தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் வெளியீடு

608 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 1, 2022, 2:23:48 AM2/1/22
to மின்தமிழ்
dr sasikala book.jpg
நண்பர்களுக்கு இனிய செய்தி ...  
நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக மேலும் ஒரு நூல் அச்சுக்கு இன்று அனுப்பி விட்டோம்.  வரும் வார இறுதிக்குள் நூல்  கைவசம் வந்து விடும். தமிழகத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் முனைவர்.கோ. சசிகலா அவர்கள் எழுதிய நூல்...  
வாசிக்கக் காத்திருங்கள்...

அன்புடன் 
முனைவர் க. சுபாஷிணி 
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 

தேமொழி

unread,
Feb 3, 2022, 5:33:52 AM2/3/22
to மின்தமிழ்
https://academy.tamilheritage.org/category/thf-publication/books-thf-publication/

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் வெளியீடு


தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்

drsasikala-book.jpg

தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
விலை: ₹150
ஆசிரியர்: முனைவர் கோ. சசிகலா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: தொல்லியல் , கல்வெட்டு

____________________________________________________

வரலாற்றில் பொய்கள்

dr themozhi-book.jpg

வரலாற்றில் பொய்கள்
விலை: ₹100
ஆசிரியர்: முனைவர் தேமொழி
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: வரலாறு

____________________________________________________

கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்

duraisuntharam-konku-natu-tholliyal-chinnangal.jpg

கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
விலை: ₹140
ஆசிரியர்: துரை சுந்தரம்
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: கல்வெட்டுகள்

____________________________________________________

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

duraisundharam-kongu kalvettu.jpg 

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்
விலை: ₹150
ஆசிரியர்: துரை சுந்தரம்
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: கல்வெட்டுகள்

____________________________________________________

கீழக்கரை வரலாறு

keezhakkarai-varalaaru book.jpg 

கீழக்கரை வரலாறு
விலை: ₹285
ஆசிரியர்: எஸ். மஹ்மூது நெய்னா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: வரலாறு 

____________________________________________________


dr subjashini-tho-pa-book.jpg

அறியப்பட வேண்டிய தமிழகம்
விலை: ₹80
ஆசிரியர்: தொ. பரமசிவன்
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: கட்டுரை
பொருண்மை: மானுடவியல்

____________________________________________________

நாகர் நிலச் சுவடுகள்

maya -nakar-book.jpg

நாகர் நிலச்சுவடுகள் – இலங்கை பயண அனுபவம்
விலை: ₹100
ஆசிரியர்: மலர்விழி பாஸ்கரன்
பதிப்பு:தமிழ்
மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
வகை: பயணக்குறிப்பு
பொருண்மை: ஈழம் 

____________________________________________________


sanna-thiruvalluvar-yaar.jpg

திருவள்ளுவர் யார்?  – கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்
விலை: ₹200
ஆசிரியர்: கௌதம சன்னா
பதிப்பு:தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
மொழி: தமிழ்
வெளியீடு: 2021
 வகை: கட்டுரை
பொருண்மை: இலக்கியம் 

____________________________________________________

THIRUVALLUVAR’S PROSE – CAEMMERER

Frederick-Book.jpeg 

THIRUVALLUVAR’S PROSE – CAEMMERER
விலை: 25 யூரோ
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
வெளியீடு – 2019 

____________________________________________________

DER KURAL DES TIRUVALLUVER – KARL GRAUL

Karl-book.jpeg

DER KURAL DES TIRUVALLUVER – KARL GRAUL
விலை: 25 யூரோ
பதிப்பாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்
வெளியீடு – 2019 

____________________________________________________

தேமொழி

unread,
Feb 15, 2022, 4:45:18 PM2/15/22
to மின்தமிழ்
THFi Publication Books.jpg



நாளை தொடங்கி நடைபெற உள்ள 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் கிடைக்கின்றன.
இந்நூல்களை வாங்கி நமது பதிப்பகத்தை ஊக்குவித்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

--

தேமொழி

unread,
Feb 18, 2022, 4:04:03 PM2/18/22
to மின்தமிழ்


book release.jpg

 சனிக்கிழமை  மாலை - 3 நூல்கள் வெளியீடு 
(F6 - எமரால்டு & எழிலினி பதிப்பகக் கடை) இரண்டாவது நுழைவாயில்..
நேரில் வந்து கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது...

-தமிழ மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு.

தேமொழி

unread,
Feb 19, 2022, 3:58:24 PM2/19/22
to மின்தமிழ்

source: https://www.facebook.com/subashini.thf/posts/3270430406533667


45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மூன்று நூல்கள் வெளியீடு கண்டன

book release.jpg
--------------------------------------------------------------------

தேமொழி

unread,
Feb 19, 2022, 9:41:38 PM2/19/22
to மின்தமிழ்
Nanaa review.jpg
ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை நான்
என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு….
பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே…

எம்ஜிஆரும் வாலியும் இணைந்த இந்த வரிகள்
பட்டிதொட்டியெல்லாம் பிரசித்தம் என்றாலும்

இன்றும் கேள்வி கேட்பதே குற்றம் எனும்
சூழல்நிறைந்த நிலைமை….ஏனெனில்,
தலைமை அதை விரும்புவதில்லை…
அது…அரசியலோ …ஆன்மீகமோ…ஆண்ட சாதியினரோ….ஐடி கம்பெனிகளோ
பண்ணையார்களோ…எல்லாக் காம்பவுண்ட்களுக்கும் பொருந்தும் எழுதப்படாத விதி…

8000 கோடிப் பேருக்கு 5000 கோடி…மதுவந்திகளும்
2000 நோட்டுல சிப் ன்னு சொன்ன சிப்பு நடிகர் என காணொளிகள் ஒரு கட்டத்துக்கு மேல் காமெடி மீம்ஸாக பரிணாமம்  பெற்று இன்றும் காணக்கிடைக்கின்றன…
தவறான செய்திகளுக்குக் கொடுத்த  முக்கியத்துவமும் கொட்டை எழுத்து என்னும் 72 பாயிண்ட் சைஸ் எழுத்துகள்…
’தவறுக்கு வருந்துகிறோம்’ என்ற வரிகளுக்கு
பாவிக்கப்படுவதில்லை..

வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது
போல… ஓடும் பொதுவெளி வாழ்க்கையில்
பொய்ச்செய்திகளைச் தோலுரிக்க யாருக்கும்
நேரமில்லை.
இந்த அவசர உலகிலும்
குமரிக்கண்டம் என்னும் புனைவையும்
பிக்கோலிம் உடன்படிக்கை… சிந்து சம்வெளியின் குதிரை முத்திரை…..சரஸ்வதி நதி….
தாண்டி…வரலாற்றில் பொய்கள்…அடுத்தடுத்து எனது அபிமான நண்பர் முனைவர்  தேமொழி அவர்களின்  ஆய்வெழுத்தில்
தொடராக வந்து தோலுரிக்கப்படவேண்டும்…
( அட்டையில் ஒரு பழைய ஆவணப் பேப்பரை உரிப்பது போல)
அதற்கும் நானே ..நாணா.. அட்டைப்படம்
வடிவமைக்கப் படவேண்டும்…என்று
எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு…

அவரவர் பார்வையில் …’வரலாற்றில் பொய்கள்’ நூலை முழுமையாகப்
படித்துவிட்டு …கிடைக்கின்ற மெய்ப்பொருளை
புத்தக விமர்சனமாக எழுதிப் பதிவிட வேண்டி
விடைபெறுகிறேன்…
எழுத்து ஓவியன்
நாணா..

தேமொழி

unread,
Feb 20, 2022, 1:01:06 AM2/20/22
to மின்தமிழ்

release.jpg

45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்
*தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள் வெளியீடு*
யூடியூப் காணொளியாக ...
https://youtu.be/lLHt7SwUvmg
 - கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்
 - தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
 - வரலாற்றில் பொய்கள்
#THFi, #BookRelease, #ChennaiBookFair2022

Iraamaki

unread,
Feb 20, 2022, 1:47:05 AM2/20/22
to mint...@googlegroups.com
வாழ்த்து, தேமொழி.
அதற்கும் நானே .நாணா.. அட்டைப்படம்
வடிவமைக்கப் படவேண்டும்…என்று
எனது சிற்றுரையை முடித்துக்கொண்டு…

அவரவர் பார்வையில் …’வரலாற்றில் பொய்கள்’ நூலை முழுமையாகப்
படித்துவிட்டு …கிடைக்கின்ற மெய்ப்பொருளை
புத்தக விமர்சனமாக எழுதிப் பதிவிட வேண்டி
விடைபெறுகிறேன்…
எழுத்து ஓவியன்
நாணா..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7ac89c6c-ffbb-40da-a413-65490a62ec50n%40googlegroups.com.
Nanaa review.jpg

தேமொழி

unread,
Feb 20, 2022, 2:03:25 AM2/20/22
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா  😃

தேமொழி

unread,
Feb 23, 2022, 10:57:39 PM2/23/22
to மின்தமிழ்


Dr S Chandni Bi.jpg

Dr pappa.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக மேலும் இரு நூல்கள்...
1. விளையாடிய தமிழ்ச்சமூகம்
- முனைவர் ஆ பாப்பா
2. கல்வெட்டில் தேவதாசி
- முனைவர் சாந்தினிபீ

நாளை தொடக்கம் 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் F6, 433 அரங்குகளில் கிடைக்கும்.
இந்த இரு நூல்களின் வெளியீடு வருகின்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை புத்தகக் கண்காட்சியில் திட்டமிடப்பட்டு வருகிறது... உங்கள் அனைவரின் வருகை உறுதி செய்து கொள்ளுங்கள்...!

தேமொழி

unread,
Feb 25, 2022, 2:35:54 AM2/25/22
to மின்தமிழ்

suba book.jpg
கிழக்காசிய நாடுகளுக்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்புகள்,
கிழக்காசியாவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள்,  
ராஜேந்திர சோழனின் கடற்படை தாக்குதல்,
ஸ்ரீவிஜயப் பேரரசின் வணிக ஆளுமை,  
குலோத்துங்கனின் கடற்படை,  
சீனாவின் பௌத்த பிக்குகள் நாகப்பட்டினம் வந்த செய்திகள்..  
அவற்றோடு..
தமிழ்ப்பல்கலைக் கழக கடல்சார் தொல்லியல் துறை தலைவர் டாகடர்.வீ செல்வகுமார் அவர்களது அணிந்துரையுடன்...  



தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக  
முனைவர் க. சுபாஷிணியின் நூல்
"ராஜராஜனின் கொடை"
வெளியீடு காண்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சியில்
சென்னை புத்தகக் காட்சி - விற்பனையில்
ஆழி பதிப்பகம் அரங்கம் - 433
எமரால்ட் பதிப்பகம் அரங்கம் - F6

 

தேமொழி

unread,
Feb 25, 2022, 2:58:28 AM2/25/22
to மின்தமிழ்

சென்னை புத்தகக் காட்சி - விற்பனையில்
ஆழி பதிப்பகம் அரங்கம் - 433
எமரால்ட் பதிப்பகம் அரங்கம் - F6
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் 

THFi-Books.jpg
-

முனைவர் க. சுபாஷிணியின் நூல்
RajaRajanin Kodai.jpg
--

முனைவர் சாந்தினிபீயின் நூல்
Kalvettil Devathasi.jpg
--

முனைவர் ஆ பாப்பாவின் நூல்
Vilaiyadiya Thamizhch Samoogam.jpg
--

முனைவர் கோ. சசசிகலாவின் நூல் 
Thamizhnattuk Kadavularum Marabugalum.jpg
---

முனைவர் தேமொழியின் நூல் 
Varalatril Poigal.jpg
---

திரு. துரை  சுந்தரத்தின் நூல் 
Kongu Nattu Tholiyal Sinnangal.jpg 
---

திரு. கௌதம சன்னாவின் நூல் 
Thiruvalluvar Yar.jpg
---

முனைவர் க. சுபாஷிணியின் நூல் 
Ariyappadavendiya Thamizhagam.jpg
---

திருமிகு மலர்விழி பாஸ்கரனின் நூல் 
Nagar Nilachchuvadugal.jpg
------------------------




தேமொழி

unread,
Feb 25, 2022, 7:44:43 AM2/25/22
to மின்தமிழ்
invite.jpg

நாளை நடைபெறவுள்ள நமது நூல் வெளியீட்டு விழா பற்றிய நிகழ்ச்சி அறிவிப்பு. 
அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தேமொழி

unread,
Feb 26, 2022, 12:16:01 AM2/26/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/photo/?fbid=3275272042716170&set=a.1388119661431427
THFi- books release .jpg
Subashini Thf is with Pappa and 
2 others

தமிழ் மரபு அறக்கட்டளையின் 4 நூல்கள் இன்று மாலை வெளியீடு காண்கின்றன.
நூலாசிரியர் நால்வருமே பெண் வரலாற்றாய்வாளர்கள் என்ற சிறப்புடன்...

சென்னை புத்தகக் கண்காட்சி 2022
அரங்கு எண்:433
நேரம்: மாலை 6 மணி

நூல்கள்:
1.விளையாடிய தமிழ்ச்சமூகம் -நூலாசிரியர்: ஆ.பாப்பா
2. ராஜராஜனின் கொடை -நூலாசிரியர்: க.சுபாஷிணி
3. நாகர் நிலச் சுவடுகள் -நூலாசிரியர்: மலர்விழி பாஸ்கரன்
4.கல்வெட்டில் தேவதாசி -நூலாசிரியர்: எஸ்.சாந்தினிபீ

நேரில் வந்து நூல்களைப் வாங்கிக் கொள்ளலாம்.

நண்பர்களே - நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்களை நேரடியாக சென்னை புத்தகச் சந்தையில் சென்று பெற இயலாதவர்கள் இணையம் வழியாகவும் பெறலாம்.
நமது நூல்களை இணையம் வழி எளிதாகப் பெற

https://knightshopper.com/?fbclid=IwAR0kKGy6HafDdrsSpLxIpb39D1zCHu2k2w8Pla_bWTYqHH6MxSqDXJ7_I5o

தேமொழி

unread,
Feb 26, 2022, 4:37:25 PM2/26/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/subashini.thf/posts/3275776972665677

Subashini Thf is feeling thankful with Arasu Chellaiah and 
3 others

தமிழ் மரபு அறக்கட்டளையின் நான்கு நூல்கள் வெளியீடு இன்று 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த தோழர்கள் முனைவர் சங்கர சரவணன், முனைவர் அரசு செல்லையா, தோழர் அ.முத்துகிருஷ்ணன், தோழர் வாஷிங்டன் சிவா, தோழர் நானா, தோழர் கோ எழில், தோழர் ஆர்.எம் பாபு, தோழர் ஆழி செந்தில்நாதன் மற்றும் இந்த சிறிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி

1.jpg

2.jpg

3.jpg

10.jpg
-------------------------

தேமொழி

unread,
Feb 27, 2022, 3:30:52 AM2/27/22
to மின்தமிழ்
நேற்று கண்காட்சித்திடல் கடல் போலக்காட்சியளித்தது. வாசிப்புக்கு வசப்பட்ட உள்ளங்கள் இத்தனையா என்று உள்ளம் பூரித்துத்தான் போனது. தினம் கூட்டம் கூடிக்கொண்டே போவதாக அரங்கு அமைப்பாளர் ஒருவர் சொன்னார். 
எப்படியோ கூட்டத்தில் நீந்தி ஆழிக்கு வந்துவிட்டோம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் புத்தக வெளியீடு. தமிழ் மரபு சார்ந்த முன்னெடுப்புகளில் தெளிவான திட்டத்தோடு பாதை வகுத்துத் தொடர்ச்சியான ஈடுபாட்டைக்காட்டி வரும் அமைப்பாக தமிழ் மரபு அறக்கட்டளை வளர்ந்து வரக்காண்கிறேன். இதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமது நேரத்தைத் தமிழுக்காகவும் தமிழாய்வுக்காகவும் செலவு செய்யத்தயாராக ஒன்று கூடியிருக்கும்  இக்குழுவின் உறுப்பினர்களைத்தாம். நேற்று அது மீண்டுமொரு முறை காட்சிப்படுத்தப்பட்டது. குழுவினர் யாவரும் பொறுப்புகளை அத்தனை அழகாக எடுத்துச்செய்தனர். 

மிக எளிமையாக ஆனால் சிறப்பாக நான்கு நூல்கள் வெளியீடு கண்டன. நான்கு பெண்ணாசிரியர்களின் நூல்களை நான்கு ஆண் ஆளுமைகள் பெருமையோடு வெளியிட நால்வர் அதைப்பெற்றுக்கொண்டு நூல்களை அறிமுகப்படுத்திப்பேசினர். மகிழ்ச்சி.
குறுகிய காலத்தில் கேட்டும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வந்து நூலை வெளியிட்டுத்தந்தது மனநிறைவு. திடீரென சு.வெ அவர்கள் அரங்குக்கு வந்தது இன்னொரு இன்ப அதிர்ச்சி. தமிழாய்வின் பலவேறு தளங்களில் நின்று பணிசெய்து கொண்டிருக்கும் இவ்வமைப்பு ஆய்வுலகின் மிக முக்கியமான பதிப்புத்தளத்துக்குப் பரிணமித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்த முயற்சியின் துவக்கத்திலிருந்து இன்றைக்குள்ளாக பதிப்பகக்குழு தன்னைத்தானே திருத்தி மெருகேற்றிக்கொண்டிருப்பதை குழுவின் உறுப்பினராக நன்கறிவேன். மேலும் இக்குழு பற்பல அரிய ஆய்வுநூல்களை சிறந்த தரத்தில் பாரபட்சமற்ற நோக்கில் படைக்க வழிசெய்யும், ஆய்வுநூல் பதிப்புலகில் தனித்ததொரு இடத்தைப்பிடிக்குமென்ற நம்பிக்கை வருகிறது.
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

நாம் போற்றும் தமிழ்
நம்மை வழிநடத்தும் 

மலர்விழி பாஸ்கரன் 



Dr.Chandra Bose

unread,
Feb 27, 2022, 3:39:21 AM2/27/22
to mint...@googlegroups.com
Gallop என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழ் மரபு அறக் கட்டளையின் பதிப்புத்துறை அத்தகைய பெருந்தாவல் அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முனைவர் சுபா, எழுத்தாளர்கள் மற்றும் சார்ந்த குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். வேள்பாரி புதினம் தந்த பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சு.வெங்கடேசன் கலந்து கொண்டது பெருமைக்குச் சிறப்பு சேர்க்கிறது.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 1, 2022, 8:28:41 PM3/1/22
to மின்தமிழ்
Wisdom Kart THFi Books.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீட்டு நூல்கள் அனைத்தையும்
https://wisdomkart.in/ இணையத்தளம் வழி 15 % சதவீத சலுகையுடன் வாங்கலாம் !

Use coupon " FIFTEEN" and get 15% discount on all our Tamil Heritage Foundation International Publication books
Contact: Jothi @ 9884912020

Dr. Mrs. S. Sridas

unread,
Mar 1, 2022, 10:13:58 PM3/1/22
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் தேமொழி அவர்களுக்கு,

வணக்கம்.
இந் நூல்கள் மின்வடிவில் கிடைக்குமா? இவற்றை இறக்குமதி செய்வதாயின் நூல்களின் விலையை விடப் பத்து மடங்கு செலவாகும். 
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 1, 2022, 10:16:46 PM3/1/22
to மின்தமிழ்
விரைவில் ஆமசான் வழியாக கிண்டில்  நூல்களாக வெளியாக உள்ளது முனைவர் ஸ்ரீதாஸ் 

Dr. Mrs. S. Sridas

unread,
Mar 1, 2022, 11:39:34 PM3/1/22
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர் தேன்மொழி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
Apr 14, 2022, 5:35:14 PM4/14/22
to மின்தமிழ்
Durai Sundaram Books.jpg


கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் - ரூ 140/-
கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் - ரூ160/-
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப்பிரிவின் வெளியீடுகள்.
இந்த நூல்களைப் பெற விரும்புவோர்
வலைப்பக்கம் சென்று நூல்களைப் பெறலாம்.
அல்லது வருகின்ற சனிக்கிழமை உடுமலைப்பேட்டையில் நடைபெறுகின்ற நூல் வெயீட்டு விழாவிலும் இந்த நூல்களை நேரடியாகப் பெறலாம்.


தேமொழி

unread,
Apr 14, 2022, 10:41:00 PM4/14/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப்பிரிவின் வெளியீடுகள்

இந்த நூல்களைப் பெற விரும்புவோர்
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/
வலைப்பக்கம் சென்று நூல்களைப் பெறலாம்.


@ wisdomkart
https://wisdomkart.in/books-category/tamil-heritage-foundation/


THFi Books on sale.jpg

-----------------------------------

@ commonfolks
THFi Books on sale 2.jpg
-----------------------------------

தேமொழி

unread,
Apr 20, 2022, 1:47:28 AM4/20/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3316165541960153&set=a.1388119661431427


இவ்வாரம் சனிக்கிழமை மாலை கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் அமைந்த தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல் திறனாய்வு நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்க தயாராகுங்கள். அதற்கு முன்னர் இந்நூலை வாங்கி வாசித்து விட்டால் திறனாய்வில் பங்கெடுக்கவும் கேள்விகள் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும் அது உதவும்.

நூல் விலை: ரூ160/- மட்டுமே.

நூலைப் பெற

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/

நூல் விலை: ரூ160/- மட்டுமே

durai sundaram book kongu inscriptions.jpg
----------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 22, 2022, 1:49:45 AM4/22/22
to மின்தமிழ்
Durai Sundaram Books.png

நண்பர்களே.

இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஆவணப்படுத்தப்படாத வரலாற்று சின்னங்களையும் கல்வெட்டுகளையும் ஊர் ஊராக, கிராமங்களில், வயல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடித்து அவற்றை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதி வந்தவர் மறைந்த வரலாற்றாசிரியர் துரை சுந்தரம் அவர்கள். அவரது இரண்டு நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

நூல்களின் விலை மிகக் குறைவு.
நூல்களை வாங்கி தமிழ்நாட்டில் கொங்குப் பகுதியின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள்.

பல்வேறு விஷயங்களை நாம் தொடர்ச்சியாக பேசுகிறோம்.
ஆனால் சிரமப்பட்டு ஆய்வு செய்து ஊர் ஊராக தேடிச் சென்று நமது ஆய்வாளர்கள் உருவாக்கிய நூல்களை வாங்கிக் கொள்வதற்கு நாம் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தக் குழுவில் உள்ள எத்தனை பேர் இந்த இரண்டு நூல்களை வைத்திருக்கின்றீர்கள்? இதுவரை வாங்க வில்லை என்றால் இன்றைய வாங்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

இணையம்வழி ஆர்டர் செய்தால் உங்களை நூல் வீடு தேடி வந்து சேரும்.

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

-- சுபா 
#whatsappshare

தேமொழி

unread,
May 20, 2022, 2:42:11 AM5/20/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=3340540589522648&set=a.1388119661431427

 · 8m  · 

suba book.jpg
நாம் எழுதிய நூலுக்கு பாராட்டுரைகள் வரும் போது மகிழ்ச்சி அல்லவா..? 
------
Financial management for non financial managers என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். சிறப்பான தகவல்கள் அடங்கியது. அதிலிருந்தே வரலாற்றாசிரியராக படித்து வராமல் வரலாற்றின் மீது கொண்ட காதலால் வரலாற்றை தேடி அறிந்து நம்முடனும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வலர்கள் அறிஞர்கள் இவர்களது கருத்து மிகவும என்னை ஈர்க்கும். அந்த வகையில் நமது குழுமத்தில் வழக்கறிஞர் காந்தி..furniture கடை அதிபர் மாரி ராஜன்.. கணினி அறிஞர் தேமொழி போன்றோர் பகிரும் வரலாற்றுத் தரவுகள் மிகவும் என்னை ஈர்க்கும்.. நானும் கட்டிடம் சார்ந்த தொழில் செய்யும் ஒரு வரலாற்று ஆர்வலர்.

இந்த வகையில் பேராசிரியர் நா கண்ணன் --கணினி முனைவர் சுபாஷினி அவர்கள் நிறுவிய நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் வியக்கத்தக்கது.. பரந்து விரிந்து பல்வேறு அறிஞர்களையும் உள்ளடக்கி இன்றைய மற்றும் நாளைய பன்னாட்டு இளைஞர்களுக்கு நமது தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் வரலாற்று ஏற்றத்தையும் பகிர்ந்தளித்து தன்னலமில்லாத சிறந்த சமுதாய வளர்ச்சி பணியினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னை பொருத்தவரை ராஜராஜன் ஒரு உன்னதத்தின் உச்சியை உடனடியாக நமக்குள் எழுப்பும் தீப்பொறி.

டாக்டர் சுபாஷினி எழுதிய ராஜராஜனின்கொடை மற்றும் தேமொழியின் வரலாற்றில் பொய்கள் நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இருந்தும் படிப்பதற்கு தாமதமாகிவிட்டது ‌. டாக்டர் சுபாஷினியின் ராஜராஜனின் கொடை நூல் அவரது கணினி பின் புலம் காரணமாக லேஅவுட் திட்டமிடல் - செயல்படுத்தல் எதிர்கால சிந்தனை போன்றவைகளுடன் மிக அருமையாக வெளிவந்திருக்கிறது... இதனை "மாற்றுரைத்து" சொக்கத்தங்கம் என வியக்கிறார் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.. அப்படி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க படிக்கத் துவங்கினால் பிரமித்துப் போகிறோம்... ராஜராஜனின் கொடை அண்மைக்கால ஆய்வு அறிஞர்களின் பெரும் கொடையை உள்ளடக்கிய சிறப்பான முன்னெடுப்பு.. இனி அந்த நூலைப் பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜராஜனின் கொடை.. எளிமையான தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் சுபாஷிணியின் கருத்தாழம் கொண்ட ஆய்வுப் பேழை. செய்வன திருந்தச் செய் என்ற கொள்கை பிடிப்பில் தீவிரமானவராய் ஒளிர்கிறார். கணினி சார்ந்த ஆய்வுப் பட்டம் பெற்ற சுபாஷிணி‌ - முனைவர் தேமொழி போன்றோரின் பார்வை - விருப்பு வெறுப்பற்ற - சுத்திகரிக்கப்பட்ட - தமிழ் கூறும் நல்லுலகம் சார்ந்த சமகால வரலாற்று பார்வை. பதிப்புரையிலேயே அசத்துகிறார் முனைவர் தேமொழி. அணிந்துரையில் அருமையான கருத்துக்களை உதிர்க்கிறார் தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.

உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் நிறுவப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வரலாற்றிற்கு பெரும் பங்களிப்பை ஈந்துள்ளது. குறிப்பாக மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் ராஜவேல் அவர்கள். முனைவர் ஜெயக்குமார் ‌, முனைவர் செல்வகுமார் காலஞ்சென்ற எனது அருமை நண்பர் அதியமான் ஆகியோரின் பங்களிப்பு போற்றத் தகுந்தது.. அதிலும் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் நாகப்பட்டினம் புத்த விகாரம் குறித்த கடல் சார்ந்த ஆய்வுத் தகவல்கள் மிகவும் சிறப்பானவை. சிங்கப்பூரில் நடந்த தமிழக வரலாற்று ஆய்வு மாநாட்டுக் குறிப்புகள் " நாகப்பட்டினம் - சுவர்ணதீபம்" என்ற தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியானதில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் சூடாமணி விகார ஆய்வுக் கருத்துகளும் அடக்கம். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் களஞ்சியமான இத்தகைய ஆய்வு கருத்துக்கள் பலரையும் சென்று சேரவில்லையே என்ற கவலை என்போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு இருந்து வந்தது.. அதனை துடைத்தெறிந்து கடந்த 30 ஆண்டுகளுக்குள் தமிழக வரலாறு - குறிப்பாக சோழ வரலாறு - அதிலும் ராஜராஜன் - ராஜேந்திரன் -குலோத்துங்கன் ஆகிய மன்னர்களின் பௌத்தம் சார்ந்த கொடைகளை தேர்ந்தெடுத்து அவை அடங்கிய பெரிய லெய்டன் - சிறிய லெய்டன் செப்பேடுகளை - அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்து அருமையான புகைப்படங்களுடன் சுவைமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்காக தொகுத்து பகிர்ந்துள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள்.

பொ.ஆ. 1006ல் ஸ்ரீவிஜய வணிக குழுக்களின் பௌத்தமத வழிபாட்டிற்காக நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலியாக ராஜராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய அரசர்கள் அங்கு ஒரு புத்த விகாரம் எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீவிஜயம் மற்றும் சீன வணிகர்கள் நாகப்பட்டினம் பின் இலங்கை என பௌத்த யாத்திரை மேற்கொண்டனர். ஆயினும் ஸ்ரீவிஜய மன்னர்கள் சீனப் பேரரசரிடம் சோழ மன்னர் பரம்பரை தங்களுக்குள் அடங்கியது என்ற வகையில் திரித்துக் கூறிய தகவல்கள் மாமன்னன் ராஜேந்திர சோழனின் செவிகளை எட்டியது. எனவே 1018ல் ஸ்ரீவிஜயத்தின் மீது படை எடுத்து அதனை சோழப்பேரரசின் சிற்றரசாக ஒடுக்கினான். இதற்கான கல்வெட்டு ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் சீன வரலாற்று பதிவுகளில் உள்ளது.

இவை போன்ற புதிய தரவுகளை சாஸ்திரி - பண்டாரத்தார் போன்ற அறிஞர்களுக்கு பிறகு வரலாற்றறிஞர் மகாலிங்கம்‌ TN ராமச்சந்திரன் மயிலை சீனி வேங்கடசாமி முனைவர் ஜெயகுமார் போன்றோரின் அண்மைக்கால ஆய்வுகளை தொகுத்து எடுத்து சிறப்பாக வழங்கியுள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள். தொடர்ந்து தமிழகம் வந்து இத்தகைய லெய்டன் செப்பேடுகள் கண்டிப்பாக தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக தொல்லியல் துறை அமைச்சரிடம் கொடுத்து அது தமிழக அரசு மானிய கோரிக்கை அரசாணையாக இடம் பெற்றுவிட்டது.. தொடர்ந்து நெதர்லாந்து அரசும் காலனியாதிக்க நாடு வேறு நாட்டிலுள்ள தனது கலைச்செல்வத்தை முறையாக உறுதி செய்தால் கோரிக்கை விடுக்கும் நாட்டிற்கு கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளது நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பன்னாட்டு அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவுனர் டாக்டர் சுபாஷிணி அவர்களின் செய்வன திருந்தச் செய் என்ற கோட்பாட்டினால் லெய்டன் செப்பேடுகள் ஒரு நாள் சென்னை வந்து சேரும் என்பதில் நமக்கு ஐயமில்லை... டாக்டர் சுபாஷிணி அவர்கள் வருடிப் பார்த்து மகிழ்ந்த அந்த செப்பேடுகளை ஆயிரமாண்டு இன்ப நினைவலைகளுடன் நாமும் வருடி பார்க்கும் நாள் இதோ வந்து கொண்டே இருக்கிறது. அவரது எழுத்திற்கும் செயல்பாட்டிற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்  சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 

[பொன்னியின் செல்வன் குழும தோற்றுநர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களது பதிவு.]

