மின் செய்தி மாலை ஜனவரி 9

8 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Jan 8, 2009, 9:30:26 PM1/8/09
to minT...@googlegroups.com


மின் செய்தி மாலை   ஜனவரி  9 ---ஏ. சுகுமாரன் 

 

வெற்றிகரமான நாடாக மாறிவருகிறோம்!  மன்மோகன்சிங் உறுதி


`இந்தியாவை தீவிரவாதிகளால் நிலைகுலைய செய்ய முடியாது' என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாட்டு இந்தியர்களுக்கான 7-வது மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று காலையில் தொடக்கி வைத்து பேசியதாவது:-

நவீனம், தொழில்நுட்பம் கலந்த பாரம்பரியம், கலாசாரம் நிறைந்த நகரமான சென்னையில் நாம் கூடி இருக்கிறோம். அருகில் உள்ள மகாபலிபுரம் கோவிலுக்கு உங்களில் பலர் சென்று பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நமது நாட்டில் நடந்த கடல் வாணிபத்தின் வரலாற்றுக்கு அது ஒரு சான்றாக இருக்கிறது.

பழமையும், சிறப்பும் மிகுந்த இந்த நாட்டுக்கு வந்துள்ள உங்களை வரவேற்கிறேன். இந்த மண்ணுக்கு வந்ததும் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும் என்பது தெரியும். உங்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்காகவும் எங்களது இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டு இருக்கும் என்பதை நான் இந்த மாநாட்டில் உறுதி அளிக்கிறேன்.நமது சுதந்திரமான பாரம்பரியத்துக்கும், இணைந்த வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம், தீவிரவாதம் எழுந்துள்ளன என்பதற்கு சமீபத்தில் மும்பையில் நடந்த தாக்குதல் ஒரு கொடூரமான நினைவூட்டலாக இருக்கிறது. இந்தியா வெற்றிகரமான ஒரு தேசமாக மாறுவதை அனேகம் பேர் விரும்பவில்லை. ஆனால் இந்தியாவை எந்த ஒரு பயங்கரவாதமோ, தீவிரவாதமோ நிலைகுலையச் செய்யாது என்பதை நாம் மீண்டும் மீண்டும் உலகத்துக்கு நிரூபித்துக் காட்டி இருக்கிறோம்.

இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கு இங்கு பிழைப்பு இல்லை என்பதையும், பயங்கரவாதத்தை ஏவுவதற்கு அவர்களுக்கு ஏவுதளம் இல்லை என்பதையும் உறுதி செய்வதற்காக சர்வதேச அளவில் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடரும்.
உலக பொருளாதாரம் இன்று கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் நமது தேச பொருளாதாரத்தின் அஸ்திவாரம் அசையாமல் வலிமையாக நிற்கிறது. இந்த ஆண்டு நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கிறோம். உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது அதிகமாகும். வரும் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சியில் ஸ்திரத்தன்மை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
புதிய உலக நிதி கட்டுமானத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் இருக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் இந்தியா மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளது. பொருளாதாரத்தில் புதிதாக வரும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஏதுவாக புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. உலக பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான தடைகள், பொருளாதார மாற்றங்களினால் உருவாகும் தாக்கங்கள் போன்றவற்றை அதன் மூலம் சமாளிக்கலாம். இதுபோன்ற திட்டங்களில் இந்தியாவுக்கும் தகுந்த இடம் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த 34 ஆண்டுகளாக அணு எரிசக்தி விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்தியாவுக்கு எதிரான தடைகள் சமீபத்தில் சர்வதேச அமைப்புகளால் நீக்கப்பட்டன. இதற்கு வெளிநாட்டு இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முக்கிய பணியாற்றினர். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். உலகம் எங்கும் இந்தியர்கள் தற்போது பொது கொள்கைகள், கருத்தை உருவாக்குதல் போன்ற விவகாரங்களில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது மிக மிக முக்கியமான அம்சமாகும்.

உலக அளவில் இந்தியா தற்போது பல துறைகளில் வளர்ச்சி பெற்று வருவதை நீங்கள் அனைவருமே உணர்ந்து இருப்பீர்கள். சர்வதேச உலக ஒழுக்கத்தில் இந்தியா கொண்டுள்ள முக்கிய பரிணாமத்தின் எழுச்சி தற்போது அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கு நமது ஆலோசனைகள் தற்போது காதால் கேட்கப்படுவதோடு நிற்காமல் விரும்பி பெறப்படுகின்றன.
2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை திட்டம் (ஓ.சி.ஐ.) பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, ஓ.சி.ஐ. அட்டைகளை வைத்துள்ளவர்களுக்காக இந்த திட்டத்தை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களில் தகுதி பெற்றுள்ள டாக்டர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், என்ஜினீயர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், ஆடிட்டர்கள் ஆகியோர் இந்தியாவிலும் தொழில் தொடங்கி நடத்தலாம். இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்.

இதுதவிர, `உலக இந்தியர்கள் திறன் பரிமாற்ற வலைதளம்' என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதிலும் நான் பெரிது மகிழ்கிறேன். இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபர்களையும், வெளிநாட்டு இந்தியர்களுடன் இந்த வலைதளம் இணைக்கும். அவரவர் தொழில்களை அங்குள்ளவர்களுடன் இணைந்து மேம்படுத்திக் கொள்ள இது உதவும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் தங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளவும், ஆலோசனைகளை பறிமாறிக் கொள்ளவும் இந்த திட்டம் பயன்படும்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஓமன், கத்தார் ஆகிய இடங்களுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்த போது, பல விஷயங்களில் பங்களிப்பதற்கு உடனே முன்வருவதை நான் அங்கு கண்டேன். அவர்களது நோக்கங்களும், செயல்பாடுகளும் எனக்கு ஆச்சரியம் அளித்தன. அந்த நாடுகளில் செல்வம் பெருகுவதற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு என்னை வியப்புக்குள் ஆழ்த்தியது.

எனவே காசா பகுதியில் நடக்கும் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் பதட்டம் மேலும் அதிகரித்து வருவது நம்மை வேதனைப்படுத்துகிறது. அங்கு நடக்கும் தாக்குதலால் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தேவையில்லாமல் பலியாகின்றனர். இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அங்கு விரைவில் அமைதி ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிர்றேன்

நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் போது, அங்குள்ள நமது பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல அம்சங்களை கவனித்து சேர்க்கிறோம். வெளிநாடுகளுக்கு செல்வதை எளிதாக்கவும், வெளிப்படை ஆக்கவும் விரிவான மின் ஆளுமைத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பணியாளர்களுக்கும் `ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். அதில் அந்த பணியாளர் பற்றிய விவரங்கள் மற்றும் அவரது பணிக்கான ஒப்பந்தம், அவருக்கு வேலை தருகிறவர், அவரது காப்பீடு பற்றிய விளக்கங்களும் இடம் பெற்றிருக்கும்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உங்களது பங்களிப்பும் அத்தியாவசியமாக இருந்தது. இந்த ஆண்டு வெகு தொலைவில் உள்ள ஒரு வெளிநாட்டவரான சந்திரனுடன் நாம் தொடர்பு ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற பெருமை நாம் எல்லாருக்கும் உள்ளது.

விண்வெளிக்குள் சந்திராயன்-1 கடந்த அக்டோபர் மாதம் சென்றது, இந்தியாவின் தொழில்நுட்ப சாதனைகளின் கண்காட்சிக்காக அல்ல. சந்திரனை சந்திக்க வேண்டும் என்ற நமது பழங்கால கனவு நிறைவேறி இருக்கிறது. ஒருநாள் ஒரு இந்தியன் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியன், சந்திரனுக்கு பயணத்தை மேற்கொள்வான் என்பதை இங்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவில் மனித வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். உங்கள் நன்மைக்காகவும், இந்தியாவின் மேம்பாட்டுக்காகவும் நாம் அனைவருமே இணைந்து பணியாற்ற மேலும் பல உத்திகளை, இந்தியா பற்றிய உங்களது நம்பிக்கை உருவாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

புத்தக வெளியீடு

வெளிநாட்டு இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கையேடு உள்பட 3 புத்தகங்களை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி முக்கிய உரையாற்றினார். மத்திய வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை மந்திரி வயலார் ரவி, செயலாளர் மோகன்தாஸ், சுரிநாம் நாட்டு துணை ஜனாதிபதி ராம்தின் சர்ஜோ ஆகியோரும் பேசினர். இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் கே.வி.காமத் நன்றி கூறினார்.

