கோவலர் குழலோசை... மதவுநடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல் அம்குரல் கால்பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோல்கைக் கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகுமாலை! (அகம். 54:6-12)
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
பொருள்:
பசுக்கள், வீட்டில் கயிற்றால் கட்டப்பெற்ற கன்றுகளை நினைத்துக்கொண்டதால் பால் சுரக்கும் பெரிய மடியை உடையன.
அவை கனைக்கும் குரலுடனும் கழுத்தில்
ஒலிக்கும் மணியுடனும் விரைந்து வருகின்றன. ஆயர்கள்,
மடியில் பொருள்கள் மடித்து வைக்கப்பட்ட வேட்டியை உடையவராய்,
புல்லாங்குழல் இசைத்தவராய், கோலைக் கையில் உடையவராய் மாடுகளுக்குப் பின்னால் வருகின்றனர்.
மாடுகள் தங்கள் வீடுகளை அறிந்து அவற்றிற்குள் செல்லும் மாலைக் காலம்.
The herds of cows, after grazing, rush to their houses;
Their udders brim with milk and their nipples swell up
When they think of their calves.
The cowherds follow them slowly,
Playing on konrai pipes and holding their crooks.