என்று தோன்றவில்லை பெரியோர்களே.
>

சிவன்! இதுவொரு வைணவக்கிண்டல். ஒருவகையில் தமிழ் அபிமானத்தால் வரும்
கிண்டல். இதுபோல் நிறைய உண்டு. ஆழ்வார்கள் அவர்களை அவ்வளவு தூரம்
ஆக்கிரமித்து இருக்கின்றனர் என்று பொருள். உண்மையில் அது ‘உபய
வேதாந்தம்’தான். வேதத்திற்கு மிகுந்த மரியாதை தரும் சம்பிரதாயம்தான்.
ஆயினும் அப்பா செல்லமா? அம்மா செல்லமா? என்று ஒரு வைணவனிடம் கேட்டால்,
‘ஆழ்வார் மடியில் வந்து உட்கார்ந்து கொள்வான்’ (முதல்தாய் சடகோபன்;
இதத்தாய் இராமானுசன்). அற்புதமான தமிழ் மரபு அது!

கண்ணன்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 12, 2009, 6:21:51 AM4/12/09
to minT...@googlegroups.com
சுகுமாரன் சார்,
 
ஆஹா! 'காலாழும், நெஞ்சழியும், கண் சுழற்றும்"-ன் நேர். இதுதான் தலைவியான உயிரின் நிலை, தலைவனான இறைவனிடம் காதல்வயப்படும் பொழுது.
 
<ஆனால் திரு கண்ணன் கூறுவது போல் தற்ப்போது  பக்தியில்
இந்த நிலையை சரிவர புரிந்து கொள்வார்களா என்பது சிறிது சந்தேகமே .இந்த வார்த்தை சரிவர புரிந்து கொள்ளப் படுமா ?
சரணாகதி தத்துவமும் ,இந்தக் காலத்தில் சரிவர புரிந்து கொள்ளப் பாடுமா
?>
புரிகிறது. ஆயினும் என் செய்ய? உண்மை தேன் தடவி வேண்டுமென்றால் சொல்லலாம். சொல்லாமலே இருந்து விடமுடியுமா. அதனால் தான் எத்தனை முறைகள் வேண்டுமென்றாலும், அயர்வின்றி எழுதுவேன் அடியேன்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Add more friends to your messenger and enjoy! Invite them now.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 12, 2009, 6:34:13 AM4/12/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
 
புரிகிறது. தாங்கள் சொல்வது உண்மையே. காலமாற்றத்தில், புரிதலின் தன்மையும் அக்காலச் சூழலுக்கேற்ப மாறிவிடுகிறது. ஆனால், அடிமை என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல் தெரியவில்லையே அடியேனுக்கு!
 
இருப்பினும் ஒன்று கூற விழைகிறேன். தேவ் சாரும் இக்கருத்தையே வழிமொழிந்தார். இங்கு அடியேன் அடிமை அடிமை என்றது இறைவனிடம் நாம் காட்டும் அடிமைத்தனத்தையே! நடைமுறை வாழ்க்கையில் அடியேன் ஏதும் சொல்லவில்லை. அடிமைத்தனத்தைப் பற்றி இவ்வளவு பேசிய அடியேனும் நடைமுறை வாழ்க்கையில் விவாதிக்காமல் இருப்பதில்லை. விவாதம் என்று வந்துவிட்டாலே அடிமைத்தனம் போய்விடுகிறது அல்லவா?
 
அடிமை என்று சொல்லும் பொழுது அது இறைவனிடம் காட்டுவதை மட்டுமே அடியேன் குறிக்கிறேன்.
 
இதைப் பிறர் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் அடியேன் அறிகிறேன். இதற்கு ஒரு மாற்று வார்த்தையைத் தாங்களே குறிப்பிட்டால் அடியேன் அதையே மேலே எழுதவிருக்கும் மடல்களில் கொள்கிறேன்.
 
 
அடியேன் 
வேங்கடேஷ்.
 

From: நா.கண்ணன் <nka...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Saturday, 11 April, 2009 1:41:20 PM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 12, 2009, 6:39:05 AM4/12/09
to minT...@googlegroups.com
சிவன் சார்,
 
கண்ணன் சாரும்,LNS சாரும் இதற்கான விடையை ஏற்கெனவே அளித்துவிட்டார்கள். இருப்பினும், அடியேனும் மன்னிப்புக் கோருகிறேன். அடியேனுடைய நோக்கத்தையும் தெளிவுபடுத்தவிரும்புகிறேன்.
 
அடியேன் கூறியிருந்த ஒரு வார்த்தை "இவ்வளவு ஆணித்தரமாக தற்கால உபன்யாசகர்கள் கூட, இவ்வுண்மையை தெரிவிப்பதில்லை."
இறைவனை அடைய அவனே பல வழிகளை இவ்வுலகுக்குத் தெரிவிக்கிறான் என்பதையும் ஆழ்வார்களே குறிப்பிடுகின்றனர். ஆக, பிற வழிகளை எள்ளி நகையாடுவது தவறே. யான் கூற விழைந்தது..... ஆழ்வார்களின் கருத்தை, இக்காலத்தில் பலரும் திரித்தேக் கூறி வருகின்றனர். அவர்தம் கருத்துக்களை LNS சார் "நச்" என்று சொன்னதால்தான் அவ்விதன் எழுதினேன்.
 
கவனமாக இருக்கிறேன்
 
அடியேன்
வேங்கடேஷ்
 
 

From: shivan . <siva...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Sunday, 12 April, 2009 12:00:49 AM

Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Did you know? You can CHAT without downloading messenger. Click here

Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 7:01:40 AM4/12/09
to minT...@googlegroups.com
நேரடி பொருள் சரிவரலை என்பதால் வந்த மயக்கம். விளக்கத்துக்கு நன்றி.
தி.வா

2009/4/11 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 7:03:39 AM4/12/09
to minT...@googlegroups.com
விளக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி.

தி.வா

2009/4/11 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
......ஏற்கெனவே விளக்கியிருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.

Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 7:07:31 AM4/12/09
to minT...@googlegroups.com
பஜனை எவ்வளவு உயர்வான விஷயம்! அதை அறியாதோர்தான் கொச்சைப்படுத்துகிறர்கள் என்றால் நீங்களுமா? சகவாச தோஷமா?
ஹும்! வருத்தம் தெரிவித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.நான் அதற்கு மேலே எழுதுவது உசிதமல்ல. விடுங்க!
தி.வா

2009/4/11 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் திறத்து இந்த "பஜனை" எல்லாம் இருக்கவே இருக்காது.


நா.கண்ணன்

unread,
Apr 12, 2009, 9:18:31 AM4/12/09
to மின்தமிழ்
என்ன தி.வா.?

பஜனையை யார் குறைத்துப் பேசுகிறார்கள்? அம்மடலின் கருத்தோட்டமென்னவென்று
விளக்கிய பிறகும், இப்படி குற்றம் காணுதல் கூடாது ;-)

க.>

devoo

unread,
Apr 12, 2009, 9:45:09 AM4/12/09
to மின்தமிழ்
Apr 11, 1:11 pm, நா.கண்ணன்

//அடிமை, அடிமை என்று வார்த்தை விழும் போது மாற்றுச் சொல் கிடைக்குமா?


என்று பார்த்துப் போடுங்கள். இது உங்கள் ஓட்டத்தைத்தடை செய்யவல்ல. நாம்
பேசுகின்ற பெரிய விஷயத்தின் கனம் குறைந்துவிடக்கூடாது எனும் எச்சரிக்கை

உணர்வு என்று கொள்க//

அடிமைத்தனம் என்பது இழிவானதே; அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இங்கு நாம் அடிமை புகுவது யாரிடத்தில்?
நம்மைக் கட்டுப்படுத்தும் கருணையற்ற ஒரு யஜமானனிடமா?
அளவற்ற வலிமையும், ஆற்றலும், விபூதியும், எண்ணிறந்த
உயர் நலங்களும், உறவுத் தொடர்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பரமனிடமன்றோ!

இதுவே ஒரு ஜீவன் பெறும் பெரும்பேறு; பெரிய பதவி.
கலங்காப் பெருநகரில் அடியார்களுக்குப் பணியாளர்களைப்போல் சீருடை
அணிவிக்கப் படுவதில்லை.
பரமபத நாதனுக்கு நிகரான ஸாரூப்யம்; அவனை நிகர்த்த
ஜ்ஞாந விகாஸம்.

‘ப்ரம்ஹாலங்காரேண யோஜயதி’, ‘ஸ ஏகதா பவதி, த்விதா பவதி, பஹுதா பவதி’ –
ப்ரமாண வசநங்கள். அவன் ஓருருவில்
இருந்தாலும் இவன் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்ளலாம்.

//பெண்விடுதலை கண்டுவிட்ட 21ம் நூற்றாண்டில் இவ்வாசகத்தை வாசிக்கும்


uninitiated person அதிர்ச்சியடைவான். இந்த கோஷ்டியிலே எல்லோரும்
சேர்ந்து அடிமை வியாபாரம் பண்ணச் சொல்லுகிறார்கள்! என்று முடிவு
எடுத்துவிடுவான். எனவே அவ்வாசகத்தை வேறு விதத்தில் கையாளமுடியுமா? என்று

பார்க்க வேண்டும்.//

அன்பர்கள் தொடர்ந்து படித்துவந்தால் தெளிவு கிடைக்கும்;
திருவாய்மொழியில் ஐயப்பாடுகள் அனைத்துக்கும் விடை உண்டு.

ப்ரக்ருதி மண்டலமே நம்மை ஏமாற்றி நாம் அறியாமலே
நம்மை அடிமை கொள்கிறது; நாம் சுதந்திரமானவர் என்னும் தவறான எண்ணத்திற்கு
வலிவூட்டுகிறது. இதற்கு அஞ்சிய
ஆழ்வார் சினமுற்றதால் ‘சடகோபர்’ ஆனார்..

‘ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதுவே’
ஆழ்வாரே கூறும் நல்வார்த்தை.
இந்த அடிமைத்தனத்திற்கு அடித்தளமாய் அமைவது அவனிடம் கொண்ட பேரன்பன்றோ!
‘குணைர்தாஸ்யமுபாகத:’ – இராமபிரானுக்குத் தொண்டு
செய்தோர் கூறிய வார்த்தை.

கண்ணன் தன் அடியார்கள் திறத்தில் என்ன ஊழியம்
செய்யவில்லை ? அவற்றை அடிமைத்தனம் என்று கொள்வதா?

Words have their own limitations. அனைவருக்கும் புரியும் பர்யாய பதம்
காண்பது கடினம்; கால விரயம்.

திருவாய்மொழியின் போக்கிலேயே வாசித்துப் பொருள் கொள்ளுதலே நலம் பயக்கும்
என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.


தேவ்


Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 11:18:33 AM4/12/09
to minT...@googlegroups.com
ஆமோதிக்கிறேன்.
தி.வா

2009/4/12 devoo <rde...@gmail.com>

Words have their own limitations. அனைவருக்கும் புரியும் பர்யாய பதம்
காண்பது கடினம்; கால விரயம்.

Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 11:21:31 AM4/12/09
to minT...@googlegroups.com
//பஜனையை யார் குறைத்துப் பேசுகிறார்கள்?//
திருப்பியும் படிச்சு பாருங்க. அந்த வரி கொஞ்சம் கசப்பா இருந்தது. அவ்வளவுதான். அப்புறம் கீழே நான் எழுதினதையும் கோட் பண்ணி இருக்கேன், அதையும் பாருங்க.

உருப்படி எழுதற சிலரை தாக்குவது என் நோக்கம் இல்லை.
மன்னிக்க.
திவா
2009/4/12 நா.கண்ணன் <nka...@gmail.com>

வருத்தம் தெரிவித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.நான் அதற்கு மேலே
> எழுதுவது உசிதமல்ல. விடுங்க!
> தி.வா

நா.கண்ணன்

unread,
Apr 12, 2009, 11:37:49 AM4/12/09
to மின்தமிழ்
On Apr 12, 9:45 pm, devoo <rde...@gmail.com> wrote:

> இதுவே ஒரு ஜீவன் பெறும் பெரும்பேறு; பெரிய பதவி.
> கலங்காப் பெருநகரில் அடியார்களுக்குப் பணியாளர்களைப்போல் சீருடை
> அணிவிக்கப் படுவதில்லை.
> பரமபத நாதனுக்கு நிகரான ஸாரூப்யம்; அவனை நிகர்த்த
> ஜ்ஞாந விகாஸம்.
>

அடிமை என்ற சொல்லாட்சி குறித்து இன்னும் புரியாத பக்கங்கள் ஏதேனும்
உண்டோ? என்ற சம்சயம் வருகிறது. பெருமாளோ நம்மை தன் `பொருள்` என்றுதான்
காண்கிறான். அடிமையென்று காணவில்லை. இவனுக்கும் அவனை விட்டால் வேறு
போக்கிடமில்லை. திருமழிசை சொல்வது போல்,

நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை!

என்பதுதான் நிலமை. வைகுந்தம் போனால் அவன் நம்மை அடிமை போல்
நடத்துவதில்லை. ஒரு மகராஜன் தன் குழந்தைகள் வரும் போது மடியில் வைத்துக்
கொஞ்சி, சிம்மாசனத்தில் உட்காரவைப்பது போல் வைகுந்தநாதனும் நடத்துகிறான்.
ஏனெனில் நமக்குள்ள உறவு அப்படி.

எனவே அவனுக்கு நாம் ~அடிமை~ என்று சொல்வது நமது அகங்கார, மமகாரங்கள்
துளிக்கூட தலைப்படக்கூடாது என்பதைக் குறித்த ஜாக்கிரதை~எச்சரிக்கைப்
படுத்தலோ?

இல்லை, அவன் கீர்த்தியை நோக்கும் போது நாம் நாயினும் கீழானவர்கள்தான்.
அதில் எச்சந்தேகமும் இல்லை. அவன் குணக்கடல், நாம் பாபக்கடல். இவையெல்லாம்
சரிதான். அழுக்குடம்பு, அழுக்குடம்பு என்று ஆழ்வார் சொல்லிக்கொண்டாலும்,
அந்த அழுக்குடம்பின் மீதுதான் ஈஸ்வரனுக்கு ஆசை வருகிறது. ஏனெனில்
சுத்தம், அசுத்தம் என்பதெல்லாம் மனிதர்களுக்குத்தான். ஈன்ற கன்றை
அசுத்தம் பார்க்காமல்தான் தாய்ப்பசு நக்குகிறது. பெருமாள்
அத்தகையவன்தான்.

அடிமை என்று நாம் சொல்வது ஒரு `அலங்காரத்திற்கோ`? என்றொரு கேள்வி ஒட்டி
நிற்கிறது.

”நம்மை உடையவன் நாரணன் நம்பி” எனும் போது என்னுள் பெருமை பீரிட்டு
வழிகிறது.

அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசவில்லை. அவனிடம் என்னால் அழுது
முறையிடமுடிகிறது. அது ஒரு ஆண்டானிடம், அடிமை அழுகும் அழுகுரல் அல்ல. ஒரு
தாயிடம் ஒரு சோணிப்பிள்ளை, சவலை அழுகும் அழுகை. அது ஒரு கவன ஈர்ப்பு.
எனக்கும் அவனை விட்டால் வேறு யாரிடமும் முறையிடமும் வக்கில்லை.

இந்த உறவை எப்படி விளங்கிக்கொள்வது?


> Words have their own limitations. அனைவருக்கும் புரியும் பர்யாய பதம்
> காண்பது கடினம்; கால விரயம்.
>
> திருவாய்மொழியின் போக்கிலேயே வாசித்துப் பொருள் கொள்ளுதலே நலம் பயக்கும்
> என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
>

காலவிரயம் என்று பட்டால் `கப்சிப்`. எனக்குள்ள சுதந்திரத்தில் இதைப்
பேசுவதாகவும் கொள்ளக்கூடாது. ஏனெனில் சுதந்திரமில்லை என்பது நன்றாகவே
விளங்குகிறது. நான் முன்பே சொன்னபடி, இது என் தேடல். இது வேங்கடேஷைக்
கட்டுப்படுத்தாது.

எனக்கு விளங்கவைப்பது அவன் பொறுப்பு இல்லையோ?

கண்ணன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 12, 2009, 12:35:36 PM4/12/09
to மின்தமிழ்

On Apr 10, 6:56 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> நீங்க பேசுற பல விஷயங்கள் என் சிறு தலைக்கு மேலே போய் விட்டாலும்....
>
> சோம்பல் இங்கே சரியான பதமாக படலையே?
> அது தாமச குணத்தை குறிக்கிறது. நாம் பேசும் ஆசாமிக்கு சாத்விகம் இல்லை ஓங்கி
> இருக்கணும்?
> தெளிந்த மனசோட ¨எல்லாம் அவனுக்குத்தெரியும். அவன் செய்ய வேண்டியதை செய்ய
> வேண்டிய நேரத்திலே செய்வான்¨ என்கிற திட சித்தம் இல்லையா இவனுக்கு வேணும்?
>
> தி.வா

மிக நுணுக்கமான விஷயம் இது.
சோம்பி இருத்தல் என்று இங்கே கொள்வது தாமசத்தில் விளையும் inertness
இல்லை. இந்த இடத்தில் சாத்விகம் முதலான முக்குணங்கள் பொருளாக வராது.

ஒரு சொத்து இருக்கிறது. அதைப் பாதுகாப்பது சொத்துக்குரியவன் வேலையே தவிர
சொத்தே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில்லை என்பது போல, நான் நாராயணனுக்கு
உரியவன்,என்னைப் பார்த்துக் கொள்வது அவன் பொறுப்பு என்ற நிலையில்
இருப்பதையே குறிப்பதாக காலக்ஷேபங்களில் கேட்டது நினைவுக்கு வருகிறது.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, தன்னிடம் பயமுறுத்திப் பேசும் ராவணன்
முன்னால் ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டுவிட்டு, உன்னை இப்போதே என்னுடைய
பதிவ்ரதவ்யத்தாலே எரித்துச் சாம்பலாக்கிவிட முடியும் ஆனால் அது என்னுடைய
நாதன் ராமனுடைய வீரத்திற்கு இழுக்காகி விடுமே என்பதனால் சும்மா
இருக்கிறேன் என்று சொன்ன உதாரணத்தை இங்கே நினைவில் வைத்துக் கொண்டால்,
வைணவம் சுட்டும் "சோம்பல்", தனக்கு சக்தி இருக்கும் போதிலும் அதைப்
பயன்படுத்தாமல், இறைவனது திருவுள்ளக் குறிப்பின் படியே ஆகட்டும்
என்றிருக்கும் நிலைமை என்பது விளங்கும்.

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

http://consenttobenothing.blogspot.com

Tirumurti Vasudevan

unread,
Apr 12, 2009, 12:40:45 PM4/12/09
to minT...@googlegroups.com
நன்றி கிருஷ்ண மூர்த்தி ஐயா!  புரிகிறது.
தி.வா

2009/4/12 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

மிக நுணுக்கமான விஷயம் இது.

devoo

unread,
Apr 12, 2009, 12:44:53 PM4/12/09
to மின்தமிழ்
Apr 12, 8:37 pm, நா.கண்ணன்

//எனவே அவனுக்கு நாம் ~அடிமை~ என்று சொல்வது நமது அகங்கார, மமகாரங்கள்


துளிக்கூட தலைப்படக்கூடாது என்பதைக் குறித்த ஜாக்கிரதை~எச்சரிக்கைப்

படுத்தலோ?//

ஆம், இது ஒரு சரியான நிர்வாஹம்.

//சுத்தம், அசுத்தம் என்பதெல்லாம் மனிதர்களுக்குத்தான். ஈன்ற கன்றை


அசுத்தம் பார்க்காமல்தான் தாய்ப்பசு நக்குகிறது. பெருமாள்

அத்தகையவன்தான்.//

கன்றின் வழுவன்றோ காதலிப்பது
அன்றதனை ஈன்றுகந்த ஆ.

//அடிமை என்று நாம் சொல்வது ஒரு `அலங்காரத்திற்கோ`? என்றொரு கேள்வி ஒட்டி
நிற்கிறது.//

நீங்கள் முதலில் நிர்வஹித்த பொருளில் என்ன குறை ?
மறுபடியும் ஏன் இக்கேள்வி ? ஜீவஸ்வரூபம் இச்சொல்லில்
தெற்றெனத் தெளிவாகும்போது அலங்காரம் எனும் பேச்சுக்கு இடமில்லை.

//எனக்கும் அவனை விட்டால் வேறு யாரிடமும் முறையிடமும் வக்கில்லை.//

அவன் ஸர்வ ஸ்வாமி மட்டுமல்லன்; ஸர்வ சரண்யன்; ஸர்வவித பந்து.
’ஸர்வ’ சப்தத்தையிட்டு ஒரு ஸஹஸ்ர நாமஅர்ச்சனையே செய்யலாம்; ஆனாலும்
முழுமையாகக் கூறியதாகாது.
தாஸ - ஸ்வாமி ஸம்பந்தம் மட்டுமின்றி , சிஷ்ய – ஆசார்ய ஸம்பந்தமும்
அவனிடமிருந்து பெறலாம், அர்ஜுனன் காட்டிய வழியில் (சிஷ்யஸ்தேSஹம் சாதி
மாம் த்வாம் ப்ரபந்நம்).

//இது என் தேடல்.//

அவனிடம் நம்மிடம் காட்டும் எல்லையற்ற நீர்மையை நம் திறத்தில் சமன் செய்ய
இதைக்காட்டிலும் (அடிமை) கீழ்மையான சொல் இன்னும் வேறேதேனும் இருக்குமா
என்று என் மனம் ஆராய்கிறது.
இதுவே என் தேடல்.

//எனக்கு விளங்கவைப்பது அவன் பொறுப்பு இல்லையோ?//

விளங்காமலா இவ்வளவு பேசுகிறீர்கள் ?
வலைப்பூவில் இத்தனை எழுத முடிகிறது?

//காலவிரயம் என்று பட்டால் `கப்சிப்//

அவகாசக் குறைவும், பாண்டித்யக் குறைவும் இவ்வாறு
எழுத வைத்தன.

தேவ்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 12, 2009, 1:10:00 PM4/12/09
to minT...@googlegroups.com
தி.வா சார்,
 
மன்னிப்பும் கோரியிருக்கிறேன். மேலும் அவர்களுடைய பஜனை எத்தகையதாக இருக்கும் என்பதையும் எழுதியிருக்கிறேன். " எம்மானைச் சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் " நாம் சங்கீர்த்தனமாக" இருக்கும் என்றிருக்கிறேனே.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: Tirumurti Vasudevan <agni...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Sunday, 12 April, 2009 4:37:31 PM
Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Add more friends to your messenger and enjoy! Invite them now.

shivan .

unread,
Apr 12, 2009, 1:58:59 PM4/12/09
to minT...@googlegroups.com
ஆழ்வார்களும், திருமூலரும், வைணவ பெரியார்களும் தமிழ் மொழியில் வல்லுநர்கள். நல்ல ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் சோம்பல் என்னும் தமிழ் சொல்லுக்கு என்ன பொருள் என்று அறிந்தே சொல்லியிருக்கிறார்கள்.

சோம்பல் என்பது அகர்மா என்னும் செயலற்ற நிலையான stupor   என்னும் ஒரு பொருளும்,   lethargy  எனும் பொருள் வரும்படியான இன்னொரு  பொருளும் கொண்டது. இதில் நிச்சயமாக இரண்டாம் பொருளை பெரியோர் சொல்லவில்லை.


shivan .

unread,
Apr 12, 2009, 2:17:07 PM4/12/09
to minT...@googlegroups.com
அன்பு LNS அவர்களுக்கும்,  அன்பு வேங்கடேஷ் அவர்களுக்கும்.

வணக்கங்கள்.

தாங்கள் இருவரும் அந்த "பஜனை" குறித்த மடலுக்கு விளக்கம் சொன்னதை பணிவோடு ஏற்று கொள்கிறேன். எனக்கு அந்த மாதிரியான பிரயோகம் இந்த இழையில் ஒரு உறுத்தலாக இருந்ததால் என் எண்ணத்தை தெரியப்படுத்தினேன்.  அவ்வளவே.
அன்புடன் வந்து பதில் தந்ததற்கு மிகவும் நன்றி.

பூர்வபக்ஷம், உத்தரபக்ஷம், சித்தாந்தம், பிரமாணம் இவைகளை ஆழ்வார்களும் கையாண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் பிரமாணம் பிரத்யக்ஷம் என்னும் நேரடி ஆதாரமாய் இருக்கிறது. இது மூன்று பிரமாணங்களில் ஒன்றுதான்.

பக்தியில் எப்போதும் பூர்வபக்ஷம், உத்தரபக்ஷ (மீமாம்ஸ, வேதாந்தம்) வராது.  நாரத பக்தி சூத்திரத்தின் படி சரியை கிரியையில் விடும். கிரியை யோகத்தில் விடும். யோகம் ஞானத்தில் விடும். ஞானம் பக்தியில் விடும். பக்தியில் கிடைப்பதென்னவோ மேலும் பக்திதான்.

இதில் முந்தைய படியிலேயே ஞானம் இத்யாதிகள் போய் விடுவதால் பூர்வபக்ஷ, உத்தரபக்ஷ, சித்தாந்தங்களுக்கு அங்கே இடமில்லாது போகிறது (not applicable).

இதனால் அவைகளை தொடுவது inferior ஆகாது.  பனிரெண்டாவதற்கு பிறகு கல்லூரியில் அறிவியல் மாணவன் சரித்திரத்தை படிப்பதில்லை. அது பத்தாவதோடு போய்விடும். அதனால் சரித்திரமும் பூகோளமும் படிக்க வீண் ஆகாது. அதை முக்கிய பாடமாக எடுத்துக்கொண்டு செல்பவர்க்கு முனைவர் படிப்பு வரை அது முக்கியமாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட நாலு வழிகளில் பக்தியும் ஒன்று. சுத்த பக்தியும், சுத்த ஞானமும் வேறல்ல என்று அனைத்து பெரியோர்களும் ஒரு சேர சொல்லியிருக்கின்றனர் அன்றோ?

இதுவே நான் உங்களிடையே சொல்ல நினைத்தது.  இழையை மேலும் தொடருமாறு வேண்டிக் கொள்கிறேன். திருவாய்மொழியில் அடுத்த அமுதத்தை தாருங்கள்.


2009/4/12 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 12, 2009, 2:33:27 PM4/12/09
to மின்தமிழ்

இரண்டாவதைச் சொல்லவில்லை என்கிறபோதே, முதலில் சொன்ன/நீங்கள் ஏற்கெனெவே
சொன்ன அகர்மா/stupor என்கிற பொருளையே முன்வைக்கிறீர்கள் இல்லையா?

கர்மா என்கிற போது யாருடையது என்கிற கேள்வியோடேயே சேர்த்துப் பார்க்க
வேணும்.

நான் இன்னாருடைய உடைமை என்கிற நிலையில், கர்மா அல்லது அகர்மா என்கிற
பேச்சே எழுவதில்லை.முன்னமே சொன்னாற்போல, சொத்தைப் பாதுகாப்பது
உடையவனுடைய வேலை. அதுவே "என் செயலாவதொன்றுமில்லை" என்கிற தாயுமானவருடைய
வாக்கிலும் வெளிப்படுகிற நிலை. இது ஒரு விதம்.

இதே மாதிரிப் பல நிலைகள், அர்ஜுனன், சுந்தரர் கொண்டது போலத தோழமை,
இன்னொரு விதம்; அங்கே இந்த "சோம்பி இருப்பது" என்ன விதத்தில்
இருந்தாலும், இறையருள் அங்கே தடுத்தாட்கொள்ளுகிற தன்மையதாய்
வெளிப்படுகிறது.

நாயக-நாயிகா நிலை இன்னொருவிதம். இப்படி, நமக்கும் பரம்பொருளுக்கும்,
ஒன்பது விதமான உறவுகள் இருப்பதாக, பிள்ளை உலகாரியன் என்கிற வைணவ ஆசார்யன்
சொல்லி வைத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும், அவரவர் பக்குவத்திற்குத்
தகுந்த மாதிரி, ஏதோ ஒரு வழியில், உண்மை வெளிப்படுகிறது.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com

shivan .

unread,
Apr 12, 2009, 2:57:27 PM4/12/09
to minT...@googlegroups.com
உடைமை என்ற போது அகர்மா, கர்மா என்ற பேச்சு தாராளமாக எழும் ஐயா. இங்கே உடைமை என்றால் அசித் ஆகவில்லை. உடைமை உடையவனின் விருப்பிற்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டும்.

சரணாகதியை முன் வைத்த ஸ்ரீஇராமானுஜர் தான் திருக்காப்பிட்டு கொள்வதற்கு முன் தன் சீடர்களுக்கு சொல்லி விட்டு போன கட்டளைகளை படித்தாலே கர்மா, அகர்மா  புரிந்துவிடும். கண்டிப்பாக உடைமை இங்கே சைதன்யத்தோடு விளங்குவதால் கர்மா அகர்மா உண்டு.அஹங்கார, மமகாரம் இருக்குவரை கர்மா, அகர்மா உண்டு. அஹங்கார மமகாரம் போன பிறகு கர்மாவும் இல்லை; அகர்மாவும் இல்லை; அது உடைமையும் இல்லை. உடையவனாகவே ஆகிவிடுகிறது.

அரபிந்தோ சொல்லுவார். அனைத்து செயலையும் அர்ப்பணிக்கும் சரணாகதியை நீதான் செய்ய வேண்டும். அதையும் பரம்பொருளையே செய்ய சொல்லக்கூடாது (The Mother).

ஆக சரணாகதியிலும் கர்ம அகர்மங்கள் உண்டு. இரண்டாவது பொருளான lethargyஐ குறிக்கும் சோம்பல் கண்டிப்பாக பெரியோரால் குறிக்கப்படவில்லை என்பதே என் பணிவான கருத்து.



2009/4/13 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 12, 2009, 7:09:03 PM4/12/09
to மின்தமிழ்
On Apr 13, 12:44 am, devoo <rde...@gmail.com> wrote:
> அவன் நம்மிடம் காட்டும் எல்லையற்ற நீர்மையை நம் திறத்தில் சமன் செய்ய

> இதைக்காட்டிலும் (அடிமை) கீழ்மையான சொல் இன்னும் வேறேதேனும் இருக்குமா
> என்று என் மனம் ஆராய்கிறது.
> இதுவே என் தேடல்.
>

நெஞ்சு விம்முகிறது. கண்ணீர் குமுறிப்பாய்கிறது. அவன் நீர்மைக்கு முன்
நம் பிரயத்தனமெல்லாம் அடிபட்டு புனல் மேல் தூசுபோல் ஆகிவிடுகிறது.
`காக்கும் கடவுள் கண்ணபெருமான்` என்று நம்மைப் பார்த்துப் பார்த்துக்
காக்கும் அக்கடவுளுக்கு அடிமையென்ன, அதற்குக் கீழ் ஏதாவது ஒன்று
இருந்தால் கூட அதைச் செய்யத்தான் தோன்றுகிறது. நெஞ்சே! அந்நிலையில் நில்.
அடித்த அன்னையை ஏங்கி நோக்கும் மழலை போல் ஏங்கி இரு. பிச்சைச் சோறு
போடும் ஒரு தாயின் முகம் பார்க்கும் பிச்சைக்காரன் போல் பணிவுடன் இரு.
அதுவே உன் இன்றைய நிலமை.

ஒரே வார்த்தையில், கண்ணாடி தூள் ஆவது போல் அடித்து நொறுக்கிவிட்டீர்கள்.

க.>

devoo

unread,
Apr 12, 2009, 10:25:22 PM4/12/09
to மின்தமிழ்
Apr 13, 4:09 am, நா.கண்ணன்

//`காக்கும் கடவுள் கண்ணபெருமான்` என்று நம்மைப் பார்த்துப் பார்த்துக்


காக்கும் அக்கடவுளுக்கு அடிமையென்ன, அதற்குக் கீழ் ஏதாவது ஒன்று

இருந்தால் கூட அதைச் செய்யத்தான் தோன்றுகிறது.//

ஒன்றி ஒன்றி உலகு செய்தான்; நாட்டில் பிறந்து மானிடர்க்காய்ப்
படாத பாடு பட்டான்; உலகுண்டு ப்ரளயாபத்திலிருந்து
ஆருயிர்களைக் காக்கும் அருஞ்செயல் செய்தான்.(அதை அழித்தல் என்பது தவறு;
காத்தலோடு சேரும்)

ஆழ்வார்கள் ஒருநிலையில் பட்டியலிட்டுப் பார்த்தனர்;
ஸ்வாமி தேசிகனும் ‘உபகார ஸங்ரஹம்’ எனும் நூலில்
அவன் செய்துவரும் சேமங்களுக்கான பட்டியல் தந்துள்ளார்.

அவர்கள் சரண்யனிடம் சரண் புகுவதே இறுதிச் செயலாக வேண்டும் என்று முடிவில்
அறுதியிட்டனர்.
முடிவின்றிப் புலன்களுக்கு அடிமை செய்து வருவதற்கும், போகங்களுக்கு
ஆன்மாவையே விலைபேசும் புன்செயல் நிற்பதற்கும், அதையே ’சுதந்திரம்’ என்று
நினைத்து வரும்
மடமைக்கும் ஒரு சிறந்த மாற்று அவனுக்கு வழுவிலா அடிமை செய்வதைதவிர வேறு
என்ன இருக்க இயலும் ?

தேவ்

devoo

unread,
Apr 12, 2009, 10:52:41 PM4/12/09
to மின்தமிழ்
Apr 12, 11:57 pm, "shivan ."

//சரணாகதியிலும் கர்ம அகர்மங்கள் உண்டு.//

கர்மம், விகர்மம், அகர்மம் – இவை கர்ம யோகம் சார்ந்தவை;
கர்மத்தை அகர்மமாக்கி விட்டால் அதுவே யோகமாகி
விடுதலைக்கு வழி கோலுகிறது.

சரணாகதி என்பது
‘தேஹ யாத்ரை கர்மாதீநம்; ஆத்ம யாத்ரை அவனதீநம்’
என்னும் திடமான அத்யவஸாயத்தின் அடிப்படையில்
அமைவது. இதில் ஒருவன் செய்யும் முயற்சிகள்
அடிபட்டுப் போகின்றன.

தேவ்

நா.கண்ணன்

unread,
Apr 12, 2009, 11:36:48 PM4/12/09
to மின்தமிழ்
On Apr 13, 10:25 am, devoo <rde...@gmail.com> wrote:
> அவர்கள் சரண்யனிடம் சரண் புகுவதே இறுதிச் செயலாக வேண்டும் என்று முடிவில்
> அறுதியிட்டனர். அவனுக்கு வழுவிலா அடிமை செய்வதைதவிர வேறு என்ன இருக்க இயலும் ?
>

பாவங்கள் மாறி, மாறிப்பாய்கின்றன. கிருஷ்ணமூர்த்தி ஞாபகப்படுத்தியபடி
(பிள்ளை லோகாச்சார்யர்) அத்தனை பாவங்களும் அலையலையாய் மோதுகின்றன.
பின்னவீனத்துவ பாணியில் “கண்ணன் என் தாய்” என்பதே இப்போதைக்கு மேலோங்கி


நிற்கிறது.

கண்ணன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 12, 2009, 11:59:55 PM4/12/09
to மின்தமிழ்
On Apr 12, 11:57 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
/அரபிந்தோ சொல்லுவார். அனைத்து செயலையும் அர்ப்பணிக்கும் சரணாகதியை

நீதான் செய்ய
வேண்டும். அதையும் பரம்பொருளையே செய்ய சொல்லக்கூடாது (The Mother)./

உண்மைதான் ஐயா! ஸ்ரீ அரவிந்த அன்னை இதையும் சொல்கிறார்:
"We read, we try to understand, we explain, we try to know. But a
single minute of true experience teaches us more than millions of
words and hundreds of explanations.

So the first question is: "How to have the experience?"

To go within yourself, that is the first step.

And then, once you have succeeded in going within yourself deeply
enough to feel the reality of that which is within, to widen yourself
progressively, systematically, to become as vast as the universe and
lose the sense of limitation.

These are the first two preparatory movements.

And these two things must be done in the greatest possible calm, peace
and tranquillity. This peace, this tranquillity brings about silence
in the mind and stillness in the vital.
This effort, this attempt must be renewed very regularly,
persistently. And after a certain lapse of time, which may be longer
or shorter, you begin to perceive a reality that is different from the
reality perceived in the ordinary, external consciousness.
Naturally, by the action of Grace, the veil may suddenly be rent from
within, and at once you can enter the true truth; but even when that
happens, in order to obtain the full value and full effect of the
experience, you must maintain yourself in a state of inner
receptivity, and to do that, it is indispensable for you to go within
each day.
The Mother
[CWMCE, 10:19-20]

அத்வைதக் கோட்பாடுகளின்படி விளக்கம் கொள்ளுவது உங்களுக்கு எளிதாக
இருக்கலாம்.அத்வைதம் என்பது ஒரு கண்ணோட்டமேயன்றி, அதுவே முழுவதும்,
முடிவானதுமான பாதை அல்ல, வேறு பாதைகளும் உண்டு என்பதை மட்டுமே நான்
சொல்ல விழைவது.

திருவாய் மொழியை, அதை மேம்போக்காகப் படித்து விளக்கம் சொல்லிக்
கொண்டிருப்பதை விட, அதை ஓதி உணர்ந்த ஆசார்யர்கள் சொல்லியிருப்பதை இங்கே
திரு வெங்கடேஷ் அவர்கள் தொடர, நாம் சற்று ஒதுங்கி, வழிவிடலாமே.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

http:consenttobenothing.blogspot.com

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 13, 2009, 12:22:05 AM4/13/09
to minT...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி சார்,
 
அருமையான விளக்கம். குறிப்பாக,
 
<நான் இன்னாருடைய உடைமை என்கிற நிலையில், கர்மா அல்லது அகர்மா என்கிற
பேச்சே எழுவதில்லை.முன்னமே  சொன்னாற்போல, சொத்தைப் பாதுகாப்பது
உடையவனுடைய வேலை. அதுவே "என் செயலாவதொன்றுமில்லை" என்கிற தாயுமானவருடைய
வாக்கிலும் வெளிப்படுகிற நிலை. இது ஒரு விதம்
.>
இது ஒரு விதம் என்றதுதான் உண்மை. அதனால்தான் ஆழ்வாரும் "வணங்கும் துறைகள் பலபல ஆக்கி" என்கிறார். அதுவும் ஒரு விதமே. இதோ, திருவாய்மொழியின் முதல் பதிகத்திலேயே இதன் விளக்கமும் வருகிறது.
 
அடியேன்
வேங்கடேஷ்
 


Check out the all-new Messenger 9.0! Click here.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 13, 2009, 12:38:40 AM4/13/09
to minT...@googlegroups.com
சிவன் சார்,
 
<உடைமை என்ற போது அகர்மா, கர்மா என்ற பேச்சு தாராளமாக எழும் ஐயா. இங்கே உடைமை என்றால் அசித் ஆகவில்லை. உடைமை உடையவனின் விருப்பிற்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டும்.>
இக்கருத்தை ஆழ்வார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கர்மா/அகர்மா என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை நம்மாழ்வார்
 
"கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை" என்கிறார். ஆக நாம், நம் செய்கை (கர்மா) என்று எண்ணுவதுகூட அவனுடையதே என்கிறார்.
 
இதில் நமக்கு வரும் குழப்பத்துக்குக் காரணம், கர்மா/அகர்மா என்ற ஒன்று இல்லையென்றால் நாம் செய்யும் செய்கைக்கு என்ன பெயர் என்பதே அது. இச்செயல்களெல்லாம் உபாயமாகாதாகையால், அவை அகர்மா என்றே கொள்ளவேண்டும். மற்றபடி, நாம் செய்யும் சாப்பிடுவது, நடப்பது, ஒருவருக்கு உதவுவது, கோயிலை சுத்தம் செய்வது போன்ற செயல்களெல்லாம் வெறும் இயல்வுகள்தான். இவை ஏதும் அவனைக் கட்டுப்படுத்தாது என்பதால் அவற்றையெல்லாம் கர்மாவாகக் கொள்வதில் ஏதும் பயனில்லை.
 
இதைத்தான் கிருஷ்ண்மூர்த்தி சாரும் சொல்கிறார்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Connect with friends all over the world. Get Yahoo! India Messenger.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 13, 2009, 12:43:42 AM4/13/09
to minT...@googlegroups.com
கண்ணன் சார்,
 
தேவ் சார் அவ்வாறு செய்ததை அருமையான அடைமொழி கொண்டு விளக்கியும் விட்டீர்கள்.
 
இதனால்தான் சொன்னேன். " பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபமென்று"
 
தேவ் சார்,
தங்களை நேற்று தரிசித்ததே அடியேனுடைய பேறுதான். அவனருளால், அவன் முன்னர் நடந்த இச்சந்திப்பு ஒரு அருமையான தருணம். உடன் இம்மடலையும் பார்த்தேன். கண்ணன் சாரின் மடலையும் பார்த்தேன். இதைவிட தங்களின் மடலைப் பற்றி சிறப்பாக எழுத அடியேனுக்குத் தெரியவில்லையாதலால், கண்ணன் என்னும் கிளையில் அடியேன் தொங்கிக்கொள்கிறேன்
 
அடியேன்
வேங்கடேஷ்
From: நா.கண்ணன் <nka...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Monday, 13 April, 2009 4:39:03 AM
Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

Add more friends to your messenger and enjoy! Invite them now.

Tirumurti Vasudevan

unread,
Apr 13, 2009, 2:24:08 AM4/13/09
to minT...@googlegroups.com


2009/4/13 devoo <rde...@gmail.com>

அத்யவஸாயத்தின்

= நிச்சய ரூபமான ஞானத்தின்.

பயமுறுத்தாதீங்க தேவ் சார்!

தி.வா

shivan .

unread,
Apr 13, 2009, 2:54:28 AM4/13/09
to minT...@googlegroups.com
திருவாய் மொழியை, அதை மேம்போக்காகப் படித்து விளக்கம் சொல்லிக்
கொண்டிருப்பதை விட, அதை ஓதி உணர்ந்த ஆசார்யர்கள் சொல்லியிருப்பதை இங்கே
திரு வெங்கடேஷ் அவர்கள் தொடர, நாம் சற்று ஒதுங்கி, வழிவிடலாமே.<<<

நல்லது. நானும் என் சொந்த கருத்தை சொல்லவில்லை ஜி. பெரியோரிடம் கேட்டறிந்ததையே சொன்னேன். அடியேன் அமைதியாவதில் ஒரு தயக்கமுமில்லை. நான் விவாதிக்கவும் இதை சொல்லவில்லை. இங்கே இழையில் நல்ல விஷயங்களை பேச ஆவல் கொண்டே பேசினேனே ஒழிய வேறு எண்ணம் ஏதுமில்லை.

தங்கள் எண்ணமே வேங்கடேஷின் எண்ணமுமாய் இருந்தால் மௌனமாய் இந்த இழையில் கலந்துக் கொள்வதில் முழு சம்மதேமே.




2009/4/13 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

shivan .

unread,
Apr 13, 2009, 3:01:12 AM4/13/09
to minT...@googlegroups.com
அன்பு வேங்கடேஷ் ஜி

தங்கள் பதிலுக்கு என் கருத்தை சொல்வதற்கு முன், என் மடல் இந்த இழைக்கு தொந்தரவாக இல்லையா என்று  சொல்லவும்.   ஏனெனில் இந்த இழை அடுத்து தொடர என்னால் தாமதமாக கூடாது.

மேலும் கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வது போல் திருவாய்மொழியை மேலோட்டமாக படித்து விட்டு என் மனம் போன போக்கில் பதில் மடல் இடுவதாய் தாங்கள் கருதினாலும் தெரிவிக்க வேண்டுகிறேன். ஏனெனில் நிச்சயமாக என் கருத்தால் பயன் ஏதுமில்லை என்பதை  அடியேன் அறிவேன். அடியேன் சொல்வது பெரியோர் சொன்ன வாக்கியமாய் இருந்தால் மாத்திரமே அது இந்த இழைக்கு சரியாக இருக்கும்.

மீதம் தங்கள் மடலுக்கு பின்.

பணிவுடன் பெரியோர்களை நமஸ்கரித்து கொள்கிறேன்.



2009/4/13 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>

V, Dhivakar

unread,
Apr 13, 2009, 3:14:32 AM4/13/09
to minT...@googlegroups.com
சிவன் ஜி!

இந்தப் பணிவுதான் எல்லோரையும் ஈர்க்கிறது. உங்கள் கருத்துகள் என்னைப் பொறுத்தமட்டில் ஆழ்வாரின் பாடல்களுக்கும், அதற்கான திருவேங்கடேஷின் மெய் விளக்கக்கருத்துகளுக்கும் மேலும் வலு சேர்ப்பதாகவே தெரிகிறது.

சமீபத்தில் ஈடுகளைப் பற்றி ஒரு வைணவப்பெரியவர் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நான்காயிரப்படி, இன்னும் மேலே மேலே என வைணவப் பெரியோர்களின் ஆராய்ச்சி நீண்டுகொண்டே போவதாகச் சொல்கிறார். இத்தனை ஆராய்ச்சிகளும் செந்தமிழ் வேதமான திருவாய்மொழி என்பதின் மீது என்று நினைக்கும்போது நமக்குப் பெருமிதம் உண்டாகிறது. அதற்கு எத்தனை முறை விளக்கம் சொன்னாலும் போதவே போதாது. நீண்டுகொண்டே இருக்கும் ஆச்சரியமான விஷயம்.

ஆகையினால் அறிந்துகொள்கிறோம். எத்தனைவகை விளக்கம் வந்தாலும் தெரிந்து கொள்வோம்.

திவாகர்

2009/4/13 shivan . <siva...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 13, 2009, 3:31:34 AM4/13/09
to மின்தமிழ்

On Apr 13, 12:01 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> அன்பு வேங்கடேஷ் ஜி
>
> தங்கள் பதிலுக்கு என் கருத்தை சொல்வதற்கு முன், என் மடல் இந்த இழைக்கு
> தொந்தரவாக இல்லையா என்று  சொல்லவும்.   ஏனெனில் இந்த இழை அடுத்து தொடர என்னால்
> தாமதமாக கூடாது.
>
> மேலும் கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வது போல் திருவாய்மொழியை மேலோட்டமாக படித்து
> விட்டு என் மனம் போன போக்கில் பதில் மடல் இடுவதாய் தாங்கள் கருதினாலும்
> தெரிவிக்க வேண்டுகிறேன்.

//திருவாய்மொழியின் போக்கிலேயே வாசித்துப் பொருள் கொள்ளுதலே நலம்
பயக்கும்
என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.//
இப்படி முந்தைய பக்கத்தில், தேவ் சார் சொல்லியிருப்பதைத் தான் நானும்
சொல்ல வந்தேன். திரு சிவன் சார் மனம் புண் படும்படி ஆகி விட்டதோ? ஐயா,
அப்படி ஒரு எண்ணம் ஏற்படும்படி எனது எழுத்து இருந்தால், அனைவருடைய
மன்னிப்பையும் கோருகிறேன்.

அது என்னவோ, மடலாடற்குழுக்களில் எப்போது சாதாரணமாகவும், எப்போது
சீரியசாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது எனக்குப் பிடிபடவேயில்லை.

அதே நேரம், எந்தப் பெரியவர் இப்படித் திருவாய்மொழிக்கு அர்த்தம்
கொள்ளலாமென்று சொல்லியிருக்கிறார் என்பதையும் கொஞ்சம் சொன்னால் தேவலை.
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

http://consenttobenothing.blogspot.com


Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Apr 13, 2009, 4:39:58 AM4/13/09
to minT...@googlegroups.com
சிவன் சார்,
 
என்ன இது, பெரிய வார்த்தைகள். கிருஷ்ணமூர்த்தி சார் தன் நிலையை தெளிவுபடுத்திவிட்டார். அது ஒரு புறமிருக்கட்டும். அடியேன் எழுதத்தொடங்கியபொழுதே, அலசல் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தொடங்கினேன். முக்கிய காரணம். மணவாள மாமுனிகள் என்கிற வைணவ ஆச்சாரியர் தன்னுடைய நூலான "உபதேச ரத்தின மாலை"-யில்......
 
"முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு,   பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே," என்கிறார். இங்கு "முன்னோர் மொழிந்த முறை" என்ற சொற்றொடரை விட "பின் ஓர்ந்து தாம் அதனைப் பேசாதே" என்றதற்கு முக்கியத்துவம் அதிகம். ஓர்தல் என்பது ஆராய்தல். 
 
ஆக, தங்கள் விளக்கங்களும், கேள்விகளும், தேடலை அதிகரிக்கவே செய்கிறது. தயவு செய்து தொடருங்கள்.
 
இத்தொடரை அனுபவித்து வருபவர்களுக்கு ஒரு சொல்லிக் கொள்கிறேன். ஒரு பாசுரத்திற்கும் மற்றொரு பாசுரத்திற்கும் உள்ள இடைவெளிக்குக் காரணம், நேரமின்மை மட்டும் தான். ஒரு பாசுரத்தைச் சார்ந்த விவாதங்கள் முடிவடைவதற்காக அடியேன் காத்திருக்கவில்லை. இப்பொழுது திருவல்லிக்கேணியில் ப்ரம்மோத்ஸவம் நடைபெறுவதால், நேரம் முழுவதும் அவ்விடமே கழிகிறது. ஆகையால் சில தாமதங்கள். தயவி செய்து பொருத்தருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
அடியேன்
வேங்கடேஷ்


From: shivan . <siva...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Monday, 13 April, 2009 12:31:12 PM
Subject: [MinTamil] Re: திருவாய்மொழி 1-1-2

அன்பு வேங்கடேஷ் ஜி

தங்கள் பதிலுக்கு என் கருத்தை சொல்வதற்கு முன், என் மடல் இந்த இழைக்கு தொந்தரவாக இல்லையா என்று  சொல்லவும்.   ஏனெனில் இந்த இழை அடுத்து தொடர என்னால் தாமதமாக கூடாது.

மேலும் கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வது போல் திருவாய்மொழியை மேலோட்டமாக படித்து விட்டு என் மனம் போன போக்கில் பதில் மடல் இடுவதாய் தாங்கள் கருதினாலும் தெரிவிக்க வேண்டுகிறேன். ஏனெனில் நிச்சயமாக என் கருத்தால் பயன் ஏதுமில்லை என்பதை  அடியேன் அறிவேன். அடியேன் சொல்வது பெரியோர் சொன்ன வாக்கியமாய் இருந்தால் மாத்திரமே அது இந்த இழைக்கு சரியாக இருக்கும்.

மீதம் தங்கள் மடலுக்கு பின்.

பணிவுடன் பெரியோர்களை நமஸ்கரித்து கொள்கிறேன்.



2009/4/13 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>
சிவன் சார்,
 
<உடைமை என்ற போது அகர்மா, கர்மா என்ற பேச்சு தாராளமாக எழும் ஐயா. இங்கே உடைமை என்றால் அசித் ஆகவில்லை. உடைமை உடையவனின் விருப்பிற்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டும்.>
இக்கருத்தை ஆழ்வார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கர்மா/அகர்மா என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை நம்மாழ்வார்
 
"கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை" என்கிறார். ஆக நாம், நம் செய்கை (கர்மா) என்று எண்ணுவதுகூட அவனுடையதே என்கிறார்.
 
இதில் நமக்கு வரும் குழப்பத்துக்குக் காரணம், கர்மா/அகர்மா என்ற ஒன்று இல்லையென்றால் நாம் செய்யும் செய்கைக்கு என்ன பெயர் என்பதே அது. இச்செயல்களெல்லாம் உபாயமாகாதாகையால், அவை அகர்மா என்றே கொள்ளவேண்டும். மற்றபடி, நாம் செய்யும் சாப்பிடுவது, நடப்பது, ஒருவருக்கு உதவுவது, கோயிலை சுத்தம் செய்வது போன்ற செயல்களெல்லாம் வெறும் இயல்வுகள்தான். இவை ஏதும் அவனைக் கட்டுப்படுத்தாது என்பதால் அவற்றையெல்லாம் கர்மாவாகக் கொள்வதில் ஏதும் பயனில்லை.
 
இதைத்தான் கிருஷ்ண்மூர்த்தி சாரும் சொல்கிறார்.
 
அடியேன்
வேங்கடேஷ்


Connect with friends all over the world. Get Yahoo! India Messenger.




Geetha Sambasivam

unread,
Apr 13, 2009, 4:52:21 AM4/13/09
to minT...@googlegroups.com
//அது என்னவோ, மடலாடற்குழுக்களில்  எப்போது சாதாரணமாகவும், எப்போது
சீரியசாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது எனக்குப் பிடிபடவேயில்லை.//

மெளனமாய்த் தெரிந்து கொள்வதே சிறந்ததோ???

2009/4/13 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 13, 2009, 5:20:36 AM4/13/09
to மின்தமிழ்
திவாகர் சொல்வதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

எந்தப் பனுவலையும் அதன் சமகாலப்பயன்பாடு கருதி அலசுவதில் தவறில்லை.
மேலும் 10-13ம் நூற்றாண்டின் மேற்கோள்கள் அக்காலத்திற்கு எளிதாகப்
பொருந்தி வருவதாய் இருக்கலாம். இக்காலத்திற்கும் பொருந்துமாறு கருத்துச்
சொல்வது நம் புரிதலை வளர்க்கும். சிவன் ஜியின் நிர்வாஹம் சுவாரசியமாகவே
உள்ளது.

க.>

shivan .

unread,
Apr 13, 2009, 5:32:08 AM4/13/09
to minT...@googlegroups.com
என்னை அனுமதித்ததற்கு பெரியோர்களுக்கு நன்றி.  இங்கிருக்கும் அடியார்களுடன் அளவளாவி கிடைக்கும் இன்பத்திற்காகவே இவ்விழையில் மடலாடினேன். இனியும் மகிழ்வுடன் தொடருவேன்.  பெரியோர்களுக்கும் என் வணக்கங்கள்.



2009/4/13 நா.கண்ணன் <nka...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 13, 2009, 6:00:04 AM4/13/09
to minT...@googlegroups.com
அன்பர் வெங்கடேஷுக்கு,
 
அடியேனும் ஊஞ்சல் உத்ஸவத்துக்கு வந்திருந்தேனே!
இன்னம்பூரான்

Innamburan Innamburan

unread,
Apr 13, 2009, 6:21:11 AM4/13/09
to minT...@googlegroups.com
ஒரு சொல்லின் பொருள் இடம், பொருள், ஏவலைப் பொருத்து அமைகிறது. இன்றும் வைணவ பரிபாஷையில் 'அடியேன்' என்று தான் சொல்லிக்கொள்கிறோம். நாமார்க்கும் குடியல்லோம் என்ற அப்பர் பிரான், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்கிறார்.
 
இன்னம்பூரான்

2009/4/13 shivan . <siva...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Apr 13, 2009, 6:40:07 AM4/13/09
to minT...@googlegroups.com


2009/4/13 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

அது என்னவோ, மடலாடற்குழுக்களில்  எப்போது சாதாரணமாகவும், எப்போது
சீரியசாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது எனக்குப் பிடிபடவேயில்லை.

அது ஒண்ணும் இல்லை சார்.
என்ன வேணுமானாலும் எழுதிட்டு :-) அப்படின்னு போட்டா சீரியஸா இல்லைன்னு எடுத்துக்கணும்.
இல்லைனா சிலர் மாதிரி :P அப்படின்னும் போடலாம்.

நாம அஞ்சலை படிக்கிற நேரம் இருக்கிற மூட் படியும் எடுத்துப்பாங்க. அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது. ஒரு வேளை நாம் எழுதற அதே நேரம் கடும் விமரிசனமா ரெண்டு பேர் எழுதி இருக்காங்கன்னா அதே மூட்லதான் நம்ம எழுத்தும் படிக்கப்படும்.
இதெல்லாம் இந்த மாதிரி குழுவிலே சகஜம்.

சில சமயம் நமக்கு ஒரு முத்திரை குத்திடுவாங்க. அதாவது ஜோக்கடிச்சே பழக்கப்பட்ட ஒத்தர் சொல்கீறதை யாருமே சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. அப்படி போனா திண்டாட்டமே!
உங்களுக்கு தப்பான முத்திரை விழுந்திடுச்சோன்னு எனக்கு சந்தேகம்.
:-)))
இப்ப, இதோட எபெக்ட்டை பாத்தீங்களா?

shivan .

unread,
Apr 13, 2009, 7:26:12 AM4/13/09
to minT...@googlegroups.com
நான் இதில் மேற்கொண்டு உண்மையில் விவாதிக்க நினைக்கவில்லை. ஆனால் எதற்காக நான் சீரியஸாக எடுத்துக் கொண்டேன் என்பதை  சொன்னால் நல்லது என்று தோன்றுகிறது.


அது ஒண்ணும் இல்லை சார்.
என்ன வேணுமானாலும் எழுதிட்டு :-) அப்படின்னு போட்டா சீரியஸா இல்லைன்னு எடுத்துக்கணும்.
இல்லைனா சிலர் மாதிரி :P அப்படின்னும் போடலாம்.>>>>>>>>>திருமூர்த்தி வாசுதேவன்


சிவன் சார்,
 
என்ன இது, பெரிய வார்த்தைகள்.
கிருஷ்ணமூர்த்தி சார் தன் நிலையை தெளிவுபடுத்திவிட்டார். அது ஒரு புறமிருக்கட்டும்.>>>>வேங்கடேஷ்


திருமூர்த்தி ஜி, வேங்கடேஷ் ஜி,


மேலே சொல்லப்பட்டுள்ள தங்கள் வரிகள் அடியேன் எதனால் சீரியஸாக எடுத்துக் கொண்டேன் என்பதை அறியவில்லையோ என்று தோன்ற செய்கிறது.

கீழே உள்ள வரிகளை படிக்கவும்; அவைகளை படித்த பின் சீரியஸாக எடுத்துக் கொண்டது சரியா தவறா என சொன்னால் நலம்.


....திருவாய் மொழியை, அதை மேம்போக்காகப் படித்து விளக்கம் சொல்லிக்

கொண்டிருப்பதை விட, அதை ஓதி உணர்ந்த ஆசார்யர்கள் சொல்லியிருப்பதை இங்கே
திரு வெங்கடேஷ் அவர்கள் தொடர, நாம் சற்று ஒதுங்கி, வழிவிடலாமே.....>>>>>>கிருஷ்ணமூர்த்தி


இந்த மேற்சொன்ன வரிகளின் கடைசியில் ஸ்மைலி போட்டிருந்தாலும்  சீரியஸ்னெஸ் மாறாது என்பது என் பணிவான கருத்து.  இதன் பிறகும் நான் சீரியஸாக எடுத்துக் கொண்டது தவறு என பெரியோர்கள் கருதினால், எனக்கு ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.






2009/4/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 13, 2009, 8:33:30 AM4/13/09
to மின்தமிழ்
On Apr 13, 7:26 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> நான் இதில் மேற்கொண்டு உண்மையில் விவாதிக்க நினைக்கவில்லை. ஆனால் எதற்காக நான்
> சீரியஸாக எடுத்துக் கொண்டேன் என்பதை  சொன்னால் நல்லது என்று தோன்றுகிறது.
>

சிவன்:

ரொம்ப லௌகீகத்துக்குளே போய் புரளக்கூடாது. அப்புறம் நாம் அகங்கார,
மமகாரச் சுழலில் மாட்டிக்கொண்டு பேச வந்த/அனுபவிக்க வந்த அற்புதமான
விஷயத்தை விட்டுவிடுவோம். இதிலிருந்து விடுதலைப் பெறத்தானே சடகோபனை
நாடுகிறோம். இக்கோஷ்டியில் இருப்பவர்கள் யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள
மாட்டார்கள். எல்லோருக்குமே `தாசன்` என்ற உணர்வுண்டு. எனவே சந்தோஷமாக,
உள்ளார்த்தமாக பங்குகொள்ளுங்கள்.

சித்தாந்ததிற்குள் போகும் போது, பூனை தன் வாலையே அந்நியப்படுத்திக்கொண்டு
பிடித்து விளையாடுபோல் நம் நிலமை ஆகிவிடும். அப்போதுதான் இந்த
அறிவுஜீவிதம். முதல் பத்து, மூன்று பதிகம் முடியட்டும், அதன் பின்
சுகானுபவம் வந்துவிடும். அப்புறம் சுகம் ;-)

க.>

devoo

unread,
Apr 13, 2009, 8:48:28 AM4/13/09
to மின்தமிழ்
Apr 13, 4:26 pm, "shivan ."

//இந்த மேற்சொன்ன வரிகளின் கடைசியில் ஸ்மைலி போட்டிருந்தாலும்
சீரியஸ்னெஸ் மாறாது என்பது என் பணிவான கருத்து.//

பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் ஐயா!
வேங்கடேஷ் அவர்கள் நமக்குப் பூரண சுதந்திரம் கொடுத்துள்ளார்;
நாமும் எந்நிலையிலும் இதுவரை இழையிலிருந்து
விலகாமல் இருந்து வந்துள்ளோம்.
அடியேனும் அவரிடம் தெரிவித்துவிட்டே ஒரு சில கருத்துகளைக் கூறினேன்.

உண்மையில் தெளிவு பெறும்வரை பலவிதமான கோணங்களில் ஆராய்வதில் தவறு இல்லை.
முனைவர் புதிய சொற்களை நாடுவதிலும் தவறில்லை;
நவீனர்களுக்கும் புரிய வேண்டும் என்னும் கரிசனம்தான் காரணம். அவருக்குத்
தெரியாத அருளிச் செயலா?

அடியேன் அவருக்கு மடலிடுவதும் ஒரு ஸாஹஸமான
செயல்தான்.பரம ஸாத்விகர்களான நமக்குள் ஏன் இந்த
விவாதம்?

தேவ்

It is loading more messages.
0 new messages