பெரியாரியம்

165 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 13, 2024, 11:27:29 PMApr 13
to மின்தமிழ்
பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்
 
தொ.பரமசிவன்

14 ஜூன் 2012

அண்மைக் காலமாகத் தமிழ் வாசகரிடமிருந்து பரவலாக வருகின்ற கேள்வி ஒன்று. “அது எப்படி, பெரியாரையும், பெரியாரியலையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாட்டார் தெய்வங்களைக் கொண்டாட முடிகின்றது?” இந்தக் கேள்வி, ஒரு புறம் சிந்தனையுணர்வோடும் மறுபுறம் கேலியாகவும் கேட்கப்படுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
periyaar tho pa.png
பெரியார் 1917 முதல் 1973 வரை தன்னுடைய எழுத்தாலும், பேச்சாலும் தன் சிந்தனையில், ‘சரி’ என்று தோன்றியவற்றை எப்பொழுதும் எளிய மக்களின் மத்தியில் நின்று கொண்டு முரட்டுத்தனமான பேச்சாலும் எழுத்தாலும் முன்வைத்தவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக முளைத்தெழுந்த எளிய மக்களின் கோபத்தின் வெளிப்பாடு அவர். அறிவாளிகளின் கூட்டத்தினையும், புத்தகத்தினையும் பின்னணியாக வைத்துக் கொண்டவர் அல்லர், அவர். இதுவே அவரது மிகப் பெரிய வலிமையாகும். இலக்கு நோக்கிய தன் பயணத்தில் சில கட்டத்தில் எதிரிகளையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டவர் அவர்.

‘பெரியாரியம்’ என்று நாம் வகைப்படுத்துகின்ற சிந்தனை மரபு பெரியாருக்கு முன்னரே தொடங்கிய ஒன்று. அது அவருக்குப் பின்னரும் தொடருவதாகும். ஒரு கலகமரபின் பேராளுமையாக அமைந்த காரணத்தாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த அவரது செயல்பாடுகள் நம் கண்முன் நிகழ்ந்தவை என்பதாலும் இச்சிந்தனை மரபினைப் ‘பெரியாரியம்’ என்கிறோம்.

இந்தச் சிந்தனை மரபினால் நெடும்பரப்பாகவும் குறுக்குவெட்டாகவும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமூக அசைவுகளை நாம் இழை இழையாக அவதானிக்க வேண்டும். ‘காலனிய மரபின் எதிர் வினையாகப் பாரதியார் உருவானார்’, என்றால், ‘இந்து தேசியத்தின் எதிர்வினையாகப் பெரியார் உருவானார்.’ ஆனால் அவரது பேச்சும், செயல்பாடுகளும் ‘இந்து தேசியம்’, ‘இந்திய தேசியம்’ என்ற இரண்டு எல்லைகளையும் தாண்டி மனித குல விடுதலைக்கான பயணமாக விளங்கின. அதிகாரக் குவிமையத்தைத் தகர்ப்பதற்காக அவர் நடத்திய மாநாடுகளில் பல ‘இல்லாதார்’ மாநாடுகளாகவே அமைந்தன. அல்லாதார் என்பது அவரது அகராதியில் ‘அடிமைப்பட்ட மக்களின் பெரும் திரளாகும்’.

அவர்களை நோக்கிய அவரது கண்டிப்பில் நோதலும் இருந்தது; நோகாமையும் இருந்தது. ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று பேசிய வாயும் அவருடையதே; தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செய்த கையும் அவருடையதே. கோயில்களை ‘குச்சுக்காரி’ வீடு என்று சொன்னதும் அவர் தான். கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் அவரால் தான் முன்னெடுக்க முடிந்தது. கலை இலக்கியம் பற்றி உயர்ந்த எண்ணம் எதுவும் அவருக்குக் கிடையாது. அதே நேரத்தில் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதிக்கு அவர் முன்னுரையும் எழுதினார். அண்ணாவின் நாடகங்களையும் பாராட்டினார். இதன் உண்மையான பொருள் என்னவென்றால், ‘அல்லாதார்’ எனப்படும் எளிய மக்களின் சமூக விடுதலைக்காக அவர்களோடும் அவர்களது சமூக அசைவுகளோடும் அவர் சமரசம் செய்து கொண்டார் என்பதேயாகும்.

நாட்டார் தெய்வங்களைக் கொண்டாடலாமா? என்று கேள்வி கேட்பவர்கள் ஒன்றை நினைத்துப் பாருங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை இந்துத்துவ சக்திகளும் ஆதரித்தன; கி.வீரமணியும் ஆதரித்தார். இதனை எப்படிப் பார்ப்பது? இது ஒரு அரசியல்முரண் அல்லாமல் பண்பாட்டு முரண் ஆகும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் பெரியாரது நிலைபாடு என்னவாக இருந்திருக்கும்? “பெரிய கோயில்களில் யாகங்களை நிறுத்துங்கள், அனைவரையும் கருவறைக்குள் நுழைய அனுமதியுங்கள், அதற்கப்புறம் ‘உயிர்ப்பலித் தடை’ பற்றி யோசிக்கலாம்” என்று தான் அவர் சொல்லியருப்பார். ஏனென்றால் பெரியார் உடனடித் தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்.

முதலில் பண்பாட்டளவில் நாட்டார் தெய்வங்கள் எனப்படும் தெய்வங்களுக்கும் சிவன், பார்வதி, திருமால், பிரம்மா, சுப்பிரமணியன் என்று அறியப்பட்ட ‘மேலோர்’ தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கொஞ்சம் ‘தள்ளி’ நின்று புரிந்து கொள்ள முயல வேண்டும். இல்லையென்றால் சமகால இதழ்கள் ஊட்ட முயலும் பண்பாட்டுத் தவறுகளையும் முட்டாள்தனமான திரிபுகளையும் நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.

‘நாட்டார் தெய்வங்கள்’ என்ற சொல்லாட்சி, ஓரளவு வாசிப்புப் பழக்கம் உடையவர்களிடத்திலும் இடதுசாரி இயக்கச்சார்பு உடையவர்களிடத்திலும் உடனடியாகச் ‘சாமியாட்டம், குருதிப்பலி, பலிவடிவங்கள்’ ஆகிய படங்களாகவே விரிகின்றது. பொத்தாம் பொதுவான அல்லது மேலோட்டமான இந்தக் கணிப்புக்கள் அனைத்துமே தவறானவை. நாட்டார் தெய்வங்கள் தத்துவ ‘விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத் தன்மையும் உயிர்ப்பும் உடையன. சிவன், திருமால், விநாயகர் போல ‘வடவேங்கடம் தென்குமரி’ வரை ஒத்ததன்மை அவற்றுக்கில்லை. சென்னை, செங்கல்பட்டு வட்டங்களில் ‘காளன்’, ஆற்காட்டுப் பகுதியில் ‘பொன்னியம்மன்’, வேலூர் திருவண்ணாமலைப் பகுதிகளில் ‘போத்தி ராஜா’, கொங்கு நாட்டில் ‘அண்ணன்மார்’, திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் ‘சுடலைமாடனும் இசக்கியம்மனும்’ என்று, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் ஆகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுபவை. இந்தப் ‘பன்முகத் தன்மை’ என்பது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாகும்.

‘நிறுவனம்’ என்பதே அதிகாரச் சார்புடையது. எனவே அங்கு ‘மேல் – கீழ்’ என்ற வரிசை முறையுடன் தான் அதிகாரம் செயற்படத் தொடங்குகின்றது. அதிகாரத்தை நிலைப்படுத்த விரும்புகின்ற நிறுவனச் சமயங்களுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் உண்டு. முதலாவது ஒரு புனித நூல் (வேதம், தேவாரம், பைபிள், குர் ஆன்) இரண்டாவதாக விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூசை முறை (கிரியாசூத்திரம், காரணுகாரிய ஆகமங்கள், பாஞ்சராத்திர – வைகாசன ஆகமங்கள், ஷியா – சன்னி – மாலிகி – அன்பலி விளக்கங்கள்) மூன்றாவதாகப் புனித இருப்பிடங்கள் (கைலாசம், பரமபதம், காசி, பெத்லேம், மெக்கா) ஆகியவற்றோடு மற்றொரு கூறும் இதில் அடங்கியுள்ளது. அதாவது, கடவுளுக்கும் அடியவர்களுக்கும் நடுவிலே நிற்கும் புரோகிதர் (Clergy) எனப்படும் ஒரு மனிதர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மேற்குறித்த இலக்கணத்திலிருந்து விலகி நிற்பவை அல்லது அவ்வகையான கட்டுகளுக்குள் அடங்க மறுப்பவை.

நாட்டார் தெய்வங்கள் நிறுவனச் சார்பற்றவை. எடுத்துக்காட்டாக, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஊர்தோறும் வழிபடப் பெறும் சுடலைமாடன், இசக்கி ஆகிய தெய்வங்களுக்கு நிறுவனத் தலைமை என்று ஏதும் இல்லை. ஆறுமுகமங்கலம் (தூத்துக்குடி மாவட்டம்) சுடலை, ஊர்க்காட்டுச் (நெல்லை மாவட்டம்) சுடலை, முப்பந்தல் (குமரி மாவட்டம்) இசக்கி என்று சிறப்பிடங்கள் உண்டு. அவ்வளவே! ஒருங்கிணைந்த (Integrated) ஒரு வழிபாட்டு முறைமை இத்தெய்வங்களுக்கு இல்லை. இவை அனைத்தும் வட்டாரச் சார்புடைய மாற்றங்களை உட்கொண்டவை. இத்தனை தொலைவு போக வேண்டாம். மாரியம்மனை எடுத்துக் கொள்வோம்.

‘மாரி’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘மழை’ என்பதே பொருளாகும் மழையைக் கட்டுப்படுத்தும் தெய்வம் (அதிதேவதை) மாரியம்மன் ஆகும். இருக்கன்குடி (சாத்தூர் அருகே), வண்டியூர் (மதுரை மாவட்டம்), சமயபுரம் (திருச்சிக்கு அருகே), பண்ணாரி (கோவை) என மாரியம்மன் குடிகொண்ட ‘சிறப்பிடங்கள்’ உண்டே தவிர மையமான ஒரு தலைமையிடம் (மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது போல) இந்த வழிபாட்டு நெறிக்குக் (Cult) கிடையாது. இவ்வாறு பல்வேறு வகையான வழிபாட்டு நெறிகள் தமிழ்ச் சமூகத்திலும் – பொதுவாக இந்தியச் சமூகத்திலும் உள்ளன. இவற்றைத் தெய்வ நம்பிக்கையோடு கூடிய வழிபாட்டு நெறிகள் (Cult) என்று அழைக்கலாமே தவிர மதம் என்ற கட்டுக்குள் அடக்கவியலாது. எனவே அவை அரசதிகாரச் சார்புடையன அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் சாதிக்கயிற்றால் கட்டப்பட்டவைதானே? என்பது அடுத்த கேள்வியாகும். நாட்டார் தெய்வங்களின் வகைப்பாடுகள் பல. ஒரு சாதியினர் மட்டும் வழிபடும் தெய்வங்கள் சில உண்டு. அவை எல்லா ஊரிலும் அதே சாதியினரால் வழிபடப் பெறுவதில்லை. எனவே ஒரு சாதிக்குரிய தெய்வம் என்பது அந்த ஊரில், அந்த இடத்தில் (கோயில் என்று சொல்ல வழியில்லை) மட்டும் ஒரு சாதியினர் வழிபடும் தெய்வமாகும். அந்தத் தெய்வத்தின் ‘அருளாட்சி எல்லை’ அந்த ஊரெல்லை அளவே. அது மட்டுமன்று. ஒரு சாதிக்குரிய தெய்வத்தைப் பிறர் கும்பிட முன்வந்தால் அந்த முதற்சாதிக்காரர்கள் ‘நீ கும்பிடக் கூடாது’ என்று தடுப்பதில்லை. சாதிய முரண்பாடுகள் தலைதூக்கும்போதுகூட அந்தந்த சாதிக்குரிய தெய்வங்கள் முரண்படுவதில்லை. மாறாக ஒருவர் தெய்வத்தை மற்றவர்கள் மதிக்காவிட்டாலும் விலகிப் போய்விடுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களை பிற சாதியினர் வழிபடுவது என்பதும் தமிழ்நாடு முழுவதும் காணக்கூடிய ஒரு காட்சியேயாகும்.

ஒரே சாதிக்குரிய கோயில்களில் காணக்கூடிய மற்றொரு நடைமுறை, அக்கோயிலில் சாமியைத் தொட்டுப் பூசனை செய்யும் பூசாரிகளும் சாமியாடிகளும் அதே சாதியினரே ஆவர். பூசாரிக்கும் சாமியாடிக்கும் தரப்படும் ‘புனிதம் சார்ந்த மரியாதை’ (அல்லது ஆன்மீக அதிகாரம்) என்பது திருவிழா நடைபெறும் ஒன்றிரண்டு நாட்களிலும், சாமியாடும் நேரத்திலும் மட்டுமே பின்னர் அனைவரும் இயல்பான சமத்தன்மையுடன் உறவாட வேண்டயவர்களே.

ஊர்த் தெய்வங்கள் என்பன அவ்வூரில் வாழும் நான்கைந்து சாதிகளுக்கும் பொதுவானவை. ஊர்த்தெய்வங்கள் தாம் வாழும் ஊரின் சாதி அதிகார அமைப்பை ‘மேல்சாதியார்’ பேணிக் கொள்வதற்கு ஒரு கருவியாகவும் காரணியாகவும் அமைந்துள்ளன என்பது உண்மையே. ஊர்த் தெய்வக் கோவில்களில் சாதிய மேலாண்மை மூன்று நிலைகளில் செயல்படுகின்றது. கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பின் மீதான உரிமை, கோயில் நிருவாக உரிமை, கோயில் மரியாதை ஆக மூன்று நிலைகளில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியார் அவற்றைத் தங்கள் முற்றுரிமையாகக் கொள்கின்றனர். ஊர்த் தெய்வ வழிபாட்டு நெறிகளில் பிராமணரும் வேளாளரும் பெரும்பாலும் இருப்பதில்லை; அல்லது ஒதுங்கிக் கொள்கின்றனர். (குருதிப் பலியும் சாமியாட்டமும் அவர்களுக்கு அன்னியமானவை).

ஊர்த் தெய்வக் கோயில்களுக்கான வரியினை ‘ஊர்ச்சமூகம்’ பெறுவதில்லை. ஊர் என்ற அளவில் ‘வரி’ என்பது ‘சம உரிமை’யின் அடையாளமாகும். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து வரியினைப் பெறாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ‘மரபு’? ‘வழிவழி வழக்கம்’, என்ற பெயர்களில் ஊர்த்திருவிழாவிற்குரிய அவர்களின் உடலுழைப்பினைக் கட்டாயப்படுத்தினர். (சில ஊர்களில் இன்னும் நிலைமை இதுவே. 1832 இல் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகத்திற்கு எதிராகச் சாதி ஆதிக்கம் இந்த இடத்தில் தான் முதன் முதலாகப் ‘போர்க்கோலம்’ பூண்டது. அதாவது ஒரு பறையர் வகுப்பினர் கிறித்துவராக மாறிய பிறகும் ஊர்த்தெய்வக் (கிறித்துவம் அல்லாத) கோயில் திருவிழாக்களின் போது அவர் தன்னுடைய சுத்திகரிக்கும் பணியினைக் கூலியில்லாமல் செய்தாக வேண்டும். இதன் காரணமாகவே தமிழகத்தின் பல ஊர்களில் சாதி முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கின.

இந்த முரண்பாடுகள் கூர்மையடையவில்லை. இதற்கான காரணத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘இந்த இடம் மட்டுமே இந்தத் தெய்வத்தின் தலைமையிடம்’ என்பது போல நாட்டார் தெய்வங்கள் ஆன்மீக அதிகாரத்தின் குவிமையங்களை (காஞ்சி மடம்) ஏற்றுக் கொள்பவையல்ல. இதற்கு மாற்றான சனநாயக் கூறு ஒன்றினை நாட்டார் தெய்வங்கள் பெருமித உணர்வுடன் வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

சாதிய அடுக்குமுறை காரணமாகவோ அல்லது உள்ளூர்க் காரணங்களாலோ ஒரு தெய்வத்தை வழிபடத் தடை ஏற்படுத்தப்படும்போது நாட்டார் தெய்வ வழிபாட்டு நெறி அதற்கு ஒரு மாற்று வழியினை முன்னிறுத்துகின்றது. அதாவது, எந்தத் தெய்வத்தின் கோயிலில் இருந்து யாராயினும் ‘பிடிமண்’ எடுத்துக் கொண்டு சென்று, தன்னிடத்தில் அந்தத் தெய்வத்துக்கு ஒரு கோயிலை உருவாக்கிக் கொள்ளலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது. கேரளத்தில் நாராயண குரு ஈழவர்க்கான சிவன் கோயிலை உருவாக்கியபோது அவரை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலில் அவ்வாறு யாரும் முன்வரவில்லை வந்தாலும் 75 ஆண்டுக்கு முன்னான சூழலில் வெற்றி பெறவும் இயலாது. பின்னாட்களில் (1980-களில்) பங்காரு அடிகளார் அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். அவரது வெற்றி தனியான ஆய்வுக்குரியது.

நாட்டார் வழிபாட்டில் ஊர்த்தெய்வ வழிபாட்டில் மட்டும் சாதிய அதிகாரம் பிரதிபலிக்கின்றது என்பதை மறுக்க இயலாது. இது சமூக அதிகாரமே தவிரப் பண்பாட்டு அதிகாரம் அல்ல. ‘பிடிமண்’ கோயில்கள் என்பன பெரும்பாலும் சாதிய அதிகாரத்தோடு மோதி வெல்ல முடியாமல் இடம் பெயர்ந்த மக்கள் உருவாக்கிக் கொண்ட பண்பாட்டுப் பாதுகாப்பு அரணாகும். (கண்டதேவி சொர்ணபுரீசுவரர் கோயிலும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலும் ஆகம ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட அதாவது குருதிப்பலி பெறாத பெருந்தெய்வக் கோயில்களாகும். அவை நாட்டார் தெய்வங்கள் அல்ல) சாதிய அதிகாரம் என்பது உற்பத்தி உறவுகளிலும் சமூகத்தின் பிற அசைவுகளிலும் மூர்க்கமாகச் செயல்படுவது போல நாட்டார் தெய்வ வழிபாட்டில் செயல்பட இயலாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாதிய ஆதிக்கத்தால் கொலை செய்யப்பட்ட ஒருவன் தெய்வமாக்கப்பட்டால் அவன் இரண்டு சாதியாராலும் வணங்கப்படுவான். அவனைக் கொன்ற ஆதிக்க சாதி ஆவி அச்சம் காரணமாகவும் கொலை செய்யப்பட்டவனின் சாதியினர் பாதுகாப்புக் கருதியும் ஒரே தெய்வத்தை வழிபடுவதையும் கள ஆய்வில் கண்டறியலாம்.

எளிய மக்கள் திரளில் பெண்களின் விடுதலைத் தாகம் நாட்டார் தெய்வ வழிபாட்டில் வெளிப்படுகின்றது. நாட்டார் தெய்வங்களில் 90%-க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீரு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாட்டார் தெய்வங்கள் எவையும் ‘முன்னே வந்து’ வரம் தரும் தெய்வங்கள் அல்ல. ‘பின்னே நின்று’ பாதுகாப்புத்தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும் அறுவடைக் காலத்திலும் கண்மாய்க் கரையிலும் ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. அவை நுகர்வுக்காக மட்டும் பிறந்தவை அல்ல. உற்பத்தி சார்ந்த பண்பாட்டோடு பிறந்தவை.

பெரியாரைப் புரிந்து கொள்வது போலவே நாட்டார் தெய்வங்கள் ‘மதம்’ என்ற கட்டுக்குள் அடங்குவதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ‘மதத்திலிருந்து மனிதனை விடுதலை செய்வது’, என்ற முழக்கம் நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்குப் பொருந்தாது. மேலோர் மரபினால் விலக்கப்பட்ட கள்ளும். கறியும் நாட்டார் தெய்வங்களால் கொண்டாடப்படுபவை. உற்பத்தி உறவுகளோடு இரண்டறக் கலந்தவை. எனவே நகர்ப்புறம் சார்ந்த அறிவு ஜீவிகள் தவிர பாரம்பரியமான முறையில் பொருள் உற்பத்தி செய்யும் மனிதரைத் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய இயலாது. சோவியத் ஒன்றியத்திலும் சீனத்திலும் மாபெரும் புரட்சிகளுக்குப் பின்னரும் கூட மக்களை மதத்திலிருந்து மட்டுமே விடுதலை செய்ய முடிந்தது. தமிழ்நாட்டில் பெரியாரின் ஐம்பதாண்டுப் பணியும் அவ்வாறே செய்ய முடிந்தது. தமிழ்நாட்டுப் பெண்கள் (குறைந்தது) எண்பது விழுக்காட்டிற்கு மேல் சனநாயக உணர்வுடன் கூடிய நாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள். எனவே தான் நாகூரும் வேளாங்கன்னியும் சமயபுரமும் அவர்களுக்கு வெவ்வேறான தெய்வங்களாகத் தெரியவில்லை. அவர்களை சடங்கியல் போர்வையில் ஊடகங்கள் ‘இந்து மதத்திற்குள்’ இழுத்து வர முயலுகின்றன. இதற்கான எதிர்க்குரல் என்பது நாட்டார் தெய்வங்களை அங்கீகரிப்பதாகவே இருக்க முடியும்.

எல்லாவற்றையும் விட மேலாக, நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் குறிப்பாகத் தாய்த் தெய்வங்கள் தம் மக்களின் காப்பிற்காக ஆயுதமேந்தி போராடும் குணம் உடையன. தம் மக்களைக் காப்பதற்காகவே மகிசாசுரன் (எருமைத்தலை அரக்கன்) என்னும் ஆணைத் தாய்த்தெய்வம் ஆண்டுதோறும் போரிட்டு அழிக்கின்றது. இதன் வழியாக இருத்தலுக்கும் வாழ்வதற்குமான போராட்ட உணர்வை நாட்டார் தெய்வங்கள் பண்பாட்டுத் தளத்தில் பேணிக்காத்து வருகின்றன.

பெரியாரின் வாழ்வும் நோக்கமும் தன் மக்களின் இருத்தலுக்கும் கண்ணியமான வாழ்விற்குமான போராட்டமாக இருந்தன. எனவே தான் ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து ஆண்டிற்கொருமுறை உயிர் கொண்டெழும் நாட்டார் தெய்வங்களை அவர் எதிர் கொள்ளவில்லை. மாறாக அதிகார மையமாகிய கோயில்களையும் அதனை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்.

இறுதியாக பெரியாரைப் புரிந்து கொள்ள முயலுகின்றவர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. குருதிப் பலியும் சாமியாட்டமும் கூட மூட நம்பிக்கைகள்தானே? என்பதே அந்தக் கேள்வி. இப்படி திருப்பிக் கேட்கலாம். ‘நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையே என்ன இருக்கின்றது? ஏதோ ஒரு வகையில் நுண் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் இருக்கின்றன என்பதே நமது பதிலாகும். இந்தப் பதிலைக் கொண்டுதான் பெரியாரையும், மக்கள் திரளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

(நன்றி: 'தெய்வம் என்பதோர்' நூல், யாதுமாகி பதிப்பகம், திருநெல்வேலி. தொடர்புக்கு - yadh...@yahoo.com)
ref - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/20095-2012-06-14-17-03-20

தேமொழி

unread,
Apr 27, 2024, 1:07:11 AMApr 27
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/photo/?fbid=1796257850866438&set=a.207043909787848
1935-ல் தவத்திரு மறைமலை அடிகளார் எழுதிய ‘அறிவுரைக்கொத்து’ எனும் நூலைப் பல்கலைக்கழகத்தார் பி.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைத்தனர். அதில் சில குறைகள் இருப்பதாகச் சிலர் கூக்குரலிட்டனர். சிலர் அதைப் பாடநூல் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று செய்தித்தாள்களில் எழுதினர். எதிர்ப்புக் கட்டுரைகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. இந்நிலையில் பெரியார் அவர்கள் இவ்விவாத அரங்கு குறித்துத் தம் ‘குடிஅர’சிலும் ‘பகுத்தறி’விலும் பல கட்டுரைகள் எழுதினார்கள். நாடெங்கும் சுற்றிச் சொற்பொழிவாற்றினார்கள். இறுதியில் அந்நூல் பாடநூலாகவே மாணவரால் படித்து முடிக்கப்பட்டது. பெரியாருக்கும் மறைமலை அடிகளாருக்கும் சமயத்துறையில் கருத்து வேறுபாடு இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாது அவரைத் தாங்கிப் போர் முழக்கம் செய்தமை, 
பெரியாருக்குத் தமிழின் பாலுள்ள அளப்பரிய பற்றினை நன்கு விளக்குகிறது.”

– மா.இராசமாணிக்கனார்

நன்றி: Madras review

தேமொழி

unread,
May 1, 2024, 6:22:48 AMMay 1
to மின்தமிழ்
 மே நாள் பற்றி தந்தை பெரியார்  

காரைக்குடியில் நடந்த மே நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் உரையிலிருந்து சில பகுதிகள்:
"மே தினமென்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசத்திலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷியாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரேவிதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் உள்ள தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்று ரஷியாவில் மே தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையைப் பொருத்ததாகும். எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் பிரதான வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில், சிறப்பாக சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மேதினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும். அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

மேலை நாடுகளில் இருக்கும் மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகிறது

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில்நிலையையும் செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்கள் பிறவி நிலையையே பிரதானமாய் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தபட்டும், அடிமைப்படுத்தபட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும்.

ஏனெனில் இந்தியாவில் தொழிலாளி என்ற ஜாதியும் அடிமை என்ற ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு வருகிறது. நான்காவது வர்ணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியினருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைக்குக் கட்டுப்பட்டவன் ... இது இன்றைய தினம் நிர்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது ...

"இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரார் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும்தான் முறையே சொல்லுகின்றோம்.

"ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள் ...

இந்து மக்களில் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலை நிறுத்தவே ஏற்பட்டதாகும். இந்தக் காரணத்தினாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லுகிறேன் ... "

"இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றுவதை முக்கியமாய்க் கொண்டிருப்பதால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒரு நாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பதல்லாமல் இந்த தேசியம் தொழிலாளி முதலாளித்தன்மை என்றும் நிலைத்திருக்கவே
பந்தோபஸ்து செய்து வருகிறது என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன் ...

"தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இது வெறும் பிறவி
காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றும் இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கபட்டாக வேண்டும். இதற்கும் பெண் மக்கள் பெரிய புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர்
தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

"நிற்க, இந்த தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல கொண்டாட வேண்டும் .... தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள், திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மையையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றும் முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்தவர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்துக்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுமயரியாதை அற்ற தன்மை என்பவைகள் அல்ல.

பெண்களையும் வேலை செய்யும் ஆண்களையும் சிறிதும் ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைதான் சிறிது ஓய்வையும் சந்தோஷமும் கொடுக்கின்றன. தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல பெண்ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரே தாக்கப்படுவதையும் அவர்கள் சகிக்கிறார்கள்.

எனவே நாம் பெண்களுக்கும் தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் பகுத்தறிவையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் பேசினாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை (மே நாள் போன்றவற்றை) கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால்
மத சம்பந்தமான பண்டிகை உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்". 
(குடி அரசு, 12.05.1935)

நன்றி : மின்னம்பலம்
https://minnambalam.com/political-news/thanthai-periyar-e-v-ramasamy-about-may-day-by-sv-rajadurai-article-in-tamil/

தேமொழி

unread,
May 1, 2024, 11:53:49 PMMay 1
to மின்தமிழ்
periyar.jpeg
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,
''குடிஅரசு'' நூற்றாண்டு (1925- 2024) தொடக்கம்

1925 - 'குடிஅரசு' ஏடு தொடக்கம் - 02.05.1925
     "தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசில் வெளியிட்டு என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை."
— தந்தை பெரியார்
---
2-5-2024   -  பெரியாராண்டு - 145
---
THFi தளத்தில் . . .
குடி அரசு
“பெரியாரின் எழுத்தும் பேச்சும்” குடி அரசு தொகுப்பு
https://tamilheritage.org/kudi-arasu/

தேமொழி

unread,
May 1, 2024, 11:56:28 PMMay 1
to மின்தமிழ்
குடி அரசு
“பெரியாரின் எழுத்தும் பேச்சும்” குடி அரசு தொகுப்பு

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப் படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.

குறிப்பாக; இவற்றில் 1925 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில்  சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகள் சுயமரியாதை இயக்கத்தின் முழுக் கவனத்திலிருந்த காலகட்டம் மாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிட  பெரியார் திராவிடர் கழகம்  எடுத்த முயற்சியில் உருவானவை   “பெரியாரின் எழுத்தும் பேச்சும்” என்ற தலைப்பில் குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகளின்  27 தொகுப்பு நூல்கள்.  இவை குடியரசு இதழ்களின் தொகுப்பு அன்று, குடியரசு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்ப.  இவை சென்ற நூற்றாண்டு தமிழகத்தின் சமூக மாற்றங்களை அறிய உதவும் கருவூலமாகும்.

குடி அரசு – 1925 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-1; பகுதி 1-அறிமுகம்)

குடி அரசு – 1925 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-1; பகுதி 2)

குடி அரசு – 1926-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-2)

குடி அரசு – 1926-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-3)

குடி அரசு – 1927-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-4)

குடி அரசு – 1927-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-5)

குடி அரசு – 1928-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-6)

குடி அரசு – 1928-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-7)

குடி அரசு – 1929-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-8)

குடி அரசு – 1929-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-9)

குடி அரசு – 1930-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-10)

குடி அரசு – 1930-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-11)

குடி அரசு – 1931-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-12)

குடி அரசு – 1931-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-13)

குடி அரசு – 1932-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-14)

குடி அரசு – 1932-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-15)

குடி அரசு – 1933-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-16)

குடி அரசு – 1933-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-17)

குடி அரசு [புரட்சி] – 1934-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-18)

குடி அரசு [பகுத்தறிவு] – 1934-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-19)

குடி அரசு – 1935-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-20)

குடி அரசு – 1935-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-21)

குடி அரசு – 1936-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-22)

குடி அரசு – 1936-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 23)

குடிஅரசு – 1937-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 24)

குடிஅரசு – 1937-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 25)

குடிஅரசு – 1938-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 26)

குடிஅரசு – 1938-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 27)

இந்த இதழ்களை நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்கள்:
பெரியார் திராவிடர் கழகம்

மின்னாக்கம், மின்னூலாக்கம்: பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் திராவிடர் கழகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!

தேமொழி

unread,
May 3, 2024, 2:43:58 AMMay 3
to மின்தமிழ்
உலகத்தைப் படிக்க வேண்டும். வளர்ச்சியைப் படிக்க வேண்டும் - நம் கண்முன் நடைபெறும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்கும் பள்ளிப் படிப்பு, உத்தியோகத்திற்காகப் பயன்படும் தன்மையில் அமைந்திருக்கிறதே தவிர, மக்கள்அறிவை வளர்க்கக் கூடிய வகையில் அமையவில்லை, நம் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- தந்தை பெரியார்
இன்றைய (மே 3, 2024) பெரியார் நாட்காட்டியில் படித்த கருத்து 

தேமொழி

unread,
May 4, 2024, 6:14:50 PMMay 4
to மின்தமிழ்
நன்றி: SEKAR REPORTER

அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்குகள் அர்த்தமற்றவை!
-கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

BY SEKAR REPORTER · MAY 4, 2024

சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் செல்ல நேர்ந்தது. நான் போன நேரத்தில் கையில் ஒரு குடையும், காலில் பாதக்குறடுகளும் அணிந்து மாப்பிள்ளை காசியாத்திரைக்குப் புறப்பட, அவரைத் தடுத்து நிறுத்த மணப்பெண்ணின் தந்தை முயற்சித்துக் கொண்டிருந்தார்.

நான் மாப்பிள்ளையின் காதில் மெதுவாகச் சொன்னேன், “காசிக்குச் செல்வதற்கு நேரடியாக விமான சேவை இருக்கும்போது எதற்கு இந்தக் கோலம்?” என்று. இது மட்டுமல்ல… காசி யாத்திரைக்குப் பிறகு கன்யாதானம்… அதன் பின்னர் கெட்டி மேளத்துடன் தாலி கட்டுவது… பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் விளையாடும் நலங்கு… இப்படி பல திருமணச் சடங்குகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற விகடன் தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம், இப்படிப்பட்ட திருமணச் சடங்குகள் இருப்பதை பலரும் அந்தத் தொடர் மூலமாக முதல்முறையாக தெரிந்து கொண்டதுதான்.

இந்தச் சடங்குகளையெல்லாம் யார் உருவாக்கினார்கள்… அதில் எந்தச் சடங்கு திருமணத்தை நிரூபிக்க அத்தியாவசியமானது? என்பது பற்றி பல உரையாடல்கள் உள்ளன. ஏனென்றால், இந்தியத் துணைக் கண்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான திருமணச் சடங்குகள், சாதிப் பழக்கவழக்கங்கள், பெரியவர்கள் சொல்லக்கூடிய குடும்ப நடைமுறைகள் என்று ஏராளமான சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கின்றன!

திருமணமும் தீர்ப்பும்…

இந்தப் பின்னணியில், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த விமான ஓட்டிகள் இருவர் எளிமையான முறையில் ‘வேதிக் ஜன கல்யாண சமிதி’ என்ற அமைப்பின் கீழ் தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்பதற்கு பதிலாக, தங்களது திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுக்கிறார். சடங்குகள் இல்லாத அந்தத் திருமணம் 1955-ம் வருடத்திய இந்து திருமண சட்டத்தின்படி செல்லாது என்று அறிவிக்கும்படி கேட்கிறார்.

இந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் புரியும்போது, அதில் அக்னி சாட்சியாக, மணமகனும் மணமகளும் ஏழு அடி நடந்து செல்லவில்லையென்றால் (சப்தபதி) அந்த திருமணம் செல்லாது என்றும், அது திருமணப் பதிவாளரிடம் பதிவு செய்திருந்தாலும் அத்தியாவசிய சடங்குகள் செய்யாததனால் சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றமும் அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும் தங்களது திருமணம் எப்படி நடந்தது என்றும், அதில் உரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவா என்றும், அதிலும் அத்தியாவசியமான அக்னி சாட்சியுடன் சப்தபதி நடைபெற்றதா என்றும் கேள்வி கேட்டுவருகிறார்கள்.

இந்து திருமண சட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அது இயற்றப்பட்ட வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ய முற்பட்டபோது, அவர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த பிரதேசங்களில் திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்துக் கொள்வது போன்றவற்றைப் பற்றி முறையான சட்டங்கள் இல்லாததோடு, ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நடைமுறைகள் இருந்துவந்ததையும் கண்டனர். எனவே, ஹென்றி மேயின் என்பவரை வைத்து இந்துக்களின் நடைமுறைகளை ஒருசேர தொகுக்க முயன்றனர். அவரும் தனக்குத் தெரிந்த வக்கீல் நண்பர்கள் மூலம் இந்து சாஸ்திரத்தின்படியிலான சில நடைமுறைகளைத் தொகுத்து அதுதான் ‘இந்துக்கள் சட்டம்’ என்று கூற முற்பட்டார்.

அந்த முயற்சி நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. எனவே, பலரும் தங்களது சௌகரியத்துக்கு ஏற்பவே நடக்க முயன்றனர்.

அண்ணல் அம்பேத்கரின் முயற்சி…


இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அண்ணல் அம்பேத்கரிடம் இந்து திருமண, வாரிசுரிமை தொடர்பான சட்டத்தைத் தயார் செய்யும் பொறுப்பு பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, முதன்முறையாக இந்துக்களுக்குப் பொதுவான ஒரு வரைவுச் சட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்துக்களின் திருமணம், அதற்கான உறவு முறைகள், வாரிசுரிமை இவற்றைப் பற்றி அச்சட்டம் கருத்தில் கொண்டதோடு முதன்முறையாக ஒரு தாரத் திருமணம், பெண்களுக்கு மணவிலக்கு கோரும் உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அந்த வரைவு சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்து மகா சபையைச் சேர்ந்தவர்களும் காங்கிரசில் இருந்த சில பழமைவாத தலைவர்களும் அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். அது குறித்துப் பேசிய 28 காங்கிரஸ் உறுப்பினர்களில் 23 பேர் அச்சட்ட வரைவைக் கடுமையாக எதிர்த்தனர்.

1947-ல் தொடங்கிய இந்த விவாதம் காங்கிரஸ் கட்சி தலைமையின் பலவீனத்தினால் நான்கு வருடமாகியும் முடிவு பெறாமலேயே இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அந்தச் சட்டமே மரணித்துப்போனது. இதனால் வெறுப்படைந்த டாக்டர் அம்பேத்கர், தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்றுகூட யோசித்தார். நல்வாய்ப்பாக, புதிதாக நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மத சார்பான உரிமை வழங்கப்பட்ட போதும், சமூக சீர்திருத்தம் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

1952 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பண்டித நேரு அரசில் மீண்டும் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர். தான் ஏற்கெனவே தயார்செய்த இந்துக்களுக்கான பொது சட்டத்தை ஒதுக்கிவிட்டு, அதையே இந்து திருமண சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம், இந்து தத்தெடுக்கும் சட்டம், இந்து சிறார்கள் மற்றும் காப்பாளர் சட்டம் என்று நான்கு தனித்தனி சட்டங்களாகத் தயார் செய்தார். அந்த சட்டங்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பினாலும், புதிதாக உருவான நாடாளுமன்றத்தில் நேருவுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தால் அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியாரின் முயற்சி…

இருப்பினும் இந்துக்களுக்கான அந்தச் சட்டங்களில் பல குறைபாடுகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலின வேற்றுமைகள் காணப்பட்டன. ‘இந்துக்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்தாலும், அதற்கு முன்னால் திருமணங்களுக்கான சடங்குகள் நடைபெறவில்லையென்றால், அது செல்லத்தகாத திருமணம்’ என்று கருதப்படும் நிலைதான் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் முயற்சியில் சீர்திருத்தத் திருமணங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி நடைபெற்ற சுயமரியாதை திருமணமொன்றை உயர் நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்துவிட்டது.

எனவே, 1967-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற தி.மு.க தலைவர் பேரறிஞர் அண்ணா, இந்து திருமண சட்டத்தில் பிரிவு 7A என்ற புதிய பிரிவை உருவாக்கினார். சாஸ்திரப்படி சடங்குகள் ஏதுமின்றி நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் இந்து திருமண சட்டப்படி செல்லும் என்றும், அப்படி திருமணம் செய்துகொண்ட மணமக்களை எந்தச் சட்டத்தின் கீழும் தண்டிக்க முடியாது என்றும் அச்சட்டப்பிரிவு அறிவித்தது.

இந்தியாவிலேயே அது போன்ற ஒரு சட்டத்திருத்தம் இன்று வரை எந்த மாநிலத்திலும் இயற்றப்படவில்லை.
சடங்குகள் தவிர்ப்பது மட்டுமன்றி அதிக பொருட்செலவு இல்லாத திருமணங்களாகத்தான் ஆரம்பத்தில் அவை விளங்கின. ஆனால் அது போன்ற சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்பு திருமணங்கள் செய்வதற்கு இதர மாநிலங்களில் எவ்வித ஏற்பாடும் இல்லை. அப்படிப்பட்ட திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ்தான் செய்துகொள்ள முடியும். அதற்கும் கடினமான வரையறைகள் உள்ளன.

இந்துக்களுக்கான பொதுச் சட்டம்?
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்து திருமண சட்ட திருத்தத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. நாகலிங்கம் எதிர் சிவகாமி (2001) என்ற வழக்கில் அச்சட்டப்பிரிவு செல்லும் என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். எனவே, இது போன்ற சட்டப் பாதுகாப்பு உள்ள தமிழ்நாட்டில் சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் பொது சிவில் சட்டத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் பா.ஜ.க., இந்தியா முழுவதும் இந்துக்களுக்கான பொதுச் சட்டத்தை உருவாக்காததோடு, திருமணங்களையும், வாரிசுரிமைப் பிரச்னையையும் சாஸ்திரத்தின் அடிப்படையில் அணுகாமல் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கன்யாதான சடங்கு செய்யாத திருமணம் செல்லும் என்றும் அது சாஸ்திரத்தில் முக்கியமல்ல என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காசியாத்திரை தொடங்கி, கன்யாதானம் என்று விரிந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நலங்கு விளையாட்டுகளுடன் நடக்கும் சடங்குகளில் எது தேவை, எது தேவையில்லை என்று ஒவ்வொன்றாக கூறுவதற்குப் பதிலாக தமிழ்நாட்டின் மாடல் திருத்தத்தை அகில இந்திய சட்டமாக அறிவித்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாது.

மேலும் பாதி திருமணச் சடங்குகள் அக்காலத்தில் மிகுதியாக நடைபெற்ற குழந்தைத் திருமணத்தின்போது குழந்தைகளின் அச்ச வெளிப்பாடுகளை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. கன்யாதானமும்கூட மைனர் பெண் குழந்தையை பெற்றோர் தாரை வார்த்துக் கொடுக்கும் ஏற்பாட்டின் ஒரு வடிவமே.

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?

[04/05, 08:50] K. Chandru Former Judge Of Highcourt: In today’s junior vikatan.
[04/05, 08:58] sekarreporter1: 👍

தேமொழி

unread,
May 6, 2024, 8:21:10 PMMay 6
to மின்தமிழ்
Now In English 

Legally speaking, fire cannot make or break a marriage in Tamil Nadu

K Chandru / TNN / May 6, 2024, 12:03 IST

Read @
http://timesofindia.indiatimes.com/articleshow/109875943.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst


SC Ruling Mandating Seven Steps Around Sacred Fire To Consider Hindu Marriage Valid Does Not Hold Water In State Due To Unique Amendment To Act In 1967 Eliminating This Requirement.

The recent Supreme Court ruling that a bride and groom must take seven steps together around the sacred fire for a Hindu marriage to be considered valid has sent shockwaves through society.

It probably left many wondering whether they went through these 'essential' rituals before they got married and whether their marriage despite registration is valid.

The Supreme Court was considering a plea arguing that if essential rituals from the Sastras were not performed and if the couple did not walk seven steps together around the fire, the marriage should be declared invalid.

The court agreed with the contention and held that in the absence of such sastric requirements, a Hindu marriage notwithstanding its registration thereafter will be invalid.

People from different communities and areas celebrate marriages in their own way and no one ever thought there were essential requirements for such performances. That the absence of such rituals can even annul a marriage is worrisome.

At the time of guaranteed independence, an interim govt was formed under the premiership of Jawaharlal Nehru, which was also mandated to evolve a new Constitution. B R Ambedkar was inducted as Minister of Law in Nehru’s cabinet and entrusted with preparing a common Hindu Code.

The objective of the bill was to codify Hindu laws, which are scattered and can be bewildering for the average person, constantly leading to legal disputes. The bill sought to legalise monogamy, divorce for women, assign proper rights to women and confer equality to men and women in all legal matters.

Though the Congress party, which was in majority in the House, was in unison in fighting for political freedom, they did not do the same for social reform. Many Congress stalwarts including Rajendra Prasad, G B Pant and M M Malaviya joined Hindu Maha Sabha leaders in opposing the bill. Of the 28 Congress members who spoke during the debate, 23 were against it.

The bill that was sent to the select committee after a year had only four days of discussion in 10 months. In 1950, no time was allotted. In February 1951, being the last session of the House, clause-by-clause consideration was taken up for 3 days. Though the bill was put on the agenda on Sept 17, 1951, it was not taken up and died a natural death due to the ensuing elections and constitution of a new Parliament.

At that point, Ambedkar even decided to quit the cabinet, stating that “in regard to the bill” he had been “made to go through the greatest mental torture”. He is quoted as saying, “The aid of party machinery was denied to me.

The Prime Minister gave freedom of vote, an unusual thing in the history of the party … For days and hours filibustering has gone on a single clause … I had never seen a case of a chief whip so disloyal to the Prime Minister and the Prime Minister so loyal to a disloyal whip … The last time the bill was taken up in the party meeting, only 20 of 120 were found to be against it. I was therefore quite unable to accept the Prime Minister’s decision to abandon the bill on grounds of time.”

After the 1952 general elections, the newly formed govt re-inducted Ambedkar as a law minister and tasked with codifying the law relating to marriage succession and adoption for Hindus. This time, four legislations were readied. The newly inducted members to Parliament passed the four legislations including the Hindu Marriage Act, 1955. Under Section 7 of the Act, the essential requirement of the marriage was for couples to take seven steps around the sacred fire. Therefore, what was believed to be the sastric requirement was now codified into law.

As a result of this requirement, even if the marriage is later registered, it will not be deemed valid since the essential sastric requirements were not met, thus rendering it invalid. Subsequently, litigations in courts have found many marriages invalid in the absence of the rituals. To overcome this, Tamil Nadu devised an alternate approach.

In 1967, when the DMK won the election defeating the Congress, C N Annadurai, its first chief minister, brought a state amendment to the Hindu Marriages Act. Under the new section 7A, any marriage between two Hindus either called a self-respect marriage or reform marriage can be solemnised in the presence of any person and each party to the marriage should understand that they take the other to be their spouse if both garland or put a ring on each other or by tying a thali (mangalsutra). Given this amendment, the requirement of any sastric ritual was completely dispensed with. A challenge was dismissed, and the Supreme Court upheld the amendment (Nagalingam Vs. Shivgami, 2001).

Following the amendment, self-respect marriages became increasingly common in Tamil Nadu. Some enterprising lawyers began conducting such marriages in their offices. A complaint that reached Madras high court in 2014 found that 50% of the marriages in north Chennai were performed in the offices of advocates. The division bench which heard the case warned lawyers that solemnising marriage is not their job and their offices are not marriage halls (S Balakrishna Pandiyan, 2014).

When this matter was taken to the Supreme Court, it held that the view of the Madras high court was erroneous. It said the high court cannot put any conditions to circumscribe the width of Section 7A and that such a narrowing down is violative of Article 21 of the Constitution. The right of individuals to exercise free choice is an intrinsic part of Right to Life (Ilavarasan, 2023), it said.

In view of the above rulings, Tamil Nadu stands apart and has little to lose on the new dicta issued by the Supreme Court. No fire or seven steps are required to validate marriages in this state.

(The writer is a former judge of the Madras High Court)

தேமொழி

unread,
May 18, 2024, 7:49:33 PMMay 18
to மின்தமிழ்
பழந்தமிழர் திருமணம் ஐயர் இருந்தாரா?மந்திரம் இருந்ததா? 
தாலி கட்டுவது தமிழர் பண்பாடா? 
கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப. (பணி நிறைவு)
#balachandranias

தேமொழி

unread,
Jun 1, 2024, 10:40:58 PMJun 1
to மின்தமிழ்
ref :  https://www.facebook.com/isai.inban/posts/pfbid025wAmeLJYuoRiXPghESgyBNoqqPDu5aRD9PMT4zKeEexJfhjttpu41C1QVVUWka9yl


மே 31, 2020 
கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தோழர் தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:
கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?
இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.
கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்' சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை திடீரென மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.
டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர்
கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.
“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).
"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” - “(பகுத்தறிவு - 2.12.1934)
"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.
இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.
கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.
கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.
கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை !

தேமொழி

unread,
Jun 9, 2024, 11:57:58 PMJun 9
to மின்தமிழ்
மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் இலாகா என்பதாக ஓர் இலாகாவைச் சர்க்கார்
ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் மாணவர்களுக்கும்
மக்களுக்கும் பிரச்சாரம் செய்ய வகை செய்தாலொழிய மதக்கேடும், ஜாதிக்கேடும்,
சாத்திரப் புராணக் கேடுகளும் ஒரு நாளும் நமது நாட்டை, சமுதாயத்தை விட்டு
ஒழியப் போவதில்லை என்பது உறுதி.

- தந்தை பெரியார்

தேமொழி

unread,
Jun 10, 2024, 8:28:23 PMJun 10
to மின்தமிழ்
கற்பு என்னும் சொல்லை அகராதியிலிருந்து எடுத்தெறிய வேண்டும். ஒழுக்கம் என்ற சொல்தான் இருக்கவேண்டும். அந்த ஒழுக்கம் என்பதும் சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.
- தந்தை பெரியார் (11/6/2024 -இன்றைய நாள்காட்டி குறிப்பு)

தேமொழி

unread,
Jun 19, 2024, 10:35:04 PM (11 days ago) Jun 19
to மின்தமிழ்
எப்படி ஆத்திக மதத்துக்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்கின்றதோ அது போலப் பகுத்தறிவு இயக்கத்துக்கும் நாத்திகக் கோட்பாடுகளுக்கும் அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
- தந்தை பெரியார் (20/6/2024 -இன்றைய நாள்காட்டி குறிப்பு)

தேமொழி

unread,
Jun 27, 2024, 9:15:28 PM (3 days ago) Jun 27
to மின்தமிழ்
vpsing.jpeg

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும்;
மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது.
சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக்
கொண்டுவரமுடியும்; அதைத்தான் மறைந்த பெரியார்
ஈ.வெ.ரா. செய்தார். சமூக அமைப்பை மாற்றி
அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டுவருவதற்கும்
பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு
பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும்.
- வி.பி.சிங்
(திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
'தி இந்து' டிச. 29, 1992 - பக்.41)
Reply all
Reply to author
Forward
0 new messages