குறிப்பு: நூலை வாங்க விரும்புவோர் இணையம் வழி பெறலாம்: -https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai 
----------------------------

Joseph Patrick

unread,
Jun 7, 2022, 10:32:38 AM6/7/22
to mint...@googlegroups.com
This is a very great job thank you

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 22, 2022, 4:57:02 PM7/22/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=5483836501636708&set=a.306570402696703

thiruvalluvar yar.jpg

திரிவள்ளுவர்

திருவள்ளுவர் ஏறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தார். பாவப்பட்ட மனிதர். ஏறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் தொலைந்து போய்விட்டார். சரியாக என்று வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார், என்று காணாமல் போனார் என்று தெரியாது. இன்று அவரை கோயம்பேடு பஸ்டான்டில் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டிவரச்சொன்னால் கொஞ்சம் கஷ்டம்தான். கையில் கிழிந்த போட்டோ கூட கிடையாது. அவர் எழுதிய பொஸ்தகம் மட்டும் கையில் உள்ளது. எங்கிருக்கிறார் என்று விசாரித்தால் நம் மக்கள் பல கதைகள் சொல்வார்கள். நேற்று கபாலீஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்ததைப் பார்த்தேன் என்பார்கள். சாந்தோம் வாசலில் தோமையாருடன் பார்த்தேன் என்பார்கள். சமணக் கோவிலில் அம்மணமாக உட்கார்ந்திருக்கிறார் என்பார்கள். வடபழனியில் ஒரு பாரில் நேற்று கட்டிங்க் போட்டுக்கொண்டிருந்தார் என்பார்கள்.
அந்த காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஓர் ஆங்கிலேயர் சொன்னது, ‘இவர்களிடம் உங்கள் வரலாறு என்ன என்று கேட்டால் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்’. கதை ஏதாவது ஒரு கடவுளிலிருந்து ஆரம்பிக்கும். அந்த கடவுளைக் கண்டுபிடித்தால்தான் கதையை நிரூபிக்க முடியும். இப்படி ஓர் இடியாப்பச் சிக்கலில் நம் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியதுதான் நம் முப்பாட்டனார் காலங்களில் வாழ்ந்த அறிவாளிகள் நமக்களித்த கொடை.
திருவள்ளுவரைத் தேடியவர்கள் பெரும்பாலும் திருக்குறள் புத்தகத்துக்குள்ளேதான் அவரைத் தேடியிருக்கிறார்கள். ‘ஆதி பகவன்’ என்று சொல்லிவிட்டார், அப்போ அவர்தான். ‘தாமரைக் கண்ணான்’ என்று சொல்லிவிட்டார், அப்போ இவர்தான். நான் முந்தாநேற்று எழுதியதில் குறளி வித்தை பற்றி ஒரு வரியிட்டிருந்தேன். திருவள்ளுவர் குறளி வித்தை செய்து கொண்டிருந்தவர், அந்த குறளி வித்தைக்காரர் எழுதியதால்தான் அதற்குக் குறள் என்று பெயர் வந்தது என்றெல்லாம் கம்பி கட்டியிருக்கிறார்கள். பொய் சொல்லவில்லை. திருவள்ளுவரை வைத்து இப்படி காமெடி செய்தவர்கள்தான் அதிகம். திரிகுறள் எழுதியவரின் கதையைத் திரித்து கத்தரிக்காயாக்கிருக்கிறார்கள்.
கௌதம சன்னாவின் ‘திருவள்ளுவர் யார்?’ திருவள்ளுவரை உருப்படியாக ஆராய்ச்சி செய்யும் ஒரு புத்தகம். திருக்குறள் புத்தகத்துக்கு வெளியே உள்ள அவரைப்பற்றிய ஆதாரங்களை பயாஸ் இன்றி ஆராய்ந்திருக்கும் புத்தகம். கம்பிகட்டிய கதைகளையெல்லாம் பின்னிணைப்பாகக் கொடுத்துவிட்டு பொழுது போகாவிட்டால் வாசித்து மகிழ்ந்து கொள்ளுங்கள் என்று ஒதுக்கிவிட்டு மெயின் புத்தகத்தில் உண்மையை முடிந்த அளவு உரசியிருக்கிறார். இதற்கு கைகொடுத்திருப்பது நூறு ஆண்டுகளுக்கு முன் அயோத்திதாச பண்டிதர் நடத்திய ஆராய்ச்சி. என் போன்ற பலருக்கு இன்றும் தெரியாது என்பது தமிழர்களின் சாபம். சென்னையில் திருவள்ளுவர் பெயரிலேயே ஊரைச் சேர்த்து திருவள்ளூர் என்று ஓர் ஊர் நம் கண் முன்னே உள்ளது. பழங்கால வரலாற்றுச் சுவடுகள் அங்கே உள்ளன. மணிமேகலையில் பேசப்பட்ட ஏரியா. அந்த ஆப்வியஸ் சம்பந்தத்தைக்கூட கவனிக்காமல் மைலாப்பூரில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம்.
நேற்று கையில் கிடைத்தது புத்தகம். இன்று வாசித்து முடித்துவிட்டேன். மிகவும் விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும், எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கும் ஆராய்ச்சிப் புத்தகம். நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு (ஒரே) பொக்கிஷம். திருவள்ளுவர் யார் என்ற சஸ்பென்ஸை இப்போது உடைக்க விரும்பவில்லை. அதை உடைக்க இன்னும் ஆராய்ச்சிகள் வேண்டும். ஏனென்றால் அது நம் ஆட்களாலேயே அழிக்கப்பட்ட ஒரு வரலாறு. திருவள்ளுவர் காணாமல் போனதற்கு நம் முப்பாட்டனார்கள்தான் பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் கூட திருவள்ளுவர் பற்றி ஒரு கோவிலில் கடைசியாக இருந்த ஒரு கல்வெட்டை உடைத்துத் தூர எறிந்திருக்கிறார்கள், இன்னொரு கோவிலைக் கட்ட.
ஆயிரத்து எண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே ஆங்கிலேயர்கள் திருவள்ளுவருக்கு நாணயம் வெளியிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். தாடியில்லாமல்.


தேமொழி

unread,
Jul 22, 2022, 8:50:40 PM7/22/22
to மின்தமிழ்

rajarajanin kodai.jpg

ராஐராஐனின் கொடை

எங்கள் ஊர்ப்பக்கத்தில் கோவில் திருவிழாக்களை ‘கொடை’ என்பார்கள். பெரும்பாலும் கோவில் நிலங்கள், கோவில்களுக்கான வரி விலக்குகள், கோவில் பராமரிப்புகள் யாராவது கொடையாக கொடுத்ததாக இருக்கும். பெரும்பாலும் மன்னர்கள். அப்படி கொடை கொடுத்ததைக் கொண்டாடும் பழக்கம் பலகாலமாக இருந்திருக்கிறது. கடைசியில் கொடை மட்டும் கொண்டாடப்படும், கொடுத்தவர் யாரென்று மக்கள் மறந்துவிடுவார்கள்.

‘விகாரமன உருவம்’ என்பது தமிழில் உபயோகிக்கப்படும் சொற்றொடர். அசிங்கமாக இருக்கிறான் என்ற அர்த்தத்தில். பௌத்தம், சமணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பல இன்று தமிழில் இழிச்சொற்களாக வலம் வருகின்றன. ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ‘விகாரம்’. விகாரை, விகாரம் என்பவை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடம்.

ராஜராஜ சோழர் ஒரு ‘கொடை’ கொடுத்திருக்கிறார். நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த ‘விகாரை’ கட்ட. அவர் என்ன கொடுத்தார் என்பதை ஒரு முப்பது கிலோ எடையுள்ள செப்பேட்டில் சாசனமாக அப்போதே எழுதியிருக்கிறார்கள். எப்படி அந்த காலங்களில் செம்மறி ஆடு எடை உள்ள செப்பேடுகளைக் கையில் தூக்கி வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த சாசனத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி, “ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தானம் நிலைபெறுவதாக.”

இப்போது அந்த செப்பேடும் இல்லை. அவர் கொடுத்த விகாரையும் இல்லை. நிற்க, செப்பேடு நெதர்லாந்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்த விகாரை இடிக்கப்பட்டுவிட்டது.

சிவபக்தர் என்று சொல்லப்படுபவர், தஞ்சை பெரிய கோவில் கட்டியவர் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை கட்ட ஏன் கொடை கொடுத்தார்? செப்பேடு எப்படி நெதர்லாந்து சென்றது? விகாரை யாரால் இடிக்கப்பட்டது?

இந்த செப்பேடுகளைத் தேடி நெதர்லாந்து செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது, ‘ராஐராஜனின் கொடை’ என்ற புத்தகம். ஃப்ளாஷ்பேக் சுற்றுகிறது. தெற்காசியத் தீவுகளை (மலேசியா, கம்போடியா, ஜாவா, சுமத்தரா மற்றும் பல எட்டாங்கிளாஸில் ஹிஸ்டரி டீச்சர் சொல்லிக் கொடுத்த தீவுகளை) ஆண்ட பௌத்த மன்னனுடன் நட்புறவைப் பேண, தமிழ் பௌத்தத்தைக் காப்பாற்ற இந்தக் கொடையை அளிக்கிறார் ராஜராஐ சோழர். பிரம்மாண்டமான விகாரை எழுப்பப்படுகிறது. அதற்கான வணிக, மத காரணங்கள் பின்புலத்தில். செப்பேடு எழுதப்படுகிறது. ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வருகிறார். அரசியல் மாறுகிறது. சீனா மூக்கை நுழைக்கிறது. அரசியல்-வியாபார சதிகள் அரங்கேறுகின்றன. ராஜராஜ சோழர் எந்த தெற்காசியத் தீவுகளின் அரசுக்காக விகாரை கட்டினாரோ அந்தத் தெற்காசியத் தீவுகளைத் தாக்கிக் கைப்பற்றி சோழர்களின் கடல் மேலாண்மையை நிரூபிக்கிறார் ராஜேந்திர சோழர். கடாரம் கொள்கிறார். அடுத்து குலோத்துங்கச் சோழர் ஆட்சிக்கு வருகிறார். தெற்காசியா இன்னும் சோழர்கள் கைவசம்தான். பௌத்த விகாரைக்கான கொடை தொடர இரண்டாவது செப்பேடு எழுதுகிறார் குலோத்துங்கச் சோழர். பிளாஷ்பேக் பாஸ்ட் ஃபார்வேர்ட் ஆகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. கடல் கடந்து ஆட்சி செய்த சோழர்களும் இல்லை, கடல் கடந்து பரவிய பௌத்தமும் இல்லை தமிழ்நாட்டில். செப்பேடுகளை டச்சுக்காரர்கள் நெதர்லாந்து கொண்டுபோய்விட்டார்கள். பௌத்தவிகாரை பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது நாகப்பட்டினத்தில். பிரஞ்சு கத்தோலிக்க மிஷனரிகள் அதை இடித்து பக்கத்தில் கல்லூரி கட்டுகிறார்கள். பிளாஷ்பேக் முடிகிறது. நமக்கு கண்ணீர் வருகிறது நம் வரலாற்றை நினைத்து.

பொன்னியின் செல்வன் போன்ற எது உண்மை எது ஃபிக்‌ஷன் என்று தெரியாத விஷயங்களைக் கஷ்டப்பட்டு படமாக எடுத்து வருபவன் போவனிடத்திலெல்லாம் பேச்சுவாங்குவதை விட முனைவர் க. சுபாஷிணியின் ‘ராஐராஜனின் கொடை’ புத்தகத்தை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம். அவ்வளவு சுவாரசியம் இருக்கிறது. அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது. பாதி புத்தகம் பின்னிணைப்புதான். ராஜேந்திரச் சோழரும், குலோத்துங்கச் சோழரும் தொட்ட செப்பேட்டையே கையில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai

தேமொழி

unread,
Jul 23, 2022, 9:51:27 PM7/23/22
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/100000312362577/posts/5497669220253436/?d=n

kongunaadduk kalvettugal.jpg

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

எங்கள் ஊரில் ஒரு மலை உண்டு. சென்ற முறை ஊருக்குப் போயிருந்தபோது பாதி மலைதான் இருந்தது. அடுத்த முறை செல்லும் போது பெரும்பாலும் மலையே இருக்காது. இப்படித்தான் நம் தலைமுறையில் கல்வெட்டிக் கொண்டிருக்கிறோம்.

பழைய காலங்களில் ஏன் கற்களில் பல விஷயங்களை எழுதிவைத்தார்கள் என்பது யோசிக்க வேண்டியது. பாட்டுகளையெல்லாம் ஓலையில் எழுதிவிட்டு வரலாற்றைக் கற்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஏனென்றால் நம் ஆட்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். இடையில் இரண்டு ஓலையைச் செருகி வரலாற்றை மாற்றிவிடுவார்கள். நமக்கு இன்று கிடைக்கும் பல இலக்கியங்கள் பின்னால் வந்தவர்களால் பட்டி டிங்கரிங்க் பார்க்கப்பட்டவைதான். கல்லில் எழுதிவைத்தால் பின்னால் வருபவர்கள் கோல்மால்கள் செய்ய வாய்ப்புகள் குறைவு என்று வரலாற்றை கல்வெட்டுகளாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இருந்தும் நம் ஆட்கள் விடவில்லை.

‘கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில் துரை சுந்தரம் அவர்களின் கல்வெட்டு பற்றிய ஆராய்ச்சிகளைத் தொகுத்து அவர் நினைவாக தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. ஆச்சரியமான மனிதர். ரிட்டையர்ட் ஆகிய பிறகு சன் டீவியும், விஜய் டீவியும், ஓடிடியும்தான் வாழ்க்கை என்று சோஃபா பக்கம் ஒதுங்கிவிடாமல் துரை சுந்தரம் அவர்கள் அறுபது வயதுக்குப் பிறகு கல்வெட்டு வாசிக்கக் கற்றுக்கொண்டு கொங்குநாட்டில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார். இன்று அவர் நம்மிடையே இல்லை.

இந்த புத்தகத்தில் கொங்கு ஏரியாவிலுள்ள ஏறக்குறைய பதினேழு இடங்களில் அவர் செய்த கல்வெட்டு ஆராய்ச்சிகள் அவரால் விவரிக்கப்பட்டிருக்கிறது. நூறிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள். சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் என்று பலரும் கல்வெட்டியிருக்கிறார்கள். ஏகப்பட்ட விஷயங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புத்தகம் எழுத வேண்டும்.

ராஜராஜ சோழர் தஞ்சாவூரில் பிரகதீசுவரருக்குக் கோவில் கட்டிய அதே காலத்தில் கொங்கு நாட்டில் சேவூருக்கு அருகில் எறுளங்கோதை என்ற பெண் மொக்கணீசுவரருக்கு ஒரு கோவிலை எழுப்பியிருக்கிறார். அந்தக் கோவிலுள்ள கல்வெட்டை வாசித்ததால்தான் இப்படி ஒரு பெண் இருந்ததே தெரிகிறது. எறுளம் என்றால் ஒரு மலரின் பெயராம்.

கல்வெட்டுகளுடன் சேர்ந்து கல்வெட்டுகள் இருக்கும் (பல இடங்களில் கேட்பாரற்ற) கோவில்கள், ஊர்கள் பற்றியும் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். சமண கோவில்கள் பல சைவ கோவில்களாக மாற்றப்பட்ட விஷயங்களும் கல்வெட்டுகளுடன் சேர்ந்து வருகிறது. அம்மண தீர்த்தங்கரர் ஒருவர் அமணலிங்கேசுவரர் ஆகியிருக்கிரார் தேவனாம்பாளையத்தில். ஜேஷ்டாதேவி என்ற பல்லவர்கால பெண் தெய்வத்தின் பின்பக்கத்தில் இவர்தான் ஆஞ்சநேயர் என்று அழகாக போர்ட் எழுதி வைத்திருக்கிறார்கள் ஒரு கோவிலில்.

நல்ல ஆராய்ச்சிப் புத்தகம் என்றாலும் அதன் சுவாரசியத்தை அனுபவிக்க கொஞ்சம் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இது வரலாற்றுப் புத்தகம் அல்ல. கல்வெட்டுகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளைச் சொல்வது. குறைந்த பட்சம் பொன்னியின் செல்வன் அளவாவது வரலாறு வாசித்திருக்க வேண்டும். ‘வீரபாண்டியனின் தலைகொண்ட ஆதித்த கரிகாலன்’ என்பது பொன்னியின் செல்வனில் வரும் கவர்ச்சி டயலாக். வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் போரில் தோற்கடித்து அவனைத் துரத்திச் சென்று தலையை வெட்டி அந்த தலையை ஒரு மாதம் தஞ்சாவூரில் தொங்கவிட்டிருந்தான். ஆனால் இந்த வீரபாண்டியன் அதற்கு முன்னதாக ஒரு சோழனின் தலையை வெட்டி ‘சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன்’ என்ற பெயரை வாங்கியிருக்கிறான். அதை ஆனையூரில் வீரபாண்டியனே ஒரு கல்வெட்டாகவும் எழுதிவைத்திருக்கிறான். (ஆனையூர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் சொந்த ஊர் என்ற குறிப்பையும் சைடில் சொல்கிறார் துரை சுந்தரம்.) வீரபாண்டியன் என்றால் வீரபாண்டிய கட்ட பொம்மனா என்று கேட்கும் அளவுக்கு வரலாற்று அறிவு இருந்தால் இந்த புத்தகம் கிறிஸ்டோபர் நோலன் படம் பார்த்த மாதிரிதான் இருக்கும்.

இந்த புத்தகத்தைப் பற்றி எழுதிக் கொண்டே செல்லலாம். அவ்வளவு விஷயம் உள்ளது. கை வலிப்பதால் கடைசியாக ஒரு மேட்டர் மட்டும். கல்வெட்டுகளை நம் மக்கள் அபாரமாக போற்றிக் காப்பாற்றியிருக்கிறார்கள். மேலே வெள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். போதாதென்று ஆயில் பெயின்ட் அடித்திருக்கிறார்கள். அதுவும் போதாதென்று உடைத்தும் போட்டிருக்கிறார்கள். பல இடங்களில் சுண்ணாம்பைச் சுரண்டி எடுத்து கல்வெட்டுகளை வாசித்திருக்கிறார் துரை சுந்தரம். ஆலத்தூரில் ஒரு சமணக் கோவில் கல்வெட்டுகளுடனும் புற்களுடனும் அதை மேயும் மாடுகளுடனும் பரிதாப நிலையில் இருப்பதைப் பற்றி எழுதி யாராவது இந்தக் கோவிலைக் காப்பாற்றுங்கள் என்று புலம்பியிருக்கிறார். அது இன்னும் ஐசியூவில்தான் உள்ளது என்பது நூறு பேர் பார்த்து ஆதரவளித்த இந்த யுடியூப் வீடியோவிலிருந்து தெரிகிறது  https://youtu.be/qlAioTtCtrw

தேமொழி

unread,
Jul 24, 2022, 12:14:01 AM7/24/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=5494485627238462&set=a.306570402696703


Varalatril Poigal - Themozhi Book.jpg

வரலாற்றில் பொய்கள்

‘வரலாற்றில் பிழைகள்’ என்று புத்தகத்துக்கு தலைப்பு வைக்காமல் ‘வரலாற்றில் பொய்கள்’ என்று ஏன்? மிகவும் யோசித்து வைக்கப்பட்ட தலைப்பு என்று தெரிகிறது. வரலாற்றில் பிழைகள் உண்டு. அந்த பிழைகளை வைத்துப் பிழைத்தவர்களும் உண்டு. பிழைகள் காலத்தால் திருத்தப்படும். அதன்பின் திருத்தப்பட்ட பிழைகள் அவற்றை வைத்துப் பிழைத்தவர்களால் பொய்களாக பரப்பப்படும்.
விளக்கமாக: பூமி தட்டையாக உள்ளது, அந்த தட்டைத் தாங்கிபிடிப்பது நாலு யானை, யானையைத் தாங்கிப்பிடிப்பது ஓர் ஆமை, ஆமை நீந்திச் செல்வது ஓர் ஓடை…என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யாராவது எதுகை மோனையுடன் அடுக்கியிருந்தால் அது பிழை. அதே மாதிரி இன்றும் யாராவது நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல என்று சொல்லி மறுபடியும் தட்டை வைத்து அடுக்கி அதற்கு வாட்சப்பீடியாவிலிருந்து ஆதாரம் கொடுத்தால் அது பொய்.
மெல்போனிலிருந்து மெட்ராஸ் வழியாக மடகாஸ்கர் வரை கடலுக்குள் சமோசா வடிவத்தில் ஒரு நிலம் மூழ்கிக் கிடக்கிறது என்று நூறு வருடங்களுக்கு முன் யாராவது கண்டம் கட்டியிருந்தால் அது பிழை. நம் வீட்டின் கட்டிலுக்கடியில் ஒளித்துவைத்திருக்கும் பானத்தைக் கூட வானத்திலிருந்து ஜூம் செய்து கண்டுபிடிக்கும் இன்றைய சேட்டிலைட் யுகத்தில் இன்னும் கடலுக்கடியில் ஒரு சமோசா கண்டம் ஒளிந்திருக்கிறது என்று யாராவது நம் மண்டையைக் கழுவி காயவைத்தால் அது பொய்.
ஆங்கிலத்தில் இது போல பல புத்தகங்கள் உண்டு. ஏனென்றால் பிழைகளை வைத்துப் பிழைத்தவர்கள், அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் உலகம் முழுவதும் உண்டு. வெளிநாட்டிலிருந்து வந்த மனிதர்களைக் குரங்குகள் என்று சொல்லி மிருகக்காட்சிசாலையில் அடைத்துவைத்து டிக்கட் போட்டு காசு பார்த்த சம்பவங்கள் ஐரோப்பாவில் உண்டு. வெளிநாட்டிலிருந்து வந்த குரங்கை உளவாளி என்று சொல்லி தூக்கில் போட்ட சம்பவங்களும் உண்டு. இந்தியாவில் கூட ஐரோப்பியப் பெண்கள் தங்கள் கணவர்களுடன் முதலில் கப்பலில் வந்திறங்கிய பொழுது அவர்களுக்கெல்லாம் பின்னால் வால் உண்டு என்று நம் ஆட்கள் சிலர் நம்பியிருக்கிறார்கள்.
தமிழில் பொய்களை மையமாக வைத்து, ஆராய்ந்து இப்படி ஒரு புத்தகம் யாரும் இதற்குமுன் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. லாம். THF வெளியிட்டிருக்கும் முனைவர் தேமொழியின் இந்தப் புத்தகத்தில் இந்தியா சம்பந்தப்பட்ட நான்கு பொய்கள் ஆராயப்பட்டிருக்கின்றன. அவற்றை இரண்டாக இணைத்துவிடலாம். இணைத்து ஒரே கான்செப்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதுதான் இந்த புத்தகத்தின் (ஒரு) சிறப்பு. எல்லாத்துறைகளையும் போல வரலாற்றிலும் இரண்டு வகைப் பொய்கள் உண்டு. ஒன்று இல்லாததை இருந்ததாகச் சொல்வது. இன்னொன்று இருந்ததை இல்லையென்று சொல்வது. இரண்டுமே இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சமாச்சாரங்களுக்குள் அடங்குவது இன்னொரு சிறப்பு.
புத்தகங்கள், பத்திரிகைகள் என்று கொஞ்சம் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த பொய்கள்தான் இந்த நான்கும். சிந்து சமவெளியில் குதிரையைக் கண்டுபிடித்த நகைச்சுவை நிகழ்ச்சி பற்றி 2000-ஆம் ஆண்டில் ஃப்ரன்டலைனில் வாசித்த ஞாபகம் இன்றும் உள்ளது. என்றாலும் தேமொழியின் தமிழில் வாசிக்கும் போது சுவாரசியமாக இருந்தது. மற்றபடி வாட்சப், பேஸ்புக், யூட்யூப் மற்றும் நியூஸ் சேனல்கள் மூலம் மட்டுமே பொது அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்கு இந்தப் பொய்கள் அதிர்ச்சி அளிக்கலாம்.
இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டிருக்கும் நான்கு பொய்களில் இரண்டை மேலே உள்ள பத்திகளில் ஊறுகாய் போலத் தொட்டுவிட்டேன். புத்தகத்தைப் படித்து மற்றவற்றையும், டீட்டெயிலாகவும் தெரிந்து கொள்ளுங்கள். படித்து முடித்துவிட்டு மறுபடியும் அந்தப் பொய்களை நீங்கள் நம்புவதைத் தொடரலாம். உலகை உருண்டையாகப் படைத்த கடவுளே வந்து சத்தியம் செய்தாலும் உலகம் தட்டை என்ற உங்கள் நம்பிக்கையை உடைக்க முடியாது என்பது போல. அறிவியலாலும், தரவுகளாலும் பெரும்பான்மை மக்களிடையே பொய்களை உடைக்க முடியுமென்றால் இன்று என் வாட்சப்பில் முட்டைகோஸ் சாப்பிட்டால் மூளை வளரும் போன்ற செய்திகள் இருக்காது. பலருக்குப் பல நாடுகளில் ஆட்சியும் இருக்காது.
ஆதலால் இந்த புத்தகத்தைப் படித்ததும் எனக்குத் தோன்றியது கம்பரின் காவிய வரிகள்: “உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்.” பொய்யில்லா சமூகத்தை உருவாக்க இப்படிப்பட்ட புத்தகங்கள் தேவை. பொய்யில்லா சமூகத்தில் உண்மைக்குத் தேவை இருக்காது.
கம்பர் சொன்னதைக் கொஞ்சம் மாற்றினால்: உண்மையில்லா சமூகத்தில் பொய்களுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும்.

தேமொழி

unread,
Sep 24, 2022, 3:43:28 AM9/24/22
to மின்தமிழ்


THFi Books.jpg
நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம்.
https://academy.tamilheritage.org/2022/05/28/1875/

📘🎋 வணக்கம் நண்பர்களே.. தமிழ் மரபு அறக்கட்டளை நூல்களை உங்கள் இல்ல நூலகத்தில் அல்லது உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகங்களில் அல்லது பள்ளி நூலகங்களுக்கு நீங்கள் நன்கொடை வழங்கலாம்.

நமது பதிப்பக நூல்களை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.📙🎋

நூல்களை இணையம் வழி வாங்கிக் கொள்ள:
https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88
அல்லது
https://wisdomkart.in/books/thf-special-sales/

தேமொழி

unread,
Sep 26, 2022, 5:31:20 PM9/26/22
to மின்தமிழ்


madurai book fair.jpg
மதுரை புத்தக கண்காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கம் எண் 132 இங்கே கிடைக்கின்றன. மதுரையில் நூல்கள் வாங்க விரும்புவோர் இங்கே சென்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளான வரலாற்று நூல்களை பார்வையிட்டு வாங்கி பயன்பெறலாம்.
-------------

தேமொழி

unread,
Sep 29, 2022, 1:07:20 PM9/29/22
to மின்தமிழ்


Riyadh Book Fair.jpg 
Riyadh Book Fair2.jpg
Riyadh Book Fair3.jpg

சவுதி அரேபியா ரியாத் நகரில் இன்று தொடங்கி எட்டாம் தேதி வரை நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் எனது கீழடி வைகை நாகரீகம் நூலும் அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து வெளியீடுகளும் sixthsense - E36 அரங்கில் காணக் கிடைக்கும். சவுதி அரேபியாவில் வாழும் நண்பர்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நேரில் சென்று இந்த புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள நூல்களை வாங்கி மகிழுங்கள். 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்கள் உங்களுக்காக அங்கே காத்திருக்கின்றன.

தேமொழி

unread,
Nov 22, 2022, 9:37:37 PM11/22/22
to மின்தமிழ்

வணக்கம் முனைவர் செல்வம் ஸ்ரீதாஸ் 

தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களை 
இணையம் வழி இந்த விற்பனையாளர்களிடம் வாங்கிவிட்டு நீங்கள் தங்கவிருக்கும் தமிழ்நாட்டு முகவரிக்கு அனுப்பச் சொல்லலாம் 
அங்கிருந்து கிளம்புகையில் எடுத்துவர வசதியாக இருக்கும். 

நன்றி 

அன்புடன் 
தேமொழி 

---------------------

On Tuesday, November 22, 2022 at 4:59:25 PM UTC-8 selvam...@gmail.com wrote:
முனைவர் தேமொழி அவர்களுக்கு,

நான் மாசி மாதத் தொடக்கத்தில் தமிழ் நாட்டிற்று வரவுள்ளேன். இது ஒரு மாத தென் இந்தியச் சுற்றுலா. எப்போ சென்னையில் இருப்போம் என்று கூற முடியவில்லை. உங்கள் வரலாற்று நூல்கள் அனைத்தையும் கொள்வனவு செய்ய விரும்புகிறேன். சென்னையில் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும், அவர் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை அறியத்தந்தால் பெரும் உதவியாக இருக்கும். நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas
Phone: 647-881-3613

---------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Nov 22, 2022, 10:02:12 PM11/22/22
to mint...@googlegroups.com
வணக்கம், முனைவர் தேமொழி.
நல்ல யோசனை. அப்படியே செய்யலாம்.
நீங்கள் கொடுத்த இணையங்கள் இரண்டும் வேலை செய்யவில்லை.
மீண்டும் முயன்று பார்க்கிறேன்.
எனது நண்பர் ஒருவரின் முகவரிகொடுத்து அனுப்பும்படி செய்யலாம். எடுத்துவர வசதியாக இருக்கும். யோசனைக்கு மிக்க நன்றி.
இணையம் வேலை செய்யாவிட்டால் மீண்டும் உங்களிடம் வரும்படியாக இருக்கும்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 22, 2022, 10:09:58 PM11/22/22
to மின்தமிழ்
  ஓ !!!  மன்னிக்க ..பழைய பதிவு ஒன்றிலிருந்து  ஒத்தி ஒட்டினேன் - ஏதோ கோளாறு போலிருக்கிறது . 

கீழுள்ள சுட்டிகள் உதவும் . . . 
தமிழ் மரபு அறக்கட்டளை @ wisdomkart
https://wisdomkart.in/books-category/tamil-heritage-foundation/

தமிழ் மரபு அறக்கட்டளை @ commonfolks
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

Dr. Mrs. S. Sridas

unread,
Nov 22, 2022, 10:15:31 PM11/22/22
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர் தேமொழி.
இணையத் தொடர்கள் வேலை செய்கின்றன.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



Mohanarangan V Srirangam

unread,
Nov 22, 2022, 11:07:56 PM11/22/22
to mint...@googlegroups.com
பார்ப்பதற்கே மகிழ்ச்ச்சியாக இருக்கிறது. பதிப்பகப் பிரிவின் பணி 
என்றும் சிறக்கட்டும். 

***

தேமொழி

unread,
Nov 23, 2022, 12:45:06 AM11/23/22
to மின்தமிழ்
நன்றி அரங்கானார் 🙏🤝  💐

Kandiah MURUGATHASAN

unread,
Nov 24, 2022, 1:55:22 PM11/24/22
to mint...@googlegroups.com
ஜேர்மனி முகவரிக்கு இப்புத்தகங்களை எடுக்க வேண்டுமெனில் அதற்கான வழிவகைகள் என்ன?

தேமொழி

unread,
Nov 24, 2022, 3:33:56 PM11/24/22
to மின்தமிழ்
ஜெர்மனி முகவரிக்கு  நூல்கள் தருவிக்க வேண்டுமெனில் சிறந்த வழி சுபாவிடமே நேரில் கூறிவிடுவதுதான். அவர் ஒவ்வொருமுறையும் இந்தியப் பயணத்திலிருந்து  திரும்பும் பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை நூல்களை வாங்க விரும்புவோர் சொல்லுங்கள் வரும்பொழுது கொண்டு வருகிறேன் என்று ஜெர்மனி/ஐரோப்பிய உறுப்பினர்கள் இருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை வாட்சப் குழுமத்தில் அறிவிப்பு வெளியிடுவார்.  
சுபாவின் தொடர்பு எண்ணுக்குச் செய்தி அனுப்புங்கள். அவர் ஏற்பாடு  செய்வார்.  அவ்வாறே சுபா மலேசியா சிங்கப்பூர் செல்லும்பொழுதும் மலேசிய/சிங்கை தமிழ் மரபு அறக்கட்டளை வாட்சப் குழுமத்தில் நூல்கள்  விரும்புவோர் சொல்லுங்கள் எடுத்து வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். 

Kandiah MURUGATHASAN

unread,
Nov 25, 2022, 5:07:00 AM11/25/22
to mint...@googlegroups.com
நன்றி,சுபாசினி எனக்கு அறிமுகமானவரே அவருடேனேயே தொடர்பு கொள்ளுகிறேன்.

தேமொழி

unread,
Dec 18, 2022, 8:57:23 PM12/18/22
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo?fbid=5731202810249498&set=a.431045883598577

Sundara Cholan

Varalatril Poigal-book.jpg

பண்டைய உலகின் சிறந்த நகர நாகரீகங்களிலும் தலைசிறந்ததாக விளங்கிய அரப்பா நாகரீகம் குறித்து நாம் அனைவருமே பேருவகை அடைகிறோம். ஆனால் வேதங்களில் இருந்து தான் உலகமே தொடங்குகிறது, வேதங்களின் உதவியோடு தான் இறைவனால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்றெல்லாம் கதைத்துத் திரிந்த இந்துத்துவவாதிகளுக்கும் அது சார்ந்த சில ஆய்வாளர்களுக்கும் அரப்பா நாகரீகம் உவகையளிப்பதற்கு பதிலாக தாங்க முடியாத நெருடலை அளித்தது. ஏனெனில் அரப்பா நாகரீகத்திற்கும் வேத கலாச்சாரத்திற்கும் இடையில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருந்தது.

அதனால், அரப்பா நாகரீகத்தை எப்படியாவது வேத சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரண்டும் ஒன்றென நிறுவிட வேண்டும் என்று அவர்களில் சிலர் மிகப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்விரு சமூக அமைப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக, பொய்கள், மோசடிகள், போன்றவற்றைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. அப்படிப்பட்ட மிக லாவகமாக ஜோடிக்கப்பட்டு ஆனால் ரொம்பக் கேவலமாக அம்பலப்பட்டுப் போன ஒரு வரலாற்றுப் பொய்யைத் தனது பேசுபொருளாகக் கொண்டது “சிந்து சமவெளியில் குதிரை முத்திரை என்றொரு மோசடி” என்னும் கட்டுரை.

"வரலாற்றில் பொய்கள்" நூலில் மூன்றாவது கட்டுரையாக இது இடம் பெற்றுள்ளது. கருத்துச் செறிவுடைய, இலகுவான மொழியில் பதினைந்து பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அதன் நூலாசிரியர் இந்த மோசடியை மிகத் தெளிவாக, துல்லியமாக அம்பலப்படுத்துவதில் வெற்றியடைந்து விட்டார் என்று நான் சொல்வேன்.

நல்லது, அரப்பா நாகரீகத்திற்கு முன்னுரை எதுவும் தரத்தேவையில்லை, நம்மில் மிகப்பலர் அதைப் பற்றி நன்கறிவோம். அது ஒரு திராவிட நாகரீகம் என்று ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வாளர்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி உள்ளனர்.

அது ஒரு திட்டமிடப்பட்ட நகர நாகரீகமாக, சமகாலத்தைச் சேர்ந்த தொலைதூர சமூகங்களுடன் பெருமளவிலான கடல் வர்த்தமும் மேற்கொண்ட செம்புயுக நாகரீகமாக இருந்தது. யூனிகார்ன் எனப்படும் (கற்பனை?) விலங்கு அம்மக்களின் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது. அவர்கள் குதிரையையோ, குதிரையின் பயன்பாட்டையோ அறிந்திருக்கவில்லை. அரப்பா நாகரீக வசிப்பிடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மாடுகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ள அதே சமயம் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை.

நூற்றுக் கணக்கான அரப்பா முத்திரைகள் கிடைத்துள்ள போதிலும் அவற்றில் குதிரையின் உருவம் காணப்படவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், அரப்பா மக்கள் (இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் முதிர் அரப்பா நாகரீக மக்கள்) குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே இதன் சத்தும் சாரமும் ஆகும்.

மறுபுறத்தில் ரிக் வேத ஆரியர்கள். அவர்கள் அரப்பா நாகரீகம் வீழ்ச்சியை எதிர்நோக்கி இருந்த காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்த வந்தேறிகள் (நாமனைவரும் வந்தேறிகள் தான் என்பது வேறு விசயம்) மட்டுமே.

அவர்கள் அரப்பா நாகரீகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள், நகர நாகரீகத்தை அறியாத, அரை மேய்ச்சல் நில சமூகத்தில் வாழ்ந்த, பின்னாளில் குறைந்தபட்ச விவசாயத்தை மேற்கொண்ட (அதுவும் பூர்வகுடிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது தான்) கூட்டத்தினர்.

ஒன்றை மட்டும் மிக உறுதியாக கவனத்தில் நிறுத்திக் கொள்வது அவசியம். ரிக்வேத சமூகத்தைக் குறிப்பிடும் போது நாம் அதனை கலாச்சாரம் (culture) என்று மட்டுமே கூற முடியும். ஆனால் அரப்பாவோ நாகரீகம் (civilization) ஆக இருந்தது. இதனை மாற்றிக் குறிப்பிட முற்படுபவர்கள் யாராக இருப்பினும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.

குறைந்தபட்ச வரலாற்று அறிவு உடைய யாரும் இந்த இரண்டையும் எந்த வகையிலும் பொறுத்திப் பார்க்க முடியாது. ஆனால் இந்துத்துவவாதிகள் இதைத் தான் செய்ய முற்பட்டனர்.

அரப்பா நாகரீக வசிப்பிடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான முத்திரைகள் கிடைத்தன. அவற்றில் சில உடைந்து, முழுமையானவையாக அல்லாமல் இருந்தன.

இத்தகைய ஒரு பாதி உடைந்த நிலையில் கிடைத்த Mackay 453 என்னும் அரப்பா முத்திரையை எடுத்துக் கொண்ட N.S. ராஜாராம் என்னும் “ஆய்வாளர்” (சிரிக்கக் கூடாது, ஓகே), அரப்பா முத்திரை ஒன்றில் குதிரை உருவம் இருப்பதாகவும், ஆகவே அரப்பா நாகரீகம் வேத கலாச்சாரமே என்னும் கருத்தை வம்படியாக நிறுத்த முற்பட்டார்.

பின்னர் இந்த முத்திரையைச் சரிபார்த்த உண்மையான அறிஞர்கள், இது மிக மோசமானதொரு பித்தலாட்டம், குதிரையைப் பற்றி அறிந்திராத அரப்பா நாகரீக மக்களை குதிரையை மையமாகக் கொண்ட ஆரிய கலாச்சாரத்துடன் பிணைக்க முற்படும் மோசடி என்பதைத் தெளிவாக விளக்கினர். கையும் களவுமாகப் பிடிபட்ட இந்த மோசடி நபர், கணிணி உதவியுடன் அந்த முத்திரையை "மேம்படுத்தியதாக" ஒப்புக் கொண்டார்!

இவ்வாறாக N.S. ராஜாராம் வகையறாவின் மோசமான பித்தலாட்டம் முடிவுக்கு வந்தது.

இதன் நோக்கம், ஏடறியாக் காலம் தொட்டு (வேதங்களில் இருந்து தான் வரலாறு தொடங்குகிறது என்னும் கருத்தை ஒட்டி) இந்தியா இந்து நாடாக இருந்து வந்துள்ளது, இழை அறுபடாத ஒரு கலாச்சாரப் பிணைப்பு பல்லாண்டுகளாக இங்கே தொடர்கிறது என்னும் கருத்தை நிறுவுவதே ஆகும்.

இந்தக் கருத்தை முன்னிறுத்தும் விதமாகவே இந்த குதிரை முத்திரை என்னும் மிகக் கேவலமான, அதே சமயம் மிகக் குறுகிய காலத்தில் அம்பலப்பட்டுப் போன மோசடி அல்லது பித்தலாட்டத்தை இந்துத்துவ ஆதரவுக் கூட்டம் அரங்கேற்றியது.

இது பற்றிய உண்மைகளை, உரிய பின்புலத்துடன் பேசுகிறது இக்கட்டுரை.

இந்தக் கட்டுரை அடங்கிய நூலை எழுதிய தேமொழி அவர்கள் ஒரு கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்று அறிகிறேன்.

அந்த வகையில் தான் எடுத்துக் கொண்ட பணியை – இந்த மோசடியை அம்பலப்படுத்தும் பணியை – சிறப்பாகவே அவர் செய்திருக்கிறார். இது பற்றிய தகவல்களை ஆர்வமூட்டும் வகையில், எளிமையான மொழியில், சலிப்பை ஏற்படுத்தாதவாறு எளிதாகக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தக்கட்டுரையை விரிவாக விவரித்து விமர்சனம் செய்து அதனை வாசிக்கும் ஆர்வத்தைக் குலைத்துவிடக் கூடாது என்பதால் இது குறித்து மேலும் குறிப்பிடவில்லை. அவரது இந்தக் கட்டுரையில் சில இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் அவை விவாதத்திற்கு உரியவை என்று கடந்து போகிறேன். என்றாவது அவரை நேரில் சந்தித்துப் பேச முடிந்தால் அவற்றை விவாதிக்கலாம்

வரலாற்றை நேர்மையுடன் நோக்குகிற ஆய்வாளர்கள் உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்கள். அந்த வகையில் இந்த நூலாசிரியரும் அமைகிறார்.

இந்துத்துவவாதிகளின் பித்தலாட்ட முயற்சிகளைத் தெளிவாக, தயக்கமின்றி வெளிப்படுத்துகிற அதே சமயம், அதன் அரசியல் நோக்கம், அதன் முக்கியத்துவம், அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் ஆகியவற்றை இது பேசவில்லை. அது வரலாற்றுப் பொருள்முதல்வாதிகளின் வேலை என்பதும் உண்மை தான். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல முடிந்தால் (ஒருவேளை முடிந்தால்) நாம் அதைச் செய்யலாம்.

____________________________________________________________________________
நூலைப் பெற கீழுள்ள சுட்டிகள் உதவும் . . . 
தமிழ் மரபு அறக்கட்டளை @ wisdomkart
https://wisdomkart.in/books-category/tamil-heritage-foundation/

தமிழ் மரபு அறக்கட்டளை @ commonfolks
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

தேமொழி

unread,
Dec 25, 2022, 8:39:37 PM12/25/22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூலாக ...... 
முனைவர் ப. பாண்டியராஜா
அவர்களின் 
kaNithaviyal Cover.jpg

கணிதவியல் - பொதுக் கட்டுரைகள்
நூல்  வெளிவருகிறது ... 

நூலை இத்தளத்தின் வழியாகப் பெறலாம். 
kanithaviyal.jpg
----------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 6, 2023, 4:38:59 AM1/6/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3541635762746462&set=a.1631001437143247


THFi  BOOKS -2023 Book Expo.jpg

இவ்வருட சென்னை புத்தக கண்காட்சியில்..

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் 12 நூல்கள்..

நாளை முதல்...!

இந்தச் சிறந்த நூல்களை வாங்கி நீங்களும் வாசித்து நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழுங்கள்.

தேமொழி

unread,
Jan 6, 2023, 6:19:51 PM1/6/23
to மின்தமிழ்
THFi  BOOKS -2023 Book Expo.jpg
நம் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீட்டு நூல்களை வாங்கிப் படித்தோர், 
திசைக்கூடல் - இணையவழி நிகழ்ச்சியில் நூல் திறனாய்வு, நூல் விமர்சனம் செய்ய விருப்பமுள்ளோர் 
கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சென்னை புத்தகக்காட்சி முடியும் வரை 
நம் பதிப்பக வெளியீடுகளான 12 நூல்களை தினம் ஒரு நூல் விமர்சனமாக, 
திசைக்கூடல் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நூல் திறனாய்வு, நூல் விமர்சனம் செய்ய விருப்பமுள்ளோர் 
உங்களுக்கு விருப்பமான தேதிகளில் 
மாலை இந்திய நேரம் 6 முதல் 8 மணிவரை ஏதாவது 1 மணிநேரம் தேர்வு செய்து பேசலாம்.

தொடர்பு எண்: +91. 99419 55255 (விவேக்)
THFi Books.jpg


ஆன்லைன் மூலம் தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களை 
15 % சலுகையில் பெற கீழ்காணும் தளங்களை பயன்படுத்துங்கள்:

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

https://wisdomkart.in/books-category/tamil-heritage-foundation

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 8, 2023, 2:18:27 PM1/8/23
to மின்தமிழ்
46 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023 இல்...

THFi -BOOKS -2023 Book Expo.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பகம் வெளியீடுகள்
புத்தகக் காட்சியில் கிடைக்கும் பதிப்பகங்கள் மற்றும் அதன் அரங்கு எண்கள்:
📚 ஆழி பதிப்பகம்: அரங்கு எண் - F4
📚 எமரால்டு பதிப்பகம்: அரங்கு எண் - F34
📚 எழினி பதிப்பகம்: அரங்கு எண் - 61, 62
ஆன்லைன் மூலம் தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களை 15 % சலுகையில் பெற கீழ்க்காணும் தளங்களைப் பயன்படுத்துங்கள்:
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

தேமொழி

unread,
Jan 16, 2023, 11:46:50 PM1/16/23
to மின்தமிழ்
"திருவள்ளுவர் யார்?" என்ற தலைப்பில்
தமது எழுத்தில் உருவான ...
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் வெளியிட்ட
நூல் குறித்து திரு. கௌதம சன்னா அவர்கள்  வழங்கிய உரை
sanna and his thfi book.jpg 
https://www.youtube.com/watch?v=OUvl_TWi6vM&t=377s

``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

On Sunday, January 8, 2023 at 11:18:27 AM UTC-8 தேமொழி wrote:
46 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023 இல்...

தேமொழி

unread,
Jan 18, 2023, 6:07:46 PM1/18/23
to மின்தமிழ்
Ilakkiya Meelaaivu -  themozhi.jpg




Ilakkiya Meelaaivu - book  - themozhi.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு..
தேமொழி எழுதிய..
இலக்கிய மீளாய்வு

இன்று அச்சாகி வந்துவிட்டது.
நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சி F4 அரங்கில் இந்த நூல் விற்பனைக்குக் கிடைக்கும். அத்தோடு இணைய வலைப் பக்கங்களிலும் இந்த நூல் வாசிப்பிற்கு வாங்கி மகிழ உங்களுக்கு கிடைக்கும். வாங்கி வாசித்து மகிழுங்கள்.

இந்த நூல்களை வாங்கிக் கொள்ள விரும்புவோர் இணையத்தின் வழியாக சுலபமாகப் பெறலாம்.
https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88
அல்லது
https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/

-தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 18, 2023, 6:46:05 PM1/18/23
to mint...@googlegroups.com
பாராட்டுகள் அம்மா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Jan 18, 2023, 6:47:00 PM1/18/23
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா. 

அன்புடன் 
தேமொழி 



Dr. Mrs. S. Sridas

unread,
Jan 18, 2023, 6:56:08 PM1/18/23
to mint...@googlegroups.com
அன்பான தேமொழி அவர்களுக்கு,

வணக்கம்.
நான் பிப்ரவரி 3 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளேன். சென்னையில் எப்போ இருப்பேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களைக் கொள்வனவு செய்ய விரும்புகிறேன். யாராவது ஒருவரிடம் இப் புத்தகங்களை ஒப்படைத்தால், நான் சென்னை வரும்போது அவர் வீட்டிற்குச் சென்று பணம் கட்டிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். வாய்ப்பு உண்டா என்று அறியத்தரவும்.

முன்பு ஒரு தடவை இணையம் வழி பெற்றுக் கொள்ளலாம் என்று முகவரி கொடுத்தீர்கள். அந்த முகவரியில் உங்கள் நூல்கள் கிடைக்கவில்லை.
அன்புடன்


Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
Jan 18, 2023, 7:11:17 PM1/18/23
to மின்தமிழ்
  நன்றி  முனைவர் ஸ்ரீதாஸ் 
சுபாவின் கருத்தறிய, 
நான் உங்கள் மின்னஞ்சலை  சுபாவின் பார்வைக்கு அனுப்புகிறேன். 
அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். 
அன்புடன் 
தேமொழி 

Dr. Mrs. S. Sridas

unread,
Jan 18, 2023, 10:04:14 PM1/18/23
to mint...@googlegroups.com
அன்பான முனைவர் தேமொழி அவர்களுக்கு,

மிக்க நன்றி.
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
May 8, 2023, 12:42:48 PM5/8/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=3637242333185804


Thamizhagathil Bowtham.png
ஓர் அறிவிப்பு

வருகின்ற மே 14 ஞாயிறு கள்ளக்குறிச்சிக்கும் சின்னசேலத்திற்கும் இடையே தியாகனூர் பௌத்த விகாரை அருகில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை ஏற்பாட்டில் பௌத்த எழுச்சி மாநாடு நடைபெறுகின்றது. அதில் நானும் டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு .ஆருகளூர் பொன் வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றோம்.

இந்த மாபெரும் நிகழ்வில் பல்வேறு சமயத்தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவிருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான தமிழகத்தில் பௌத்தம் என்ற தலைப்பிலான முனைவர். தேமொழி எழுதிய நூல் வெளியிடப்படவிருக்கின்றது.

இதே நாளில் எனது புதிய நூலான வரலாற்று ஆய்வில் களப்பணிகள் என்ற நூலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் நமது புதிய வெளியீடுகளான டாக்டர்.சிவராமகிருஷ்ணன் எழுதிய இராஜேந்திரனின் ஒட்ர நாடு வெற்றி, நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய 2 நூல்களும் முடிந்தவரை அச்சாக்கி அதே நிகழ்வில் விற்பனைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.

செயற்குழுவில் உள்ள அனைவரும் மே 14 சேலத்துக்கு அருகே உள்ள கள்ளக்குறிச்சி நகரில் காலை 9 தொடங்கி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்த வாரம் முதல் இந்த நூல்களை ஆன்லைன் விற்பனைகளிலும் பெறலாம். மேல் விபரங்களை அடுத்த வாரம் பகிர்ந்து கொள்கிறோம் 📍

Arun Chandrasekaran

unread,
May 8, 2023, 3:29:15 PM5/8/23
to mint...@googlegroups.com
This is very interesting. Where can I buy this book online? I'd like to attend this meeting online if possible. Thanks.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 8, 2023, 5:10:04 PM5/8/23
to mint...@googlegroups.com
பாராட்டுகள் அம்மா.

Dr. Mrs. S. Sridas

unread,
May 8, 2023, 5:22:04 PM5/8/23
to mint...@googlegroups.com
பாராட்டு, சகோதரி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



Message has been deleted

தேமொழி

unread,
May 8, 2023, 5:50:39 PM5/8/23
to மின்தமிழ்
On Monday, May 8, 2023 at 2:10:04 PM UTC-7 thir...@gmail.com wrote:
பாராட்டுகள் அம்மா.

மிக்க நன்றி ஐயா 🌹

தேமொழி

unread,
May 8, 2023, 5:51:34 PM5/8/23
to மின்தமிழ்
On Monday, May 8, 2023 at 2:22:04 PM UTC-7 selvam...@gmail.com wrote:
பாராட்டு, சகோதரி.

மிக்க நன்றி முனைவர் செல்வம் ஸ்ரீதாஸ் 

தேமொழி

unread,
May 8, 2023, 5:55:09 PM5/8/23
to மின்தமிழ்
On Monday, May 8, 2023 at 12:29:15 PM UTC-7 Arun wrote:
This is very interesting. Where can I buy this book online? I'd like to attend this meeting online if possible. Thanks.

மிக்க நன்றி.   
நூலை இணையம் வழி பெறும் தகவல் கிட்டியவுடன் பகிர்கிறேன் 
நிகழ்ச்சி தகவலை தனியாக மற்றொரு மடலில் கொடுக்கிறேன். 
இணையம் வழி நிகழ்ச்சி ஒளி பரப்பப்படும் தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்வேன். 
நன்றி 

தேமொழி

unread,
May 8, 2023, 6:14:39 PM5/8/23
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடுகளாக
எனது புதிய நூலான வரலாற்று ஆய்வில் களப்பணிகள்,
மற்றும் டாக்டர். சிவராமகிருஷ்ணன் எழுதிய  மேலும் இரு நூல்கள் இவ்வார இறுதி வாக்கில் தயாராகின்றன.
1. நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம்
2. இராஜேந்திர சோழனின் ஒட்ர நாடு வெற்றி (ஒரிசா வெற்றி) ஆகிய இரு நூல்களுமே அவை.

4 புதிய நூல்களை  நமது பதிப்பகக் குழு  கடும் உழைப்பிற்கிடையே வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
நமது பதிப்பகக் குழுவின் டாக்டர்.பாமா, டாக்டர்.பாப்பா, டாக்டர்.இறைவாணி, திரு.நாணா, திரு தட்சிணாமூர்த்தி, டாக்டர்.தேமொழி ஆகியோருக்குப்  பாராட்டுக்கள்.
புதிதாகப் பதிப்பகக் குழுவில் இணைந்து செயலாற்றும் சுவாசினி, ஹேமலக்சுமி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...
இந்த நூல்கள் அச்சுக்குச் செல்லவிருக்கின்றன.
அடுத்த வாரம் முதல் இந்த புதிய நூல்கள் நான்கும் இணையம் வழி வரலாற்று ஆர்வலர்கள் வாங்கி வாசிக்கலாம்.
நூல்களை அடுத்த வாரம் முதல் இணையம் வழியாகப்  பெறலாம் அதற்கான தகவல்களை வார இறுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
#WhatsappShares

Dr J.R.Sivaramakrishnan Book 1.jpeg
Dr J.R.Sivaramakrishnan Book 2.jpeg
Dr. K. Subashini Book.jpeg
Thamizhagathil Bowtham.png
___________________________________________________________________________

Raman M P

unread,
May 9, 2023, 8:57:41 PM5/9/23
to mint...@googlegroups.com
புதிய நூல்கள்; புதிய பார்வை; தமிழ் வளர்ச்சிக்குப் புதிய பாதை; வாழ்த்துகள்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dr. Mrs. S. Sridas

unread,
May 9, 2023, 9:01:53 PM5/9/23
to mint...@googlegroups.com
இந்தியா வரும்போது முனைவர் பாமாவிடம் பெற்றுக்கொள்ளிறேன்.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
May 12, 2023, 10:58:51 PM5/12/23
to மின்தமிழ்


suba book release.jpeg
தமிழகத்தில் பௌத்தம் நூல் அச்சாகி வெளிவந்துவிட்டது. இது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய நூல்.

நாளை சேலம் அருகே தியாகனூர்  சிற்றூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியீடு காண்கிறது. நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்கள் புத்தகங்களை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.

விலை ரூபாய் 120/-
நாளை முதல் இணையம் வழியும் இந்த நூலை பெறலாம்.
--------------


தேமொழி

unread,
May 14, 2023, 12:24:58 PM5/14/23
to மின்தமிழ்


"தமிழகத்தில் பௌத்தம்" தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு) - இன்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது.
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

Book Release - Thamizhagathil Bautham-Themozhi -1.jpeg
Book Release - Thamizhagathil Bautham-Themozhi -2-1.jpg
Book Release - Thamizhagathil Bautham-Themozhi -4.jpg
Book Release - Thamizhagathil Bautham-Themozhi -2.jpeg
Book Release - Thamizhagathil Bautham-Themozhi -3.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Pavalan Ellappan

unread,
May 14, 2023, 8:56:31 PM5/14/23
to mint...@googlegroups.com
மகிழ்ச்சி வாழ்த்துக்கள். நூலை படித்து விட்டு என் கருத்தைப் பதிவு செய்கிறேன்.

நன்றி மேடம் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 14, 2023, 10:59:23 PM5/14/23
to மின்தமிழ்

மிக்க நன்றி 🌹🌹🌹

தேமொழி

unread,
May 16, 2023, 2:01:17 PM5/16/23
to மின்தமிழ்
பார்க்க:  https://www.facebook.com/photo/?fbid=3643564022553635&set=a.1388119661431427



Dr. K. Subashini Book.jpeg

மகிழ்ச்சியான செய்தி!

எனது புதிய நூல் ‘வரலாற்று ஆய்வில் களப்பணிகள்’ என்ற தலைப்பிலான நூல் அச்சாகி வெளிவந்து விட்டது.

ஆய்வுகளில் ஈடுபடுவோருக்குக் களப்பணிகளின் அவசியம், செயல்முறைகள், கருவிகள் என ஆய்வு வழிகாட்டியாக இந்த நூல் வாசகர்களுக்கு அமையும். எனது வரலாற்று ஆய்வுக் களப்பணிகள் சிலவும் இதில் எடுத்துக்காட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.

நூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் இணைய பக்கங்களின் வழியாக நூலைப் பெறலாம்.

விலை ரூ 120/-

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
அல்லது
https://wisdomkart.in/books.../tamil-heritage-foundation/

தேமொழி

unread,
May 18, 2023, 2:00:42 AM5/18/23
to மின்தமிழ்
பார்க்க: 

Narayanan Kannan is with Subashini Thf and 
5 others
.


டாக்டர் தேமொழி எழுதியுள்ள "தமிழகத்தில் பௌத்தம்" எனும் நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக சனி, மே 14, 2023 ல் வெளியீடு கண்டது.
1. புத்தரின் திருவுருவத்தோற்றம்
2. தமிழ் நாட்டு பௌத்த சிற்பங்கள்
3. முக்கோற்பகவர்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
5. எண் குணத்தான்
எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது இப்புத்தகம்.
பௌத்தம் தொன்மையானது, வடநாட்டிலிருந்து மௌரிய அரசர் அசோகர் காலத்தில் (கிமு 3) தெற்கே வந்தது. எனவே பௌத்த போதனைகளை பாலி மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்து பின் தமிழ் சுயமாக இது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது.
அலெக்ஸாண்டர் படையெடுப்பின் விளைவாக பௌத்தம் முதலில் காந்தாரம் (பாகிஸ்தான், ஆஃப்கான்) செல்கிறது. பாக்டீரியா எனும் பகுதியில் கிடைத்த சிற்பங்களே புத்தரின் முதல் உருவச்சிற்பங்களாகும். அவை கிரேக்கச் சிலைகளின் கலை வடிவில் இருக்கும். பின் பரவிய வெவ்வேறு பிரதேசங்களின் தன்மையை புத்தர் சிற்பங்கள் கொள்கின்றன. மீசை வைத்த புத்தர் சிலை தமிழகத்தில் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது. மீசை ஆண்மையின் குறியீடு. ரவி வர்மா கூட சிவனுக்கு மீசை வைத்து அழகு பார்க்கிறார். தமிழ் நாட்டில் மொத்தம் 70 புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன அறிகிறோம். பெரும்பாலும் அவை மகத நாடு என அறியப்படும் ஆறகளூர் (சேலம்) பகுதியாகும். அங்குதான் பௌத்த எழுச்சி மாநாடு நடந்தது.
இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு முக்கோர்பகவர் யார்? பகவான் யார்? அந்தணர் யார்? எனும் கேள்விகளுக்கான பதில்கள். பௌத்த சந்நியாசிகள் தங்கள் சிறு உடைமைகளை வைக்க மூன்று கோல்கள் கொண்ட ஒரு உண்டியை உருவாக்குவார்களாம். அதுவே இந்த முக்கோல். இதற்கு எந்த தத்துவப்பின்னணியும் கிடையாது என்பது டாக்டர் தேமொழியின் கண்டுபிடிப்பு. மேலும், பகவர், பகவன் எனும் சொற்கள் புத்த பகவானைக் குறிக்க வந்தவையே தவிர இந்துத் தெய்வங்களையோ, அடியார்களையோ குறிக்க வந்தவை அல்ல என்றும் விளக்குகிறார் தேமொழி. திருக்குறள் சொல்லும் அறவாழி அந்தணன் என்பது பௌத்த துறவிகளைச் சுட்ட வந்த சொல் என்கிறார் தேமொழி. வ.உ.சி அவர்கள் திருக்குறள் பாயிரம் அனைத்தும் துறவிகளின் புகழ் பாடுபவையேயன்றி இறைவனுக்கான பாடல்கள் அல்ல என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுகிறார் தேமொழி இந்நூலில்.
இதன் அடிப்படையில் முக்கோல் பௌத்த பிக்குகளுக்கு அன்று கொடுக்கப்பட்டது. இனிமேல் தமிழ் பௌத்த பிக்குகள் முன் போல் முக்கோர் பகவர் ஆவர் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் டோல்னா பையே சௌகர்யம் என பிக்குகள் செல்வதும், சிலர் பேக்பேக் வைத்துக் கொண்டு இலகுவாகச் செல்வதும் காணக்கிடைக்கிறது. நான் ஜப்பானில், கொரியாவில், தாய்லாந்தில், தைவானில் பார்த்த புத்த பிக்குகள் ரொம்ப மாடர்ன். அவர்களுக்கு முக்கோல் தேவைப்படாது.
இந்து சந்நியாசிகளும் கோல் தாங்குகின்றனர். அது தத்துவத்தின் பாற்பட்டது. சர்வம் ஏகம் எனும் அத்வைத சந்நியாசிகள் ஒரு கோல், இறைவன்-அடியார் எனப்பட்டது உலகம் எனும் மாத்வ சந்நியாசிகள் இரண்டு கோல்களைத் தாங்குகின்றனர். இராமானுஜர் போன்ற விசிட்டாத்துவ சந்நியாசிகள் சித், அசித், ஈஸ்வரன் எனும் மூன்று உண்மைகளைச் சுட்ட மூன்று கோல்கள் தாங்குகின்றனர். It has no utility value and is only symbolic.
சங்கம் மருவிய காலத்தின் வரலாறு களப்பிரர் காலத்து வரலாறு. அவர்கள் சநாதன தர்மம் விட்டு பௌத்த தர்மத்தைக் காத்தனர் எனும் முக்கிய தகவல் புத்ததத்தர் நூல்களின் வழியாகத் தெரிய வருகிறது.
இறுதியாக வள்ளுவர் பேசும் எண்குணத்தான் யார்? ஆதிசிவனா? இல்லை ஆதிநாதரான புத்தரா? என விளக்குகிறார் தேமொழி. ஆய்விற்குப் பின் எழுதப்பட்ட நூல். இந்நூல் சொல்லும் கருத்துகள் ஆராயப்பட வேண்டியவை.
முக்கோர் பகவர் என்பதற்கு இவர் தரும் சிற்பச்சான்று வடநாட்டு சிற்பங்களில் மட்டும் காணக்கிடைக்கிறது. சங்ககாலச் சிற்பங்கள் என ஏதுமில்லை. இலக்கியச்சான்று மட்டுமே. பௌத்தம் தமிழ் வயப்படுத்தப்பட்டதா? எனும் கேள்விக்கு இரண்டே சான்றுகள். ஒன்று வீரசோழியம் எனும் இலக்கண நூல். மற்றது மணிமேகலை எனும் காப்பியம். பௌத்தத்தின் முக்கிய நூலான திரிபிடிகம் தமிழாக்கப்பட்டதா? எனத்தெரியவில்லை. ஆனால் அயோத்திதாசர் திருக்குறள் என்பது உண்மையில், பௌத்தம் பேசும் மூன்று உண்மைகளைச் சொல்லும் திரிக்குறள் என்கிறார். பெரபடூர் (இந்தோனீசியா) கோயிலின் அமைப்பு இந்த திரிபிடிகம், திருக்குறள் சொல்லும் தத்துவங்களே என்பார் மலேசிய நண்பர் அரங்கண்ணல். (இது குறித்து அவரொரு வீடியோ வெளியிட்டுள்ளார்). ஆசைப்படுவோருக்கு துடுப்பு கிடைக்கும்). உலகமெல்லாம் பௌத்தக்குறியீடாக பிரபலமான தாமரைச் சூத்திரம் தமிழில் இன்னும் கிடைக்கவில்லை. பாலி மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.
எண்குணத்தான் யார்? எனும் கேள்வியைக் கேட்டு விடை தேடுகிறார் இறுதி அத்தியாயத்தில். எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய எளிய நூல் இது. இதன் மின் வடிவில் படங்கள் கலரில் இருக்கும் என நம்புகிறேன்.
இப்புத்தகம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு.


தேமொழி

unread,
May 19, 2023, 5:32:43 PM5/19/23
to மின்தமிழ்


வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் ஒரு பிரதி அன்பளிப்பாக வழங்கினோம்.
Jaffna Public Library.jpg
Jaffna Public Library2.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


தேமொழி

unread,
May 19, 2023, 5:35:09 PM5/19/23
to மின்தமிழ்

📌 குழுவில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் அல்லது அறிவிப்பு
*------*

இன்று காலை நான் இலங்கைக்கு செல்கின்றேன். என்னுடன் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் டாக்டர் பாமா மற்றும் டாக்டர் இறைவாணி இருவரும் உடன் வருகின்றார்கள்.

உலகப் புகழ் பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளையை புதுப்பிக்கும் நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உரை நிகழ்ச்சிகள், கிளிநொச்சியில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் கலை பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் இலக்கியத் திருவிழா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று உரை நிகழ்த்தும் நிகழ்வுகள் என பள்ளி கல்லூரி பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செல்கின்றோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது யாழ் பல்கலைக்கழகம், யாழ் நூலகம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்களை நன்கொடையாக அன்பளிப்பாக வழங்கவிருக்கின்றோம்.

இந்த நூல்களின் விலை பல நூல்கள் இணைத்த கட்டுகளாக

1)யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் யாழ் நூலகம் ஆகியவற்றிற்குத் தேவைப்படும் நூல்களின் விலை ரூபாய் 2000 + ரூபாய் 2000.

கல்லூரி மற்றும் ஒரு பள்ளிக்கு ஒரு கட்டு தலா ரூபாய் 1000/-  (2)

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அன்பளிப்பாக வழங்கவிருக்கும் நூல்கள். 5 பள்ளிக்கூடங்கள் ஒரு கட்டு ரூபாய் 500/-

இந்த நன்கொடைகளை வழங்க விரும்புபவர்கள் நீங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வங்கியில் உங்கள் பணத்தை செலுத்தி விடலாம்.

யாழ்ப்பாணத்தில் தற்சமயம் இருக்கும் நிதிநிலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அங்குள்ள கல்வி சூழலில் மாணவர்களும் ஆய்வாளர்களும் நமது நூல்களை வாசித்து பயன்பெற உங்களது நன்கொடை நிச்சயமாக உதவும்.

நன்றி
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பாக பிரிவு.

Payment Details: (within India)
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai



#WhatsAppShare 

தேமொழி

unread,
May 25, 2023, 1:07:54 AM5/25/23
to மின்தமிழ்
பார்க்க:


வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை புக் ஹவுஸ் ஏற்பாட்டில் தமிழகத்தில் பௌத்தம் என்ற நூலின் எனது திறனாய்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இடம் எக்மோர் புக் ஹவுஸ், சென்னை. முழு முகவரி அறிவிப்பில் காணலாம்.
இந்த நூலை பெற விரும்புபவர்கள் இந்த நிகழ்ச்சியில் திறனாய்வுக்கு பின் அதனை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். நேரம் காலை 10:30 மணி.
சென்னையில் உள்ள நண்பர்கள் நேரில் சந்திக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே.
வாருங்கள் - வாசிப்போம்.. கலந்துரையாடுவோம்!

book review by suba.jpeg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
May 28, 2023, 6:50:38 PM5/28/23
to மின்தமிழ்

thamizhagathil-boutham1.jpg
தமிழகத்தில் பௌத்தம்  
- முனைவர் க. சுபாஷிணி நூல் திறனாய்வு
https://www.youtube.com/live/P9BvdRzjTZU?feature=share&t=132
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
May 28, 2023, 7:12:19 PM5/28/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0wQTUY1MHJX3cTiXkf26kmAqoCBd5q7kV8aC7ZZX1BahdDVQrnRQ3gzaio4ZaBiQLl


எக்மோர் புக் ஹவுஸ் புத்தக நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற புத்தக திறனாய்வு நிகழ்ச்சியில் சில புகைப்படங்கள்.
தமிழகத்தில் பௌத்தம் என்ற நூல் திறனாய்வு நிகழ்ந்தது. திரளாக வந்திருந்த நூல் பிரியர்கள் திறனாய்வினைக் கேட்டு கேள்வி பதில் கலந்துரையாடல் என்று கலந்து கொண்டனர்.

thamizhagathil-boutham2.jpg
-----------------------------------------------------------------------------------------------------
thamizhagathil-boutham3.jpg
கீழுள்ள இரு தளங்களிலும் நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது. . .

தேமொழி

unread,
May 28, 2023, 7:23:08 PM5/28/23
to மின்தமிழ்
பார்க்க : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02itySXhPNYvC5ELVRPVwLdWMBj2UfMVnfSoy7a9mjxjuxKSNSyFLKZqFbH6i39v8fl


தமிழ் மரபு அறக்கட்டளையின் 4 புதிய நூல்கள் .. வாங்கிவிட்டீர்களா..?
1. இராஜேந்திர சோழனின் ஒட்ர நாடு வெற்றி
நூலாசிரியர்: முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
விலை ரூ 90/-
2. வரலாற்று ஆய்வில் களப்பணிகள்
நூலாசிரியர்: முனைவர் க.சுபாஷிணி
விலை ரூ 120/-
3.தமிழகத்தில் பௌத்தம்
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
விலை ரூ 120/-
4.நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம்
நூலாசிரியர். ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
விலை ரூ 300/-
நூல்களை இணையம் வழி பெற:
-தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவு

Dr J.R.Sivaramakrishnan Book 1.jpeg
Suba 3.jpg
Themozhi 3.jpg
Dr J.R.Sivaramakrishnan Book 2.jpeg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jun 1, 2023, 3:31:21 AM6/1/23
to மின்தமிழ்
பார்க்க : https://www.facebook.com/jambulingam.balagurusamy/posts/pfbid02k5n5SKRnnVMrPGADs1kHwEsisuFruWphwPjET8RpZj9kAnABRzb8pyKxx4G2bPXHl


18.jpg

முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33), தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் (பக்.45-59) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் (பக்.60-79) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் (பக்.60-91) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.
"தொடக்க கால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்." (ப.14) "கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது." (ப.23) "சிந்து சமவெளிக்கு அப்பால் வளர்ந்த காந்தார புத்த சிற்பங்களுக்கு இணையாகவே கங்கைச்சமவெளி அருகில் மதுராவிலும் புத்த சிற்பங்கள் உருவாயின."(ப.25) "மதுரா வடிவங்களிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக குப்த வடிவங்கள் தோன்றிப் பின்னர் குப்த வடிவமே அஜந்தா எல்லோரா, அமராவதி நாகார்ஜுனகொண்டா, காஞ்சி நாகப்பட்டினம் என இந்தியாவின் பிற பகுதிகளிலும் கிழக்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்.... உள்ளிட்ட நாடுகளில் உருவான வடிவங்களுக்கும் அடித்தளமாக அமைந்தன." (ப.27)
"தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு தொடர்ந்து பல பௌத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது."(ப.34) "சில புத்தர் சிலைகள் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர்.. ஆகிய இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றி உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை."(ப.42)
"கலித்தொகையில் முக்கோற்பவர் குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு."(ப.45) "முக்கோல் குறித்துத் தமிழின் தொன்மையான நூலை எழுதிய தொல்காப்பியரும் அந்தணர்க்குரியவை எவை என்பதைக் குறிப்பிடுகையில் ஒரு நூற்பாவில் சுட்டுகிறார்."(ப.48) "தொல்காப்பியம் குறிப்பிடுவது போல அந்தணர்கள்/துறவிகள் முக்கோல் ஏந்துவர் என்பது வழக்கம்." (ப.52) "துறவிகள் அவ்வாறு முக்கோல் அமைப்பைத் தங்களுடன் எடுத்துச்சென்ற நோக்கம் என்ன என்பதற்கான சான்றுகள் சிற்பங்களிலோ ஓவியங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை, அதாவது பௌத்த சிற்பங்களைத் தவிர."(ப.54)
"விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்ததத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார்."(ப.64) "ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தபுத்ததத்தர் அவர் காலத்தில் தமிழகம் முழுவதும் ஆண்டதாகக் களப்பிர மன்னன் என அச்சுத விக்கந்தனைக் குறிப்பிடுகிறார்."(ப.67) "புத்ததத்தர் காலமான ஐந்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியதையும் அதன் பின்னரே கடல்கோளால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையின் பதிவு காட்டுவதாகவும் கணிக்கலாம்."(ப.70)
"எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறியமுற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்."(ப.80) "...எட்டு பண்புகளைக் கொண்டவரும் துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்."(ப.90) "திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரை குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப்பொருத்தமானதாக இருக்கும்."(ப.90)
ஒட்டுமொத்த நூலையும் வாசிக்கும்போது முழுமையாக பல புதிய செய்திகளைக் காணலாம். நூலாசிரியர் பல இடங்களில் என் ஆய்வினை மேற்கோளாகச் சுட்டியுள்ளதைக் காணமுடிந்தது. உரிய இடங்களில் ஒளிப்படங்களும், மேற்கோள் சான்றுகளும் தரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பௌத்தம் என்பதை பல்வேறு பொருண்மைகளில் நோக்குகின்ற நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கும், பதிப்பித்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : தமிழகத்தில் பௌத்தம்
ஆசிரியர் : முனைவர் தேமொழி
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மே 2023
விலை ரூ.120, ஐரோப்பாவில் யூரோ 4
நூலை இணையம் வழி பெற :

Dr. Mrs. S. Sridas

unread,
Jun 1, 2023, 3:50:57 PM6/1/23
to mint...@googlegroups.com
முனைவர் தேமொழியின் “தமிழகத்தில் பௌத்தம்” என்னும் நூல் பற்றிய ஆய்வியலுக்கு நன்றி. முனவைர் தேமொழிக்கு வாழ்த்து.
இந் நூல் மலேசிய மாநாட்டில் கிடைக்குமா?
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 2, 2023, 1:06:01 AM6/2/23
to மின்தமிழ்
மலேசியா மாநாட்டில் நூல் விற்பனை திட்டம் தற்பொழுது இல்லை என்று அறிகிறேன், 
திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் தெரியப்படுத்துகிறேன் முனைவர் செல்வம் ஸ்ரீதாஸ் 

தேமொழி

unread,
Jun 6, 2023, 3:41:17 AM6/6/23
to மின்தமிழ்
📌 தமிழ் மரபு அறக்கட்டளை செய்தி

பேரூரில் இயங்கும் பேரூர் சைவ மடத்தின் பேரூர் தமிழ்க்கல்லூரிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் 16 நூல்களை அன்பளிப்பாக அனுப்பியுள்ளோம்.  இவை இன்று பேரூர் தமிழ்க்கல்லூரி நூலகத்தை அடைந்துவிட்டதாக செய்தி கிட்டியது. இந்தக் கல்லூரி நூலகத்துக்கு நூல்கள் தேவைப்படுவதைத் தெரிவித்த நம் குழு உறுப்பினர் ஆசிரியர் திருமிகு ஹேமா அவர்களுக்கும் நூல்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை கவனித்த  வருண்,  பாமா ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்.

பேரூர் தமிழ்க்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் பயனளிக்கும் என்ற பெரிதும் நம்புகின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Jun 7, 2023, 9:52:46 PM6/7/23
to மின்தமிழ்

THFi Books List.png
நூல்களை சென்னையில் கீழ்க்காணும் இடங்களில் நேரலும் வாங்கலாம்
டிஸ்கவரி புக் பேலஸ்
ஆழி பதிப்பகம்
எமரால்ட் பதிப்பகம்

நூல்களை இணையம் வழி பெற:

---
THFi Books List.png

தேமொழி

unread,
Jul 30, 2023, 6:29:24 PM7/30/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo?fbid=6666127413407605&set=a.306570402696703

tamilagathil-bautham.jpg

தமிழகத்தில் பௌத்தம்

இந்தியக் குடியுரிமையைக் கன்சுலேட்டில் கடாசிவிட்டு ஐரோப்பிய நாடு ஒன்றின் குடியுரிமையை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் பாரத தேச பக்தர்கள் என்று - இன்றைய வரையறைப்படி - அறியப்படும் கூட்டத்தில் உள்ள ஒருவருடன் சென்ற வருடம் ஓர் இரவுப் பொழுதில் உரையாடிக் கொண்டிருக்க நேர்ந்தது. “பாரதத்தில் இருந்தது இருப்பது ஒரே கலாச்சாரம்தான் ஒரே மதம்தான், மற்றதெல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் கொண்டுவந்ததுதான், இல்லையென்று நீங்கள் சொன்னால் அதை எனக்குப் புரிய வையுங்கள். புரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்”, என்று காவிபடிந்த வெள்ளை மனதுடன் என்னுடன் ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார்.

பௌத்தம் என்று ஒரு மதம் பாரத தேசமெங்கும் இருந்ததே அது தெரியுமா என்றேன். “ஆமாம், இன்று ஜக்கி வாசுதேவ் போல புத்தர் அன்றைய பாரதத்தில் மக்களுக்கு நல்வழியைப் போதித்துக் கொண்டிருந்தார். அதனாலென்ன?” என்றார். இனிமேல் ஜக்கியைப் பற்றி இவரிடம் பேசுவதா அல்லது புத்தரைப் பற்றிப் பேசுவதா என்று டாபிக்கை அவர் அலைக்கழிக்க வைத்தது தெரிந்தது. (வாழ்க்கையில் நேராகப் பேசும் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள். ஆனால் இந்த உவமைகளை நடுவில் போட்டுப் பேசுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அது ஆம்வே வியாபார டெக்னிக்.) அசோகர், மணிமேகலை, அமராவதி, அழகர் கோவில், அகழாராய்ச்சி என்றெல்லாம் பௌத்தம் பற்றி இரண்டு மூன்று கியர்களை மாற்ற ஆரம்பித்தேன். உடனே இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று ஹாண்ட் ப்ரேக் போட ஆரம்பித்தார். கரடுமுரடான சில புத்தகங்களைச் சொன்னேன். உடனே அந்த புத்தகங்களுக்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று ரிவர்ஸ் கியர் போட ஆரம்பித்துவிட்டார். சரி, இனி இவரிடம் ஆடு புழுக்கை போடுகிறது என்று சொன்னால் கூட அதற்கு ஆதாரம் கேட்பார் என்று ஒதுங்கிக் கொண்டு வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்து கிளாஸைக் கவுத்திவிட்டேன்.

இந்தியாவில் பௌத்தம் பற்றிய விவரங்கள் ஆன்ட்ராய்ட் போனில் எடுத்த போட்டோக்கள் ஐபோனுக்கு மாறியதும் டவுன்லோட் செய்யப்படாமல் விடப்பட்டது போல எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டது. இதில் தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏசுநாதரைத் தெரிந்த அளவுக்குக் கூட புத்தரை இன்றைய தமிழர்களுக்குத் தெரிந்திருக்காது. உன் மூதாதையர் என் மூதாதையர் என்று பெரும்பாலானோர் புத்தமதத்தைத் தழுவியிருந்த நாடு தமிழ்நாடு. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. அப்படியா என்று நீங்கள் வாயைப் பிளந்தால் உங்கள் வாய்க்குள் செருகப்பட வேண்டிய புத்தகம் முனைவர் தேமொழி எழுதிய ‘தமிழகத்தில் பௌத்தம்’ என்ற புத்தகம். நூறு பக்க புத்தகத்தில் ஐம்பது பக்கங்கள் இதற்கான ஆதாரங்கள்தான்.

இப்படித் தமிழகத்தில் பல ஆயிரம் மடங்கள், கோவில்கள் என்று தழைத்தோங்கியிருந்த பௌத்த மதம் ஏன் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்று நீங்கள் கேட்டால் அதற்குப் பதில் ‘இல்லை’. பௌத்தம் இன்றும் நீக்கமற தமிழ்நாடு முழுவதும் நிரம்பியிருக்கிறது, வேறு வேறு வடிவங்களில். ஆயிரமாண்டு மதம் காணாமல் போக முடியாது.

தெற்காசியா முழுவதும் கடல் வழியாக பௌத்தம் பரவியிருக்கிறது. வட இந்தியாவில் கடல் கிடையாது. பௌத்தத்தைத் தெற்காசியாவெங்கும் பரப்பியவர்கள் கடல் கடந்து சென்ற தமிழர்கள். புத்ததத்தர் என்ற தமிழர் பாலி மொழியில் எழுதிய பௌத்த நூற்கள் இன்றும் மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வாழ்கின்றன.

முனைவர் தேமொழி தமிழகத்தில் இன்றும் முனீஸ்வரர்களாக, ‘பூத’ என்ற ஊர்ப்பெயர்களாக, பல கோவில்களில் இன்றும் மதம் மாற்றப்பட்ட சிலைகளாக வாழும் புத்தரின் ஆதாரங்களைத் தொகுத்ததுடன் மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்களில் வரும் முக்கோற்பகவர், அந்தணர், திருக்குறளில் வரும் எண்குணத்தான் போன்ற புத்தத் தொடர்புகளை ஆப்கானிஸ்தான், கனிஷ்கர் வரைச் சென்று நம் கபாலங்களைப் பிளந்து உண்மைகளை உள்ளே வைக்கிறார்.

தேமொழியின் புத்தகத்தை வாசித்ததும் எனக்கு உடனே தோன்றியது இதுதான். தலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள். நாம் அவர் ஆன்மாவை உடைத்து வைத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் சிதறிக் கிடக்கிறார்.

புத்தகத்தை வாசிக்க ஆர்வமிருந்தால்…

https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham
-------------------------

தேமொழி

unread,
Jul 30, 2023, 6:35:14 PM7/30/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=6384921648265605&set=a.430017170422779

Saranya

tamilagathil-bautham.jpg
Buddha

எனக்கு சிறுவயதில் கோடியக்கரையில் ராமர் பாதம் என்று ஒன்று காட்டினார்கள் !அப்பொழுது எனக்குள் ஒரு கேள்வி ,ராமர் என்பதே புனைவு கதை தானே அப்புறம் எப்படி அவருக்கு பாதம் வந்தது ? இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிகிறது ,அது புத்தர் பாதமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பது !

இன்றும் சிங்கப்பூர் ,சீனா ,இந்தோனேசியா ,இன்னும் பல நாடுகளில் புத்த பிக்குகள் அதிகமாக இருக்கின்றன .சீனர்களில் பெரும்பாலானோர் bhudhism முறையை இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஆச்சரியம் இல்லை!

இந்த புத்தகம் பல சங்க கால செப்பேடுகளும் , பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் தொகுப்பு அடிப்படையில் எழுதப்பட்டது .தமிழ் மரபு அறக்கட்டளை முனைவரால் எழுதப்பட்டது .

புத்தர் என்பவர் 'சொல் 'செயல் ' 'எண்ணம் 'மூன்றும் ஒத்தவாறு இருக்க வேண்டும் என்பதை போதித்த ஒரு மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கிறார் . அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல . கடவுள் வழிபாட்டை மறுத்தவர். அவர் மிருக மாமிசம் பலியிடுவதை உடன்படாதவர் ஆக அவர் சைவமாக இருந்திருக்கிறார்.

நிறைய புத்த விகாரங்கள் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன .ஆனாலும் அப்பொழுது உள்ள புத்த பிக்குகள் வாழ்ந்த காலத்தில் தமிழகம் என்பது மிகவும் செழுமையான சோலைவனமாக இருந்திருக்கிறது .பூக்களாலும் தாமரை மலர்கள் நிறைந்த குளங்களாலும் ,மரங்களாலும் பறவைகளாலும் நிறைந்திருக்கிறது !! இப்படி செழுமையாக இருந்த தமிழகம் பல்வேறு இயற்கை சீற்றங்களால் அழிந்து பஞ்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

அப்பொழுது பல்வேறு அரசர்கள் பிக்குகளின் புத்த கொள்கைகளை ஆதரித்தவர்களாக இருந்திருக்கிறார்கள் . அதனால்தான் அப்பொழுது நிறைய புத்த விகாரங்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது .கடல் வழி ஊர்களில் அதிகமாக இருந்திருக்கிறது .அங்கு பல வெளிநாட்டவர்கள் வந்து சென்று கொள்கைகளை பல நாடுகளிலும் பரப்பி இருக்கிறார்கள் .அதற்குப் பிறகும் அங்கு வந்து சென்று கொண்டிருந்தார்கள் என்பதற்கான குறிப்புகள் இருக்கிறார்கள்.

புத்த பிக்குகள் எல்லா நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டு மொழியில் புத்த கொள்கைகளை பற்றி சொன்னதால் இன்றும் பல நாடுகளில் புத்த கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் .ஆங்காங்கே இங்கு கிடைத்த புத்த சிலைகள் எப்படி மற்ற வழிபாட்டு சிலைகளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் ஆதாரங்களோடு இந்த புத்தகம் சொல்கிறது.

புத்தத்தில் வழிபாடு முறை என்பது கிடையாது .ஆனால் அதற்குப் பிறகு அது மாறி ,பூக்களாலும் தூபங்களாலும் வழிபடும் வெவ்வேறு கடவுளாக மாற்றப்படுகிறது .

இன்றளவும் படுத்திருக்கும் நிலையிலும் ,அமர்ந்திருக்கும் நிலையிலும் புத்த சிலைகள் பல ஊர்களில் தமிழ்நாட்டில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன .அது மிகவும் பழமையான சிலைகள் என்பதற்கு பல தரவுகள் இருக்கின்றன.

இப்படி பல ,பல தகவல்களோடு இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

வரலாற்றை தெரிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.

தேமொழி

unread,
Aug 3, 2023, 5:57:49 PM8/3/23
to மின்தமிழ்
பார்க்க :  https://www.facebook.com/photo/?fbid=6679341868752826&set=a.306570402696703
ilakkiya-meelaivu-themozhi.jpg

இலக்கிய மீளாய்வு
திருவள்ளுவர் யாரையும் நேரடியாகக் கிண்டலடித்துவிட்டு அதிலிருந்து நாசூக்காகத் தப்பிக்கவும் தெரிந்த வல்லவர். நல்லவர். அவரது சில நையாண்டிகளை நாமாகப் பேசுவது போல இன்று பேசினால் மத உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டதாக முன் ஜாமினுக்கு அலையவைத்துவிடுவார்கள். ஒரு குறளில் கடவுளைப் போன்றவர்கள் கள்வர்கள் என்கிறார். ஏனென்றால் இருவருக்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. போலீசோ ஐகோர்ட்டோ கூந்தலோ எதற்கும் பயப்படாமல் எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள் என்கிறார். ‘தேவர் அனையர் கயவர்’ என்று தொடங்கும் குறள். ஆனாலும் ரொம்ப டிப்ளமேட்டிக்காக கடவுளைத் திருடன் என்றும் சொல்லாமல், திருடனைக் கடவுள் என்றும் சொல்லாமல், அவரைப் போன்றவர் இவர் என்று சொல்லி எப்படி என் ராஜதந்திரம் என்று தப்பித்துவிடுகிறார்.
ஆங்கிலத்தில் satire என்று சொல்லப்படும் இந்த நக்கல், கிண்டல், நையாண்டி போன்றவற்றையெல்லாம் பண்டைய தமிழில் ‘அங்கதம்’ என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியரே அதற்கு இலக்கணம் எழுதி வைத்திருக்கிறார். அங்கதத்திற்குள் ‘செம்பொருள் அங்கதம்’, ‘பழிகரப்பு அங்கதம்’ என்று இருவகைகள்.
நேரடியாகக் கிண்டலடிப்பதில் (செம்பொருள் அங்கதம்) வல்லவர் வள்ளுவர் என்றால் மறைமுகமாக, அதாவது டீசன்டாகக் (பழிகரப்பு அங்கதம்) கிண்டலடிப்பதில் வல்லவர் ஔவையார். கம்பருக்கும் ஔவையாருக்கும் ஒரு சின்ன தகறாறு. ஔவையாரைக் கூப்பிட்டு வாடீ போடீ என்று கம்பர் கீரையைப் பற்றிச் சொல்வது போல் ஒரு கவிதை வரியை ஆரம்பித்து அதை ஔவையாரை முடிக்கச் சொல்கிறார். கடுப்பான ஔவையார் ‘எருமையே, கழுதையே, குட்டிச் சுவரே, குரங்கே…ஆரையடா சொன்னாயடா?’ என்று கம்பரைக் காரித்துப்பி முடித்துவிடுகிறார். ஆனால் நேரடியாக இப்படித் திட்டவில்லை. எமனேறும் பரியே என்கிறார், அதாவது எருமை மாடே. பெரியம்மை வாகனமே என்கிறார், அதாவது மூதேவியின் வாகனமான கழுதையே. முட்டமேற் கூரையில்லா வீடே என்கிறார், அதாவது குட்டிச் சுவரே. குலராமன் தூதுவனே என்கிறார், அதாவது குரங்கே. (ஔவையாரும் முன் ஜாமீன் வாங்க வேண்டியதுதான்.) ‘ஆரையடா சொன்னாயடா?’ என்றால் ஆரைக்கீரையைப் பற்றிச் சொன்னாயடா என்றும் அர்த்தம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் அதியமானுடன் நறுக்கென்ற கள்ளை ‘மகிழ்ச்சி’ அடித்த ஔவையாரும் வடக்கே கஜினியும், கோரியும் படையெடுத்துக் கொண்டிருந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் தெற்கே கம்பராமாயணம் படைத்த சேக்கிழாரும், சாரி கம்பரும் எப்போது குழாயடியில் சண்டை போட்டார்கள் என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஔவையார் ஒன்றும் 24 படம் சூரியா போல டைம் மிஷினைக் கையில் கட்டிக் கொண்டு அங்கேயும் இங்கேயும் தாவிக்கொண்டிருக்கவில்லை. பலபேர் ஔவையார் என்ற பெயரில் பல நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஏன் ஒரே ஔவையார் இருக்கக் கூடாது, அவர்தான் சாகாவரம் கொண்ட நெல்லிக்காய் சாப்பிட்டவர் ஆயிற்றே என்று ஔவையார் படம் எடுத்தவர்கள் போல நீங்களும் யோசித்தால் அடுத்த எலக்‌ஷனுக்குள் அவரை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து, போட்டியிட வைத்து தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுங்கள்.
தொல்காப்பியர் காலத்து அங்கதம் மேட்டரிலிருந்து நான் மேலே எழுதியிருக்கும் எல்லா இலக்கிய உதாரணங்களும் முனைவர் தேமொழி எழுதியிருக்கும் ‘இலக்கிய மீளாய்வு’ என்ற புத்தகத்திலிருந்து நைஸாக உருவிய விஷயங்கள். இலக்கியங்களை மீளாய்வு செய்ய வேண்டுமென்றால் முதலில் இலக்கியங்களை வாசித்திருக்க வேண்டும், அதனபின் அவற்றைப் பற்றி இதுவரையிலான ஆய்வுகளை வாசித்திருக்க வேண்டும், அதன்பின் பலபேர் இலக்கியங்களை இன்று எப்படி உருட்டுகிறார்கள் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இலக்கிய மீளாய்வு என்பது ஓர் இரட்சணிய யாத்திரிகம். இலக்கியம் படைப்பதைவிட இலக்கிய மீளாய்வு கடினமானது. கடவுளாகிவிடுவது எளிது, கடவுளை அடைவதுதான் கடினம் என்பது போல. தமிழ் இலக்கியங்களை அடைந்த ஓர் அனுபவம் இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது.
இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட ஏகப்பட்ட விஷயங்களைப் போகிறபோக்கில் சொல்கிறார் முனைவர் தேமொழி இந்தப் புத்தகத்தில். காளமேகப் புலவரின் பாடல்களை ஆராயும் இடங்களில் அவரது ஊரை ஊவேசா தேடிய கதையையும் சொல்கிறார். இன்று பெரிதாக பேசப்படாத ‘ஆசாரக் கோவை’ (திருக்குறள் இருக்கும் அதே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று) தீண்டமையை உயர்த்திப் பிடிப்பதும், அதைத் தமிழர்கள் முக்கிய நூலாகக் கருதியதாக 1700-களில் சீகன்பால்க் என்ற ஜெர்மானியர் ஆவணப்படுதியதையும் குறிப்பிடுகிறார். ஆசாரக்கோவை போன்ற நூற்கள் இருந்த காலத்திலேயே தீண்டாமையை எதிர்த்து 15-ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பெண் சமத்துவம் பேசி பாய்ச்சலூர் பதிகம் என்று எழுதியதையும் மீளாராய்கிறார். அதில் அந்தப் பெண் புலவர் சொன்னதில் என்னைக் கவர்ந்தது - எந்தச் சாதிக்காரனைப் போட்டு எரித்தாலும் பிணம் ஒரே மாதிரிதானே மணக்கும்! இதன் கடைசிக் கட்டுரையாக வருவது தமிழ்ப்புத்தாண்டு பற்றி. அதிகம் ஆராயப்படாத நிகண்டுகளை வைத்து ஆவணி மாதம் பற்றி ஆராய்ந்திருப்பது ஆச்சரியமளித்தது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பமும் இந்த மீளாய்வுக்குக் கைகொடுத்திருப்பது தெரிகிறது. எந்தெந்த இலக்கியங்களில் எந்தெந்த வார்த்தைகள் எங்கெங்கே வருகிறது என்பதைத் தொழில்நுட்பம் கோடிட்டுக் காட்டிவிடுகிறது. கூகிள் மேப்பையும் சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் சொன்னதையும் வைத்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்த பாதையைக் கண்டுபிடிக்க முடிகிறது (இந்தப் புத்தகத்தில் உள்ளது!).
இது போன்ற புத்தகங்கள் தமிழில் இன்னும் ஏகப்பட்டவை வரவேண்டும். அதற்கான வெற்றிடம் பெருமளவு இருக்கிறது. சித்தாந்தம் என்று எதையாவது பெருமூளைக்குள் ஏற்றிவைத்துக்கொண்டு அதற்கு இலக்கியங்களில் ஆதாரங்கள் தேடுவதை ஆய்வு என்று சொல்லும் போக்கு மாறி ஆதாரங்களை எல்லாம் முதலில் ஒழுங்காக ஆய்வு செய்துவிட்டு அவற்றின் மேல் அவசியமிருந்தால் சித்தாந்தங்களைக் கட்டமைக்க வேண்டும்.
தமழ் இலக்கியங்களின் மீதும் வரலாறு மீதும் ஓரளவேனும் ஆர்வம் இருந்தால்… அரசியல் பேசும் முன் அறிவை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இருந்தால்…கண்டிப்பாக வாசிக்கவும்.

தேமொழி

unread,
Aug 16, 2023, 6:26:17 PM8/16/23
to மின்தமிழ்

Sundara Cholan is with Subashini Thf and 
2 others
.


tamilagathil-bautham review cover 2.jpgtamilagathil-bautham review cover 1.jpg

தமிழகத்தில் பவுத்தம்
முனைவர் தேமொழி அவர்கள் எழுதி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள மிகச் சிறப்பான நூல்.
கடந்த வார இறுதியில் இதனை வாங்கிய நான், இரண்டு நாட்களில் ஒரே மூச்சில் இதனை வாசித்து முடித்தேன். மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம்.
பண்டைத் தமிழகத்தில் பவுத்தம் செழித்தோங்கியது என்பதை மறுக்க முடியாத சான்றுகளுடன் நிறுவும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதனை நிறுவும் தனது முயற்சியில் நூலாசிரியர் முனைவர் தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெறுகிறார் என்பது மகிழ்வளிக்கும் செய்தி.
இந்நூல் 94 பக்கங்கள் மட்டுமே கொண்டது. நீண்ட சலிப்பூட்டும் நூல்களை வாசிக்கத் தயங்கும் 2K Kids எனப்படும் இளம் தலைமுறையினர் கூட இதனை வாசிக்கும் வகையில், சுருக்கமாக நறுக்குத் தெறித்த வகையில் இதனை எழுதி இருக்கிறார் ஆசிரியர் முனைவர் தேமொழி அவர்கள். அவருக்கு நமது வாழ்த்துகள்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
என்னும் கதையாக நூறுக்கும் குறைவான பக்கங்களில் தான் சொல்ல வந்த அனைத்தையும் மிகச் சிறப்பாக முன்வைத்து விடுகிறார் இதன் ஆசிரியர்.
1. புத்தரின் திருவுருவத் தோற்றம்
2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள்
3. முக்கோற்பவர்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
5. எண்குணத்தான்
என இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டதாகத் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இவ்வைந்து பகுதிகளிலும் வரலாறு, இலக்கியம், கல்வெட்டியல் எனப் பல்வேறு துறை சார் சான்றுகள் முன்வைக்கப் பட்டுள்ளன என்ற போதிலும், கீழ்க்கண்டவாறு இவற்றில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருப்பதை நான் காண்கிறேன். அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
1. புத்தரின் திருவுருவத் தோற்றம் – Iconography – சிலை வடிவமைப்பியல்?
2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள் – History and Archeology – வரலாறு மற்றும் தொல்லியல்
3. முக்கோற்பவர் – Literature and Iconography – இலக்கியம் மற்றும் சிலை வடிவமைப்பியல்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள் –Epigraphy and History – கல்வெட்டு ஆய்வியல் மற்றும் வரலாறு
5. எண்குணத்தான் –Comparative study of Thirukkural & Buddhist Phiolosophy
இது குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் எழுத வேண்டும். செய்கிறேன். தற்போதைக்கு எனது வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையிலான புரிதல் மட்டும்.
மிகச் சிறப்பான நூலை வாசித்தேன் என்பதும் பயனுள்ள வாசிப்பு அனுபவம் ஆக இருந்தது என்பதிலும் ஐயமில்லை.
ரூ.120 விலை கொண்ட இந்நூலை வாசிக்க விரும்பும் அன்பர்கள் www.commonfolks.in தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்நூல் பேசும் தலைப்புகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொரு வாசகரும் தவறாது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பன்னாட்டு அமைப்பு மிகச் சிறப்பானதொரு நூலை நமக்கு அளித்துள்ளது. அவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
-----
Reply all
Reply to author
Forward
0 new messages