இராமர் சேது

8 views
Skip to first unread message

இரவா

unread,
Jul 17, 2008, 1:20:27 PM7/17/08
to minT...@googlegroups.com

தமிழ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் முதன்மையானது, சேதுக்கால்வாய்த் திட்டம். அத்த்திட்டம் செயல்பட முடியாத அளவுக்குக் குறுக்கிடுகிறது, இராமர் பாலம்.

இராமனுக்குப் பகை இராவணனிடந்தானே! நாட்டு நலன் இல்லையே! நாட்டு நலனுக்கு இடைஞ்சலாக எது இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும்! அல்லது அகல வேண்டும்! இதுதானே முறை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு என்ன தடை?

சரி,

இதற்குமேலும் இதனுள்ளே போக எனக்கு நேரமில்லை! ஒரே ஒரு செய்தியை மட்டு இங்கு ஆராயலாம்! எனக்கருதுகிறேன்.

இராமர் பாலம் என்பது என்ன? அவ்வளவுதான். அதற்குமேல் மூச்சே விடுவதாக இல்லை. யாரும் என்னைச் சபிக்கவோ அவிக்கவோ வதைக்கவோ புதைக்கவோ நசுக்கவோ பொசுக்கவோ நகைக்கவோ பகைக்கவோ வெறுக்கவோ முறுக்கவோ எதற்குமே தயாராக வேண்டாம்! என்று, கேட்டுக் கொள்கிறேன். (ஒரு தற்காப்புக்காகச் சொல்லிவைத்தேன்! அதையெல்லாம் நீங்கள் கேட்கவா போகிறீர்கள். அவரவர்க்கு மேவன செய்துகொள்ளலாம்)

இராமனின் காலம்

வடநூலாரின் யுகக் கணக்கின் படி, கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் மொத்த காலம் 4320000 ஆண்டுகள். இராவணன் ஆட்சிபுரிந்த காலம் 50 இலட்சம் ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 84931 ஆண்டுகள் வாழ்ந்தவன் இராவணன் என்று கம்பர் கூறுகிறார். (முக்கேடி வாழ்நாள் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை)

இராமாயணம் நடந்த்தோ திரேதாயுகத்தில். அது, 1296000 ஆண்டுகள் கொண்டது. திரேதாயுகத்தில், இராவணன் 50 இலட்சம் ஆண்டுகள் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? அதேபோல், இராமன் வாழ்ந்த காலம் இன்றைக்கு 17 இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட்து! என்கிறார்கள். மனித இனமே ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நிமிர்ந்த குரங்கு வடிவத்தில் இருந்ததாக்க் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கி.மு 2387 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கடல்கோளால், தமிழகப் பகுதியோடு ஒட்டிக் கிடந்த இலங்கை தனித் தீவானது! என்று டென்னெட் என்னும் வரலாற்றாசிரியர் இலங்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

இராமர் காலத்தில் இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் கடல் இருந்த்தில்லை. அப்படியானால், பாலம் எப்படிக் கட்டியிருக்க முடியும்?

சரி! இது, இத்துடன் இப்படியே இங்கேயே இருக்கட்டும்.

இராமர் பாலம் 100 யோசனை நீளமும் 10 யோசனை அகலமும் கொண்டது என அகராதிகள் குறிப்பிடுகின்றன.

ஒரு யோசனை 8 முதல் 10 மைல் என்கிறது, மோனியர் வில்லியம்ஸின் சமஸ்கிருத அகராதி.

ஒரு யோசனை 20 மைல் என்கிறது யாழ்ப்பாணத்து கதிரைவேற்பிள்ளை அகராதி.

ஒரு யோசனை 5 மைல் என்கிறது பெயர் குறிப்பிடப்படாத ஒரு அகராதி.

ஒரு யோசனை எவ்வளவு தூரமாக இருந்தாலும் குறைந்த தூரமான 5 மைல் என்றே வைத்துக் கொள்வோமே! (சிமெண்டும் கல்லும் கம்பியும் மிச்சமாகும் என்பதற்காகக் கூறவில்லை) அப்படுயே வைத்துக் கொண்டோமானால், தமிழகத்திற்கும் இலங்கை 500 மைல்கள் தூரத்தில் இருக்க வேண்டும். இராமர் பாலம் 500 மைல் நீளமும் 50 மைல் அகலமும் இருக்க வேண்டும். 50 மைல் அகலத்தில் எவராவது பாலம் கட்டுவாரா! இராமனாயிற்றே கட்டியிருக்கின்றாரே!

சமஸ்கிருதம் தான் கணக்கில் புலியாயிற்றே! அந்த  அகராதிப்படிப் பார்த்தால், இலங்கை 800 மைல் தூரத்திற்கும் அப்பால் இருக்க வேண்டும். இராமர் பாலம் 800 மைல் நீளமும் 80 மைல் அகலமும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.

இவ்வளவு அகலத்திலும் நீளத்திலும் ஒரு பாலம் கட்ட நேர்ந்திருந்தால், தமிழகத்திலுள்ள எல்லா மலைகளையும் உடைத்திருந்தாலும் கட்டி முடிந்திருக்காது.

இதற்குமேலும் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது! கொஞ்சம் தலையைச் சுற்றுகிறது. அது நின்றதும் மேலும் தொடர்கிறேன்.

 

 


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Jul 17, 2008, 1:35:35 PM7/17/08
to minT...@googlegroups.com

அவாளுக்கு இது எல்லாம் தெரியாதுங்கறேளா?.
 
வாக்கு வங்கிக்கு உண்ண பலி.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
Jul 17, 2008, 4:00:56 PM7/17/08
to minT...@googlegroups.com
On 7/17/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> அவாளுக்கு இது எல்லாம் தெரியாதுங்கறேளா?.
>

இதுதானே வேண்டாங்கறது. இதுலே என்னதான் ருசியோ?
கடவுளே!

Tthamizth Tthenee

unread,
Jul 17, 2008, 11:30:48 PM7/17/08
to minT...@googlegroups.com
அவாளுக்கு இது எல்லாம் தெரியாதுங்கறேளா?.

 

 அ வாளுக்கும் இ வாளுக்கும் தெரிஞ்சதையே
திருப்பித் திருப்பி பேசிண்டே  இருக்கேளே
புதுசா எதையாவது பேசமாட்டேளா.. அப்பிடீங்கறதுதானே
அவாளுக்கும் இவாளுக்கும் ஆதங்கமே
அது புறியலையா உங்களுக்கு , சமத்து......
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
மனிதமும்,உலகமும் காப்போம்

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Jul 18, 2008, 3:21:50 AM7/18/08
to minT...@googlegroups.com
அன்பின் இரவா அவர்களே!!
 
 
இராமர் பாலத்தினால் இன்று என்ன பயன் என்பதைச் சற்று த்ள்ளி வைத்துவிட்டு, இந்தப் ப்ரச்சினைக்கு காரணம் யாரென்று முதலில் பார்ப்போம். இந்துக்க்ளா?? கண்டிப்பாக அவர்கள் இருக்க முடியாது. ஒரு எலியை, அறையில் பூட்டி வைத்து, அடி அடி என்று அடித்தால், ஒரு நாள் அது கண்டிப்பாக, நம் மேல் திரும்பிப் பாய்ந்து காயப்படுத்தும். இந்த உதாரணத்தில், இந்துக்களை எலிகளாகக் கொண்டால், பூட்டி வைக்கும் அறை என்பது, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் ஒதுக்கப்படுவது. அடிப்பது என்பது, இவர்களைப் பொய்யர்கள் என்று பெருமையுடன் சொல்லிவிட்டு, பிற மதத்தினருடன் கொஞ்சிக் குலாவுவது.
 
