வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 15, 2026, 3:15:14 PM (2 days ago) Feb 15
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1136-1140: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      16 February 2026      னரமுதல



(வெருளி நோய்கள் 1131-1135: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1136-1140

  1. செவிடர் குருடர் வெருளி – Surdocaecophobia

பார்வைத்திறன், கேட்புத்திறன் ஆகிய இரண்டுமில்லாதவர்கள் தொடர்பான தொடர்பான பேரச்சம், செவிடர் குருடர் வெருளி.
பார்வைத்திறன் குறைபாடும் கேட்புத்திறன் குறைபாடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அளவில் இருக்கும். எனினும் இரு திறனும் இன்றிச் செவிட்டுக் குருடராக இருப்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்கள், தன்வெறுப்பும் கொள்பவர்களாக உள்ளனர்.
Surdo, caeco ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே செவிடு, குருடு எனப் பொருள்கள்.
00

  1. செவிடர் வெருளி – Surdophobia

செவிடர் தொடர்பான பேரச்சம் செவிடர் வெருளி.
காது கேளாதவர்கள், கேட்பு உதவியை(Hearin Aid) அணிந்து கொள்ளத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். இவர்களிடம் கூறியதையே திரும்பத் திரும்பக் கூற வேண்டி வருவதாலும், தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்வினையாற்றிக் குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், பொறுமையை மறந்து வெறுப்பு கொள்வோர் உள்ளனர்.
Surdo என்னும் இலத்தீன் சொல்லிற்குச் செவிடு எனப் பொருள்.
00

  1. செவ்வக வெருளி – Rectanglephobia / Orthogoniophobia

செவ்வகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வக வெருளி
செவ்வக வடிவிலான அைற, செவ்வக வடிவிலான அரங்கு, செவ்வக வடிவிலான கட்டடம், செவ்வக வடிவிலான பொருள்கள் முதலியவற்றின் மீது காரணமற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் வரும்.
கிரேக்கச்சொற்களான ஆர்த்தோ (Ortho(நேராக/வலது) , கோனியா(gonio/கோணம்) என்பதிலிருந்து பெறப்பட்டதே செவவ்கம் என்னும் பொருள்கொண்ட Orthogoniophobia என்னும் சொற்சேர்க்கை.
00

  1. செவ்வணில் வெருளி – Chipmunkphobia

செவ்வணில்(chipmunk) குறித்த அளவுகடந்த பேரச்சம் செவ்வணில் வெருளி.
செவ்வணில், தீங்ஙகு விளைவிக்காத கொறிப்பி (கொறித்துண்ணி). எனினும் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் பேரிடர் வாய்ப்பு உள்ளது. எனவே, இது கண்டு அஞ்சி வெறுப்பு கொள்கின்றனர்.
00

  1. செவ்வாய்க் கிழமை வெருளி – Tritiphobia

செவ்வாய்க் கிழமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் செவ்வாய்க் கிழமை வெருளி.
செவ்வாய்க் குறைபாடு(தோசம்) எனக் கூறி மக்களை அச்சுறுத்துவோர் உள்ளதால் செவ்வாய் அன்று செயல் தொடங்க அல்லது பயணம் மேற்கொள்ள அல்லது செவ்வாய்க் குறைபாடு உள்ளவர்களை மணக்க அஞ்சுகிறார்கள். இதனால் செவ்வாய் மீதும் அளவுகடந்த பேரச்சம் வருகிறது. “செவ்வாய் ஓரையில் எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது. நமது கருத்துகளையும், அறிவுரைகளையும் வெளியிட்டால் மிகுந்த துன்பங்களைத் தரும்” என்றும் அச்சுறுத்திச் செவ்வாய் மீதான அளவுகடந்த பேரச்சத்தை உருவாக்கி விடுகின்றனர்.
Triti என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செவ்வாய்க் கிழமை எனப் பொருள்.
காண்க: செவ்வாய்க் கோள் வெருளி(Mavorsphobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages