நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்,
93 ஆண்டுகால பாரம்பரியத்துடன் தமிழ் பேசும் மக்களின் தேசிய குரல் தினகரன் பத்திரிக்கையின் ஊடக அனுசரனையில்,
'மனங்களை திடப்படுத்தி முன் நகர்வோம்'
வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக
'டிட்வா' புயல் ஏற்படுத்திய கோரத்தாண்டவத்தால்
பலியானவர்களை நினைவு கூறுவோம், பாதிப்படைந்தவர்கள் நாம் - எமது மனங்களை திடப்படுத்திக்கொள்வோம்" நிகழ்வை முன்நிறுத்தி,
'இலங்கையர் நாம் மீணடெழுவோம் " எனும் தலைப்பில்
கவிதை எழுதுவோம்
1. தமிழ் பேசும் இலங்கை பிரஜைகள் யாவரும் கலந்துக் கொள்ளலாம்.
2. நம்பிக்கையை கட்டியெழுப்பும் படைப்பாக அமைதல் வேண்டும்.
3. கவிதைகள் நூறு சொற்களுக்கு குறையாததாக அமைதல் வேண்டும்.
4. ஒருவர் ஒரு கவிதையினை மாத்திரம் அனுப்புதல் வேண்டும்.
5. கவிதையினை 31.12.2025 ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பும் கவிதையினை தட்டச்சு செய்து பீடிஎப் ஆக 0771654372 என்ற வட்சப் எண்ணிற்கும் அனுப்புதல் வேண்டும்.
6. தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி : அ.லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். 45/6, கல்லோயா, இம்புல்பிட்டி, நாவலப்பிட்டி. எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
7. இது ஒரு போட்டி நிகழ்வு அல்ல. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
8. கிடைக்கப்பெற்ற கவிதைகள ஒவ்வொன்றும், தொடர்ந்து தினகரன் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படும்.
9. கவிதைகளை தொகுப்பாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
"இலங்கையர் நாம் மீண்டெழுவோம்" பாடலாக்கம்.
1. தமிழ் பேசும் இலங்கைப் பிரஜைகள் யாவரும் பங்கேற்கலாம்.
2. நம்பிக்கையை கட்டியெழுப்பும் படைப்பாக அமைதல் வேண்டும்.
3. பொதுவான பாடலாக்க விதிமுறைகளுக்கு அமைய பாடல் இயற்றுதல் வேண்டும்.
4. ஒருவர் பாடல் ஒன்றை மட்டுமே அனுப்புதல் வேண்டும்.
5. தங்களால் இயற்றப்பட்ட பாடலினை 31.12.2025ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பும் பாடலினை தட்டச்சு செய்து பீடிஎப் ஆக 0771654372 என்ற வட்சப் எண்ணிற்கும் அனுப்புதல் வேண்டும்.
6. தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி : அ.லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். 45/6, கல்லோயா, இம்புல்பிட்டி, நாவலப்பிட்டி. எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
7. இது ஒரு போட்டி நிகழ்வு அல்ல. பங்கேற்கும் அனைவருக்கும் சாhன்றிதழ் வழங்கப்படும்.
8. பாடல்கள் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்து யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
9. இசைத்தட்டு வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது ஒரு திறந்த வாய்ப்பு. ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மாத்திரம் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் 10.01.2026 அன்று இடம்பெறவுள்ள நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் 'டிட்வா' புயல் ஏற்படுத்திய கோரத்தாண்டவத்தால்
பலியானவர்களை நினைவு கூறுவோம், பாதிப்படைந்தவர்கள் நாம் - எமது மனங்களை திடப்படுத்திக்கொள்வோம்"
நிகழ்வில் சான்றிதழ் வழங்கப்படும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு ஒவ்வொரும் பங்களிப்பை வழங்குவோம்.
நன்றி,
நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
அ.லெட்சுமணன்,
அமைபப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.
0771654372
கவிதையாக்கம், பாடலாக்கம் விடயங்களில் பங்கேற்க விரும்புபவர்கள் பின்வரும் இணைப்பின் ஊடாக வாட்சப் குழுவில் இணையலாம்.
https://chat.whatsapp.com/C5rtcdYaDFD7nzsq5EP6B2?mode=wwt