வரலாற்றுச்சான்றுகளைக் காப்பது எவ்வாறு?

14 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 27, 2026, 1:36:36 PM (2 days ago) May 27
to மின்தமிழ்
முனைவர் செல்வகுமார் தஞ்சை பல்கலை:
உண்மையாக அறத்துடன் நோக்கினால் ஈமச்சின்னங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் அகழாய்வு செய்வது தவறு. ஏனென்றால் அவற்றைப் புதைத்த பழங்கால மனிதர்கள் அதை விரும்ப மாட்டார்கள். பண்பாட்டுத் தொடர்ச்சி உள்ள நிலையில் மக்கள் குழுக்களின் ஈமச்சின்னங்களை அகழ இயலாது. அமெரிக்காவின் NAGPRA சட்டம் இங்கு நினைவு கூறத்தக்கது. (The Native American Graves Protection and Repatriation Act (NAGPRA) is a 1990 U.S. federal law that mandates the return of Native American ancestral remains, funerary objects, sacred objects, and items of cultural patrimony to lineal descendants, Indian Tribes, and Native Hawaiian organizations.) ஆனால் தற்போது தென்னிந்தியாவில் உள்ள பல ஈமச்சின்னங்கள்/ பெருங்கற்படைச்சின்னங்கள் வளர்ச்சி, நகரமயமாக்கம் காரண்மாக அழிக்கப்பட்டுள்ளன, அழிக்கப்பட்டுவருகின்றன. இவை அழிந்துவருவதால், அகழாய்வு செய்வதில் அறக்கேடு இல்லை. பல ஈமச்சின்னங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே இவற்றை அகழாய்வு செய்வது வரலாற்றுத் தகவல்களை மீட்க உதவும். இல்லையெனில் அவை அழிந்துவிடும். இவை அனைத்தையும் அங்கேயே வைத்துக் காப்பது அனைத்து இடங்களிலும் இயலாததாகும். உள்ளூர் மக்கள், ஊரவைகள், தனியார் உதவியுடன் இதைச்செய்யலாம். தனியார் நிலங்களில் வேளாண்மை விரிவாக்கத்திற்காக இவை பெரிதும் அழிக்கப்படுகின்றன. பல இடங்களில் மக்கள் இயந்திரங்களை வைத்து இவற்றைத் தோண்டிவிட்டனர். மீட்புத்தொல்லியல் செயல்பாடுகளை முடுக்கிவிடலாம். சில இடங்களில் பெருங்கற்படைப் பூங்காக்கள் அமைத்துக் காக்கலாம். சிலவற்றை அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். இதன் வழி வரலாற்றுச்சான்றுகளை நாம் காக்க இயலும்.

முனைவர் தேவி அறிவுசெல்வம்:
டங்டன் பிரச்சனைக்கு பிறகு இப்பொழுது மேலூர் வட்டாரத்தில் சிறு பொருளையும் பாதுகாக்க தொடங்கி விட்டார்கள். இந்த தாழி பானையை அங்கேயே அவர்கள் பாதுகாப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கான வழிமுறைகள் தான் எங்களுக்கு தெரியவில்லை.
ஏற்கனவே சில கல்வெட்டுகளை கோயிலில் எடுத்து வைத்து, கோயிலாக கட்டியும் செய்தோம். இதனை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பதுஎன்று தெரியவில்லை

முனைவர் மருது பாண்டியன்:
தகவல்களை அரசு அருங்காட்சியகத்திற்கு தெரியபடுத்தவும். ஆங்காங்கே கிடைக்கும் புதையல்களை நீங்கள் வேறு இடத்திலோ கோயில்களில் வைத்துவிட்டோ சென்று விடுவீர்கள். சில ஆண்டுகள் கழித்து இக்கல்வெட்டு காணவில்லை என்றும், புதிதாக கோயில்களில் வைத்துள்ள கல்வெட்டுகள் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினையாக மாறும். அப்போது இந்த பிரச்சினை கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வரை செல்லும். எதிர்காலத்தில் வரக்கூடிய மேலே கூறப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவும். முதலில் புதையல் தொடர்பான சட்டங்களை அறிந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற செயல்களினால் தான் வடக்குப் பொய்கை நல்லூர், கடுவையாற்று வழக்கு, கூத்தாநல்லூர் வழக்கு போன்றவை நிலுவையில் உள்ளது. மேலே நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நாங்கள் save செய்து கொள்கிறோம். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

தேமொழி:
ஒவ்வொரு சிற்றூர் பேரூர் நகர மாநகராட்சி  அலுவலகங்களும் அவர்கள் கட்டுபாட்டில் ஒரு கட்டிடம் இதற்கென ஒதுக்க வேண்டும்.   அது வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாக இருத்தல் சிறப்பு.  மக்கள் தாங்கள் கண்டறிந்தவற்றை ஆட்சி அலுவலகங்களுக்கு ஸ்ரீவித்தால் அவர்கள் வந்து GPS தரவுகளுடன் எடுத்துச் சென்று கட்டிடத்தில் வைத்து ஆவனப்படுத்தி காட்சிக்கும் மேற்கொண்ட ஆய்வுக்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.  கோயிலில் வைப்பது கோவில் கட்டி உள்ளே தொல்லியல் பொருட்களை வைப்பது அனைத்துப் பொதுமக்களும் சென்று காண வழி செய்யாது.  இறப்பு தொடர்பான தொல்லியல் தடயங்களை கோயிலிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.   பள்ளிப் பாடங்களிலும் சிறுவார்களுக்கு தொல்லியல் தடயங்களைப்  பாதுகாப்பது, சீரழிக்காமல் இருப்பது, சரியான முறையில் அரசுக்கு அறிவிவது போன்றவை சமூகவியலில் பாடமாக இருக்க வேண்டும்.

தேமொழி

unread,
May 27, 2026, 6:41:24 PM (2 days ago) May 27
to மின்தமிழ்
தட்டுப் பிழை நீக்கி ...
தேமொழி:
ஒவ்வொரு சிற்றூர் பேரூர் நகர மாநகராட்சி  அலுவலகங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் ஒரு கட்டிடம் இதற்கென ஒதுக்க வேண்டும்.   அது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடமாக இருத்தல் சிறப்பு.  மக்கள் தாங்கள் கண்டறிந்தவற்றை ஆட்சி அலுவலகங்களுக்கு அறிவித்தால் அவர்கள் வந்து GPS தரவுகளுடன் எடுத்துச் சென்று கட்டிடத்தில் வைத்து ஆவணப்படுத்தி காட்சிக்கும் மேற்கொண்ட ஆய்வுக்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.  கோயிலில் வைப்பது, கோவில் கட்டி உள்ளே தொல்லியல் பொருட்களை வைப்பது அனைத்துப் பொதுமக்களும் சென்று காண வழி செய்யாது.  இறப்பு தொடர்பான தொல்லியல் தடயங்களைக் கோயிலிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.   பள்ளிப் பாடங்களிலும் சிறுவர்களுக்குத் தொல்லியல் தடயங்களைப்  பாதுகாப்பது, சீரழிக்காமல் இருப்பது, சரியான முறையில் அரசுக்கு அறிவிப்பது போன்றவை சமூகவியலில் பாடமாக இருக்க வேண்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages