காணொளி: "சிலம்பும் சிலம்பு " சிலப்பதிகார உரை

357 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 16, 2023, 8:11:38 PM9/16/23
to மின்தமிழ்
silambu.jpg
உயர்திரு முனைவர் கு வெ பாலசுப்பிரமணியம் ஐயா வழங்கும் 
"சிலம்பும் சிலம்பு " சிலப்பதிகார உரை
https://www.youtube.com/live/1B1XD2LdDPQ?si=gi4B-JyhJOerxZSy&t=536


தேமொழி

unread,
Oct 14, 2023, 5:15:39 AM10/14/23
to மின்தமிழ்
Dr. Ku Ve Balasubramanian.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 1
ழகரக்கூடம்
https://youtu.be/kUsVjzcZ2Q0?si=M11YW_9JzSUwsqCw
______________________________________________________________________

தேமொழி

unread,
Oct 17, 2023, 4:36:01 AM10/17/23
to மின்தமிழ்
Dr. Ku Ve Balasubramanian.jpg
 முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
 சிலப்பதிகாரம் - வகுப்பு 2
 ழகரக்கூடம்


முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 1
ழகரக்கூடம்
https://youtu.be/kUsVjzcZ2Q0?si=M11YW_9JzSUwsqCw
______________________________________________________________________
உயர்திரு முனைவர் கு வெ பாலசுப்பிரமணியம் ஐயா வழங்கும் 
"சிலம்பும் சிலம்பு " சிலப்பதிகாரம் அறிமுக  உரை
https://www.youtube.com/live/1B1XD2LdDPQ?si=gi4B-JyhJOerxZSy&t=536


தேமொழி

unread,
Oct 18, 2023, 3:24:44 PM10/18/23
to மின்தமிழ்
Dr. Ku Ve Balasubramanian.jpg
   முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
   சிலப்பதிகாரம் - வகுப்பு 3
   ழகரக்கூடம்
______________________________________________________________________
 முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
 சிலப்பதிகாரம் - வகுப்பு 2
 ழகரக்கூடம்
______________________________________________________________________

தேமொழி

unread,
Oct 23, 2023, 6:02:33 PM10/23/23
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 4
ழகரக்கூடம்

தேமொழி

unread,
Oct 30, 2023, 5:53:35 PM10/30/23
to மின்தமிழ்
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன்.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 5
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=AvMxdRvBeD0


_____________________________________________________________________

முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகார வகுப்புகள் . . .
வகுப்பு 4:  https://www.youtube.com/watch?v=oaWNqWpzdX8
வகுப்பு 3:  https://www.youtube.com/watch?v=mxujO59w2jM
வகுப்பு 2:  https://www.youtube.com/watch?v=ckVK_MjVNEA
வகுப்பு 1:  https://youtu.be/kUsVjzcZ2Q0?si=M11YW_9JzSUwsqCw

தேமொழி

unread,
Nov 7, 2023, 6:26:10 AM11/7/23
to மின்தமிழ்
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன்.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 6
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=XOenWf5pFqY
______________________________________________________________________________
சிலப்பதிகாரம் - வகுப்புகள் - காணொளி வரிசை . . .
https://www.youtube.com/playlist?list=PLK_aC_098kjYXNd9HVdnosVktQszA8ASz
______________________________________________________________________________

தேமொழி

unread,
Nov 13, 2023, 5:55:54 PM11/13/23
to மின்தமிழ்
silambu 7.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 7
ழகரக்கூடம்

தேமொழி

unread,
Nov 20, 2023, 2:50:44 AM11/20/23
to மின்தமிழ்
silambu 8.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 8
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=CpKbqiJgCNc

நவம்பர் 19, 2023
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - மனையறம்படுத்த காதை (84 - 90 அடிகள், வெண்பா)
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (1 - 11 அடிகள்)

மனையறம்படுத்த காதை
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்       85

விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.       90

(வெண்பா)
தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.

அரங்கேற்று காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய       5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்       10
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி...
 -----------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 28, 2023, 9:15:38 PM11/28/23
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 9
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=9ZX08xH28Fg


நவம்பர் 27, 2023
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (12 - 30 அடிகள்)

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து    12
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு       15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்       20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,       25

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் ...      30
---------------------------

தேமொழி

unread,
Dec 5, 2023, 6:01:01 PM12/5/23
to மின்தமிழ்
Silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 10
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=55REXuretcw

டிசம்பர்  3, 2023

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்
- அரங்கேற்று காதை (26 - 28 அடிகள்)
---------------------------

தேமொழி

unread,
Dec 11, 2023, 1:05:09 AM12/11/23
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 11
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=dDv1INDGBgU

டிசம்பர்  10, 2023


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (29 - 69 அடிகள்)


வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்       30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்       35

அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து       40

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே       45

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்       50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,       55

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்       60

பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி       65

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும் 69

-----------------------------------------------------

தேமொழி

unread,
Dec 25, 2023, 3:08:42 AM12/25/23
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 12
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=csNUurrHSQM


டிசம்பர்  24, 2023

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (41 - 71 அடிகள்)
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்       70
ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி.  71
-----------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 10, 2024, 2:36:10 PMJan 10
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 13
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=4nmuCAwj0kg

ஜனவரி 8, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (72 - 132 அடிகள்)

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி    71
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்       75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை       80

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்       85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு       90

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது       95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக       100

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்       105

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு       110

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு       115

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்       120

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப       125

அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,       130

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க       135
------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 28, 2024, 1:49:05 AMJan 28
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 14
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=plQQqPuKQpE

ஜனவரி 21, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (133 - 153 அடிகள்)


இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க       135

வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்       140

பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி       145

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து       150

மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை   153
------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 29, 2024, 1:34:21 AMJan 29
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 15
ழகரக்கூடம்
https://youtu.be/eO3ZQR62n04

ஜனவரி 28, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை (154 - 175 அடிகள், வெண்பா)
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - அந்திமாலைச் சிறப்புசெய் காதை (1 - 11 அடிகள்)


அரங்கேற்று காதை
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்       155

பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னு஡ல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்       160

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,       165

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை       170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.       175

(வெண்பா)
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.
----------------
அந்திமாலைச் சிறப்புசெய் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்       5

முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி       10
__________________________________________________________________

தேமொழி

unread,
Feb 7, 2024, 3:29:28 PMFeb 7
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 16
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=BY_ze8iz5IU


Feb 4, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்
அந்திமாலைச் சிறப்புசெய் காதை (11 -  43 அடிகள்)

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு       15

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென       20

இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி       25

மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த       30

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு       35

குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்       40

பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை   43

--------------------------------------------------

தேமொழி

unread,
Feb 12, 2024, 12:54:00 AMFeb 12
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 17
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=f5t48-g7htQ

Feb 11, 2024

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம் 
- அந்திமாலைச் சிறப்புசெய் காதை (44 - 80 அடிகள்)


பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்       45

காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்       50

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப       55

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து       60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்       65

துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து       70

விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்       75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்       80
-----------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 19, 2024, 12:32:04 AMFeb 19
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 18
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=IMIB54X7v24


Feb 18, 2024


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் 
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை (1 - 58)

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி       5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,       10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,       15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா       20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்       25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்       30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்       35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,       40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,       45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்       50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்       55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்
------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 26, 2024, 4:05:10 AMFeb 26
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 19
ழகரக்கூடம்

Feb 25, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்
 - இந்திர விழவு ஊர் எடுத்த காதை (59 - 98)

இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய       60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்       65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்       70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,       75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்       80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென       85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்       90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்       95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு
------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 26, 2024, 4:22:37 AMFeb 26
to மின்தமிழ்
வணக்கம்

சிலப்பதிகார வகுப்பு  
பெரும் மதிப்பிற்குரிய, பேராசான் கு. வெ. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் சிலப்பதிகார வகுப்பு நேரம்:

அமெரிக்கா/கனடா
ஞாயிற்றுக் கிழமைதோறும்
கிழக்கு நேரம் இரவு 8:00 - 9:30 pm EST

இந்தியா
திங்கட்கிழமைதோறும்,
இந்திய நேரம் காலை 6:30 - 8:00 am IST

Silapathigaram classes are being held on Sundays at 8 pm EST for America/Canada and on Mondays at 6.30 am IST for India
The class will recur once a week at the same time, same day, for two years.

அழைப்பிற்கான இணைப்பு:
https://meet.google.com/jzn-tigh-wyd


-ழகரக் கூடம்

தேமொழி

unread,
Mar 4, 2024, 1:29:09 AMMar 4
to மின்தமிழ்
silambu.png
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 20
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=YARAAkBYS6Q

Mar 3, 2024


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை (99 - 138)

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்       100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்       105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,       110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்       115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று       120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்       125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்       130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து       135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்     138
-------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 18, 2024, 8:50:57 PMMar 18
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 21
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=JhiqKn-hUEo

Mar 17, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை (139 - 207)

மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,       140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து       145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து       150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து       155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி       160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்       165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்       170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,       175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்       180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடல் பாணரொடு       185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு       190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து       195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு       200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி       205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.

-----------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 26, 2024, 12:43:45 AMMar 26
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 22
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=-Fcu4fkgF_M


Mar 24, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை (207 - 240)


கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி       205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த       210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு       215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது       220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்       225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்       230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து       235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.       240
--------
சிலப்பதிகார வகுப்பு  
பெரும் மதிப்பிற்குரிய, பேராசான் கு. வெ. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் சிலப்பதிகார வகுப்பு நேரம்:

அமெரிக்கா/கனடா
ஞாயிற்றுக் கிழமைதோறும்
கிழக்கு நேரம் இரவு 8:00 - 9:30 pm EST

இந்தியா
திங்கட்கிழமைதோறும்,
இந்திய நேரம் காலை 6:30 - 8:00 am IST

Silapathigaram classes are being held on Sundays at 8 pm EST for America/Canada and on Mondays at 6.30 am IST for India
The class will recur once a week at the same time, same day, for two years.

அழைப்பிற்கான இணைப்பு:
https://meet.google.com/jzn-tigh-wyd
-------------------------------------------------------------------

ழகரக்கூடம் தமிழ் வகுப்புகள்

1. சிலப்பதிகாரம் ஞாயிறு 9 pm EST
நடந்து கொண்டிருக்கிறது
(இந்திய நேரம் திங்கள் 6.30 am IST)  

2. மணிமேகலை திங்கள் 9 pm EST
ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கும்
திங்கள் 9 pm EST , (இந்திய நேரம் செவ்வாய் 6.30 am IST)

3. சைவத் திருமுறை புதன் 9 pm EST
ஏப்ரல் 3 துவங்கும் (ஏப்ரல் 4 வியாழன் காலை 6.30 am இந்திய நேரம்)

4. சங்க இலக்கியம் முதல்நிலை
-வியாழன் 9pm EST - ஏப்ரல் 18 துவங்கும்
அமெரிக்க/கனடா மாணவர்களுக்கு

5. சங்க இலக்கியம் முதல்நிலை
-ஞாயிறு 9 am IST - ஏப்ரல் 21 துவங்கும்
இந்திய மாணவர்களுக்கு

6. சங்க இலக்கியம் உயர்நிலை
குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

அனைவரும் இணைந்து பயனுறவும்

- ழகரக்கூடம்
தகவலுக்கு 
தொடர்பு கொள்க . . . 
வாட்சப் +1 (732) 285-3536

தேமொழி

unread,
Apr 1, 2024, 2:18:49 AMApr 1
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 23
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=4tFdfSTXMX8


Mar 31, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கடலாடு காதை (1 - 45)

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்       5

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட       10

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்       15

பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய       20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,       25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்       30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்       35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட       40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்       45

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Apr 18, 2024, 5:01:34 AMApr 18
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 24
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=F_oYHL94vxU


Apr 15, 2024
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கடலாடு காதை (21 - 105)


நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,       25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்       30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்       35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட       40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,       45

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற       50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,       55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்       60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்       65

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய       70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்       75

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை       80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,       85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,       90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்       95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,       100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து       105
---

தேமொழி

unread,
Apr 22, 2024, 1:00:13 PMApr 22
to மின்தமிழ்
silambu.jpg 

முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 25
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=QriHdN5J47I


ஏப்ரல்  21, 2024
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கடலாடு காதை (75 - 130)
அங்காது அகவயின் அழகுற அணிந்து,       105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,       110

உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப       115

வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்       120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப       125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்       130

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Apr 29, 2024, 1:41:27 AMApr 29
to மின்தமிழ்
silambu .jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 26
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=g-NDxfKxhCQ


ஏப்ரல்  28, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கடலாடு காதை (134 - 174), கானல் வரி (கட்டுரை)

கடலாடு காதை (134 - 174)
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,       135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,       140

இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி       145

இடிக்கலப்பு அன்ன ஈர்அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்       150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்       155

பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல       160

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,       165

கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை       170

வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

கானல் வரி (கட்டுரை)
சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.  
---

தேமொழி

unread,
May 12, 2024, 1:51:31 AMMay 12
to மின்தமிழ்
Screenshot new.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 27
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=7fxqpQuctoI

மே 5, 2024


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி (பாடல் 1 - 7) (கட்டுரை) சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப் பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஓர்த்(து) ஏவலன், பின் பாணி யாதுஎனக் கோவலன் கையாழ் நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன். 1 வேறு (ஆற்று வரி) திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. 2 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. 3 உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி. விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி. 4 வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து) கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல்தெய்வம் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று ஏழையம்யாங்கு அறிகோம் ஐய விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம்என்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர். 5 காதலர் ஆகிக் கழிக்கானல் கையுறைகொண்டு எம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாம்இரப்ப நிற்பதையாங்கு அறிகோம் ஐய மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் அறியாது வண்டுஊச லாடும் புகாரே எம்மூர். 6 மோது முதுதிரையால் மொத்துண்டு போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதுஅழிப்ப மாழ்கி ஐய கோதை பரிந்துஅசைய மெல்விரலால் கொண்டுஓச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர். 7 வேறு (முகம் இல் வரி) துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்றம் மாய்வான் பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது போர்க்கும் கானல் நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும். 8 (கானல் வரி) நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக் கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர் அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. 9
-------------


தேமொழி

unread,
May 13, 2024, 4:19:23 PMMay 13
to மின்தமிழ்
Screenshot.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 28
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=DMRJOjJBwX0


மே 12, 2024


சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி (பாடல் 10 - 26)

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில் மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.       10

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.      11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.       12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.       13

வேறு (முரிவரி)

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே.       14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே.       15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.       16

வேறு (திணை நிலைவரி)

கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.       17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.       18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.       19

வேறு

பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய       20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.       21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.       22

வேறு

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.       23

(கட்டுரை)

ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்.       24


வேறு (ஆற்று வரி)

மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
    மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி

    நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
    நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
    அறிந்தேன் வாழி காவேரி.       25

பூவர் சோலை மயில்ஆலப்
    புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய

    நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
    நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
    அறிந்தேன் வாழி காவேரி.       26

வாழி அவன்தன் வளநாடு
    மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
    ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
    ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
    அருளே வாழி காவேரி.       27

தேமொழி

unread,
May 27, 2024, 4:10:48 PMMay 27
to மின்தமிழ்
silambu.jpg

முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 29
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=SFu8TpxKu_M

மே 26, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி (பாடல் 46 - 52)

வேறு (முகம் இல் வரி)
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.       46

வேறு (காடுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.       47


வேறு (முகம் இல் வரி)
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.       48
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.       49
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.       50

வேறு
தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.       51

வேறு (கட்டுரை)
எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.       52

தேமொழி

unread,
Jun 11, 2024, 11:25:43 PMJun 11
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு
ழகரக்கூடம்
காணொளித் தொகுப்பு
https://www.youtube.com/playlist?list=PLK_aC_098kjYXNd9HVdnosVktQszA8ASz

__________________________________________________________________
சிலப்பதிகாரம் - வகுப்பு 28
https://www.youtube.com/watch?v=DMRJOjJBwX0


சிலப்பதிகாரம் - வகுப்பு 29
https://www.youtube.com/watch?v=evxACCh_0r4

சிலப்பதிகாரம் - வகுப்பு 30
https://www.youtube.com/watch?v=SFu8TpxKu_M

தேமொழி

unread,
Jun 18, 2024, 7:27:37 PM (12 days ago) Jun 18
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 31
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=1Rb-LUST3TU
ஜூன் 16, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி (மேலும் விளக்கம்), வேனிற்காதை (1 - 7 அடிகள்)


(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்       5

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என    
---------------------

தேமொழி

unread,
Jun 24, 2024, 5:16:16 PM (6 days ago) Jun 24
to மின்தமிழ்
silambu.jpg
முனைவர். கு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களின்
சிலப்பதிகாரம் - வகுப்பு 32
ழகரக்கூடம்
https://www.youtube.com/watch?v=DHipp5pKpWE
ஜூன் 24, 2024

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - வேனிற்காதை (8 - 63 அடிகள்) (நிலைமண்டில ஆசிரியப்பா) நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் 5 மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய இன்இள வேனில் வந்தனன் இவண்என வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் து஡தன் இசைத்தனன் ஆதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனை 10 புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15 மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி மாண்இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20 கொங்கை முன்றில் குங்கும வளாகத்து மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி, ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25 நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி, வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச் செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30 பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி, இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் 35 வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும் குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் 40 நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி, மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப் புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை 45 வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50 ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும் திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி, அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, 55 மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் 60 தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல் இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என 63
Reply all
Reply to author
Forward
0 new messages