தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஆகஸ்ட் 2025

135 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 11, 2025, 4:38:06 PM8/11/25
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை சுவலி  ஒலிநூல் வெளியீடுகள்

தமிழ் மரபு அறக்கட்டளை சுவலி ஒலிநூல் வெளியீடு
suvali darwin.jpeg
நூல்: சார்லஸ் டார்வின் (ஜீவிய சரிதம்)
நூலாசிரியர்:  வெ .சாமிநாத சர்மா
வாசிப்பவர்: பூங்கொடி.அ
https://suvali.tamilheritage.org/சார்லஸ்-டார்வின்-ஜீவிய-ச/

*****

தமிழ் மரபு அறக்கட்டளை சுவலி  ஒலிநூல் வெளியீடு
suvali.jpeg
நூல் :  இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
நூலாசிரியர்:  நா.வானமாமலை
வாசிப்பவர்  :   ஹேமலதா G
https://suvali.tamilheritage.org/இந்திய-நாத்திகமும்-மார்க/

*****

தேமொழி

unread,
Aug 11, 2025, 5:39:24 PM8/11/25
to மின்தமிழ்
Ilakkiya Koodal9.jpeg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி இலக்கியக்கூடல்  - 09
----------------------------------
நூல் திறனாய்வு . . .
நூலின் பெயர் :  "தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்"

நூலாசிரியர்:  முனைவர்  தேமொழி

நூல் திறனாய்வாளர் : ஆவணக் குரிசில்  திருமிகு.கரந்தை ஜெயக்குமார்

நோக்கவுரை : பேராசிரியர் முனைவர் நா. கண்ணன்,
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை.

ஏற்புரை : நூலாசிரியர் முனைவர் தேமொழி,
செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நாள் : ஆகஸ்ட் 16, 2025 - சனிக்கிழமை; இந்திய  நேரம் மாலை 6.00 மணி

இணைப்பு: Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:  மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Aug 13, 2025, 2:24:56 PM8/13/25
to மின்தமிழ்
slide-tamil.jpg

இனிய வணக்கம் நண்பர்களே.

நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 24.8.2025 ஞாயிறு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆய்வறிஞர்களது உரைகள் உள்ளன.

அமைச்சர் பெருமக்கள் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

ஏறக்குறைய 150 கல்லூரி மாணவர்களும் பொதுமக்கள் 150 பேரும் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றது.

வெள்ளி விழாவை முன்னிட்டு 10 புதிய ஆய்வு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு நீங்கள் விரும்பும் ஒரு தொகையை உங்கள் நன்கொடையாக வழங்கி உதவினால் அது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு  பெரிதும் உதவும்.

உங்கள் தொகையை நீங்கள்phone Number 9894726360  (Iraivani)  Gpay செய்யலாம்.

அல்லது நேரடியாக கீழ்காணும் நமது இந்திய வங்கிக் கணக்கில் சேர்த்து விடலாம்.

Payment Details: (within India)
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எமது நன்றி! 🙏🏼


வெள்ளிவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு,
Message has been deleted

தேமொழி

unread,
Aug 14, 2025, 10:28:30 PM8/14/25
to மின்தமிழ்
suvali.jpeg
தமிழ் மரபு அறக்கட்டளை சுவலி  ஒலிநூல் வெளியீடு
நூல்:  நமது தேசியக் கோடி
நூலாசிரியர்:  வெ .சாமிநாத சர்மா
வாசிப்பவர்:  இந்துமதி அண்ணாமலை
கேட்டு மகிழ்வீர் !!

தேமொழி

unread,
Aug 14, 2025, 11:05:03 PM8/14/25
to மின்தமிழ்
24.8.2025 ஞாயிற்றுக்கிழமை . . . தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா கருத்தரங்கம்.
வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அன்பான அழைப்பு.

25th.jpeg
--------------

தேமொழி

unread,
Aug 15, 2025, 10:43:11 PM8/15/25
to மின்தமிழ்
நினைவூட்டல் . . . இன்று மாலை . . . 

Ilakkiya Koodal9.jpeg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி இலக்கியக்கூடல்  - 09
----------------------------------
நூல் திறனாய்வு . . .
நூலின் பெயர் :  "தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்"

நூலாசிரியர்:  முனைவர்  தேமொழி

நூல் திறனாய்வாளர் : ஆவணக் குரிசில்  திருமிகு.கரந்தை ஜெயக்குமார்

நோக்கவுரை : பேராசிரியர் முனைவர் நா. கண்ணன்,
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை.

ஏற்புரை : நூலாசிரியர் முனைவர் தேமொழி,
செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நாள் : ஆகஸ்ட் 16, 2025 - சனிக்கிழமை; இந்திய  நேரம் மாலை 6.00 மணி

இணைப்பு: Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:  மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்

தேமொழி

unread,
Aug 16, 2025, 8:12:20 PM8/16/25
to மின்தமிழ்
"தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்" நூல் திறனாய்வு . . .


நூலாசிரியர்:  முனைவர்  தேமொழி
நூல் திறனாய்வாளர் : திரு.கரந்தை ஜெயக்குமார்


தமிழ் மரபு அறக்கட்டளை செயலாளர் முனைவர் தேமொழி  அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும் நூலை கரந்தை திரு ஜெயகுமார் அவர்கள் அருமையாகத் திறனாய்வு செய்தார்🙏🏻
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் தான். . .  இல்லை இல்லை தை முதல் நாள்தான் . . . என்ற வாதங்களுக்குப் பதிலாக முன்னாள் தமிழக முதல்வர்கள் டாக்டர் கலைஞர் மற்றும் டாக்டர் ஜெயலலிதா, மகாகவி பாரதி,  தமிழக அரசு பதிப்பு ஆணை இவற்றை மேற்கோள் காட்டி அறுதியிட்டு இறுதியாகக் கூறும்படி தரவுகள் இல்லை என அரசின் கருத்தை உரைத்துக் கடந்துவிட்டார்👍
சங்க நூல்கள் உள்ளிட்ட 115 நூல்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தமிழர் புத்தாண்டு துவக்கம் பற்றி எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறார்.
மேற்கொண்டு ஆய்வு செய்ததில்  சில அருமையான தரவுகள் தமது கூற்றுக்கு வலு சேர்கின்றன என்று கூறுபவர்;  மலையாள கொல்லம் ஆண்டு சிம்மத்தில்(ஆவணி) தொடங்கி கற்கடவில்(ஆடி) முடிகிறது, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆண்டு என்பது சிங்கத்தில் தொடங்கி நண்டில் முடியும் கோள் சுழற்சியைக் குறிப்பது என்கிறார்.
சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ ஆண்டிற்கு ஆறு பருவங்கள் உண்டு அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகும் என்று உரைக்கிறார்.   இதில் கார்காலம் துவக்கம் ஆவணியில் என்பது நாம் அறிந்தது.
இதே கருத்தை ஒன்பதாம் நூற்றாண்டு திவாகரம்,  பத்தாம் நூற்றாண்டு பிங்கள நிகண்டு,  பதினாறாம்  நூற்றாண்டு சூடாமணி நிகண்டு  போன்ற நிகண்டு நூல்களும் வழிமொழிகின்றன.
15ஆம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சிக்குப் பிறகு பிரபவ, விபவ என்ற வடமொழிப் பெயர்கள் தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் சொல்லாடல்களாகக் கடந்த 500 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளன.
உண்மையை உரைப்பவன் உண்மைக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் ஏனெனில் உண்மை மட்டுமே வரலாற்றின் தாய் என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியின்படி எளிதில் மறுக்க முடியாத சான்றுகளுடன் முனைவர் தேமொழி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்தக் கருத்தைக் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ளடக்க முடிந்தால் பண்டைய தமிழர்கள் கடைப்பிடித்தபடி ஆவணி முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் என முடிக்கிறார்.
முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் கூறியபடி நல்லதொரு கருத்து. பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முன்பாக அனைவரும் இந்த நூலை வாங்கி படித்து கருத்தில் ஒருமைப்பாடு கொண்டு வருவோம் என்பதில் யாவரும் உடன்படுவோம்👍🙏🏻
தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி இத்தகைய தரமான ஆய்வு நூல்கள் அனைவருக்கும் சென்று சேரும் வழிவகை செய்துள்ள டாக்டர் கண்ணன் மற்றும் டாக்டர் சுபாஷினி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏🏻👍💐

 ~ SPS சுந்தர் பரத்வாஜ்


தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்
ஆசிரியர் :  தேமொழி
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை, 2024
கிடைக்குமிடம் : https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum

தேமொழி

unread,
Aug 17, 2025, 12:33:25 AM8/17/25
to மின்தமிழ்


Narayanan Kannan is with Subashini Thf and 
4 others
.

32-themozhi book.jpg

தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறப்பு வெளியீடாக வந்துள்ள "தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்" எனும் நூல் நேற்று திறனாய்விற்கு வந்தது. அமெரிக்காவில் வாழும் முனைவர் தேமொழி மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டு எனத் தமிழர்கள் கருதுவது எந்நாளை எனக் கண்டு விளக்கும் நூலிது.
மின்தமிழ் (கூகுள்) மடலாடற்குழுவை 2006 ம் ஆண்டு தோற்றுவித்து மட்டுறுத்தராக இருந்த காலங்களில் தொடங்கிய சர்ச்சை இது! தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தை மாதமா? என்பது. பொங்கல் வந்தாலே போதும்! போதும் போதுமெனும் அளவிற்கு மோதும் குழுக்கள்!
இந்த மோதலுக்குக் காரணம். 1. தமிழ் வருடப்பிறப்பு என இந்துக்கள் சித்திரை ஒன்றாம் தேதி கொண்டாடுவது. 2. தை மாதம் பொங்கல் எனும் விழாவை மதச்சார்பின்றி கொண்டாடுவது. 3. 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் ஒன்றுகூட தமிழாக இல்லாமல் இருப்பது. இதை ஆரிய மேலாண்மை எனத்தமிழர்கள் கருதி எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கினர். முன்னோர் சொல் முக்கியம், சாத்திரம் பொய் சொல்லாது எனக் கருதுவோர் எதிர்வாதம் செய்தனர். ஆண்டாண்டிற்கு இந்த சர்ச்சை தொடர்ந்து ஜெ.ஜெ. காலத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு ஆணையே பிறந்தது. ஆயினும், இந்த சர்ச்சை முடிவதாய் இல்லை. நண்பர் தேமொழி இந்த நூலின் மூலம் இதையொரு முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறார்.
முதலில் இவர் சொல்வது, தமிழர்கள் என்றும் புத்தாண்டு என ஒரு நாளைக் கொண்டாடியது இல்லை என்பது. குத்துமதிப்பாக இதைச் சொல்லவில்லை, 150 நூல்களின் உசாத்துணையுடன் சொல்கிறார்.
அடுத்து, தமிழர்களின் வானவியல் கணக்கில் நாள் உண்டு, மாதமுண்டு, வருடத்திற்கு ஆறு பருவங்களுண்டு, 12 மாதங்களுண்டு. வருடத்திற்கு பெயர் சொல்லும் வழக்கு கிடையாது! இது மீண்டும் ஆழமான ஆய்விற்கு பின் வருகிறது.
தமிழ் வருடம் சித்திரையிலும் பிறக்கவில்லை, தையிலும் பிறக்கவில்லை ஆனால் ஆவணியில் பிறக்கிறது எனும் பேருண்மை. இதற்குச் சான்றாக தொல்காப்பிய சூத்திரத்தை முன்வைக்கிறார். நச்சினார்க்கினியார் உரையை முன்வைக்கிறார். பிங்கல நிகண்டுவை முன் வைக்கிறார், சேர நாட்டில் இன்றளவும் தொடங்கும் விஷு எனும் கொல்லம் ஆண்டு தொடக்கத்தை முன் வைக்கிறார். நாம் ராசிகள் எனக் கட்டம் போட்டு ஜாதகம் கணிக்கும் ராசிகளே மாதப் பெயர்கள் என்றும், வருடம் சிம்ம காரையில் பிறக்கிறது என்றும், கார் காலமே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என முடிக்கிறார். இவ்வழக்கு தொல்காப்பியருக்கும் முந்தியது என்பதை எம்மனார் புலவர் என தொல்காப்பியர் வழங்குவதிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். கார் காலம் முக்கியம், கார்கால முல்லைத்திணை முதன்மை பெறுவதைக் காட்டுகிறார். தமிழ் நில அமைவைச் சுட்டும் நான்கு திணைகளில் முதன்மையாக சொல்லப்படுவது முல்லைத்திணையே. மாயோன் மேய காடுறை உலகமும் எனும் சூத்திரம் இதைச்சுட்டும்.
நீர் மேலாண்மையில் முன் நிற்கும் தமிழனுக்கு மழை முக்கியம். வள்ளுவப்பெருந்தகை, கடவுள் வாழ்த்திற்குப் பின் வான் சிறப்பு செய்கிறார். இளங்கோ அடிகள் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்கிறார். எனவேதான் கார்முகில் வண்ணனாக கண்ணனை முன்வைத்து தமிழர் வணங்குகின்றனர். கார் மழையை கடவுளின் கருணை எனக்காண்கின்றான் தமிழன். நீர், நீர்மை, கார், ஏரி, குளம் இவைதான் இவனது வாழ்வியல் முதன்மைப் பொருட்கள். அவன் தெய்வமும் கார் இருள் போன்ற தெய்வம். கருப்பன். [கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன் - ஆண்டாள்].
ஆக எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்க்கும் போது ஆவணியில் தொடங்கி, ஆடியில் முடிவதே தமிழ் வருடம் எனத்தெரிகிறது.
தெளிவு தந்த தேமொழிக்கு நன்றி.

