வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 14, 2026, 4:39:09 PM (3 days ago) Feb 14
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1131-1135: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1126-1130: இலக்குவனார் திருவள்ளுவன்)

வெருளி நோய்கள் 1131-1135

  1. செல்வ வெருளி – Plutophobia
    செல்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செல்வ வெருளி.
    உரோமர்களின் செல்வக் கடவுள் புளூட்டோ. இங்கே செல்வத்தைக் குறிக்கிறது.
    செலவு வெருளி(Ehsanophobia), பண வெருளி(Chrometophobia/ Chrematophobia), இலம்பாடு வெருளி(Peniaphobia) ஆகியனவற்றுடன் தொடர்புடையது செல்வ வெருளி.
    00
  2. செவர்லெட்டு வெருளி – Chevroletphobia
    செவர்லெட்டு நிறுவன ஊர்திகள் மீதான அளவுகடந்த பேரச்சம் செவர்லெட்டு வெருளி.
    3.11.1911 இல் சுவிசு போட்டி உந்து ஓட்டுநரும் பொறிவண்டிகள் பொறியாளருமான உலூயிசு செவர்லெட்டு (Louis Chevrolet), தெட்டுராயிட்டில்(Detroit) செவர்லெட்டு பொறிஊர்தி நிறுவனத்தின் கூட்டுநிறுவனராக (Chevrolet Motor Company) இருந்து உற்பத்தியைத் தொடங்கியதே இந்நிறுவன வண்டிகள்.
    00
  3. செவி ஒலிப்பி வெருளி – Headphonophobia
    செவி ஒலிப்பி(headphone) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவி ஒலிப்பி வெருளி.
    இதனைக் காதொலிப்பான் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். தலையில் மாட்டப்படுவதால் தலைப்பேசி என்பதை விடத், தொலைபேசி வாங்கியின் செவிப்பகுதியிலிருந்து(earpiece) உருவாக்கப்பட்டதாலும் செவியில் கேட்பதற்குப் பயன்படுத்துவதாலும் செவி ஒலிப்பி என்பதே பொருத்தமாக இருக்கும்.
    செவி ஒலிப்பியைத் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, கேட்புத்திறனைக் குறைக்கிறது, காதுகளில் இருந்து வெளி வரும் அழுக்கை (குறும்பி) அதிலேயே தங்கச் செய்து அரிப்பை உண்டாக்குகிறது, மன அழுத்தத்திற்குத் தீர்வு எனப் பயன்படுத்தினாலும் நாளடைவில் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது, வேலையில் கவனக் குறைவை ஏற்படுத்துகிறது, எப்பொழுதும் செவி ஒலிப்பியை மாட்டிக் கொண்டே இருப்பவர்கள் சுற்றத்தாருடன் பேசும் நேரம் குறைந்து அவர்கள் விலகக் காரணமாகிறது, சிந்திக்கும் திறன் குறையும், மன ஆற்றல் மங்கும் போன்ற காரணங்களை எண்ணி, இதனாலும் இவற்றின் விளைவுகளாலும் செவி ஒலிப்பி மீது அளவுகடந்த பேரச்சம் உருவாகிறது.
    00
  4. செவி வெருளி – Aftiphobia
    காதுகள் குறித்த அளவுகடந்த பேரச்சம் செவி வெருளி.
    கூகுளில் விடை கேட்டு வினா எழுப்புவது தொடர்பான பேரச்சத்தையும் செவி வெருளி என்கின்றனர். எனவே, பொதுவாகக் கேட்பது தொடர்பான பேரச்சம் எனலாம். எனவே, கேட்பு வெருளி என்பது பொருத்தமாக இருக்கும். Afti என்றால் சோமாலி மொழியில் கருத்துக் கேட்பு எனப் பொருள். இதனாலும் கேட்பு வெருளி ஏற்றதாக இருக்கும். எனினும் வல்லுநர்கள் வரையறைக்கிணங்கச் செவி வெருளி எனக் குறித்துள்ளேன்.
    00
  5. செவிச்செருகி வெருளி – Otaspidaphobia
    செவிச்செருகி (earplug) குறித்த வரம்பற்ற பேரச்சம் செவிச்செருகி வெருளி.
    செவியில் செருகப்படும் செவிச்செருகி, உரத்த ஒலி, நீர் புகுதல், வெளிப்பொருள்கள், தூசி, மிகு காற்று முதலியவை உட்புகுதல் முதலானவற்றில் இருந்து செவிகளைக் காக்கிறது. செவிக்காப்பி என்றே இதனைச் சொல்லலாம். எனினும், செவிச்செருகிகளைக் செவிகளுக்குள் உட்புறம் மிகுதியாகத் தள்ளினால் செவிப்பறை பாதிக்கப்படும், சரியாகத் தூய்மை செய்யப்படாத செவிச் செருகிகளால் நோய்கள் உருவாகும், ஒவ்வாமை ஏற்படும், சில நேரங்களில் செவிப்புலன் குறைபடும் போன்ற காரணங்களை எண்ணிச்செவி செருகி மீது தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
    Otaspida என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செவிக் காப்பு எனப் பொருள்.
    00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages