Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

வாழ்க்கையின் உண்மை

55 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 11, 2025, 3:51:19 AMMay 11
to மின்தமிழ்
வாழ்க்கையின் உண்மை

எல்லா மனிதர்களும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு......

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார், இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..

வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..

கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,

உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,

ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும்,

திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும்,

வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,

இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும்,

உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,

இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை.

வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.......

#WhatsAppShare

தேமொழி

unread,
May 13, 2025, 11:55:25 PMMay 13
to மின்தமிழ்
தற்போதுள்ள மாணவர்கள் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் போன்ற விலங்குகளை அறிந்து உள்ளனர். ஆனால், நமது காடுகளில் உள்ள கருங்குரங்கு, சிங்கவால் மந்தி, காட்டு மாடு போன்ற விலங்குகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நம்மில் பல பேர் நமது மாநில மலரான செங்காந்தள் மலர், மாநில பறவை மரகத பச்சைப்புறா மற்றும் மாநில விலங்கான வரையாட்டை பார்த்து இருப்பார்களா.

நமது வீட்டுக்கு பின்புறம் உள்ள குளங்களில் உள்ள பறவைகள் மற்றும் சுற்றியுள்ள மரங்கள் குறித்த விபரங்களோ அல்லது புரிதல்களோ இன்றைய தலை முறையினருக்கு இல்லை. வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல், கூந்தன்குளம் போன்ற சரணாலயங்களில் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்கின்றன என்ற செய்திகளை படித்திருப்போம். ஆனால், அங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது நமது உள்ளூர் பறவை இனங்கள். திடீரென்று வண்ணமயமான பறவை கூட்டங்களை கண்டவுடன், வெளிநாட்டு பறவைகள் என நினைக்கிறோம். 'ஆஸ்திரேலியா ஆந்தை பிடிபட்டது' என்றுசெய்திகளை பார்ப்போம்; ஆனால், அது நமது ஊரில் பாழடைந்த கட்டடங்களில் வசிக்கும் 'கூகை'. நாம் எந்த அளவுக்கு நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம் என்பதை இது தெரியப்படுத்துகிறது.

என்ன செய்ய வேண்டும்?

பள்ளி பாடப்புத்தகங்களில் நமது காடுகளில் உள்ள உயிரினங்களைக் குறித்த பாடங்கள் வைக்கப்பட வேண்டும். அவ்வப்போது அவர்களைக் காடுகள் மற்றும் அருகிலுள்ள குளங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இன்னபிற உயிரினங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

இன்றைய நகர மக்களின் வாழ்க்கை இயற்கையுடனான எந்த ஒரு பிணைப்பும் இல்லாமல் உள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஜன்னல்கள் இல்லை, பகல், இரவு அவர்களுக்கு தெரிவதில்லை. அனைத்து நேரங்களிலும் மின்விளக்குகள் மற்றும் கணினியுடன் அவர்கள் வாழ்வை நடத்துகின்றனர். விடுமுறை தினங்களில் திரையரங்குகள், பேரங்காடிகளுக்குச் சென்று பொழுதை போக்குகின்றனர்.

நம்மில் எத்தனை பேர் குயிலின் பாட்டை ரசித்திருப்போம். மயிலின் ஆடலைக் கண்டிருப்போம். காடுகளில் உள்ள மந்திகளின் மரத்தாவல்களைக் கண்டதுண்டா, வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்களை ரசித்ததுண்டா, வண்டுகளின் ரீங்காரங்களை கேட்டதுண்டா, இரவில் வெளிவரும் ஆந்தைகளின் கண்களைக் கண்டதுண்டா, பழந்தின்னி வவ்வால்களை பார்த்ததுண்டா, ஆற்றில் துள்ளித்தாவும் மீன், தவளைகளை கண்டிருப்போமா? இவ்வாறு இயற்கை யுடன் எந்த உறவும்இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.

அறிந்து கொள்ளுங்கள்

விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் அருகில்உள்ள காடுகள், குளங்கள், வயல் வெளிகள், தேசிய பூங்காக்கள், மிருக காட்சி சாலைகளுக்கு சென்று அங்குள்ளஉயிரினங்களைக் கண்டு களியுங்கள். நம் மாநிலத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை வன உயிரினசரணாலயம், விருதுநகர் மாவட்டத்தில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள்
சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம், கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயம், வல்லநாடு வெளிமான் சரணாலயம் போன்ற 29 வன உயிரின சரணாலயங்கள் உண்டு.

இந்த ஒவ்வொரு சரணாலயங்களிலும் அதற்கே உரித்தான தாவர மற்றும் விலங்கினங்கள் பல உள்ளன. இதுபோக பறவைகள் மிகுந்த எண்ணற்ற நீர்நிலைகள், காடுகள், பழந்தின்னி வவ்வால் தங்குமிடங்கள், உயிரினங்கள் மிகுந்த புல்வெளிகள் என அதிகமான பல்லுயிர் வாழுமிடங்களை நமது மாநிலம் கொண்டுள்ளது.

நீங்கள் இது போன்ற இடங்களுக்கு உங்கள் குழந்தைகளுடன் சென்று அங்குள்ள உயிரினங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஒரு உயிரினம் குறித்த தகவல் தெரியும் போது மட்டுமே அதை பாதுகாக்க வேண்டும் என கரிசனம் நமக்கு தோன்றும். இந்த உயிரினங்கள் இருந்தால் மட்டுமே, இப்பூமியில் மனித இனம் வாழ முடியும். 'காக்கை குருவி எங்கள் ஜாதி; நீர் மலையும் கடலும் எங்கள் கூட்டம்' என்ற பாரதியின் பாடலுக்கேற்ப இயற்கையுடன் இணைந்த வாழ்வை, மனிதன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், நீர் நிலைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது நாம் வசிக்கும் வீடுகள், சந்தைகள், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவ மனைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்ததுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை குறிக்கிறது. மாறியும் மாறாமல் நிலைத்தும் இருக்கின்ற பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ள இயற்கை, மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது.

வாழ்க்கை முறை :
நம் முன்னோர்கள் இயற்கை யோடு ஒன்றி பிணைந்து வாழ்ந்துஉள்ளனர், இயற்கை வளங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஊறு விளைவிக்காமலும் அவற்றை பாதுகாக்கும் செயல்களையும் செய்து வந்துள்ளனர்.   ஆனால், இன்று நவீனமயமாக்கலாலும், தொழில்துறை வளர்ச்சியாலும் இயற்கையை மறந்து இயற்கை வழங்கும் சேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் மனிதகுலம் ஈடுபடுகிறது.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

#WhatsAppShare

தேமொழி

unread,
May 15, 2025, 5:09:26 PMMay 15
to மின்தமிழ்
வெளிநாட்டு வேலை என்ற ஆசையில் மாட்டிக்கொள்ளும் இளைய தலைமுறை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் பிப்ரவரி 5, 2025 அன்று அமெரிக்காவில் வசித்து வந்த அங்கே பணியாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய பிரஜைகளை போர் விமானத்தில் கொண்டு வந்து இறக்கியதை பார்த்தோம்.  பதறினோம்.
 
அடுத்ததாக மியான்மரில் இருந்து செயல்பட்டு வரும் சைபர் மோசடி நிறுவனங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட 550 இந்தியர்களை 12-03-2025 அன்று இந்திய அரசு மீட்டு வந்ததை செய்திகளில் பார்த்தோம்.
 

வேலையில்லா திண்டாட்டம், அவற்றோடு குறுகிய காலத்திலேயே அதிக பணம் ஈட்டிவிடவேண்டும் என்ற பேராசையுடன் இருக்கும் இளைய சமூகம், குறிப்பாக படித்த சமூகம் இப்படி ஏமாந்து நிற்பது வேதனை அளிக்கிறது.

அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சட்டவிரோத குடியேறிகள் என்று வெளியேற்றியவர்கள் வேறு விதமானவர்கள்.

பொதுவாக ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டுக்குள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமாக நுழைய வேண்டுமெனில் அந்த நபர், தனது நாட்டின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருக்க வேண்டும்.  செல்ல இருக்கும் நாட்டுக்கான விசாவை முன்னரே விண்ணப்பித்து அந்த அனுமதியை தனது கடவுச்சீட்டில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

விசா என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டு குடிமகனுக்கு சில கால வரம்புடன், அந்த நபர் வரும் நோக்கத்தின் அடிப்படையில் STUDENT VISA, TOURIST VISA, BUSINESS VISA, EMPLOYMENT VISA, TRANSIT VISA, DEPENDENT VISA என்று வழங்கப்படும்.  

அதன் பின்னர் அந்த குடிமகன், தனது நாட்டில் இருந்து செல்ல வேண்டிய நாட்டுக்கு புறப்படும்போது, அவரது நாட்டில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகள், பயணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று பார்த்த பின், அவரது பாஸ்போர்ட்டில் அந்த நாட்டில் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) EXIT வெளியேற்ற முத்திரை குத்தப்படும்.

அதன் பின்னர் அடுத்ததாக எந்த நாட்டுக்குள் நுழைகிறாரோ, அந்த நாட்டில் இறங்கியதும், அந்த நாட்டின் குடியேற்ற அதிகாரிகளால் (IMMIGRATION OFFICERS) ஆவணங்களை சரி பார்த்த பின்னர் ENTRY நுழைவு முத்திரை அவரது பாஸ்போர்ட்டில் குத்தப்படும்.

எல்லாம் முறையாக தானே செய்து இருக்கிறார்கள்.  எப்படி சட்ட விரோத குடியேறிகள் (ILLEGAL IMMIGRANTS) என்று திருப்பி அனுப்பினார்கள் என்ற ஐயம் எழலாம்.

இந்த நபர்கள், அந்த நாட்டில் விசா குறிப்பிட்ட கால வரம்புக்கு காலாவதி ஆன பின்னர் முன் அனுமதி பெறாமல், கால நீட்டிப்பு செய்யாமல் இருப்பது.  விசாவின் தன்மை மாறி அங்கே பணியில் இருப்பது போன்றவை தான்  சட்ட விரோத குடியேறிகள்.  இது தவிர்த்து நாட்டின் அண்டை நாட்டிலிருந்து எல்லை வழியாக முறையின்றி சட்டவிரோதமாக குடியேறி வருபவர்களும் சட்டவிரோத குடியேறிகளாக அமெரிக்க அறிவித்து இருக்கிறது.

அக்டோபர் 2023 முதல் ஜனவரி 2025 வரை 53,000 க்கும் மேற்பட்டோர் மியன்மரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் படித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் நன்றாகப் பேசுபவர்கள்,

வெளிநாடு வேலை என்பதில் பெரும்பாலும் நல்ல வேலைகள் கிடைக்கிறது என்றாலும் கூட மோசடிகள் அரங்கேறத்தான் செய்கிறது.  இந்த மோசடிகள் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலகத்திற்கே சவால் விடும் அளவுக்கு சில ஆண்டுகளாக மியான்மரில் மோசடி செய்வதற்காகவே கால் சென்டர்கள் இயங்கி வருகிறது.  இந்த கால் சென்டர்களின் வேலையே உலகம் முழுதும் இருப்பவர்களிடம் பணத்தை அபகரிப்பது மட்டுமே.  இந்த பணிகளை நேர்த்தியாக செய்வதற்கு உலகம் முழுவதும் இவர்களுக்கு என்று ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களை மிக நேர்த்தியாக தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் என்று ஆசை கூறி கவருகிறார்கள்.  அதன் பின்னர் சில வாரங்களிலேயே குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான விமான டிக்கட் ஏற்பாடு செய்கின்றனர்.  இந்த ஏஜென்ட்கள் சென்னை - பேங்காக் (தாய்லாந்து), பேங்காக் – சென்னை என்று இரு வழி பயண டிக்கட், மற்றும் பேங்காக்கில் ஹோட்டலில் ஒரு வாரம் தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவு இவற்றை கொடுத்து இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்வது போன்று பயணிக்க வைக்கிறார்கள்.

பேங்காக்கில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அங்கே இருந்து தரை வழியாக ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட தாய்லாந்து, மியான்மர் எல்லைகளில் உள்ள மலைகளின் வழியாக கரடு முரடான காட்டுவழிப்பாதையில் 12 மணி நேரம் வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள். மியான்மர் நாட்டுக்குள் செல்வதற்கு உரிய விசா எதுவும் எடுக்காமல், அங்கே இருக்கும் எல்லையில் இருக்கும் இராணுவத்தினருடன் சமரசம் செய்து அவர்களின் சம்மதத்துடனேயே அந்த நாட்டுக்கும் அந்நியர்கள் சட்ட விரோதமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆக, இங்கே இருந்து வேலைக்காக பயணித்தவர், அவரே அறியாமல், தாய்லாந்து நாட்டிலே அந்த ஒரு வார சுற்றுப்பயண காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை பதிவிலே காட்டும்.  காரணம் தாய்லாந்து நாட்டிற்குள் நுழையும்போது பாஸ்போர்ட்டில் நுழைவுக்கான (ENTRY) முத்திரை குத்தப்பட்டு இருக்கும்.  அந்த நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வேறு நாட்டுக்கு வெளியேறியதால் வெளியேற்றத்திற்கான (EXIT) முத்திரை இடப்படவில்லை. இது முதல் குற்றம்..

அடுத்ததாக மியான்மர் நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததால் அந்த நாட்டிலும் நுழைவுக்கான முத்திரை இடப்படவில்லை.  இது இரண்டாவது குற்றம்.  தன்னை அறியாமலேயே இந்த குற்றங்களுக்கு உள்ளாகிறார்.

இவை முடிந்ததும் அங்கே இருக்கும் வதை முகாம்கள் போன்ற இடத்தில் கூட்டமாக குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாது இந்த இளைஞர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்து இந்த மோசடி கால்சென்டர்கள் வைத்துக்கொள்ளும்.

உண்மையான வேலைகளுக்குப் பதிலாக, உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து ஆன்லைன் மோசடிகளை நடத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் செய்ய வேண்டிய சில பொதுவான மோசடிகளில் காதல் மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் கிரிப்டோ மோசடிகள், சட்டவிரோத சூதாட்டம் போன்றவை..  இந்த மையங்கள், போலி காதல் சலுகைகள், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற மோசடிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கின்றன.  சென்ற ஆண்டு

இப்படி சென்ற இளைஞர்கள் மோசடி மையங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்க படுவார்கள். அவர்கள் வேலை செய்ய மறுத்தால், அவர்கள் அடிப்பது, மின்சார அதிர்ச்சி கொடுப்பது மற்றும் பட்டினி போடுவது போன்ற கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.

சீன நடிகர் வாங் ஜிங் கடத்தப்பட்ட பிறகுதான்  இந்தக் பகுதியில் நடைபெற்றுவந்த கடத்தல் உலகிற்கு தெரியவந்தது. அவருக்கு தாய்லாந்தில் நடிப்பு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் ஜனவரி 2025 தொடக்கத்தில் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே மாதத்தில் அவர் மீட்கப்பட்டார்

பல்வேறு தரப்பட்ட சர்வதேச சட்டங்கள் ஒழுங்குமுறை ஆணையங்கள் இருந்தபோதிலும் , தாய்-மியான்மர் எல்லையில் உள்ள மையங்கள் இன்னும் இயங்கி வருகின்றன, மேலும் 100,000 பேர் வரை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் வருகிறது.. பல ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டாலும் , நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது, மேலும் இந்த கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்தவும், பொறுப்பான குற்றவாளிகளைப் பிடிக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன

இந்திய அரசின் மியான்மர் தூதரகம் அங்கே நடக்கும் ஆள் கடத்தல், அடிமை வேலைகள் குறித்தும், அதை செய்துவரும் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களை பற்றியும் பல்வேறு தொடர் எச்சரிக்கைகளை தெரிவித்தும் அதை பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இப்படி தொடர்ந்து நம் இளைஞர்கள் ஏமாறி வருகிறார்கள்.

   
https://embassyofindiayangon.gov.in/public_files/assets/pdf/Advisory-on-Job-Scam-dated-31May2024.pdf
பொதுவாக இப்படி மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும், இளைஞர்களை அவர்களது முகநூல், இன்ஸ்டாக்ராம் இவற்றின் மூலமாக தனிப்பட்ட தரவுகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றை புரிந்துகொண்ட பின்னர் தான் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.  அனைத்து தகவல்தொடர்புகளும் அரட்டை செயலிகளிலேயே குறிப்பாக வாட்சைப், மேசசென்ஜர் மூலமாகவே நிகழ்த்துகிறார்கள்.

முறையான நிறுவனங்கள் பொதுவாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாகவே தொடர்பு கொள்கின்றன, நிறுவனத்தை பற்றிய தரவுகளை இணையதளம் உள்ளிட்டவற்றை பார்வையிட கூறுவார்கள். வலைத்தளம் இல்லை, LinkedIn சுயவிவரம் இல்லை, சமூக ஊடகங்கள் இல்லை மற்றும் சரிபார்க்கக்கூடிய முகவரி இல்லை, LinkedIn-இல் குறைவான ஊழியர்கள் அல்லது ஊழியர்கள் இல்லை: ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ள வேறு எந்த ஊழியர்களும் இல்லாத ஒரு நிறுவனம் சந்தேகத்திற்குரியது.

மின்னஞ்சல்கள் தனிப்பட்ட டொமைன்களிலிருந்து வருகின்றன: நிறுவன மின்னஞ்சலுக்குப் பதிலாக Gmail, Yahoo அல்லது பிற தனிப்பட்ட கணக்குகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களைப் பாருங்கள்..  அலுவலக இருப்பிடம் இல்லை: நிறுவனம் எங்கு செயல்படுகிறது என்பதைச் சரிபார்க்க வழி இல்லை என்றால், அது போலியாக இருக்கலாம்.  மோசமாக எழுதப்பட்ட மின்னஞ்சல்கள்: எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் வித்தியாசமான சொற்றொடர்கள் ஒரு மோசடியைக் குறிக்கலாம். தெளிவற்ற வேலை விளக்கங்கள்: பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றால், அந்த வேலை உண்மையானதாக இருக்காது.

தொடக்க நிலைப் பணிகளுக்கு அதிக ஊதியம்: குறைந்த அனுபவத்துடன் நடைமுறைக்கு மாறான சம்பளத்தை உறுதியளிக்கும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அறிமுகம் இல்லாதவர் மற்றவர்களை வேலைக்கு பரிந்துரைக்க உங்களிடம் சொல்லும்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நிறுவனத்தைப் பற்றி ஆராயுங்கள்: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பாருங்கள்.

வலைத்தள பாதுகாப்பைச் சரிபார்க்கவும்: ஒரு உண்மையான நிறுவனத்தின் வலைத்தளம் “https://” உடன் தொடங்க வேண்டும். சில மோசடிகள் பாதுகாப்பான சேவையகங்களைப் பயன்படுத்துவதால், ஒரு நிறுவனம் சட்டப்பூர்வமாக இருப்பதற்கு இது போதுமான நிபந்தனையாக இருக்காது என்றாலும் கூட இது ஒரு அவசியமான நிபந்தனையாக இருக்கலாம்.

உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்: ஏதாவது தவறாக உணர்ந்தால், விலகிச் செல்லுங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்: அதிகாரப்பூர்வமாக பணியமர்த்தப்படுவதற்கு முன்பு உங்கள் வங்கி விவரங்கள், ஐடி அல்லது முக்கியமான தரவை ஒருபோதும் பகிர வேண்டாம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இதை முன்கூட்டியே கேட்பார்கள்.

இவை எல்லாவற்றையும் விட, நம்மை விட பின் தங்கிய நாடுகளுக்கு தீர விசாரிக்காமல் வேலைவாய்ப்பு வருகிறது என்று நினைத்து பயணிக்க வேண்டாம்.

ஆர் எம் பாபு
ஒருங்கிணைப்பாளர்
பிரவாசி லீகல் செல்
https://pravasilegalcell.in/
ஆப்பிரிக்க கண்டம்
+91-9600276131

#WhatsAppShare

தேமொழி

unread,
May 16, 2025, 12:33:35 AMMay 16
to மின்தமிழ்
பணம்
 
என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...

பணமே உனக்குத் தான் எத்தனை பெயர்கள்...

யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...
 
கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்...

திருமணத்தில் வரதட்சணை என்றும்...

திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்...

விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
தர்மம் என்றும்...

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்,
     
திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் அது
கடன் என்றும்...

திருப்பித் தர வேண்டாம் என
இலவசமாகக் கொடுத்தால் அது
அன்பளிப்பு என்றும்...

விரும்பிக் கொடுத்தால்
நன்கொடை என்றும்...
     
நீதிமன்றத்தில் செலுத்தினால்
அபராதம் என்றும்...
     
அரசுக்குச் செலுத்தினால்
வரி என்றும்...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்...

தினமும் கிடைப்பது கூலி என்றும்...
 
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
லஞ்சம் என்றும்...
     
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
அசல் என்றும்...

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்...

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக
வேறொன்றும் இப்புவியில் இல்லை...

#WhatsAppShare

Kanaka Ajithadoss

unread,
May 16, 2025, 8:39:35 PMMay 16
to mint...@googlegroups.com
அருமையான தொகுப்பு 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/9e9109e5-42e5-46fc-8329-73b748ea1264n%40googlegroups.com.


--
Prof. Dr. Kanaka ..Ajitha doss 

தேமொழி

unread,
May 16, 2025, 8:44:02 PMMay 16
to மின்தமிழ்
நன்றி தோழர் 🙏🤝

தேமொழி

unread,
May 18, 2025, 12:08:16 AMMay 18
to மின்தமிழ்
திரும்பிப் பார்க்கிறேன்!!

எங்கோ பிறந்து, வளர்ந்து,
இல்வாழ்வில்
அடியெடுத்து வைத்து,

பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தை (கள்) பிறந்து, ..

அவர்களும் வேகமாக வளர்ந்து  சென்று விட்டார்கள் அயல் நாட்டிற்கு (?)

பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று,

அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். இனி நம்மையும் மறந்தும் துறந்தும் விடுவார்கள்.

நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். Retired but not tired என்று வீர வசனத்துடன்.

வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும்......

 ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு(?) நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!

எத்தனையோ
சந்தோஷங்கள்,
சிரிப்புகள், பாராட்டுகள்

எத்தனையோ
துக்கங்கள்,
கண்ணீர் துளிகள்...

எத்தனையோ ஏமாற்றங்கள்,  கோபங்கள்,
சபலங்கள்...
எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்!

நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் including பெற்றோர்கள் இன்று நம்மிடையே இல்லை.

இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள்,
விபத்துக்கள், covid போல்
கொடிய மற்றும்
கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், வெள்ளம்,
போர்கள்,
தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம் இதுவரை.

நாம் ஆசையாய் நினைத்த சில விஷயங்கள் கைகூடாததாலும்,
நல்லதோ கெட்டதோ,
நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விஷயங்கள் நடந்தேறியதாலும் ....

மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.

பெரியவர்களின் பல ஆசீர்வாதங்கள்,
சமயங்களில் சில காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம் .

யாரெல்லாம் நம்மை உண்மையாய்  நேசிப்பவர்கள்,

யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள்,

 யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை...

 சற்று தாமதமாக என்றாலும், இப்போது கண்டுகொண்டோம்.

சில நண்பர்கள்,
சில உறவுகள்...
 பிரிந்து போனதையும்,

சில நண்பர்கள்,
சில உறவுகள்...
 நம்மை மறந்து போனதையும்...

வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும்,

விதவிதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும்

மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக்
கொண்டோம்.

வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.

வேறு வேறு இடங்களில்,
வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக் கொண்டோம்.

பிறந்தநாள்,
திருமண நாள்,
சுப நிகழ்வுகள்,
விழாக்கள், Get-togethers,
புதுவருடம் போன்ற
விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.

பணம்,
 பட்டம்,
பதவி,
புகழ்,
வீடு,
தோட்டம், .
நகை,
கார்,
சொத்து,
சுகம்,
உறவுகள் என

எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.

நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை,

அது நமக்குள்ளே தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம் மிகவும் தாமதமாக.

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும்,

சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.

எல்லாமும் கடந்துபோகும் எனவும்,
எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.

புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும்,
இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும், சில பல பயணங்களும், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதும் மனதுக்கு ஆறுதலான விஷயங்கள்.

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்! (ஆனால் தழும்புகள் சுலபமாக மறைவதில்லை).

எனவே,

 இக்கணத்தில் வாழ்வோம்!

வாழ்க்கையே  திருவிழாதான்!
 நாளும் இயல்பாய்
அதைக் கொண்டாடுவோம்...!

#WhatsAppShare

தேமொழி

unread,
May 18, 2025, 12:09:09 AMMay 18
to மின்தமிழ்
டெலிபோன்
வந்தபோது...

வெளிநாட்டில்
இருப்பவர்களிடம்கூட
பேச முடிந்தது.

ஸ்மார்ட் போன்
வந்தபிறகு...

வீட்டில்
இருப்பவர்களிடம்கூட
பேச நேரமில்லை.

#WhatsAppShare
Reply all
Reply to author
Forward
0 new messages