அகராதியைக் கடந்து செல்வோம் .....

177 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 8, 2021, 3:45:05 AM12/8/21
to மின்தமிழ்
#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழுமம் பதிவிலிருந்து .......... 

யாம் அகராதியைக் கடந்து செல்லவே விருப்பம்.

'எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே', என்றால், ஒவ்வொரு சொல்லும் ஒன்றைக் குறிக்கின்றது. அந்த குறிப்பு எது என தேடுவதே ஆய்வு.

"பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லினாகும் என்மனார் புலவர்", என்பதால், சொல்லில் பொதிந்துள்ள, புதைந்துள்ள பொருளை, சொல்லைப் பகுத்தறிதலால் கண்டடையலாம் என்பது நம் கொள்கை.

'கமம்' என்பதன் குறிப்பு, 'மெய்யின் தன்மை'.

1.மெய்யின் தேவை, உணவு. உணவிற்கான தொழில், வேளாண்மை. விவசாயம்.உழவு.வயல்.

2. மெய்யின் தன்மை, அசையாமை. அமைதி. மெய்யுணர்வு. மெய்யுணர்வு தருவது, நிறைவு. முழுமை. தெளிவு. ஞானம்..

தேமொழி

unread,
Dec 9, 2021, 8:31:08 PM12/9/21
to மின்தமிழ்

இன்று ஒரு சொல் : முறுவல் .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. முறுவல் = ம் + உறு + அல். கொண்டு மூடியது (இதழ்கள்) + மிகை + தொழிற்பெயர் விகுதி. இதழ்கள் மிகையாதல், பக்கவாட்டில் விரிதல். இதழ் விரித்துப் புன்னகைத்தல். சிறிய அளவில் பற்கள் தெரியலாம்.

2. முறுவல் = ம் + உறு + அல். மூடிய இதழ்கள் + புறம் பிரிந்து வெளிப்படு + தொழிற்பெயர் விகுதி. இதழ்கள் புறத்தில் பிரிந்து வெளிப்படல்.  புன்னகை.

3. முறுவல் = ம் + உறு + அல். மூடிய இதழ்கள் + அடைதல் + அதிர்தல். இதழ்கள் அதிர்வடைதல். கூர்ந்து கவனித்தால், புன்னகைக்கையில் இதழ்கள் அதிர்வதை உணரலாம்.

இவ்வாறு, 'உறு' எனும் சொல்லுக்கு, வெவ்வேறு பொருட்கள் இருந்தும், 'முறுவல்' எனும் இப்புணர்மொழியில், புன்னகையின் வெவ்வேறு பண்புகள், 1. இதழ் மிகையாதல், 2. இதழ் பிரிதல், 3. இதழ் அதிர்தல், வெளிப்படுகின்றன.

#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழுமம் பதிவிலிருந்து .......... 

தேமொழி

unread,
Dec 10, 2021, 9:36:23 PM12/10/21
to மின்தமிழ்
இச்சொல்லை எப்படி பகுப்பது?

மூரல் = ம் + ஊர் + அல். வாய்மூடிய இதழ்கள் + புறம் நீண்டு இருப்பது + தொழிற்பெயர் விகுதி. 
இதழ்கள் மூடியவாறே முன்குவிதல். பல் வெளிப்படாமல், புன்னகைத்தல். முத்துநகை. முத்தநகை.

தேமொழி

unread,
Dec 13, 2021, 3:55:03 AM12/13/21
to மின்தமிழ்

காதல் .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

காதல் = க் + ஆத் + அல். மெய் + தேகமாகும் + தொழில் பெயர் விகுதி. மெய் தேகமாதல். மெய்யின் உணர்வை தேகம் உணர்தல். தேகம் நுண்ணுணர்வாதல்.
அதனால்தான், காதலர்கள், காதல் நினைவோடேயே வாழ விரும்புகின்றனர்.

மாற்றுக்கோணம்:
காதல் .
இச்சொல்லின் வேர் என்னவென்று பார்ப்போம்..

தமிழ் வேர்களில் கள்ளுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள். உவம உருபுகளில் வரும் 'கடுப்ப' என்ற உருபு இதே பொருள் தாங்கியதே ( கள் > கடு )
ஏனைய உருபுகளுக்கும் பொருந்துதலே வேர்ப்பொருள்.

கல் > கள் > கள்+து = கண்டு - to attach, attachable piece

கள் + து = கட்டு - to tie, to attach

கல் + து = கத்து > கது ( மெத்து > மெது போன்று இதைப்புரிந்து கொள்ள வேண்டும் )

கது - கதம்பம் - ஒன்றாகக் கட்டப்பட்ட பூக்களின் கோர்வை

கது > கதுவல் > காதல் - மனப்பொருத்தம்.

சொல்லை நேரடியாக உடைப்பதைக் காட்டிலும் திரிந்து வந்த பாதையை மீளுருவாக்கம் செய்து பின்னர் உடைப்பது பயன் தரும் என்ற அடிப்படையில்..

#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்  .......... 

Joseph Patrick

unread,
Dec 14, 2021, 9:41:49 PM12/14/21
to mint...@googlegroups.com
தமிழின் ஆழத்தை அறிய உதவும் இந்த கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நல்லது சிறப்பு

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4d3ede03-0831-4859-9e3c-5c739f75a6e9n%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 16, 2021, 1:35:34 AM12/16/21
to மின்தமிழ்
எழுச்சி = எழு + (ச்) + சி. எழுகின்ற + இயக்கமாய் இருத்தல். உயர்கின்ற இயக்கம்.

இரண்டுக்கு மேலான எழுத்துகளை உடைய தமிழ்ச்சொற்கள், புணர்மொழிகளாகவே உள்ளன.
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்து ஒருமொழி மற்றும் தொடர்மொழிகளைச் சிந்திக்க அடித்தளமாக அமையும்.

---

நகை = நகு + ஐ. சிரிக்கும் + பண்பு விகுதி.
சிரிக்கும் தன்மை. பற்கள் போல், ஒளிரும் தன்மை.

---

காரான், காரன், காரி.
இச்சொற்களை எப்படி பகுப்பது?

அ)  காரான்
காரான் = கார் + ஆன். கருமை + ஆனது.
கருமையானது. எருமை. மாடு. ஆனை.  கரிய மா.

ஆ)  காரன்
1. காரன் = கார் + அன். கருமை + ஆண்பால் விகுதி. கருமையானவன்.
2. காரன் = க் + ஆர் + அன். மெய் + பிரி + ஆண்பால் விகுதி. மெய்யாய் தனித்து இருப்பவன்.

இ) காரி
1. காரி = கார் + இ. கருமை + பெண்பால் விகுதி. கருமையானவள்.
 2. காரி = க் + ஆர் + இ. மெய் + பிரி + பெண்பால் விகுதி. மெய்யாய் தனித்து இருப்பவள்.

---

நில்+அம்- நிலம். நிற்பதனால் நிலம்.

---

திதலை

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. திதலை = தி + த் + அலை. தேகம் இருத்தல் + 'அதன்' எனும் பொருண்மை கொள்ளும் 'த்' எனும் ஒற்றெழுத்து + அலை போன்று மேலும் கீழுமானது.  தேகத்தின் அலை.

2. திதலை = த் + இது + அலை. தேகம் இதன் அலை.
திதலை = உடலின் தேமல் அலை / வரிக்கோடுகள்.

---

#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில் 
இடம் பெற்ற சொற்கள்   .......... 

தேமொழி

unread,
Dec 22, 2021, 2:52:53 AM12/22/21
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

தினை = தின் + ஐ. உண் + பண்பு விகுதி. உண்ணுவது. தின்பது.

இறடி = இறு + அடி. நெருக்கம் + அடி அளவு. அடர்த்தியாய் ஏறக்குறைய ஒரு அடி அளவு வளரும் தினைக்கதிர். தினை.

ஏனல் = ஏல் + அல். மிக உயரத்தில் வளைந்து + அதிர்வது / ஆடுவது. தினைக்கதிர். தினை.

ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருப்பதன் காரணம், அப்பொருளுக்கு பல வேறு குணங்கள் இருப்பதனாலாம்.

---

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. அலவன் = அல் + அவன். அன்மை + அவன். இல்லாதவன். இருந்து இல்லாமல் மறைபவன். நண்டு. விரைவில் மணலில் குழியில் மறைவது நண்டு.

2. அலவன் = அல் + அவன். இன்னல் + அவன். துன்பப்படுபவன்.

3. அலவன் = அல் + அவன். உழைப்பு + அவன். உழவன்.

அலவன், அலவள், அலவர், அலது, அலவை, அலவம்.

ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் வருவதன் காரணம், சொல்லின் பகுதிகள் கொள்ளும் பொருள் மாறுபாடுகள்தான்.

______________________________________
#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில் 
சென்ற வாரம் ஆய்வு செய்யப்  பெற்ற சொற்கள்   .......... 

தேமொழி

unread,
Dec 25, 2021, 7:25:53 PM12/25/21
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

ஓரை
ஓரை = ஓர் + ஐ. ஒன்று + பண்பு விகுதி. ஒன்றாய் இருக்கும் தன்மை. நெய்தல் மகளிர் ஒன்றாய் குழுமி ஆடுவது. கடற்கரையில், நண்டு, ஆமை, பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து விளையாடுவது.

கள்வி
கள்வி = கள் + வ் + இ. திருடு + (அகமும் புறமும் கொண்ட) முழுமை + பெண்பால் விகுதி. திருடி.
கள்வன், கள்வள் / கள்வி, கள்வர்.

அழுங்கல்
அழுங்கல் = அழும் + கல். அழுகின்ற கல். கல் அழுமா? கல் நெஞ்சம் உடைய இரக்கமற்ற ஊர்மக்கள், தலைவிக்கு நேர்ந்த குறை பற்றி, வெளியில் புலம்பி அழுகிறார்களாம்.
அழுங்கல் = வெளியே அழுது, உள்ளே கல்லாய் இருப்பது. பேச்சில் கனிவுடனும், மனத்தில் ஈரமில்லாமலும் இருப்பது.

அழுகுணி
அழுகுணி + அழு + குணம் + இ. அழுகின்ற குணமாய் இருப்பவள்.
அழுதே சாதிக்க நினைப்பவன். அழுகுணி ஆட்டம்.
அழுகுணன், அழுகுணி, அழுகுணர், அழுகுணம்.

புளுகுணி 
புளுகுணி = புளுகு + குணம் + இ. பொய் + பண்பு + பெண்பால் விகுதி. பொய்பேசும் குணத்தவள்.
புளுகுணன், புளுகுணி / புளுகுணள், புளுகுணர், புளுகுணம்.

உணங்கல் 
உணங்கல் = உண் + அம் + கல்.  உண்பதை கல்போல் உறுதியாக்க உலர்த்துவது.
தானியம், பழம், மீன் போன்றவற்றை நீரற உலர்த்தி பக்குவப்படுத்தல்.

எழிலி
எழிலி = எழில் + இ. எழிலாய் இருப்பவள்.
 
