
தொடக்க காலத்தில் அச்சில் வந்த தமிழ்நூல்களில் புள்ளியை எல்லா மெய்யெழுத்துகளிலும் இடவில்லை. எங்கே புள்ளியிடவில்லையென்றால் குழப்பம் வருமோ அங்கே மட்டும் இட்டார்கள். அதே போல் புணர்ச்சியையும் எங்கே தேவை என்று கருதினார்களோ அங்கே மட்டும் செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நிறுத்தக்குறிகளைச் சேர்த்தும் இடைவெளிவிட்டும் எழுதியதே பெரிது. ஓலைச்சுவடிகளிலும் செப்பேடுகளிலும் அவை இல்லை. ரகரத்துக்கும் துணைக்காலுக்கும் கூட வேறுபாடு காட்டாமல் அச்சிட்டிருக்கிறார்கள். பாயிரம் என்ற சொல்லைப் பாயிாம என்று அச்சிட்டிருக்கிறார்கள்!!!
====
படத்தில் உள்ளதைச் சந்தி பிரித்துக் கீழே கொடுத்திருக்கிறேன்:
பாயிரம்
ம-௱-௱-ஶ்ரீ-ரிச்சார்ட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச்சங்கத்தின் தலைவராயிருந்த காலத்தில் - தமிழ்ப் படிப்போர் தொடக்கத்திற் படிக்கத் தக்கதோர் கதைத் திரட்டுவாய் என்று ஏவ மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் பல கதைகளை அவ்வாறின்றி ஏற்றவாறு சில இடத்துச் சந்தி புணராமலும் பல இடத்துப் புணர்த்துங் கதாமஞ்சரி என்னும் பெயர் தந்து இவ்வாறு இக்கதை தாண்டவராய முதலியாரால் தொகுக்கப் பட்டது.
====
இடைவெளியோநிறுததககுறியீடுகளோஇலலாமலமெயயெழுததுககுபபுளளியுமஇலலாமலஎழுதினாலுமதமிழைபபடிககமுடியும
சொறறொடரஎஙகேமுடிகிறதுஎனறுமுறறுபபுளளிஇலலாமலுமஓரளவுககுபபுரிநதுகொளளமுடியுமஇநதசசொற்றொடரேஅதறகுநலலஎடுததுககாடடு
பழைய கல்வெட்டுகளை இப்படித்தான் பொறித்திருந்தார்கள். தமிழ் தெரியாத மேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரிகள்தாம் அப்படிப் புள்ளியில்லாமல் எழுதிய சொற்களைப் படிக்கத் தடுமாறினார்கள். வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் அதைத்தொடர்ந்துதான் வந்தது. புள்ளி ஏற்கனவே தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் மிகவும் அரிதாகவே காணப்பட்டது.
ஆங்கிலத்தையும் இப்படி எழுதினால் படிக்க முடியும் என்ற கூற்றை ஆராய்ந்து பார்த்தேன்.
IamtestingthatinanotherthreadPleasecheckthatIthinkyoucanwriteamultipagesentenceinGermanwheretheverbmaycomeafterthreepages
படிக்கலாம். ஆனால், தமிழைப்போல் எளிதல்ல.
--