ஃஃஃ `இலக்குவனார் திருவள்ளுவன் 27 January 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1026-1030: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1031-1035
சிம்சு காணாட்ட குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்சு காணாட்ட வெருளி.
சிம்சு(The Sims) என்பது 2000 ஆம்ஆண்டு மேக்குசிசு(Maxis) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, மின்னணுக் கலைகள் நிறுவனத்தால்(Electronic Arts) வெளியிடப்பட்ட குமுக உருவகப்படுத்தும்காணொளி ஆட்டமாகும்.
இது பல வரிசைத்தாெடராக வந்து கொண்டுள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களும் காண்பவர்களும்
தூய்மைக்கேடு தொடர்பான பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தல் போன்ற வற்றிற்குப்பேரச்சம் கொள்கின்றனர்.
காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச்சிம்சு காணாடட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
சிம்பசன் என்னும் அசைவூட்டக் கதை மாந்தர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்பசன் வெருளி.
அசைவூட்டக் கதை மாந்தர் குறித்த வெருளி உள்ளவர்களுக்குச்சிம்பசன் காணாடட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
சியா இசுலாமியம் அல்லது சியா இசுலாமியர் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சியா வெருளி.
சியா என்பது அலியைப் பின்பற்றுவோரைக் குறிக்கும் அரபுச் சொல்லாகும். சியாக்கள் முகமது நபியின் மருமக்களுள் ஒருவரான அலியே அவரின் உண்மையான வழிமுறையனிர் என்ற நம்பிக்கையில் அவரைப் பின்பற்றுவோராவர்.
இவர்களின் சமயநம்பிக்கைகள், பழக்கவழக்கங்க்ள, பண்பாட்டுப் பரம்பரை,வெறுப்பு முதுலியவற்றின் மீது வெறுப்பும வருத்தமும் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
சியார்சு இலண்டுகிரென் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சியார்சு இலண்டுகிரென் வெருளி.
ஆர்தர் என்னும் அசைவூட்டத் தொடரின் ஒரு பாத்திரத்தின் பெயர் யார்சு இலண்டுகிரென்(Georgelundgren).
இவன், கூச்சத் தன்மையும் அமைதியான இயல்பும் திறமையற்ற போக்கும் முட்டாளாக உள்ளவன். மர ஒட்டகச்சிவிங்கியுடனே அடையாளம் காணப்படுவான்.
இத்தகைய பண்புகளை விரும்பாதவர்களும் இதைப் பார்க்கும் தங்களுக்கும் இத்தகைய பண்புகள் வருாோ என்று அஞ்சபவர்களுக்கும் இலண்டுகிரென் வெருளி வருகிறது.
00
சொறி,சிரங்கு குறித்த அளவு கடந்த பேரச்சம் சிரங்கு வெருளி.
கரப்பன் புண், பற்று, படை, சொறி, சிரங்கு முதலான தோல் நோய்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, ஒட்டுண்ணியால் ஏற்படுகின்றது. பெண் நுண்ணுயிரி, தோலைத் தோண்டி முட்டைகளையிட்டுக் கடுமையான அரிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரம் சிலர் ஒவ்வாமை போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரைக் காணாமல் சிரங்கு முற்றிய நிலைக்கு மாறப்போவதாகப் பேரச்சம் கொள்வர்.
சொறி, சிரங்கு ஒட்டுவார் ஒட்டி. எனவே, மக்கள் திரளாக உள்ள இடங்களில் எளிதில் பரவுகிறது. நோயரின் படுக்கை விரிப்புகள் உடைகளைப் பயன்படுத்துவதாலும் எளிதில் பரவுகிறது.
தொற்றுநோய் என்பதால், சொறி சிரங்கு உடையவர்களைப்பற்றிக் கேள்விப் பட்டாலே தமக்கும் சொறி சிரங்கு பரவிவிட்டதாக எண்ணிப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்
சிரங்கினை ஏற்படுத்தும் நுண்மி மனிதர்களிடம் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். இதை அறியாமல் நாய், பூனை முதலான வளர்ப்பு உயிரிகள் மூலம் பரவிடும் என அறியாமையால் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
scabio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சிரங்கு.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5