எழிலினள்
எழிலினள் = எழில் + இன் + அள். எழிலினை கொண்டவள். 
எழிலன், எழிலி / எழிலள், எழிலர், எழிலம்,
எழினன், எழினி/ எழினள், எழினர். எழினம்.
எழிலினன், எழிலினி / எழிலினள், எழிலினர், எழிலினம்.

எழினி
எழினி = எழில் (இன்) + இ. எழிலை உடையவள்.
எழினி என்றால் திரைச்சீலைக்கும் பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது
'எழினி' எனும் சொல், உயர்திணை பெண்பாலோடு  ஆண்பால் மற்றும் அஃறிணை ஒன்றன் பாலுக்கும் வரும்.
அடிப்படை, 'எழில்' தான்.
எழில் = எழ் + இல்.
எழ் = ஆழ் இருந்து / கீழ் இருந்து உயர வருதல்.
இல் = இருத்தல் அதிர்வு / உறைவிடம்.
எழில் = கீழ் / ஆழ் இருந்து மேலே உயர்ந்து அதிர்தல் / உறைதல்.

வலவன்
1. வலவன் = வல் + அவன் வலிமையானவன். திறமையானவன்.
2. வலவன் = வல(ம்) + அன். வலத்தில் உள்ள ஆண்மகன்.

______________________________________
#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில் 
இந்த  வாரம் ஆய்வு செய்யப்  பெற்ற சொற்கள்   .......... 

தேமொழி

unread,
Jan 4, 2022, 1:48:39 PM1/4/22
to மின்தமிழ்
ஓரெழுத்தாலான ஒரு சொல், ஈரெழுத்தாலான ஒரு சொல் மற்றும் தொடர்மொழிகள்தான், மூன்று எழுத்துகள் மற்றும் அதற்கு மேலான எழுத்துகள் கொண்ட சொற்களாக புணர்ந்து உருவாவதால், அவற்றை, பின்னோக்கி, அவற்றுள் இருக்கும் ஓரெழுத்தாலான ஒரு சொல், ஈரெழுத்தாலான ஒரு சொல் மற்றும் தொடர்மொழிகளாக பகுத்து, பொருள் காண்பதே எளிமையும், தமிழ்மரபும், தொல்காப்பிய விதிகளும் ஆகும்.

இச்சொற்களை பகுப்பது எப்படி?

கைதை
கைதை = கை + தை. கையை + தைப்பது. கையைக் குத்தும் தாழம்பூ வகை.

முண்டகம்
முண்டகம் = முள் + த் + அகம். கூர்மை + தேகம் + உள்ளே. கூர்மையான வடிவத்தை உள்ளே கொண்டது. வாழைப்பூ, தாமரைப்பூ, கைதை, தாழை, கழிமுள்ளி.

முண்டை
முண்டை: முள் + தை. முள்ளாக தைப்பவள்.
முள் = ம் + உள். கொண்டு மூடியது + உள். மெய் /மனம் + உள். மெய், மனத்தைக் குத்தி உள் செல்வது.

தமி 
தமி = தம் + இ. தனது + இருத்தல் /பெண்பால் பெயர் விகுதி. தனதாக, தானாக, தனியாக இருப்பவள். தனியள்.

ஐவனம்
1. ஐவனம் = ஐ + வல்(ன்) + அம். ஐந்து / வியப்பு + வலிமை + தன்மை. வியப்புக்குரிய வலிமைத் தன்மை. சத்து மிகுந்த நெல்வகை. வெண்ணெல். மலைநெல்.
2. ஐவனம் = ஐ + வனம். ஐந்து / வியப்பு + காடு. ஐந்து காடுகள். வியப்புக்குரிய காடு.

பெண்ணை
பெண்ணை = பெண் + ஐ. பெண் + பண்பு விகுதி. பெண்மைப் பண்பு. மகளின் தன்மை. பனைமரம். தமிழ் மக்கள், பனை மரத்தை, தங்கள் பெண்ணைப் போலவே, மகளைப் போலவே கருதினர்.
வடபெண்ணை, தென்பெண்ணை என ஆறுகளையும், பெண்மையாக கண்டனர்.

பகழி
பகழி = பகு + அழி. பிளந்து + கொல். அம்பு.

______________________________________
#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில் 
சென்ற வாரம் ஆய்வு செய்யப்  பெற்ற சொற்கள்   .......... 

தேமொழி

unread,
Jan 8, 2022, 4:52:47 AM1/8/22
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

word1.jpeg

உகிர்
1. உகிர் = உக் + இர். புறமெய் + இருத்தல்.
புறத்தில் மெய்யாய் இருப்பது, நகம்.

2. உகிர் = உகு + இர். உகுப்பதாய் இருத்தல், நகம்.

உகிர்பறவை = நீண்ட நகங்களைக் கொண்ட வௌவால்.
_____________________________________________________

word2.jpeg

புல்வாய், இரலை, கலை
புல்வாய் = புல் + வாய். புல்லையே பெரும்பாலும் தின்பது. சில மான் வகைகள், இலை, தழைகளை உண்ணும். 'புல்' என்பதை 'சிறிய' என பொருள் கொண்டால்,  'சிறிய வாய்' உடையது எனவும் பொருள் கொள்ளலாம்.

இரலை = இரு + அலை. இரண்டு அலையலையாக நீளும் கொம்புகளை உடைய ஆண் மான்.

1. கலை = க் + அலை. மெய் + மேலும் கீழுமாக அலைபோல். உடலே அலைபோல துள்ளும் பெண்மான்.

2. கலை = கல் + ஐ. அசையாமை + பண்புப் பெயர் விகுதி. அசையாமல் நிற்பது, கலைமான்.

இவ்வாறு, எச்சொல்லுக்கும் இணையான அகராதிப் பொருளை நினைவில் கொள்ளாமல், சொல்லின் பொருட்காரணம் அறிந்து கற்றால், சொல்லும் பொருளும் என்றும் மறவாது.
_____________________________________________________

word3.jpeg

உமண், உப்பு, உவர்
உமண் = உ + மண். புறம் + மண். நிலத்திற்கு புறம், கடல். கடலின் மண். கடல் நீர் ஆவியாகி மீதம் மண் ஆதல், உப்பு.

உப்பு = உ + ப் + பு. கடல் + 'அதன்' எனும் பொருளுடைய 'ப்' எனும் ஒற்றெழுத்து + கொண்ட வெளிப்பாடு.

உவர் = உ + அர். கடல் + பிரிதல் / இருத்தல். கடல் நீரில் இருந்து பிரிவது. கடல் தன்மையாய், உவர்ப்பாய் இருப்பது.
_____________________________________________________

word4.jpeg

பாதிரி
1. பாதிரி : பாதி + இர் + இ. பாதியாய் + இருப்பது. பாதியாய் இருப்பது. நிமிர்ந்து இல்லாமல் தொங்கி இருப்பது. பாதி நன்கு மலர்ந்து இருப்பது. ஒரு வகையான மலர்.

2. 'பாதிரி' அம்பின் வடிவில் இருப்பதால், 'அம்பு' எனும் பெயரும்,

3. ஒரு படையைப்போல் நெருக்கமாக பூத்து இருப்பதால், 'அம்புவாகினி' ( அம்பு + வாகினி) எனும் பெயரும்,

4. வலியைப் போக்குவதால், பாடலம் ( பாடு + அல் + அம்) எனும் பெயரும்,

5. சிறிய காம்பினைக் கொண்டதால், 'புன்காலி' (புல் + காலி) எனும் பெயரையும் கொள்கிறது.
_____________________________________________________

word5.jpeg

குளிறு
குளிறு = க் + உள் + இறு. மெய் + உள்ளே + இறுக்கமாய் இருத்தல்.  குழிக்குள் ஒடுங்கி இருப்பது, நண்டு.
_____________________________________________________

word6.jpeg

ஆலல்
ஆலல் = ஆல் + அல். ஆலமரம் போல் + தொழிற் பெயர் விகுதி. ஆல்போல் பரந்து விரிதல்.  விரிந்து அதிர்தல். தோகை விரித்தாடும் மயில்.

'ஆலல் ஆலின'. மயில்கள் தோகை விரித்தாடின.
_____________________________________________________

word7.jpeg

பாலக்குருவி
பாலக்குருவி = பால் + அ + குருவி. ('க்' எனும் மெய், புணர்ச்சியில் மிகும்)

பால் = ப் + ஆல். வான் + ஆதல் மேலும் கீழுமாய்.

அ = தன்மையது.

குருவி = க் + உரு + வி. மெய்யின் சிறிய உருவாய், விரைவாய் இருத்தல்.

பாலக்குருவி = வானத்தில் சுழன்று விரைந்து கீழே இறங்குவதும் உயர்வதுமான, சிறிய விரைவான பறவை.

வானில், சுழன்று விரைவாக கீழே விழுவதுபோல் வந்து, மீண்டும் மேலே உயர்ந்து பறந்து தன்னுடைய இணையைக் கவரும் பண்புடையது.

தான் பிடித்த இரையை, மேலே தூக்கிப் போட்டு மீண்டும் பிடித்து உண்ணும்.

இப்பறவையைக் கண்டால் நல்ல சகுனம் என்பர்.

இதற்கு, பனங்காடை என்றோர் பெயருண்டு. ஏன்? பனம்பழத்தின் வெளிப்புறம் போன்று, நீலநிற கொண்டையும், வாலும், இறகும் இருக்கும். பனம்பழத்தின் உட்புறம் போன்று, பழுப்பு நிற கழுத்தும், உடலின் அடிப்புறமும் இருக்கும்!

அல்லது, இது பனைமரத்தில் கூடுகட்டி வாழ்கிறதா? தெரிந்தவர் தெளிவிக்கவும்.
_____________________________________________________

#WhatsAppShare 
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின் 
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில் 
இந்த  வாரம் ஆய்வு செய்யப்  பெற்ற சொற்கள்   .......... 

தேமொழி

unread,
Jan 21, 2022, 6:55:46 PM1/21/22
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

1.jpg

எழால் 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

எழால் = எழ் + ஆல். கீழிருந்து மேல் எழுந்து + ஆல்போல் விரிதல். மேலெழுந்து பரந்து விரிதல் (அருவப் பொருண்மை).

(பருண்மைப் பொருண்மைகள்):
1. வல்லூறு - பறவை கீழிருந்து மேலெழுந்து வட்டமாய்ப் பறக்கும்.
2. யாழ் இசைக் கருவி - இசையை மேல் எழுந்து விரிந்துப் பரவி ஒலிக்கச் செய்வது.
3. யாழ் இசை - யாழின் நரம்பதிர்வு, அரைக்கோளமான பத்தருள் இருந்து  எதிரொலித்து, போர்வையை ஊடுருவி வட்டமாய்ப் பரவும்.
4. பூவாசம் - எழுந்து விரிந்துப் பரவி மணத்தல்.
5. சூரியன் - மேல் எழுந்து ஒளியை விரிவாய்ப் பரப்புதல்.
_____________________________________________________

2.jpg

கேண்மை 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

கேண்மை = கேள் + மை. கேட்கும் + பண்புப் பெயர் விகுதி. கேட்கும் பண்பு. ஏற்கும் பண்பு. இருவரும், ஒருவர் மற்றவரிடம்,  பேசி, கேட்கும் தன்மை. நட்பு. அறிவுரை. ஆலோசனை. ஆறுதல். பாராட்டுதல். இடித்துரைத்தல்.

சொன்மை எளிது. கேண்மை கடிது.

காது கொடுத்து, கவனமாய்  கேட்பவர்களே நட்பாக இருக்க முடியும்.
_____________________________________________________

3.jpg

கவின் 
இச்சொல்லை பகுப்பது எப்படி?

கவின் = கவ் + இன். கவ்வுதல் + இனிமை. மனதைக் கவ்வும் இனிமை. மனம் பறிக்கும் அழகு.
_____________________________________________________

4.jpg

வேனில் 
இச்சொல்லை பகுப்பது எப்படி?

வேனில் = வேல்(ன்) + இல். வேலைப் போன்று + இருத்தல். வேல் ஆயுதம் போன்று கூர்மையான கதிர் பாய்தல்.
_____________________________________________________

5.jpg

அரியல்
இச்சொல்லை பகுப்பது எப்படி?

அரியல் = அரி + அல். பிரி + தொழிற்பெயர் விகுதி. பிரிதல். பாளையில் இருந்து, கள் பிரிந்து வரல். கள்.
_____________________________________________________

6.jpg

துணங்கை 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

துணங்கை = த் + உண் + அம் + கை. தேகம் + புறமிகைநெருக்கம் + ஆகும் + கை. தேகத்தை, புறத்திலிருந்து மிகவும் நெருங்கும் கைகள்.

பெண்கள் தங்கள் மடங்கிய கைகளைக் கொண்டு தங்கள் தோளை ஒற்றி குனிந்து நிமிர்ந்து ஆடும் கூத்து.

..வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன..

..வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட, ஒளியுடைய வளையணிந்த மகளிர், துணங்கைக் கூத்தாடும் நாளும் வந்தது..
(ஔவை- மருதம் - குறுந்தொகை 364)
_____________________________________________________

7.jpg

திங்கள்

இச்சொல்லை எப்படி பகுப்பது?

திங்கள் = த் + இம் + கள். தேகம் + 'அதன்' எனும் பொருளுடைய 'இம்' எனும் சாரியை + கள் / மெய்யின் மிகை. தேகத்தின் கள் / மெய்மிகை.  தேகத்தின் மயக்கம். உடல் மயக்கம். நிலவின் ஒளி தேகத்தை, மனத்தை மயக்கும்.

மதி = மது + இ. மயக்குவதாய் இருப்பது.
_____________________________________________________

#WhatsAppShare
குறிப்பு:
தோழர் "சொல்லாக்கியன்" திரு. சு.தீனதயாளன் அவர்களின்
-  "இன்று ஒரு சொல்" - வாட்சப் புலனக் குழும உரையாடல்களில்
சென்ற வாரம் ஆய்வு செய்யப்  பெற்ற சொற்கள்   .......... 

இசையினியன்

unread,
Jan 22, 2022, 11:50:38 AM1/22/22
to மின்தமிழ்
X எழால் = எழ் + ஆல்

எழால் என்பதை எழு + ஆல்,  ஏழ் + ஆல் என்றல்லவா பிரிக்க வேண்டும்?

ஒரு சொல்லைப் பிரிக்கும் போது
- முதல் சொல் பகுக்க முடியாத, பொருள் தரும் சொல்லாக அல்லவா? இருக்க வேண்டும்!

ஒரு சொல்லைப் பிரிக்கும் போது ஆசிரியர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தவறான வகையில் பிரிக்க கற்றுக் கொடுத்த புண்ணியம் நம்மைச் சேரும் அல்லவா?

இசையினியன்

unread,
Jan 22, 2022, 12:19:24 PM1/22/22
to மின்தமிழ்
மேலும்,

கவின் = கவ் + இன் | இவ்வாறு பிரிக்க, ஆசிரியர் எங்கு  கற்றார்?
கவின் = கவி + ன் | கவி = அழகு , ன் ஆண்பால் விகுதி.

துணங்கை = த் + உண் + அம் + கை?
துணைங்கை = என்னும் சொல்லின் மரூஉ; துணை + மங்கை

https://hi-in.facebook.com/mayanztheatre/videos/552752852556924/

திங்கள் என்பது பகாப்பதம். ஒரு சொல் ஒரே பொருள்
வேனில் என்பது பகாப்பதம். ஒரு சொல் ஒரே பொருள்

தேமொழி அவர்களே மேற்கண்ட விளக்கங்களை ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு செல்லும்படி வேண்டுகிறேன்.

சக்திவேலு கந்தசாமி

unread,
Jan 23, 2022, 7:23:56 AM1/23/22
to mint...@googlegroups.com
தமிழினினிமை விளஙகுகிறத

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Message has been deleted

தேமொழி

unread,
Feb 2, 2022, 12:19:49 AM2/2/22
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

one.jpg

அவல் 

இச்சொல்லை பகுப்பது எப்படி?

அவல் = அ + அல். அன்மை + மேலும் கீழும் ஆதல். அசையாமை. ஓடாமை.

அசைவற்ற நீர்நிலை. பள்ளம் . அமைதி. தவம். தியானம்.

(அரிசியின் அவலும் கூட அசையாமல் இருக்கும். )

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

- ஔவையார் ( புறநானூறு 187)

_____________________________________________________

two.jpg

அருந்ததி

இச்சொல்லை எப்படி பகுப்பது?

அருந்ததி = அரும் + ததி.

அரும் = அருமை.

ததி = த் + அதி. தேகம் + மிகை. பெரிய தேகம். மிக்கு ஒளிர்தல்.

அருந்ததி = அருமையாக ஒளிரும் விண்மீன். வடமீன். சாலி மீன். பெரிய மீன். நிலைபெயராத தாரகை. பூமி, சுழற்சிப்பாதையில் எங்கிருப்பினும், காணக்கூடிய நட்சத்திரம்.

நிலைமாறாததால், கற்புக்கு அருந்ததி என ஆயிற்று.

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் (சிலம்பு - மங்கல வாழ்த்துப் பாடல்)

_____________________________________________________

three.jpg

பீரம் 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

பீரம் = ப் + ஈர் + அம். கொள்வது + ஈரத் + தன்மை.  குளிர்ச்சியைக் கொண்டது பீரம் அல்லது பீர்க்கம். உடல் சூட்டை தணிக்கும்.

_____________________________________________________

four.jpg

தண்ணுமை 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. தண்ணுமை = தண் + உ + மை. 'தண்' எனும் ஒலி + வெளிப்படும் + பண்புப் பெயர் விகுதி. 'தண்', 'தண்' என ஒலியெழுப்பும் மிருதங்கம்.

2. தண்ணுமை = த் + அண் + உ + மை. தேகம் + மிகை நெருக்கம் + வெளிப்படும் + பண்புப் பெயர் விகுதி. நாட்டியம் ஆடுவதற்கு இணங்க மிகநெருக்கமாக இசையொலி வெளிப்படுத்துவது, தண்ணுமை.

(மிருதங்கம் = மிருது + அங்கம். மதங்கம் = மது + அங்கம். மிருதுவான, மயக்கும் இனிமையான இசையொலி எழுப்பும் கருவி)

_____________________________________________________

five.jpg

பழனம் 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

பழனம் = ப் + அழ் + அன் + அம்.

கொள்வதில் + ஆழம் + 'அதன்' எனும் பொருள் கொண்ட 'அன்' எனும் சாரியை + தன்மை. கொண்டதில் ஆழமாய் இருத்தல். வயல், குளம்.

_____________________________________________________

six.jpg

மறி 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

மறி = மறு + இ. மறுத்து + இருத்தல். வழியை மறுத்து நிற்பது, மறி. ஆண் ஆடு.

மறியல் = மறி + அல். வழியை மறு + தொழில் பெயர் விகுதி. வழியை மறுத்தல்.

_____________________________________________________

seven.jpg

இகுளை 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

இகுளை = இக் + உள் + ஐ. இந்த மெய் + உள்ள + பண்புப் பெயர் விகுதி. இம்மெய் உள்ள தன்மை. இம்மெய்யைக் கொண்டவள். இவளே. தோழி.                
   "அரிய அல்லமன் இகுளை..." - அகநானூறு 8. குறிஞ்சித் திணை - பெருங்குன்றூர்க் கிழார்.

"நமக்கு அரியது அல்ல இவளே(தோழி)

தேமொழி

unread,
Feb 8, 2022, 9:47:46 PM2/8/22
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

1.jpg

தாளி 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. தாளி = தாள் + இ. அடியில் + இருப்பது. கால் அடியில் இருப்பது. பூமியின் மேல்பரப்பில், அருகம்புல் கொடி.

2. தாளி = த் + ஆள் + இ. தேகம் / வடிவம் ஆள்வதாய் + இருத்தல். உணவுக் குழம்பை, நோய் மருந்தை மணம், சுவையாக்குதல். சுண்ணத்தைக் குழைத்து, பயன்படுத்துவதாக்கல். தற்பெருமை கொண்டிருத்தல். அதிகாரம் செய்தல்.

_____________________________________________________

2.jpg

அலம்

இச்சொல்லை பகுப்பது எப்படி?

1. அலம் = அல் + அம். துன்பம் + தன்மை. துன்பம்.

2. அலம் = அல் + அம். அந்த மேலும் கீழுமான + தன்மை. கொடுக்குடைய தேள். மண்ணை மேலும் கீழுமாக்கும் கலப்பை. ஓடும் நீர்.

3. அலம் = அல் + அம். அசைவு அன்மை / இன்மை + தன்மை. அமைதி.

_____________________________________________________

3.jpg

ஆம்பல் 

இச்சொல்லை பகுப்பது எப்படி?

ஆம்பல் = ஆம் + பல். ஆகும் + பலவாய்.

பல இதழ்களைக் கொண்டதாகும், ஆம்பல்.

ஆம்பல், இரவில், "பல்" போல் "ஆகும்". நீர்மகளின் நகையாகும் எனலாம்.

தமிழ்ச் சொல்லே, கவிதையுமாகும்.

_____________________________________________________

4.jpg

அற்சிரம் 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. அற்சிரம் = அல் + சிரம். துன்பம் + தலை / எண்ணம். மனத்துன்பம். தலைவலி.

2. அற்சிரம் = அல் + ச் + இர் + அம். அன்மை + இயக்கம் + இருக்கும் + தன்மை. இயக்கம் அற்று இருத்தல். மூடுபனி. பனிக்காலம்.
 
_____________________________________________________

5.jpg

சிறை

இச்சொல்லை பகுப்பது எப்படி?

சிறை = சிறு + ஐ. சிறிய / சிறிதாகும் + பண்பு விகுதி. சிறிய தன்மை. காவல் அறை.  சிறியதாகும் தன்மை. சிறகு.

உன்சிறை விடுக்கற் பாலார் யாருளர் (கம்பராமாயணம் - மாயாசனப் படலம் 38)

திருந்துசிறை வளைவாய்ப் பருந்து (புறநானூறு 3.22)

_____________________________________________________

6.jpg

காலதர்

இச்சொல்லை எப்படி பகுப்பது?

காலதர் = கால் + அத் + அர். காற்று + அதன் + பிரிவு. காற்று வருவதற்கான இடைவெளி. சாளரம். சன்னல்.

"மான் கண் காலதர் மாளிகை இடங்களும்" - (சிலம்பு - இந்திர விழவு ஊர் எடுத்த காதை - வரி. 8)

_____________________________________________________

7.jpg

கலுழ் 

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. கலுழ் = கல் + உழ். அசையாமை + புறம் ஆழ்தல். அசைவற்ற கண்கள் கண்ணீர் சிந்துதல். சோகத்தில், வெறித்த கண்களில் இருந்து நீர் புறம் ஒழுகுதல். மன வலியால் அழுதல்.

2. கலுழ் = க் + அல் + உழ். மெய் + துன்பம் + புறம் ஆழ்தல். உடலின் துன்பத்தால், கண்ணீர் உகுத்தல். உடல் வலியால் அழுதல்.

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. (குறள்.1171)

பொருள்:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.

கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – (திருக்கோவையார். 397).

பொருள்:
கலையில் சிறந்த வளமையானவளின் கண்கள், முத்து மாலை போன்ற கண்ணீர்த் துளிகளை சிந்தினவே!
_____________________________________________________

பகுப்பும், விளக்கமும்: தீனதயாளன் (சொல்லாக்கியன், கனடா)

தேமொழி

unread,
Feb 14, 2022, 7:31:23 PM2/14/22
to மின்தமிழ்
இச்சொற்களை பகுப்பது எப்படி?

1.jpg

மருப்பு .

இச்சொல்லை பகுப்பது எப்படி?

மருப்பு = ம் + அர் + உ + ப் + பு. கொண்டு மூடியது + பிரிந்து + வெளிப்படுவதன் + கொண்ட வெளிப்பாடு. உடலில் இருந்து பிரிந்து வெளிப்பட்டு கொள்ளும் வெளிப்பாடு. மான் கொம்பு, யானைத் தந்தம்.

'மரு' என்பதும் உடலின் புறத்தில் பிரிந்து வெளிப்படுவதே.

"ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக..." - (சீவக சிந்தாமணி 1121)

"கொல்லேற்றின் மருப்புப் போன்றன"- (புறநானூறு 4 - வரி 4.)

எறி சுறா வான் மருப்பு கோத்து நெறி செய்த...- (கலித்தொகை - நெய்தல் - பாடல் 131- வரி 7.)
_____________________________________________________

2.jpg

வானவல்லி .

இச்சொல்லை பகுப்பது எப்படி?

வானவல்லி = வானம் + வல்லி.

வானம் = வான்(ல்) + அம். நீளும் + தன்மை. விரிவது, வானம்.

வல்லி = (வலிமை) வல் + இ. வலிமையாக + இருத்தல்/ இருப்பவள். வலிமையானவள்.

வானவல்லி = விரிந்த வானத்தின் வலிமையாய் இருப்பவள். மின்னல்.

மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த,
வானவல்லி வருதலும் உண்டுகொல்!
- ( சிலம்பு - இந்திர விழவு ஊர் எடுத்த காதை - 210-211)

(புகாரில்) மகரக் கொடி ஏற்றும் மன்மதன் வளர்த்த, மின்னலும் வருதல் உண்டோ?
_____________________________________________________

3.jpg

பணி .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. பணி = ப் + அண் + இ. கொள்வது + மிகை நெருக்கம் + இருத்தல். கொண்டது மிகநெருக்கமாய் இருத்தல்.

கொண்ட வேலையுடன் மிக நெருக்கமாய் இருத்தலே சிறப்பு.

2. பணி = ப் + அணி. கொள்வது + அழகு. வேலையைக் கொள்வதும் அழகாம்.

பாம்பும், தன் உடலை மிக நெருக்கமாய் கொண்டிருத்தலால், "பணி" எனும் பெயரைப் பெறுகின்றது.

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என" ( சிலம்பு - மனையறம் படுத்த காதை - அடி.91)

பாம்புகள் இணையலாடி, இணைந்தபடி நிலைத்திருப்பதுபோல், கோவலனும், கண்ணகியும் ஒன்றி இருந்து மகிழ்ந்தனராம்.
_____________________________________________________

4.jpg

புழுக்கின இறைச்சி, சூட்டிறைச்சி.

இச்சொற்களை எப்படி பகுப்பது?

1. புழுக்கின இறைச்சி = புழுக்கினம் + இறைச்சி.

புழுக்கினம் = புழு + கினம்.

புழு = ப் + உழு. கொண்டதில் + உள்ளே ஆழ்ந்து வெளிப்படு. மண்ணில் உள்ளே ஆழ்வதும் வெளிப்படுவதுமான ஊரும் சிற்றுயிர்.

கினம் = க் + இன் + அம். மெய் + அதன் எனும் பொருளுடைய 'இன்' எனும் சாரியை + பண்புப் பெயர் விகுதி. மெய்த்தன்மை.

புழுக்கினம் = புழுவைப் போன்று இருக்கும் வெந்த சோறு.

இறைச்சி = இறை + சி. இறுக்கமாய் இருக்கும் + இயக்கமாய் இருத்தல். அடர்த்தியான ஆற்றல்.

புழுக்கின இறைச்சி = ஊன்சோறு. (பிரியாணி)

2. சூட்டிறைச்சி = சூடு + இறைச்சி. சுடப்பட்ட இறைச்சி. தீயில் வாட்டிய மாமிசம். வறுத்த கறி.

"புழுக்கின இறைச்சியும், சூட்டிறைச்சியும் யாங்கள் இனி வேண்டே மென்கையினால், இனிய சுவை பொருந்திய வேறு வேறு வடிவங் களையுடைய விரகினை - பண்ணியாரங்களை - கொண்டு வந்து அவற்றைத் தின்னும்படி எங்களை இருத்தினான்’ என்று முடத்தாமக் கண்ணியார் கரிகாற் பெருவளத்தானைச் சிறப்பித்துரைத்தார்
(பொரு. 108).
அடிக்குறிப்பு
சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதி - 6 - பக்கம் - 569.

_____________________________________________________

5.jpg

பொங்கழி .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

பொங்கழி = பொன் + கழி. (பொன் போன்று ஒளிரும்) செந்நெல் + மிகை.
செந்நெல் குவியல்.

"பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்".
(சிலம்பு - நாடு காண் காதை - 151 - 152 )

கரும்பாலைப் புகை சூழும், பொன் போன்ற செந்நெல் குவியல், வானத்து மேகம் சூழ்ந்த, மலைபோல் காட்சி அளிக்கும்.
_____________________________________________________

6.jpg

செம்மல் .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

செம்மல் = செம்(மை) + அல். செழுமை + தொழிற்பெயர் விகுதி. செழுமையாதல். வளமாகல். செழிப்பாவது. சிவத்தல். உதிர்ந்து சிவந்த மலர்.

செம்மையானவர். வளமானவர்.

_____________________________________________________

7.jpg

பாதிரி .

இச்சொல்லை எப்படி பகுப்பது?

1. பாதிரி : பாதி + இர் + இ. பாதியாய் + இருப்பது. பாதியாய் இருப்பது. நிமிர்ந்து இல்லாமல் தொங்கி இருப்பது. பாதி நன்கு மலர்ந்து இருப்பது. ஒரு வகையான மலர்.

2. 'பாதிரி' அம்பின் வடிவில் இருப்பதால், 'அம்பு' எனும் பெயரும்,

3. ஒரு படையைப்போல் நெருக்கமாக பூத்து இருப்பதால், 'அம்புவாகினி' ( அம்பு + வாகினி) எனும் பெயரும்,

4. வலியைப் போக்குவதால், பாடலம் ( பாடு + அல் + அம்) எனும் பெயரும்,

5. சிறிய காம்பினைக் கொண்டதால், 'புன்காலி' (புல் + காலி) எனும் பெயரையும் கொள்கிறது.

ஒரு பொருளுக்கு, பல சொற்கள் இருப்பதன் காரணம், அப்பொருளுக்கு வெவ்வேறு பண்புகள் இருப்பதும், அவற்றை சிறப்புக் காரணங்களாய்க் கொண்டு, வெவ்வேறு பெயர்களில், அதை குறிப்பதும்தான்.  
_____________________________________________________

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 14, 2022, 11:13:05 PM2/14/22
to mintamil
தேமொழி அக்கா

இவர் செய்வது தவறான பகுப்பு என்று உங்களால் அறிய முடிய வில்லையா?
பகுப்பு மட்டுமின்றி இவர் அதற்குக் கூறும் விளக்கமும் பொருந்தவில்லை.
இதைப் பற்றி அவரிடம் நேரடியாகவே சொல்லி விட்டேன். ஆனால்...
நீங்கள் ஏன் இங்கே வெளியிடுகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Feb 14, 2022, 11:18:47 PM2/14/22
to மின்தமிழ்

மாற்றுக் கோணம் அறிந்து கொள்ளவும்  வாய்ப்புண்டே என்ற எண்ணத்தில்தான் தம்பி. 

இந்த விளக்கம்  சரியன்று, இதுவே சரியானமுறை என்று விளக்கமளிக்க விரும்புபவரும் கருத்து பதியலாமே. 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 14, 2022, 11:42:13 PM2/14/22
to mintamil
On Tue, Feb 15, 2022 at 9:48 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மாற்றுக் கோணம் அறிந்து கொள்ளவும்  வாய்ப்புண்டே என்ற எண்ணத்தில்தான் தம்பி. 

இந்த விளக்கம்  சரியன்று, இதுவே சரியானமுறை என்று விளக்கமளிக்க விரும்புபவரும் கருத்து பதியலாமே. 

மாற்றுக் கோணத்தை என்றுமே நான் வரவேற்பேன். :))
ஆனால் இவரது பகுப்பு முறையானது அல்ல.
த் என்பது எப்படி தேகம் ஆகும் என்று பொருத்தமாக விளக்கவில்லை. விருப்பம் வேறு, ஆய்வுமுறை வேறு.
அகர, ஆகார வரிசைத் தமிழ்ச் சொற்களுக்கு ஏற்கெனவே எனது தளத்தில் சொற்பிறப்பியல் கூறியுள்ளேன்.

K S Ilamathi's Paranchudar Gnanam

unread,
Feb 17, 2022, 3:50:58 AM2/17/22
to mint...@googlegroups.com
வணக்கம் .  தமிழ் என்பது தெய்வத்தமிழ் என்ற ரகசியத்தை உணர்த்தும் வண்ணமாக வார்த்கைகளைப் பிரித்துப் பார்த்து உணர்த்தி அதன் வளங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. 

--
K.S.Ilamathy, Writer & Yoga Instructor
+91 99405 88046
Soorya Namashkar
www.sooryanamashkar.com

Reply all
Reply to author
Forward
0 new messages