வரலாற்று நிகழ்வு

8 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 20, 2021, 7:56:22 PM9/20/21
to மின்தமிழ்
-- மா.மாரிராஜன்

இவர் வந்துதான் தமிழர்களை படிக்கவைத்தாரா..?
அதற்கு முன்பாக தமிழர்கள் படிப்பறிவு இல்லாமல்தான் இருந்தார்களா..?

இவர் வந்துதான் சமூகநீதியை நிலைநாட்டினாரா..?
அதற்கு முன்பாக இல்லையா..?

இவ்வாறானக் கேள்விகள் ஆங்காங்கே  எழுப்பப்படுகின்றன.?

இவர் வந்துதான் செய்தாரா..? இவர் மட்டும்தான் செய்தாரா.?
என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவோ..?

ஆனால்...
நிகழ்வுகள் உண்மைதான்...

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பெரும்பான்மையான தமிழ் சமூகம் படிப்பறிவு இல்லாமல்தான் இருந்தது. சமூகநீதி மறுக்கப்பட்ட சமுதாயத்தில்தான் வாழ்ந்தனர்..

தஞ்சைப் பெரியகோவில்...
அழகான தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. எழுத்தறிவிலும் படிப்பறிவிலும் மிகச்சிறந்த மக்கள் வாழ்ந்த காலத்தில் வெட்டப்பட்டக் கல்வெட்டு... 
காலமோ.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு..

ஆனால்..
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களால் இக்கல்வெட்டை வாசிக்கமுடியவில்லை.
கல்வியறிவு அவர்களுக்கு இல்லை.
ஜெர்மானியர் ஒருவர் வந்துதான் வாசித்துக் காட்டினார்..

தமிழ் நிலத்தில்..
தமிழன் கட்டியக் கோவிலில் உள்ள தமிழ் எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் வாழ்ந்த காலம் அது..

1919 ஆம் வருடம்.
திருச்சி அருகே உள்ள ஒரு கிராமம். அன்பில் என்பது அக்கிராமத்தின் பெயர்..

அக் கிராமத்தில் ஒருவர் தனது வீட்டை பெரிதுபடுத்துவதற்காக கடைக்கால் தோண்டுகிறார்..

அதென்ன ஒருவர்..?
அவருக்கு பெயர் இல்லையா..?

நிச்சயம் இருந்திருக்கும்.. 
ஆனால்....?

அவ்வாறு கடைக்கால் தோண்டும்போது.. பூமிக்கடியில் 11 ஏடுகள் கொண்ட செப்பேடுகள் கிடைத்தது.. செப்பேட்டில் எழுத்தும் இருந்தது.

இச்செப்பேட்டுத் தொகுதியை அவ்வூரைச் சேர்ந்த 
S..L. இலட்சுமணச் செட்டியார் என்பவரிடம் கொடுத்தார் அந்த ஒருவர்.

லட்சுமணச் செட்டியார் அந்த செப்பேடுகளை உ.வே.சாமிநாத ஐயரிடம் கொடுத்தார்.

உ.வே.சா,  அந்த செப்பேடுகளை தொல்லியல் அறிஞர் T.A. கோபிநாத ராவ் அவர்களிடம் கொடுத்தார்..

இங்கு மூன்று நபர்களின் பெயர் பதிவாகிறது. ஆனால் அந்த செப்பேட்டுக்கு உரிமையாளரான அந்த ஒருவரின் பெயர் மட்டும் பதிவாகவில்லை..

செப்பேட்டை வாசித்த கோபிநாத ராவ்.. செப்பேட்டு விபரங்களை 
Epigraphia indica vol 15 இல் வெளியிட்டார்..

இந்த செப்பேடுதான் இராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன்  கொடுத்த அன்பில் செப்பேடு.

இந்த செப்பேடு தனக்குக் கிடைத்த வழியை கோபிநாதராவ் இவ்வாறு எழுதுகிறார்..

Some decades ago a sudra while digging the foundation of a portion of his house....

ஒரு சூத்திரன் தனது வீட்டைத் தோண்டும்போது இச் செப்பேடு கிடைத்தது..

அந்த ஒருவர் பெயர் சூத்திரன்...

அந்த சூத்திரன், செப்பேட்டை லட்சுமணச் செட்டியாரிடம் தர , அவர் உவே.சாமிநாத ஐயரிடம் தர,  அவர் கோபிநாதராவிடம் தந்தார்..

என்ன இது...?

லட்சுமணச் செட்டியார்.
உ.வே.சாமிநாத ஐயர்.
T.A.கோபிநாத ராவ்..

ஆனால்...
செப்பேட்டுக்குச் சொந்தகாரரின் பெயர் சூத்திரன்..

marirajan article.jfif

1919 -20 ஆம் ஆண்டு வெளியான எபிகிராபியா தொல்லியல் ஆவணத்தில் அன்பில் செப்பேடு ஒரு சூத்திரனிடமிருந்து கிடைத்தாகப் பதிவு செய்யப்படுகிறது..

ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவிர பெரும்பாலான சமூகத்தினரின் பொதுப்பெயர் சூத்திரன்.. அவர்களது பெயரைக் கூட தொல்லியல் துறை பதிவு செய்ய இயலாத நிர்பந்தம்..

இதுதான்..
1919 ஆம் ஆண்டு கால  சமூக நீதி..

பிற்பாடு ..
அன்பில் செப்பேடு விபரங்களை பதிப்பித்த அறிஞர்கள் சூத்திரன் என்ற சொல்லுக்குப் பதிலாக விவாசாயி என்று எழுதினார்கள்..

சூத்திரன் - விவசாயி ஆனதுதான் சமூக மாற்றம்..

சூத்திரன், விவசாயி ஆனாலும் அந்த விவசாயின் பெயர் என்ன என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.. அன்பில் செப்பேடு இன்று இருக்குமிடமும் யாருக்கும் தெரியவில்லை..

நடந்துபோன கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதான் வரலாறா.? என்ற கேள்வி எழுந்தாலும்..

கசப்பான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நினைவூட்டுதலும் அவசியமே.

-------------
Reply all
Reply to author
Forward
0 new messages