பள்ளி தேடி சீரோ பேலன்சில் வங்கி கணக்கு

8 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jan 21, 2023, 1:46:42 PM1/21/23
to

பள்ளி தேடி சீரோ பேலன்சில்  வங்கி கணக்கு 

இளம் வயது மாணவர்கள் வங்கி கணக்கு புத்தகம் பெற்று அசத்தல் 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கே  வந்து தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் வங்கி கணக்கு புத்தகங்களை கொடுத்து அசத்தினார் .

                        சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வங்கி கணக்கு புத்தகம் இளம்வயது மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முன்னதாக ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.  தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் பிரசாத் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து  சேமிப்பு மற்றும் இளம் வயதில் பின்பற்ற வேண்டிய பணத்தின் அருமை  தொடர்பான பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கினார். 

                      மாணவர்களையும் , பெற்றோர்களையும் வங்கிக்கு அலைய விடாமல் வங்கியிலிருந்து பள்ளிக்கே  வந்து அனைத்து விவரங்களையும் பெற்று ஒரே நாளில் கணக்கு துவக்கி கொடுத்து வங்கி கணக்கு  புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் துணை மேலாளர் சுவாமிநாதன் ஏற்பாடுகளை செய்து கொடுத்து அசத்தினார்.  இளம் வயது மாணவ, மாணவியர் குறிப்பாக முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் தங்களது கைகளில் வங்கி புத்தகம் தங்களது புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதை பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போனார்கள். வங்கியின் இந்த செயல்பாட்டுக்கு பெற்றோர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கே வந்து தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் பிரசாந்த்  வங்கி கணக்கு புத்தகங்களை கொடுத்து அசத்தினார். இதற்கான ஏற்பாடுகளை வங்கியின் துணை மேலாளர் சுவாமிநாதன் செய்திருந்தார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.


வீடியோ :

 https://www.youtube.com/watch?v=VhB8SVQOgU4





IMG_4316.JPG
IMG_4353.JPG
IMG_4350.JPG
IMG_4364.JPG
IMG_4361.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages