நற்றமிழ் பழகு

13 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 16, 2025, 10:36:39 PM6/16/25
to மின்தமிழ்
https://whatsapp.com/channel/0029VbAk9037IUYZOAggaB0w

நற்றமிழ் பழகு
Learn Tamil

"போட்டார்" என்ற சொல் எத்தனையோ வினைச்சொற்களை அழித்து வருகிறது. மரபு வழக்கு வேண்டினால் இவற்றைப் பயன்படுத்தலாம்.
ஆட்டம் போட்டார் ❌ -ஆட்டம் ஆடினார்✅
கூரை போட்டனர் ❌ -கூரைவேய்ந்தனர்✅
சாலை போட்டார் ❌ -சாலை அமைத்தார்✅
வழக்கு போட்டார் ❌ -வழக்குத் தொடுத்தார்✅
மொட்டை போட்டார் ❌ -மொட்டையடித்தார்✅
சூடு போட்டார் ❌ -சூடு வைத்தார்✅
மாலை போட்டார் ❌ -மாலை அணிவித்தார்✅
வேடம் போட்டார் ❌ -வேடமணிந்தார்✅
வாக்கு போட்டார் ❌ -வாக்களித்தார்✅
கையெழுத்து போட்டார் ❌ -கையெழுத்திட்டார்✅
சத்தம் போட்டார் ❌ -சத்தம் எழுப்பினார்✅
கூட்டம் போட்டார் ❌ -கூட்டம் கூட்டினார்✅
சட்டம் போட்டார் ❌ -சட்டம் இயற்றினார்✅
பழி போட்டார் ❌ -பழி சுமத்தினர்✅
மயக்கம் போட்டார் ❌ -மயக்கம் அடைந்தார்✅
Reply all
Reply to author
Forward
0 new messages