அந்தப் பொம்மைகள் இனி எப்போதும் பேசும்? - சி. ஸ்ரீராமுலு

11 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 31, 2026, 10:56:15 AM (yesterday) May 31
to மின்தமிழ்
நன்றி:  தீக்கதிர் 
- வண்ணக் கதிர் - ஞாயிறு - 31.5.26

kaaivaanan.jpg

அந்தப் பொம்மைகள் இனி எப்போதும் பேசும்? -  சி. ஸ்ரீராமுலு

“பொம்மைகள் பேசும், மக்கள் விழிப்படைவர் என்று நம்பினார் அவர்.

தன் வாழ்நாள் முழுவதும் சிறிய பொம்மைகளின் குரலில் பெரிய உண்மைகளை ஊர் ஊராகக் கொண்டு சென்றார். மே 23 அன்று அந்தக் குரல் நின்று விட்டது”. தமிழகத்தின் ஆழிப்பேரலை போன்ற துயரம் கலை உலகில் வீசியது.

பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் என்னும் ஒப்பற்ற கலைஞன் இன்று நம்மிடையே இல்லை.

திருச்சி மாவட்டம், பொய்யாமணியில் 1925ஆம் ஆண்டு பிறந்த ந. மா. முத்துக்கூத்தன் ஒரு சாதாரண மனிதராக இருந்தி ருந்தால் கலைவாணன் என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றிருக்காது. தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் உள்ளத்தில் உள்வாங்கிக் கொண்ட அவர், தம்மை ஒரு கலைஞனாக மட்டும் அல்லாமல் சமூக சேவகனாகவும் கண்டார்.

1942ஆம் ஆண்டில் நாடக மேடையில் கால் வைத்த முத்துக்கூத்தன், பராசக்தி, நாடோடி மன்னன் உள்ளிட்ட புகழ் பெற்ற திரைப்படங்களிலும் பங்களித்தார். பல்வேறு திரைப் படப் பாடல்களையும் இயற்றினார்.

தனக்கு மிகுந்த மரியாதை அளித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக, தன் மகனுக்கு ‘கலை வாணன்’ என்று பெயரிட்டார் முத்துக்கூத்தன். அந்தப் பெயர் வெறும் பெயராக மட்டும் நிற்கவில்லை.

அது ஒரு பணிப்பாரம் பரியத்தின் அடையாளமானது. 1957ஆம் ஆண்டு பிறந்த மு.கலைவாணன், தந்தையின் பொம்மலாட்டக் கலை யையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் ஒரே நேரத்தில் பாலுடன் குடித்து வளர்ந்தார். வில்லுப்பாட்டில் விழிப்பொளி தென்தமிழகத்தின் கலை வடிவமான வில்லுப்பாட்டை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக் கூத்தனையே சாரும்.

கலைவாணர் என்.எஸ்.கே. பயன் படுத்திய வில் கருவியை, அவரது துணைவியாரிடமிருந்து அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட முத்துக்கூத்தன், அக்கரு வியில் புத்துயிர் ஊட்டினார். பெரியாருள் பெரியார்’ என்னும் தலைப்பில் தந்தை பெரியாரின் வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கிய முத்துக்கூத்தன், அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கருத்து களை இந்தக் கலை வடிவத்தின் மூலம் ஊர் ஊராக விதைத்தார்.

1972ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதை பெற்றார்.

கொள்கையில் ஒரு போதும் சாயாது வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவரை சமகாலக் கவிஞர் மலர்மகன், ‘சாயாத கொடிமரம், சரியாத கொள் கைக் குன்று’ என்று போற்றினார். தந்தையின் தடத்தில் பொம்மலாட்டக் கலையை தன் வாழ்நாள் தொழிலாகவும், சமூகப் பணியாகவும் தேர்ந் தெடுத்த கலைவாணன், வழக்கமான புராணக் கதைகளை பொம்மலாட்டத்தில் ஆடவில்லை.

மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் காப்பு, தடய அறிவி யல், மக்கள் நலவாழ்வு என்று கருத்துக்களை கலையின் குரலில் பேசினார். பாவேந்தர் பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’ நாடகத்தையும் பொம்ம லாட்ட வடிவில் கொண்டு வந்தார்.

சுனாமிக்காலத்தில் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தமிழகக் கடற் கரையை தகர்த்தபோது, கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் கரை யோர மக்கள் கண்ணீரில் மூழ்கி நின்றார்கள்.

அந்த நேரத்தில் கலை வாணன், தன் பொம்மலாட் டக் குழுவுடன் கிராமங்கள் தோறும் சென்றார். பொம் மைகளின் குரல்களில் நகைச்சுவையும் நம்பிக் கையும் கலைந்து, துயரில் வாடிய மக்களுக்கு மன தின் வலியைப் போக் கினார். கலை என்பது கருத்து மட்டுமல்ல, மனித உள்ளத்தின் மருந்தும் என்று காட்டினார் அவர்.

எல்லையில்லா கலை பொம்மலாட்டத்தை தமிழகத்தின் எல்லைகளில் நிறுத்திக் கொள்ளவில்லை

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை வரை சென்றார். அங்குள்ள தமிழ் தொழிலாளர்களுக்கு கலை வழியில் தோளைத் தட்டி ஊக்கம் கொடுத்தார்.

சென்னை பொதிகை தொலைக்காட்சியில் 200-க்கும் மேற் பட்ட நிகழ்ச்சிகளும், ‘கலை மாமா’ என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் 90-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் வழங் கிய அவர், ஆசிரியர்களுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு அறுநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும் நடத்தினார்.

இவை எல்லாம் வணிக நோக்கில் அல்ல, அர்ப்பணிப்பின் வெளிப் பாடாக.

நவீன ஊடகங்களின் வேகத்தில் பொம்மலாட்டமும் வில்லுப்பாட்டும் மெல்ல மறைந்து வருகின்றன என்று கலை வாணன் வலியுற்றார். அந்த வலியை வேதனையாக வைத்துக்கொள்ளவில்லை, செயலாக மாற்றினார்.

‘கலை அறப்பேரவை’ மற்றும் ‘கலைவாணன் பொம்மலாட்டக் கலைக்குழு’ என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கி, தொடர்ந்து புதிய தலைமுறையினருக்கு இக்கலைகளை கற்றுக் கொடுத்தார்.

அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். த

மிழர் மரபு, தமிழ்ப் பண்பாடு, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை என்று பல்வேறு தலைப்புகளில் பொம்மலாட்டம் நடத்தி வந்த கலைவாணன், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் உயரிய ‘கலைமாமணி’ விருதை பெற்றார்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருது கிடைத்த அந்த அரிய பெருமை, இந்தத் தந்தை-மகன் கூட்டுத் தொண்டின் உயர்வை உலகுக்கு சாற்றியது.

விருதுகளை விட மேலான வரலாறு இலக்கிய வீதி அமைப்பு வழங்கிய சிறந்த பொம்ம லாட்டக் கலைஞர் விருது (1998), தாராபாரதி அறக்கட்ட ளையின் ‘பல்கலை வித்தகர்’ விருது (2002), ‘கலை ஞாயிறு’ விருது (2010), தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’ (2015) என்று பல விருதுகள் கலைவாணனை கவுரவித்தன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஒரு லட்சம் ரூபாயுடன் ‘கலைஞர் பொற்கிழி விருதை’ வழங்கியது (2004). மேலும், பள்ளி மாணவர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட பகுத்தறிவுச் சிந்தனை.

ஆழிப்பேரலை பாதிக்கப்பட்ட மனிதனின் உதட்டில் மலர்ந்த புன்னகை.

இவற்றை எந்த அரசும் கொடுக்க முடியாது. தமிழ் கலை வரலாற்றில் தந்தையும் மகனும் ஒரே கலை வடிவில் பணியாற்றி, இரண்டு தலைமுறை மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கிய வரலாறு மிகவும் அரிதானது. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டாலும் பொம்மலாட்டத்தாலும் விதைத்த அறிவு விதைகளை, அவரது மகன் பொம்மலாட்டக் கலை மூலம் தொடர்ந்து பயிரிட்டு வளர்த்தார்.

கலைஞன் மறைவதில்லை. அவன் விட்டுச் சென்ற கலையில் வாழ்கிறான். தந்தை முத்துக்கூத்தனின் வில்லுப் பாட்டும் மகன் கலைவாணனின் பேசும் பொம்மைகளும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்..



Reply all
Reply to author
Forward
0 new messages