நிற்க அதற்குத் தக!

221 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Aug 27, 2008, 8:56:01 PM8/27/08
to minT...@googlegroups.com

தமிழன்பர்களே.

அடியேன் சிலகாலமாக தமிழிலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு அவற்றைப் படித்து சில கட்டுரைகளை அடியேனுடைய வலைப்பதிவில் இட்டு வருகிறேன். அவற்றில் சிலவற்றை மின் தமிழில் இடவேண்டும் என்று முனைவர் திரு. கண்ணன் ஐயா பணித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாக இடுகிறேன். தங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

எங்கேனும் என் புரிதல்கள் தவறாக இருப்பின் தயங்காமல் இடித்துரைக்க வேண்டுகிறேன்.

அன்பன்,
குமரன்.
 
------------
 

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க!

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்கப் படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதைத் தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

***

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய? <p></p></div>

Tirumurti Vasudevan

unread,
Aug 27, 2008, 9:08:25 PM8/27/08
to minT...@googlegroups.com
ஆஹா, நல்ல தொடர். தொடருங்கள்.
பிலாசபிக்கும் நடைமுறைக்கும் நிறையவே இடைவெளி இருக்கிறது- அனேக மாக
எல்லாருக்குமே. இது குறைய முயல வேண்டும்

திவா

2008/8/28 Kumaran Malli <kumara...@gmail.com>:


> தமிழன்பர்களே.
>

> அடியேன் சிலகாலமாக தமிழிலக்கியங்களில் ஈடுபாடு கொண்டு அவற்றைப் படித்து சில...


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Narayanan Kannan

unread,
Aug 27, 2008, 9:19:34 PM8/27/08
to minT...@googlegroups.com
வாங்க குமரன். அழகிய எளிய தமிழ். ஆழமுள்ள விஷயங்கள்.

2008/8/28 Kumaran Malli <kumara...@gmail.com>:


>
> திருவள்ளுவர்: கற்பவை கற்க
>

ஒரு கதை சொல்லுவார்கள். அப்பா தன் பிள்ளையை குருகுலத்திற்கு
அனுப்புகிறார். பிள்ளை படித்து வருகிறான். ஒவ்வொரு வருடமும் பிள்ளையைப்
பார்க்கும் போது, என்ன படித்தாய் என்று கேட்பார். பல வருடங்கள்
ஓடிவிட்டன. அப்பவிற்கு திருப்தி இல்லை. என்னப்பா கற்பவை கற்கவில்லையே!
என்றாராம்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

நம்மாழ்வாரும் "அறிவின் பயனே! அரிஏறே!!" என்கிறார். ஆனால், இதுதான் கற்க
வேண்டியது என்பதில் இந்தியா வெகுவாக மாறிவிட்டது!


>
> என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ
> படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம்.
> சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க
> அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?
>

உண்மைதான். கற்றவை நெஞ்சில் நிற்க வேண்டும். பின் அதுவே வாழ்வாக
வேண்டும். பாரதி சொல்வான். கவிதை செய்பவன் கவிஞன் அல்லன். கவிதையாய்
வாழ்பவனே கவிஞன் என்று. இது முடியும். மெல்ல நாம் முயன்றால். விண்ணிற்கு
நோக்கு வைத்தால் கூரை மட்டாவது போகலாமே ;-)

க.

Tthamizth Tthenee

unread,
Aug 28, 2008, 4:21:51 AM8/28/08
to minT...@googlegroups.com
 
திரு குமரன் அவர்களே
அதனால்தான் ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது என்பார்கள்
 
நிற்க அதற்குத் தக
என்பதுதான் பொருளே
 
அதுதான் கடைப்பிடிக்க வேண்டிய பொன்னான குறிக்கோளாக இருக்க வேண்டும், தொடர்ந்து எழுதுங்கள்
வரவேற்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
மனிதம் காப்போம்- உலகம் காப்போம்
 

 
2008/8/28 Kumaran Malli <kumara...@gmail.com>

Narayanan Kannan

unread,
Aug 28, 2008, 4:26:09 AM8/28/08
to minT...@googlegroups.com
தேனீயாரே!

பதிலுரைக்கும் போது முழு இடுகையும் வால் போல் தொடர விடாமல், சுருக்கி
அனுப்பவும். (இது பொதுவாக எல்லோருக்கும் விடும் வேண்டுகோளும்தான்)

நன்றி

க.

2008/8/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 28, 2008, 4:34:49 AM8/28/08
to minT...@googlegroups.com
அப்படியே ஆகட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 ஆகஸ்ட் 28 13:56 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Kumaran Malli

unread,
Aug 28, 2008, 6:18:04 AM8/28/08
to minT...@googlegroups.com

திவாகர் ஐயா, கண்ணன் ஐயா, தமிழ்த்தேனீ ஐயா. மூவருக்கும் நன்றி.

Reply all
Reply to author
Forward
0 new messages