வெளிநாட்டு இந்தியர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
 
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
தமிழகத்தில் பெரிய கம்பெனிகள் முதலீடு செய்வதற்காக அவர்களை கவரும் விதத்தில் பல சாதகமான அணுகுமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. டேய்ம்லர், ரினால்ட், நிசான். ஹூண்டாய், போர்டு, நோக்கியா, டெல், மோட்டோரோலா, சாம்சங் உள்பட பல கம்பெனிகள் புதிதாக தொழில் தொடங்கியுள்ளன. சில கம்பெனிகள் ஏற்கனவே இருக்கும் தொழிலை விரிவுபடுத்தி இருக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களுடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழகத்திற்கு ரூ.32 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இங்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இதுபோன்ற நிறுவனங்களில் உங்களில் பலர் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கிறீர்கள். தமிழகத்தின் இந்த வெற்றியை உங்கள் நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்யும் இந்த உதவி மூலம் அவர்கள் இந்தியாவையோ அல்லது தமிழகத்தையோ தங்கள் முதலீடுகளை குவிக்கும் இடமாக தேர்வு செய்யலாம். இதுபோன்ற மாநாடுகளை நடத்துவது மிகவும் அவசியம். இந்திய கலாசாரம், பாரம்பரியங்களுடன் நீங்கள் மறுபடியும் உங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். உலகப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய துடித்துக் கொண்டு இருக்கும் இந்தியாவுக்கு இந்த விவகாரத்தில் நீங்கள் தூதராக விளங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்
 
 பாக் மீது கடுமையான நடவடிக்கை !மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி 5 நாள் கெடு
பாகிஸ்தானில் கைதான பயங்கரவாதிகளை ஒப்படைக்க கோரும் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அக்கட்சி நிர்வாகிகள் காங்கிரசுடன் கொண்டுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியும் வருகிறார்கள். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங் இருவரும் சந்தித்து கட்சி நிர்வாகிகளின் வற்புறுத்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் குழுக் கூட்டம் டெல்லியில் அவசரமாக கூடியது. கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடர்பாக கட்சித் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டத்திற்குப் பின் அமர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த ஒரு வாரத்திற்குள் மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், வருகிற 14-ந்தேதி கட்சியின் தேசிய செயற்குழு கூடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுப்போம். எங்கள் கட்சித் தலைவர்களை வருகிற 14-ந்தேதி வரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அன்றுதான் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டெல்லிக்கு வருகிறார். எனவே அவர் டெல்லியில் இல்லாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. மேற்கண்டவாறு அமர்சிங் கூறினார்
 சத்யம் கம்ப்ïட்டர்ஸ் : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயார்! ஆந்திர முதல் மந்திரி தகவல் !

ஆந்திர மாநில முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி சென்னையில் நடக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சத்யம் கம்ப்ïட்டர்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளை பற்றி விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால் சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தவும் தயாராக உள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பவிட மாட்டோம். சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.
 
ராகுல் பிரதமராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை: பிரணாப் முகர்ஜி  நம்பிக்கை

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெளிநாட்டு இந்தியருக்கான 7-வது மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசுவதற்காக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி சென்னை வந்துள்ளார். `இந்தியா ஒரு உருவாகி வரும் சக்தி' என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு இந்தியர்கள் பலர் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு அவர் பதிலளித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒருவர், `ஏன், இந்தியாவை வழி நடத்திச் செல்ல இங்கு இளைய தலைமுறையினர் இல்லை? என்று கேட்டார். இதற்கு உடனே பதிலளித்த பிரணாப் முகர்ஜி, ``இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அவர் தனது தந்தை ராஜீவ்காந்தியின் வழியை பின்பற்றி நாட்டை வழிநடத்துவார். பி.கே.மொகந்தா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் இளம் வயதிலே முதல்-மந்திரியாக வந்தனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

 

அப்பாவி இலங்கை தமிழர்கள் காப்பற்றுங்கள் !சோனியாகாந்திக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம்

 

இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4-ம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார். அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன்.
இவ்வாறு, ராமதாஸ் கடிதத்தில் கூறியுள்ளார்.


     லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் : 700 `பெர்மிட்'கள் மத்திய அரசிடம் ஒப்படைப்பு

கோரிக்கைகள் ஏற்கப்படாததால், டெல்லியில் சுமார் 700 லாரிகளின் `பெர்மிட்'களை அதன் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மேலாண்மை கமிட்டி உறுப்பினர் குல்தரன் சிங் அத்வால் நேற்று தெரிவித்தார்.

லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் `சப்ளை' பாதிக்கப்படாமல் இருக்கவும், லாரிகளை பறிமுதல் செய்யும் வகையிலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளும், அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை (`எஸ்மா') அமல்படுத்தக்கூடும் என்று தெரிவதாக டெல்லியில் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் `சப்ளை' பாதிக்கப்படாமல் இருக்க டெல்லி, அசாமை தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களும் `எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தி உள்ளன.

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது!600 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் அணிவகுப்பு


புத்தக பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 32-வது புத்தக கண்காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ëஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு புத்தக விழாவை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் கருணாநிதி, எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் தனது பெயரில் பொற்கிழி விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். அதற்காக அவரது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி வழங்கினார். வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட அந்த பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து விருதுகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு `கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' விருதுக்கு எழுத்தாளர்கள் சி.மணி (கவிதை), ஆர்.சூடாமணி (சிறுகதை-நாவல்), ந.முத்துசாமி (நாடகம்), பேராசிரியர் நெடுஞ்செழியன் (கட்டுரை), கிரிஷ் கர்னாட் (கன்னட இலக்கியம்), எஸ்.முத்தையா (ஆங்கிலம்) ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு புத்தக கண்காட்சி தொடக்கவிழாவில் விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பொற்கிழி, பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றைக் கொண்டது.

கண்காட்சியை தொடங்கி வைப்பதாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை. அவர் அனுப்பிய வாழ்த்து செய்தியை கவிஞர் கண்ணதாசனின் மகனும் `பபாசி' தலைவருமான காந்தி கண்ணதாசன் வாசித்தார். இந்த விழாவில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, திருப்பூர் கிருஷ்ணன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை கிறிஸ்டோபர் சார்லஸ் தொகுத்து வழங்கினார். இறுதியில், `பபாசி' செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.
இந்த புத்தகக் கண்காட்சியில் 600 அரங்குகள் உள்ளன. இலக்கியம், பொதுஅறிவு, ஆன்மீகம் உள்பட பலதரப்பட்ட பிரிவுகளில் 50-லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 18-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணியில் இருந்தே கண்காட்சியை காணலாம். முதல் நாளான நேற்று மாலை ஏராளமான பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
     இந்தியாவில் மருத்துவ சுற்றுலா 30 சதவீதம் வளர்ச்சி
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா மேற்கொள்வோர் எண்ணிக்கை நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

மருத்துவ சுற்றுலா நடவடிக்கையின் மூலம் தற்போது ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கிறது. இது, வரும் 2015-ஆம் ஆண்டில், ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து ரூ.9,500 கோடியாக வளர்ச்சி காணும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 81/2 மாதங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு மருத்துவ சுற்றுலாவிற்காக 1.80 லட்சம் பேர் வந்துள்ளனர். குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த சேவை போன்றவற்றால் இந்தியாவிற்கு வருகை தரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆரோக்கிய பராமரிப்பு துறையின் பங்களிப்பு தற்பொழுது 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 சதவீதமாக அதிகரிக்கும் என அசோசெம் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
 
40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு': டத்தோ எஸ். சுப்பிரமணியம் அறிவிப்பு
:
மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:

இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சாலை மேம்பாடு, கட்டுமானம், கல்வி பரிமாற்றம், பயோ-டெக்னாலஜி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் மலேசிய நிறுவனங்கள் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.

மலேசிய சுற்றுலாத் துறையும் 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆன்டு மட்டும் 2.50 லட்சம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதே அளவுக்கு மலேசியா வந்த இந்திய பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மலேசியாவுக்கு சட்ட விதிகளை மீறி வந்து ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட யாரையும் வேண்டும் என்றே சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் மலேசிய அரசுக்கு இல்லை. இது குறித்து தூதரக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அமைச்சர் சுப்பிரமணியம்.

 

               சோதி லிங்கத் தலம்      இராமேச்சுரம் (இராமேஸ்வரம்)


இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. (இராம + ஈச்சுரம் = இராமேச்சுரம். ஈச்சுரம் = கோயில்.) இச்செய்தி ``தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன், பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற, ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச் சுரம்`` என்னும் இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் தேவார அடிகளால் இனிது விளங்குகின்றது. சேக்கிழாரும் ``சேதுவின் கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமான்றனைப்பாடி`` எனக் கூறியுள்ளார். இராமேச்சுரம் தொடர் வண்டி நிலையத்திற்கு 1.5 கி.மீ. தொலைவில் உளது. பாண்டி நாட்டுத் தலங்களுள் இது எட்டாவது ஆகும். கீழ்க்கடற்கரையில் அமைந்த இத்தலத்திற்கு தமிழ் நாட்டின் அனைத்துப் பெருநகர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. பேருந்துக் கடற்பாலம் கட்டியபிறகு ஆலயம் வரை பேருந்துகள் செல்லும்.

இறைவரின் திருப்பெயர் - இராமநாதர். இராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர். இறைவியாரின் திருப்பெயர் - மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் ``ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா`` என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் - அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன. இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இத்தலத்தைப்பற்றி ``மறவாளிலங்கையிறைமகனை உதைத்த பழியால் மருண்டு, அரி யன்று அறவாள் நேமியளித்தவனை யருச்சித்தகன்ற அணிநகர்`` எனப் பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம் அருச்சனைப்படலத்தில் கூறியுள்ளார். இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோடியாகும். இராமேச்சுரத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. தூரத்தில் தனுக்கோடி இருக்கின்றது. சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குத்தான் செய்தல் வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடச் செல்பவர்கள், தனுக்கோடி தொடர் வண்டி நிலையத்திலிருந்து செல்லுதல் நல்லது. அங்கிருந்து அதன் தூரம் 3 கி.மீ. தூரமாகும். இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் பாடப்பெற்ற சேதுபுராணம் அச்சிடப்பெற்றுள்ளது. ``நீடுதநுக்கோடியினை நினைந்தாலும், புகழ்ந்தாலும், நேர் கண்டாலும் வீடுபெற லெளிதாகும்`` (சேதுபுராணம், தனுக்கோடிச் சருக்கம்) என்னும் அடிகள் இத்தனுக்கோடியின் பெருமையினை விளக்குவதாகும். கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் வீரபாண்டிய தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன் இவர்கள் காலங்களிலும், விசயநகர மன்னர்களில் விசுவநாத நாயக்கர் வீரப்ப நாயக்கர் காலங்களிலும், வீரபூபதி காலத்தும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் சகம் 1530 அதாவது கி. பி. 1608 இல் வீரபூபதி நாளில் இராமநாதர் கோயில் கட்டி முடிந்ததையும்; சகாப்தம் 1540 இல் அதாவது கி.பி. 1618இல் சேதுபதிகாத்த தேவர் புத்திரன் தளவாய் தேவன் குலசேகரனான சேதுபதிகாத்த தேவர், இறைவர் திருவிழாவிற்கு எழுந்தருளியிருக்க மண்டபம் ஒன்றைக் கட்டியதையும், சகாப்தம் 1540இல் சேதுபதிகாத்த தேவர் இராம நாதசுவாமி கோயிலின் முதற் பிரகாரம், திருநடமாளிகைப்பத்தி, ஆருட மண்டபம் கட்டியதையும், சகம் 1390 அதாவது 1468இல் பருவதவர்த்தினி அம்மன் கோயிலின் முன்புள்ள கொடிமரம் செய்து நிறுத்தி வைக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றன. கன்னடத்தில் சோபகிருது வருடத்தில் செதுக்கப்பெற்ற கல் வெட்டு ஒன்று கற்கள் பதித்த கவசம் ஒன்றை அளிக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றது. (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903 No. 97-105, year 1905 No. 89-90, year 1915 No. 8-9. See also South Indian Inscriptions, Vol. VIII No. 3823 - 91.) இக் கோயிலிலுள்ள கல்வெட்டுப் பாடல்கள்: (கட்டளைக் கலித்துறை) (1) சேல்கண்ட வாரி யிலிங்கேசற் செய்பழி தீரமுன்னாள் மால்கண்ட கோயி லிராமீச ராடல்செய் மண்டபத்தை நூல்கண்ட நற்சக னாயிரத் தோடைந்து நூற்றிருபான் மேல்கண்ட நாளின் முனிராம நாதன் விதித்தனனே. (2) திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால் வருமாறு கண்டவன் கோடிப் புனற்கு மகாலயத்தைத் தருமாயி ரத்தைந்து நூற்றுமுப் பான்செல் சகன் வருடத் தருமா தவம்செய் முனிராம நாதன் அமைத்தனனே. (3) பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்றுமுப் பான்மருவ நற்றும் புவியினை யாள்வீர பூபதி நாளிற் றொண்டர் குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான் முற்றுந் தவங்கள் புரிராம நாதன் முடித்தனனே.
 நன்றி தேவாரம் .org
(செய்திகள் தினமணி, தினத்தந்தி ,தினகரன் போன்ற செய்தி இதழ்களில் இருந்து
திரட்ட படுகின்றன .தலைப்புகள் நடை முதலியன  மட்டும் மாற்றப்பட்டுள்ளன
அவைகளுக்கு நன்றி )
 
 
 

 

 

 




--
A.Sugumaran ,
AMIRTHAM INTL .....Source globally......
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Subashini Tremmel

unread,
Jan 9, 2009, 2:01:34 PM1/9/09
to minT...@googlegroups.com


2009/1/9 annamalai sugumaran <amirth...@gmail.com>


மின் செய்தி மாலை   ஜனவரி  9 ---ஏ. சுகுமாரன் 

 

>>

 
40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு': டத்தோ எஸ். சுப்பிரமணியம் அறிவிப்பு
:
மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:

இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சாலை மேம்பாடு, கட்டுமானம், கல்வி பரிமாற்றம், பயோ-டெக்னாலஜி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் மலேசிய நிறுவனங்கள் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.

மலேசிய சுற்றுலாத் துறையும் 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆன்டு மட்டும் 2.50 லட்சம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதே அளவுக்கு மலேசியா வந்த இந்திய பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மலேசியாவுக்கு சட்ட விதிகளை மீறி வந்து ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட யாரையும் வேண்டும் என்றே சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் மலேசிய அரசுக்கு இல்லை. இது குறித்து தூதரக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அமைச்சர் சுப்பிரமணியம்.

 

மலேசியாவில் முன்பை விட இப்போது பல உணவக விடுதிகளில் பல தமிழக தொழிளாலர்களைக் காண முடிகின்றது.  இந்த உணவக விடுதி தொழிலாளர்கள் அவர்களது முதலாளிகளின் வழி சந்திக்கின்ற கொடுமையான அனுபவங்களைப் பற்றி கடந்த சில நாட்கள் இங்கு இருந்த போது சில நண்பர்களின் வழி அறிந்து கொள்ள முடிந்தது. மற்ற இனத்தவரை விட மலேசிய தமிழ் விடுதி முதலாளிகளும் கூட இந்த தொழிலாளர்ளை  மோசமாக நடத்தும் போக்கு இப்போது நிலவுகிறது. தொழில் கிடைத்தால் மற்றும் போதாது. இந்த தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுகின்றனரா என்று சம்பந்தப்பட மலேசிய, இந்திய அரசாங்க வாரியங்கள் கவனிக்க வேண்டும். அடிப்படை மனித உரிமை பாதிக்கின்ற வகையில் நடந்துள்ள சில சம்பவங்களைக் கேள்விப்படுகின்ற போது இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியம் என்றே தோன்றுகின்றது.
 
-சுபா
 

Innamburan Innamburan

unread,
Jan 10, 2009, 10:19:25 AM1/10/09
to minT...@googlegroups.com
திருமதி. சுபாவின் கவலை எனக்கு புரிகிறது. வரலாற்றுப்போக்கில் பார்த்தால், மனிதனக்கு தன்னையே அழித்துக்கொள்லும் ஆறறல் உள்ளது என்பது தெளிவு. தமிழ் விடுதி முதலாளிகளின் போக்கு எனக்கு வியப்பை தரவில்லை; விசனத்தை தருகிறது. தமிழ்நாட்டு ஏழைகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இன்னம்பூரான்

2009/1/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages