Please answer

41 views
Skip to first unread message

Kandiah MURUGATHASAN

unread,
Aug 12, 2025, 6:28:57 AM8/12/25
to mint...@googlegroups.com
தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களின் மொழி என்ன ?.ஏனெனில் இலங்கையை ஆட்சி செய்த பண்டாரநாயக்கா? இப்பெகாழுது ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திஸநாயக்கா எல்லோருமே நாயக்கர் வம்சவத்தவர்கள் என அறியப்புடகின்றது. விளக்கம் தேவை

தேமொழி

unread,
Aug 12, 2025, 2:35:38 PM8/12/25
to மின்தமிழ்
///தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களின் மொழி என்ன ?////

சுருக்கமான பதில்: தெலுங்கு  

விரிவான விளக்கம் : 
பெரும்பாலும் ஆட்சியைப் பிடிக்கும் அயல்நாட்டினர் தங்கள் மொழியில் கல்வெட்டுகள் கொடுப்பார்கள்.  பிறகு,  சில தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்கள் தலைமுறையினர் வட்டார வழக்கில் மாறிவிடுவார்கள்.  இது வழக்கம். பல்லவர்களின் ஆரம்பக் காலக் கல்வெட்டுகள் கிரந்தக் கல்வெட்டுகள்.  அவ்வாறே  பிற்காலத்தில் வந்த நாயக்க, விஜயநகர மன்னர்களின் தெலுங்குக் கல்வெட்டுகளும்  தமிழகத்தில் கிடைக்கும்.  பார்க்க http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=4 கட்டுரை மூன்றாம் பத்தி. 

தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் காலத்தில் தமிழ் மண்ணில் தெலுங்கு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/
சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நான்கு தெலுங்கு மொழிக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
திருவல்லிக்கேணி கோவில் :
கல்வெட்டுக்   குறிப்பு எண்: 91 தெலுங்கு    16 ம் நூற்றாண்டு  1585 ரங்க ராயர் 
கல்வெட்டுக்   குறிப்பு எண்:90  தெலுங்கு   16-17  ம் நூற்றாண்டு 
கல்வெட்டுக்   குறிப்பு எண்:65  தெலுங்கு  18 ம் நூற்றாண்டு 
கல்வெட்டுக்   குறிப்பு எண்:69  தெலுங்கு   19 ம் நூற்றாண்டு 
 
1585 ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட ஒரு தெலுங்குக் கல்வெட்டு உள்ளது. இந்த ஒரு கல்வெட்டைத் தவிர மற்றுமுள்ள 4 விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழில்தான் வெட்டப்பட்டுள்ளன.
- 1585 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெட்டப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு (1967/81k) தெள்ளியசிங்கப் பெருமாள், வேதவல்லி நாச்சியார், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநட்சத்திரங்கள் வரும் திருநாட்களில் செய்யப்பட வேண்டிய கைங்கர்யத்திற்காகத் தயிர்ச்சோற்றுடன், தோசை, ஆப்பம், வடை, பானகம், பணியாரம், பொங்கல், தளிகை(அமுது) யுடன் கூடிய அமுதுபடி செய்விக்கும் சமையலுக்குத் தேவையான பொருட்களாக வெண்ணெய், நெய், பால், புளி, வாழைப்பழம், தயிர், பால், வெல்லம், அரிசி ஆகியனவும்; வழிபாட்டுக்குச் சந்தனம், சாம்பிராணி, பூக்கள், வெற்றிலை, வாழைப்பழம் போன்றவையும் வழங்கக் கொடை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. 

மேலும், நாயக்கர் காலத்தில் தெலுங்கு  மொழி இலக்கியங்களும், இசையும் கலைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது. 

K. Jeyapalan

unread,
Aug 13, 2025, 9:22:43 AM8/13/25
to மின்தமிழ்
இலங்கையில் பெயர்களில் நாயக்கா, பிள்ளை

நாயக்கா
இலங்கையில் சிங்களவரிடையே காணப்படும் பெயர்களில் பண்டாரநாயக்கா, சேனநாயக்கா, திஸாநாயக்கா போன்ற பெயர்கள் எங்களுக்குப் பழக்கமான சில. இவற்றில் சாதிகள் இருப்பதாகப் பலர் விளங்கிக்கொள்வது வேடிக்கையான ஒன்று. அதாவது இந்தியாவில் இருக்கும் நாயக்கர் என்ற சாதியினரில் இருந்து வழிவந்த மக்கள் தான் மேற் கூறிய பெயர்களுக்குரியவர்கள் என்று சில இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஓரிருவர் அப்படி இருக்கலாம். ஆனால் பெருவாரியானவர்கள் அப்படி அல்ல. சிங்களவர்களில், யாரும் நாயக்க சாதியால் அடையாளம் காணப்படுவதும் இல்லை.
இலங்கையர் பெயர்களில் இந்தச் சாதிப்பெயர்கள், சாதி என்று குறிப்பிடாமல் ஒரு பெயராகப் பயன்படுவதைப் பல இடங்களில் காணலாம். திஸ்ஸ, பண்டார, சேனா  என்பவை சாதாரணமாக சிங்களவரிடையே காணப்படும் பெயர்கள். இப்பெயர்களை மேலும் அலங்கரிக்க நாயக்கா என்று சேர்த்து புதிய பெயரை உருவாக்கி விடலாம். எடுத்துக்காட்டாக, கண்ணன் என்ற பெயரைக் கண்ணப்பன் என்றும், சிவன் என்பதை சிவலிங்கம் என்றும் மலர் என்பதை மலர்விழி என்றெல்லாம் பெரிதாக்கி வைக்கிறோமே அதே போல்.
நாயக்கா என்ற பெயர் சாதியோடு தொடர்புபடுவதால், அப்படியான பெயருள்ளவர்களையும் அவ்வாறே எண்ணுவது சரியல்ல.

பிள்ளை
இதேபோல இலங்கைத் தமிழரிடையே காணப்படும் வேலுப்பிள்ளை, ஐயம்பிள்ளை, கந்தப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை போன்ற பெயர்களை இந்தியாவில் இருக்கும் பிள்ளை என்ற சாதியுடன் தொடர்பு படுத்துவதும் பிழையே. இலங்கையில் எல்லாச் சாதியினரிலும் இத்தகைய பெயர்களை நாம் காணலாம்.  கந்தையர், சுப்பையர், பொன்னையா போன்ற பெயர்கள் கூட பலருக்கு உண்டு. இங்கே சாதியும் இல்லை குலமும் இல்லை.  வெறும் பெயர்கள் மட்டுமே.
உண்மையில் பிள்ளை என்பது மகன் அல்லது மகள் என்பதற்கு ஒத்த சொல்லாக வழங்கப்படும் ஒரு சொல்.  அதனடிப்படையில் அலங்கரிக்கப்பட்ட பெயர்கள் அவை.
இதேபோல் நாயகம் அல்லது நாயகன் என்ற பொருளில் அமைந்த தமிழ்ப் பெயர்கள் சிங்களத்தில் வழங்கப்படும்போது, நாயகா என்று வரும். அதுவே பின்னர் நாயக்கா என்றாகியிருக்கலாம். சீதா என்பது இப்போதெல்லாம்  சீத்தா  என்று புழங்கப்படுவது போல்.
இப்படியாக இருக்கும்போது, இலங்கையிரின் பெயர்களுக்கும் சாதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்த முனைவது மொட்டந்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலவே.

Reply all
Reply to author
Forward
0 new messages