தேமொழி

unread,
Aug 17, 2025, 3:56:47 AM8/17/25
to மின்தமிழ்
Ilakkiya Koodal9.jpeg

"*தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்*"
நூல்-திறனாய்வு: திரு.*கரந்தை ஜெயக்குமார்*
காணொளி:
https://youtu.be/Z6FOCm6AF1c

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்
ஆசிரியர் :  தேமொழி
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை, 2024
கிடைக்குமிடம் : https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum
----------------------------------------------------

On Friday, August 15, 2025 at 7:43:11 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Aug 18, 2025, 12:57:01 PM8/18/25
to மின்தமிழ்
8 others
.

slide-tamil.jpg

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரத்தேமொழி மாந்தர்க ளெல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர்!
- மகாகவி பாரதி
இனிய வணக்கம் நண்பர்களே.
நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. *24.8.2025 ஞாயிறு* நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆய்வறிஞர்களது உரைகள் உள்ளன.
அமைச்சர் பெருமக்கள் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
ஏறக்குறைய 150 கல்லூரி மாணவர்களும் பொதுமக்கள் 150 பேரும் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றது.
வெள்ளி விழாவை முன்னிட்டு 10 புதிய ஆய்வு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு நீங்கள் விரும்பும் ஒரு தொகையை உங்கள் நன்கொடையாக வழங்கி உதவினால் அது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பெரிதும் உதவும்.
*உங்கள் தொகையை நீங்கள் phone Number 9894726360 (Iraivani) Gpay செய்யலாம்.*
அல்லது நேரடியாக கீழ்காணும் நமது இந்திய வங்கிக் கணக்கில் சேர்த்து விடலாம்.
*Payment Details: (within India)*
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எமது நன்றி! 🙏🏼☘️
-வெள்ளிவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பிகு: காசு போடுங்கப்பா! 🙏🤗🌷

தேமொழி

unread,
Aug 21, 2025, 4:15:45 PM8/21/25
to மின்தமிழ்
MYM Wishes.jpeg
MYM Team Appreciation for Tamil Heritage Foundation International Organization - Congratulations ...https://www.youtube.com/watch?v=XJTFo9YT-ok


mym event.jpeg
---------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages