ஈழப்பாகத கல்வெட்டுக்களில் மறைந்திருக்கும் தூய தமிழ் பெயர்கள்--ஈழத்து வரலாறு

12 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 18, 2026, 8:04:54 PM (3 days ago) Jun 18
to மின்தமிழ்
ஈழப்பாகத கல்வெட்டுக்களில் மறைந்திருக்கும் தூய தமிழ் பெயர்கள்-- ஈழத்து வரலாறு
Sri Lanka.jpg
ஈழப்பாகத கல்வெட்டுக்களில் மறைந்திருக்கும் தூய தமிழ் பெயர்கள்.
மித்தன், குத்தன்,குட்டன் ,கூற்றன்,தித்தன்,தீயன் கொத்தன்,கொற்றன்,நக்கன்,நன்னன், நாகன், போன்ற பண்டைய தமிழ் பெயர்கள்தான் பழந்தமிழக பகுதிகளில் பிராகிருத மொழி பிரயோக கல்வெட்டுக்களில் மொழித்திரிபடைந்து மிதஹ,குத்தஹ,திஸஹ, ணக என்ற பிராகிருத வடிவத்தை பெற்றுக் காணப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.அந்த வகையில் தமிழக மாங்குளம் கல்வெட்டு கூறுகின்ற குஅன் என்பது குத்தன் என்பதன் சுருக்கமாகும். அது கணி நந்தன் என்ற ஆசிரியர் என்ற குத்தன்(குஅன்) அந்தை ஆகியோர் பற்றி அது கூறுகின்றது. இவ்வாறான பலநூறு கல்வெட்டுக்கள் இலங்கையில் குத்தஹ அதாவது குத்தன் பற்றிக் கூறுகின்றன. மஹ குத்தஹ என்றால் தமிழ் வடிவம் பெருங்கூற்றன் என்பதாகும்.அதே போன்று தமிழக மாங்குளக் கல்வெட்டும்
கணிய் ந(ன்)ந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்
"கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா
கணி நந்தன்(நன்னன்) ஆசிரிய குத்தனுக்கு(கூற்றனுக்கு) கொடை வழங்கிய"என கருதமுடியும்.
கணிய் நந்த அஸிரிய்இ கு(வ்)அன் கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்
கணிஇ நதஸிரிய் குவ[ன்] -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன் என்கிறது.
பிராகிருதத்தில் நந்தர் என்போர் பண்டைய மகத வேளிர்அரசர்களாகிய நன்னர்களை பிராகிருதத்தில் குறிப்பது.இவர்களுடைய பேரரசுவின் மகதத்தில் முதலில் தோன்றிய பேரசு ஆகும்.அதன் பின்பாகவே மோரியர் ஆட்சி நிலவியது.
இவ்வாறு மேற்கண்டதான 3 கல்வெட்டுக்களுமே கணி நந்தன் ஆசிரிய குவன்,குவ என சேர்ந்து வருகின்றமை பண்டைய கால தமிழ் குத்தன்(கூற்றன்) என்பதன் சுருக்கமாகும்.
மேலும் அதற்கான உதாரணமாக IC- 367 பத தம்மகுத்தஹ ஸ திஸகுத்தஹ ஸ தமரகித லெணெ,என்கிறது.அதன் பொருள் மேளவாத்திய கலைஞரான திஸகுத்தன்(தீயன் கூற்றன்) மற்றும் அவர் குரு தம்மகுத்தன் ஆகியோரது குகை, என்கிறது.
அதேபோல இலங்கை கல்வெட்டுக்களில் வருகின்ற கணதிஸ போன்ற கணி தீயன் என்ற பொருளையே தருகின்றன. இது தீயன் என்ற தமிழ் பெயரின் பிராகிருத வடிவமாகும்.இவை பிராகிருத மாற்றம் பெற்ற திஸ என்ற மாறுதலாகும். இந்த தீயர் குடியினர் எட்டுத் திக்கும் சென்று கடலோடி வணிகத்தில் கோலோச்சிருக்கிறார்கள், அதனால் வணிஜ திஸஹ என்ற பெயர் பெற்றார்கள், அதனால் அரசர்களாக உயர்ந்திருக்கிறார்கள் திஸரஜூ, குருவாக பத திஸ ,துறவியாக திஸ தேரஹ, குடும்பத் தலைவராக ஹபதி திஸஹ என பெயர் பெற்றிருக்கிறார்கள். இந்த தீயர் சேரநாட்டுக் குடிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.இவை எதைக்கூறுகின்றன. இந்த தீயர்,தீயன் அதியர்,அதியன் போன்ற விடயங்களை கூறுகின்றன அல்லவா?
அதுபோன்று பல இடங்களில் பாண்டியன் நெடுஞ்செழியன் கணி நந்தாசிரிய வியக்கனுக்கு வதிவிடம் அமைத்துக் கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த கணி நந்தாசிரிய கு(த்த)அன் ஓர் சமண சமயத்துறவி, இந்த சமண மதத்தை இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர்கள் வணிகர்கள், அடுத்து ஈழத்து பாண்டியர்கள் அன்றிலிருந்து இவர்கள் (இ)வியக்கர் என விளிக்கப்பட்டார்கள். அடுத்து அவ்வாறல்லாது தமது பூர்வீக மதத்தையே கடைப்பிடித்து ஒழுகியவர்கள் நாகர்கர்கள். நக்கன் என்ற பெயர் சிவனுக்கும் உண்டு, இவ்வாறான
நாக வழிபாட்டுக் கடைப்பிடித்து வந்தோர் நாகர் என விளிக்கப்பட்டார்கள். ஆக இந்த வி(இ)யக்கர்,நாகர் என்போர் ஈழத்து நெறிகளூடாக அறியப்பட்ட பண்டைய ஈழத்து தமிழ் மக்களே! இந்த பிராகிருத மொழி வந்த பின்னால்தான் பருமகன் என்ற தமிழ்ச்சொல் பருமகந் என பிராகிருத அன் விகுதி பெற்றுத் திரிந்தது. பின்பு அதுவுமற்று வெறுமனே பருமக என்ற பொதுப்பாலாகியது. அதேபோன்று மருமான் என்ற சொல்லும் மருமாந் என்ற பிராகிருத அன்விகுதியை பெற்று மறைந்தது.ஆக இந்த மாறுதலுக்கு காரணமாக அமைந்தது பிராகிருத மொழியோடு வந்த சமணமாகும். சமணம் இலங்கையில் பரவுவதற்கு முன்பாக செம்மையான தமிழ் இங்கே இருந்தது என்பதற்கும் பல தூய தமிழ்க் கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன. அவை மணிநாகன் ,சேந்தன் மாறன்,வேள் கண்ணன் மகன் வேள்நாகன்,வேள் நாகன் மகன் வேள் கண்ணன் என மொழிகிறது. அவற்றின் காலம் கி.மு 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டாகும்.அதன் பின்பாக இந்த பிராகிருத மொழியை இலங்கையில் எழுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான எழுத்துருக்களும் அந்த தமிழ் எழுத்துருக்களாகவே அமைந்தன, அதற்குக் காரணமாக அமைந்தது தமிழ் இலங்கையில் பிராகிருத மொழி பரவலுக்கு முன்பாக இருந்தமையே ஆகும். உதாரணமாக ம,ந,ன,க,ள,ழ,ற ,வ ,அ போன்ற ஏராளமான எழுத்துருக்கள் தமிழ் மொழிக்கு உரியவையே.அவற்றைக் கொண்டு எழுத முடியாத பல பிராகிருத சொற்களுக்கு புதிதாக பல எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த முறையை மகத பேரரசர் அசோகரும் கடைப்பிடிக்க எழுந்ததே அசோகனுடைய கல்வெட்டுக்கள் ஆகும். அதற்கு முந்தைய பிராகிருத கல்வெட்டுக்கள்,பானை பொறிப்புக்கள் வடக்கே காணப்படவில்லை, இருக்கும் ஒரிரண்டு கல்வெட்டுக்களும் அசோகனுடைய கூட்டெழுத்து அற்ற ஈழப்பாகத எழுத்துக்களே ஆகும். அவைகூட சமணம் தொடர்பானவை.

Reply all
Reply to author
Forward
0 new messages