-- இது நடக்கிறதா இல்லையா???? நடக்கிறது, மிக மிக நன்றாக நடக்கிறது. Da Vinci Code திரைப்படம், ஒரு சாராரைப் புண்படுத்துவதாக் இருக்கிறது என்பதால், தடை செய்யப்படுகிறது.
 
-- அவர்களே, உண்மைக்குப் புறம்பாக ஒரு திரைப்படம் (புனித தோமைய்யர்) எடுக்கும் போது, அதே அரசு, அதைத் துவங்கி வைக்கிறது
 
-- ஓரு பக்கம் இந்துக்களின் பழக்கவழக்கங்களை, எள்ளி நகையாடிவிட்டு, மறுபுறம், பிற மதத்தினருடன், நோன்பு இருந்து, அதைப் புகழ்வது
 
-- ஓரு மதத்தினர் நடத்திய சரித்திரப் புகழ்மிக்க அட்டூழியங்களைப் பற்றிய கண்காட்ச்சியில் அம்மதத்தினர் நடத்திய இரகளையைக் கண்டும் காணாதிருப்பது.
 
இதைப் போல் இன்னும் எவ்வளவோ!!!!! ஆக இப்படி அனைத்து விதங்களிலும், பின் நோக்கித் தள்ளப்பட்டதால் வந்த விளைவே இந்த எதிர்ப்பு. இது ஒரு சாதாரண குடிமகனுடைய நோக்கில். இதை வைத்து, சில அரசியல் கட்சிகள், தங்களுக்குச் சாதகமாக அரசியல் செய்வது தனியான விஷயம். பிறர்களை விடுத்தாலும், நான் மதத்தின் அடிப்படையில் இதை எதிர்க்க, மேற்ச்சொன்னதுவே காரணம்.
 
மேலும் Ecological and Environmental காரணங்கள் பல உண்டு. உதாரணமாக, அங்கு, அந்தக் கால்வாயில் படியும் மணல் படிமங்களை அகற்ற எவ்வளவு செலவாகும்? இவற்றைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
 
யோசனை விஷயத்துக்கு வருவோம். ஏன், இதுவரை ஒருவராலும், ஒரு "யோசனை" என்பதன், தற்கால அளவு என்ன என்பதை, சரியாகக் குறிப்பிட முடியவில்லை? உங்கள் எடுத்துக்காட்டிலேயே, 3 அல்லது 4 வேறுபட்ட அளவுகளைக் காட்டியிருக்கிறீர்கள். இவ்வாறு மிகச் சரியாகக் குறிப்பிட முடியாத முடிவுகளை ஏன் நிர்ணயத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
இப்படியும் யோசியுங்களேன்!!!!  "யோசனை" என்பதை, "ஒலி" என்று எடுத்துக் கொண்டால், ஒரு நொடியில் ஒலி செல்லும் தூரம்தான் ஒரு "யோசனையின்" அளவாகக் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு நோக்கின், 100 யோசனை என்பது 100x0.33 கி.மீ என்ற விகிதத்தில், வெறும், 33 கிலோ மீட்டர்தானே வருகிறது? இது ஒரு Probability தான். ஆக, நிச்சயமாகத் தெரியாத ஒரு அளவு எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை ஆராய முனைவது, ஒரு சிறந்த ஆராய்ச்சியாளருக்கு அழகன்று என்பது என் தாழ்மையான கருத்து.
 
மேலும், தற்கால "பகுத்தறிவாளர்களை"ப் போல், கண்டதே காட்சி, கோண்டதே கோலம் என்று கொண்டால், முன் ஏதோ ஒரு காலத்தில் தமிழகமும், இலங்கையும், இணைந்திருந்தது என்ற கூற்றை, நாம் கண்டிருக்காத வகையில் எவ்வாறு ஒத்துக் கொள்ள முடியும்? இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போலல்லவா உள்ளது. அந்த ஆராய்ச்சியாளரின், ஆராய்ச்சிக் கூற்றை, ஒரு நம்பிக்கையின் பேரில் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதே நம்பிக்கையின் பேரில் இராமன் தமிழகத்திற்கும் இலங்கைகும் பாலத்தைக் கட்டினான் என்று கொள்ளத் தடை ஏது?
 
சற்றே நடுநிலை நின்று சிந்திப்பீர்..................................

 
Regards,
Venkatesh



Bring your gang together. Do your thing. Find your favourite Yahoo! Group.

Narayanan Kannan

unread,
Jul 18, 2008, 8:27:57 AM7/18/08
to minT...@googlegroups.com
இரவா:

மீண்டும், மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயங்களையே....அலுப்பாக உள்ளது!

எவ்வளவோ விளக்கியாகிவிட்டது..

kra narasiah

unread,
Jul 18, 2008, 11:13:43 AM7/18/08
to minT...@googlegroups.com

I have explained in the NDTV interview about this uneconomical project fully. My points on this can be seen in the net also. As one who has sailed for more than 15 yrs and having worked as dredging cosultant in the World Bank all that I can say is the project does not take into account many important points!

Anyway the project is going on!

narasiah

Swaminathan Venkat

unread,
Jul 18, 2008, 11:28:49 AM7/18/08
to minT...@googlegroups.com
The project will go on. May be its economic viability, technical feasibility are questionable. But it showers immense economic benefits to a middle level shipping company that operates there and fills the coffers of some politicians. If the project is abandoned, the flow of slush money will stop.  So the propagandists will lash out at Ramar Palam. This provides a convenient camouflage to hide  their vested interests.- swaminathan

kra narasiah

unread,
Jul 19, 2008, 12:13:32 AM7/19/08
to minT...@googlegroups.com

Fills the coffers is more appropriate!

devoo

unread,
Jul 19, 2008, 7:15:35 AM7/19/08
to மின்தமிழ்
ராஜேந்திரன் அவர்களே,
‘வெல்போர் இராமன்’ என்று பாடிய கடுவன் மள்ளனார், ‘கடுந்தெறல் இராமன்’
என்று பாடிய பசுங்குடையார், ‘அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’ என்று
பாடிய இளங்கோவடிகள், ‘அகிலத்திரட்டு’ பாடிய அய்யா வைகுண்டர், மற்றும்
ஸேது பந்தனம் பற்றிப் பாடிய சமய குரவர், ஆழ்வார்கள், கம்பர், அருணாசல
கவிராயர் அனைவருமே பிஜேபி கட்சியா?
தேவ்

devoo

unread,
Jul 19, 2008, 7:32:16 AM7/19/08
to மின்தமிழ்


On Jul 17, 10:35 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
இடைக்காடர் என்றொரு சித்தர்; இவர் ‘ப்ரபவ,விபவ’ முதலான 60 தமிழ்
ஆண்டுகளுக்கும் பலன் கூறும் விதமாக 60 வெண்பாக்கள் பாடியுள்ளார்.
‘ஆடு,காண், போகுது பார்!!’ என்றும் கூறுகிறார்.
ஆடு - கங்கையில் நீராடு;
காண் - தனுஷ்கோடியை (ஸ்ரீ ராம ஸேதுவை) தரிசனம் செய்;
போகுது பார் - பாவங்கள் நீங்கும்!!

இந்த அளவு உணர்வோடு ஒட்டிய ஒரு சின்னத்தைச் சிதைக்க வேண்டாமே என்றால்
காவி முத்திரையும், கொச்சைப் பேச்சுமா ?
தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 19, 2008, 7:37:56 AM7/19/08
to minT...@googlegroups.com


2008/7/19 devoo rde...@gmail.com:



இந்த அளவு உணர்வோடு ஒட்டிய ஒரு சின்னத்தைச் சிதைக்க வேண்டாமே என்றால்
காவி முத்திரையும், கொச்சைப் பேச்சுமா ?
தேவ்
 
சிவன் தலையில் பிறை இருக்கு. அதன் தலையில் அமெரிக்கன் கால் வைத்தான். அவனை எதிர்கக்லாமே?
 

வேந்தன் அரசு

unread,
Jul 19, 2008, 7:35:48 AM7/19/08
to minT...@googlegroups.com


2008/7/19 devoo <rde...@gmail.com>:



On Jul 17, 10:35 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> அவாளுக்கு இது எல்லாம் தெரியாதுங்கறேளா?.
>
> வாக்கு வங்கிக்கு உண்ண பலி.
>
> --
>
> > வேந்தன் அரசு
> > சின்சின்னாட்டி
> > (வள்ளுவம் என் சமயம்)

ராஜேந்திரன் அவர்களே,
'வெல்போர் இராமன்' என்று பாடிய கடுவன் மள்ளனார், 'கடுந்தெறல் இராமன்'
என்று பாடிய பசுங்குடையார், 'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' என்று
பாடிய இளங்கோவடிகள்,
 
தேவூ அது உண்மை.
 
ஆனால் இராமரை கடவுளாக இவர்கள் சொல்லவில்லை.
 
இராமர் பாலம் என்று ஒன்று இருந்ததற்கே இன்னும் சான்றுகள் இல்லை.
 
நரசய்யா அவர்கள் கடல்மேல் பயணித்து இருக்கலாம். கடல் குளித்து பார்க்கவில்லையே?
 
முதலில் பாலம் இருந்ததை நிறுவட்டும்.
 
மணலை வாரும் இயந்திரம் களையும் மண்ணில் பாலத்தின் பகுதிகள் இருக்கானு துளாவி பார்க்கலாமே. அதன் தலையில் ஒரு காமிரா பொருத்தினால் பாலம் தென்பட்டால் அறிவிக்குமே.
 
யாரும் பார்த்திராத, பார்க்க இயலாத ஒன்றை இருப்பதாக சொல்லி திட்டத்தை எதிர்ப்பதுதான் தவறு

devoo

unread,
Jul 20, 2008, 10:28:12 PM7/20/08
to மின்தமிழ்
தசரதர் சனி மண்டலம் சென்று வந்தார்; யாரும் காலை உடைக்கவில்லை.
சந்திரனே மண்ணுலகில் கழுவாய் தேடிக்கொண்ட பின்னர்தான் ஈசனார்
திருமுடிமேல் இடம் பெற்றான்.
சந்த்ர மண்டலமும் புனிதமானது தான்; பூமண்டலமும் பவித்ரமானது தான்.
ஒருகால் சந்திரனில் மனித இனம் இருந்தால் அங்கிருக்கும் ஜாதகத்தில்
பூமிக்கும் இடமிருக்கும். ‘பூஸூக்த’ விவரணம் வேண்டுமா?
விண்ணவரும் மண்ணுலகிற்கு வந்து கழுவாய் தேடிக்கொள்கின்றனர். இப்போது
சர்ச்சை சந்திரன் குறித்தது அன்று.
ராம ஸேது மண்; பெரியார் சிலை கல்.அதை உடைக்கலாமா? பகுத்தறிவு இடம்
தருமா?
இதுதான் கேள்வி.
தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 20, 2008, 10:31:39 PM7/20/08
to minT...@googlegroups.com


2008/7/20 devoo rde...@gmail.com:


 
தசரதர் சனி மண்டலம் சென்று வந்தார்;
 
நம்பிட்டோம். அப்புறம்!

devoo

unread,
Jul 20, 2008, 11:55:04 PM7/20/08
to மின்தமிழ்
அதைப்போலவே ராம ஸேதுவையும் நம்பலாமே!
தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages