---------
துழாவுதல் - கமழ்தல் ( இன்னொரு முக்கியமான பொருள் )
To waft an aroma; to emit fragrance - துழைதல், துழய்தல்,
வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு. 181)
துழைதல், துழயுதல் (நறுமணம் கமழ்தல்)
- துளசுதல் என்று பேச்சுவழக்கில் ஆகும்.
இதில் இருந்து பிறப்பதே துளசி என்னும் தாவரப் பெயர்.
நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை (பரிபா. 4, 58).
கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31, 8).
துழாதல் என்பது கமழ்தல் என்னும் பொருளே.
பனிவாடை துழாகின்றதே (திவ். இயற். திருவிருத். 35).
துழாய், துழசி, துளசி : தமிழ்ச் சொற்கள்.
இது இந்தியா முழுவதும் எல்லா மொழிகளிலும்
உள்ள திராவிடச் சொல் ஆகும். மாலை (மாலா), பூசை (பூஜா)
பண்டிதன், .. என்பன போல்.
காட்டாக, இந்தி மொழியின் மிகச்சிறந்த நூலாகப்
போற்றப்படும் துளசி ராமாயணம். உவேசா காசியில் குமரகுருபர சாமிகள்
கம்பனை விளக்கக் கேட்டுப் பின் துளசிதாசர் இராமாயணம்
இயற்றினார் என்று எழுதியுமிருக்கிறார். துளசி ராமாயணத்தில் கம்பனின்
தாக்கமுண்டு.
துளசி < துளசுதல்/துழைதல் (துழாய்தல் = நறுமணம் கமழ்தல்).
அடிப்படையான ஒரு தாவரப் பெயர் பெருமாளுக்கு உகந்தது
இந்தியா முழுக்க இருப்பதன் காரணம் திராவிடர்கள்
இந்தியா முழுமையும் பண்டைக் காலத்தில் பரவி வாழ்ந்ததே.
இன்று குறுகிப் போயிற்று. இலங்கையிலும் தமிழர்
வாழமுடியுமா என்னும் நிலையுள்ளதை நீங்கள் அறிவீர்கள்தானே.
ஆழ்வார் ஆள்வார் என்று தெலுங்கில் எழுதுதல் போல,
துழாய்/துழசி தெலுங்கு, வடமொழிகளில் துளசி ஆகியுள்ளது.
நா. கணேசன்
தமிழிலும் 'துளசி' என்றே எழுதுகின்றனர். இப்போதுதான் முதன்முதலாக,
'துழசி' என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.
hole - துளை / துழை, எது சரி ?!
On Aug 14, 11:45 am, v4vijayakumar <vijayakumar.subbu...@gmail.com>
wrote:
> hole - துளை / துழை, எது சரி ?!
துளை.
”துழவை” பிடித்திருக்கிறது!
க.>
காமெடி!
இங்கு “திராவிடர்கள்” என்ற பதம் யாரைக் குறிக்கிறது?? அது ஒரு “இனம்”
என்றால் ஆதாரமில்லாத இனவாதக் கருதுகோளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா??
ஏராளமான வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளும், சமீபத்திய மரபணு ஆராய்ச்சி
முடிவுகளும் இத்தகைய “இனம்” (race) இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று
நிறுவியிருக்கின்றன..
அந்தப் பதம் ஒரு மொழி (தமிழ்?) பேசும் கூட்டத்தாரைக் குறித்தால்,
இந்தியா முழுதும் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
தற்போதைய காலங்களில் தான் தமிழ் பேசும் மக்கள் ஏராளமான எண்ணிக்கையில்
இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள்,.. தொழில்
வளர்ச்சி, வாய்ப்புகள் என்று பல காரணங்கள்... “குறுகி விட்டது” என்பது
தவறு.
துளசி என்ற சொல்லைப் பற்றிய ஆராய்ச்சியில் இதெல்லாம் தேவையில்லாதது..
துளசியின் ஆயுர்வேதப் பயன்கள் தொன்மையான ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில்
விரிவாக விளக்கப் பட்டுள்ளன.
நீங்கள் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள் மேற்சொன்ன நூல்களுக்குப்
பிற்பட்டவை. என்வே *இலக்கியச் சான்றுகளின்* படி துளசி என்ற சொல்லில்
இருந்தே “துழாய்’ வந்திருக்க வேண்டும்.
பாற்கடல் கடையும் காலத்தில் விஷ்ணுவின் கண்களில் இருந்து வழிந்த
நீரிலிருந்து துளசி உண்டானதாக புராணம் சொல்கிறது. துளசிக்கு “பிருந்தா”
என்ற பெயரும் உண்டு. பிருந்தாவனம் என்பது உண்மையில் துளசி வனம் தான்.
கண்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவனப் பகுதிகளின் இன்றும் ஏராளமான துளசிக்
காடுகள் உள்ளன.. வழக்கமாக நாம் எல்லா இடங்களில் காண்பவை ராம துளசி,
கிருஷ்ண துளசி வகைகள். இது போக, “வன துளசி” என்ற வகை அபூர்வமானது - நான்
மேற்சொன்ன காடுகளில் இதைப் பயிரிட்டு வளர்க்கிறார்கள்.
Organic India என்ற கம்பெனி (உ.பியில் மதுராவிற்கு மிக அருகே தான் இதன்
தலைமையகம்!) இந்த மூவகைத் துளசிகளையும் உலர்த்தி Tulasi Tea இலைகளாக்கி
நேர்த்தியாக பேக்கேஜ் செய்து விற்கிறார்கள். அற்புதமான ஆரோக்கிய, உற்சாக
பானம் இது.. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்... அனைவருக்கும் இந்த
பானத்தைப் பரிந்துரை செய்கிறேன். கடந்த 3-4 வருடங்களாக ரெகுலராக இதை நான்
அருந்தி வருகிறேன்.. விவரங்களுக்கு - http://www.organicindia.com/
பல டீடெய்ல் கடைகளிலும் (குறிப்பாக fabindia) கிடைக்கிறது.
On Aug 15, 5:44 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/14 N. Ganesan <naa.gane...@gmail.com>:
On Aug 15, 6:06 am, Jataayu <jataay...@gmail.com> wrote:
> ஓஷதி ஸூக்தம் (மூலிகைச் செடிகளை வாழ்த்துதல்) என்று ரிக்வேதத்தில் ஒரு
> சூக்தம் உள்ளது. துளசி மட்டுமல்ல, பல மூலிகைகளின் பெயர்கள் அதில்
> கூறப்பட்டுள்ளன. மிருத்திகா சூக்தம் (மண்ணை வாழ்த்துத்தல்) ன்று இன்னொரு
> சூக்தம், யஜுர்வேதத்தில் உள்ளது... அதிலும் கண்டங்கத்திரி
> ( விஷ்ணுக்ராந்தி) உட்பட மூலிகைச் செடிகளின் பெயர்கள் உள்ளன.
>
துளசி ஒஷதி சூக்தத்தில் ரிக்வேதத்தில் உள்ளதா?
துளசி என்ற பெயர் மிகப் பிற்காலத்தில் பாத்மபுராணம், பாகவதம், ...
காண்கிறோம்.
மோனியர்-வில்லியம்ஸ் சம்ஸ்க்ருத அகராதி:
2 tulasI f. holy basil (small shrub venerated by Vaishn2avas ;
commonly Tulsi1) BhP. Va1yuP. and PadmaP. (produced from the ocean
when churned) BrahmaP. (produced from the hair of the goddess
Tulasi1 , ii , 19.)
தாமஸ் பர்ரோ முதலில் துளசி தமிழ்ச்சொல் என்பதை நிறுவினார்.
பர்ரோ - எமனோ திராவிட வேர்ச்சொல் அகராதியில் உள்ளது.
ஆனால் அவர்கள் இருவரும் சங்க இலக்கியம் படித்தவர்கள் அல்லர்.
துழாய் என்பதன் வினைச்சொல் என்ன? என்று பல அறிஞரும், மக்களும்
அறிவதில்லை. அதைக் காட்டவே இம்மடல் எழுதினேன்.
இதற்கொரு முக்கியக் காரணம், துளசிச் செடி பற்றிய
இந்த ஃப்லாரிடா தீஸிஸ்:
Carbone, John C.
Vaisnava Goddess as Plant: Tulasi in Text and Context
M. A. thesis, 2008, University of Florida, Gainesville
(வங்கத்தின் கௌடீய வைணவம் - ஹரே கிருஷ்ணா போலத் தெரிகிறது).
Abstract
The Tulasī plant (Ocimum sanctum) is viewed within the purview of
Hinduism as a form of the goddess Lakṣmī, or a consort of the god
Viṣṇu. This designation seems to originate within the corpus of
Purāṇic texts composed in the Sanskrit language from approximately the
5th to 15th centuries CE. The sanctity of the plant, and other forms
of vegetation, resembles even earlier cults of Yakṣa and Yakṣī, or
nature spirit, worship. The adoration of the plant continues into
modernity in various ways. This paper examines the Tulasī plant
through the various myths describing her sanctity, as well as how
these myths are interpreted by modern devotees of the plant.
http://etd.lib.fsu.edu/theses_1/available/etd-04142008-162310/unrestricted/CarboneJThesis.pdf
”The etymology of the name Tulasī in Sanskrit is somewhat unclear but
perhaps derives from the stem tul, which according to Monier Williams,
means “to lift up, raise”.10 Further meanings include: “to determine
the weight of anything by lifting it up, weigh, compare by weighing
and examining, ponder, examine with distrust”.11 The term vṛnda, as a
noun means a “bunch, cluster of flowers or berries” according to
Mahābhārata era usage; and as used in the Bhāgavat Purāṇa can mean “a
chorus of singers and musicians”.12 The verbal root vṛṇ means “to
please, gratify, exhilarate”. All of these terms aptly describe the
forest goddesses Tulasī, and Vṛndā, especially her role in the Rādhā
and Kṛṣṇa based medieval dramas, such as those of Rūpa Gosvāmin.”
துளசி/துழாய் தமிழ்ச்சொல், வடமொழியில் உள்ள வார்த்தை, இருந்தாலும் திரவிட
மொழிகளில் இருந்து கடன்பெற்றது என்று காட்ட எழுதப்பெற்றது.
நா. கணேசன்
> துளசியின் ஆயுர்வேதப் பயன்கள் தொன்மையான ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில்
> விரிவாக விளக்கப் பட்டுள்ளன.
>
> நீங்கள் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள் மேற்சொன்ன நூல்களுக்குப்
> பிற்பட்டவை. என்வே *இலக்கியச் சான்றுகளின்* படி துளசி என்ற சொல்லில்
> இருந்தே “துழாய்’ வந்திருக்க வேண்டும்.
>
> பாற்கடல் கடையும் காலத்தில் விஷ்ணுவின் கண்களில் இருந்து வழிந்த
> நீரிலிருந்து துளசி உண்டானதாக புராணம் சொல்கிறது. துளசிக்கு “பிருந்தா”
> என்ற பெயரும் உண்டு. பிருந்தாவனம் என்பது உண்மையில் துளசி வனம் தான்.
>
> கண்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவனப் பகுதிகளின் இன்றும் ஏராளமான துளசிக்
> காடுகள் உள்ளன.. வழக்கமாக நாம் எல்லா இடங்களில் காண்பவை ராம துளசி,
> கிருஷ்ண துளசி வகைகள். இது போக, “வன துளசி” என்ற வகை அபூர்வமானது - நான்
> மேற்சொன்ன காடுகளில் இதைப் பயிரிட்டு வளர்க்கிறார்கள்.
>
> Organic India என்ற கம்பெனி (உ.பியில் மதுராவிற்கு மிக அருகே தான் இதன்
> தலைமையகம்!) இந்த மூவகைத் துளசிகளையும் உலர்த்தி Tulasi Tea இலைகளாக்கி
> நேர்த்தியாக பேக்கேஜ் செய்து விற்கிறார்கள். அற்புதமான ஆரோக்கிய, உற்சாக
> பானம் இது.. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்... அனைவருக்கும் இந்த
> பானத்தைப் பரிந்துரை செய்கிறேன். கடந்த 3-4 வருடங்களாக ரெகுலராக இதை நான்
> அருந்தி வருகிறேன்.. விவரங்களுக்கு -http://www.organicindia.com/
On Aug 15, 6:06 am, Jataayu <jataay...@gmail.com> wrote:
> ஓஷதி ஸூக்தம் (மூலிகைச் செடிகளை வாழ்த்துதல்) என்று ரிக்வேதத்தில் ஒரு
> சூக்தம் உள்ளது. துளசி மட்டுமல்ல, பல மூலிகைகளின் பெயர்கள் அதில்
> கூறப்பட்டுள்ளன. மிருத்திகா சூக்தம் (மண்ணை வாழ்த்துத்தல்) ன்று இன்னொரு
> சூக்தம், யஜுர்வேதத்தில் உள்ளது... அதிலும் கண்டங்கத்திரி
> ( விஷ்ணுக்ராந்தி) உட்பட மூலிகைச் செடிகளின் பெயர்கள் உள்ளன.
>
திரு. ஜடாயு,
வேத நூல்களில் ஏதாவது ஸ்லோகத்தில் துலஸீ இருந்தால் தெரிவித்தால்
நன்றிக் கடப்பாடுடையேன்.
அன்புடன்,
நா. கணேசன்
On Aug 15, 5:49 am, Jataayu <jataay...@gmail.com> wrote:
> // இந்தியா முழுக்க இருப்பதன் காரணம் திராவிடர்கள்
> இந்தியா முழுமையும் பண்டைக் காலத்தில் பரவி வாழ்ந்ததே.
> இன்று குறுகிப் போயிற்று. //
>
> காமெடி!
>
> இங்கு “திராவிடர்கள்” என்ற பதம் யாரைக் குறிக்கிறது?? அது ஒரு “இனம்”
> என்றால் ஆதாரமில்லாத இனவாதக் கருதுகோளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா??
> ஏராளமான வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளும், சமீபத்திய மரபணு ஆராய்ச்சி
> முடிவுகளும் இத்தகைய “இனம்” (race) இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று
> நிறுவியிருக்கின்றன..
>
இனம் என்பதற்கு மொழியியல் துறைப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்று மொழியியல் நோக்கில் திராவிடர்களின் முந்துமொழி (proto-language)
ஒன்று இருந்திருக்க வேண்டும். அம்மொழி பேசினோரை திராவிட இனம்
(Dravidians)
என்பர். திராவிடர்களுக்குத் தாயகம் இந்தியா. இதே போல ஆரிய இனம் என்றும்
ஒன்று இருந்தது. முண்டா மொழி
பேசும் இனம் முக்கியமாய் கிழக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில்
இருந்தது. முண்டா மொழிகளுக்குத் தாயகம் கிழக்கிந்தியா, அங்கிருந்து
தென்கிழக்கு ஆசியா போனார்கள் என்கிறது மரபணு ஆராய்ச்சி.
ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரீகம் தொய்வுற்ற பின்னர்
ஈரான், மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவை அடைந்தனர்
என்பது தொல்லியல், மொழியியல் நிபுணர்களின் முடிபு.
இது சுமார் 3500+ ஆண்டுப் பழமை வாய்ந்த நிகழ்ச்சி, அன்றிலிருந்து
மிகச் சமீப காலம் வரை ஆரியர்கள் பாரசீகம் போன்ரவற்றில் இருந்து
வந்துகொண்டே உள்ளனர். வடநாட்டு வரலாற்றைப் பார்த்தால்
இது தெரிகிறது. பஞ்சாப் (இருக்கு வேதம் பாடப்பட்ட இடம்),
காஷ்மீர், ... இன்று ஈரானிய சம்பந்தம் மிக அதிகம்.
> அந்தப் பதம் ஒரு மொழி (தமிழ்?) பேசும் கூட்டத்தாரைக் குறித்தால்,
> இந்தியா முழுதும் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
>
பல இருக்கின்றன. மொழியியல் புத்தகங்களைப் பாருங்கள்.
> தற்போதைய காலங்களில் தான் தமிழ் பேசும் மக்கள் ஏராளமான எண்ணிக்கையில்
> இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள்,.. தொழில்
> வளர்ச்சி, வாய்ப்புகள் என்று பல காரணங்கள்... “குறுகி விட்டது” என்பது
> தவறு.
>
நல்லது. “தமிழ்” என்ற சொல்லை திராவிட என்ற பொருளில் உபயோகித்தேன்.
நா. கணேசன்