1. நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன் -- 2. வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 24, 2026, 3:48:34 PM (22 hours ago) Feb 24
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      25 February 2026      கரமுதல



(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1181-1185

  1. தம்பா வெருளி – Tampaphobia

தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.
00

  1. தராசு வெருளி-Zygariaphobia

தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.
தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத் தவறாகக் காட்டுவர், இதனால் இழப்பு ஏற்படும் என்பன போன்ற பேரச்சத்திற்கு ஆளாவர்.
00

  1. தரை விரிப்பு வெருளி – Hibernicaphobia

தரை விரிப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தரை விரிப்பு வெருளி.
தரை விரிப்பு கீழே விழ வைத்து விடும், அதிலுள்ள தூசிகள்போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு நலக்குறைவு ஏற்படும், என்பனபோன்ற கவலைகளால் தரைவிரிப்பு மீதான வெருளி ஏற்படுகிறது.
00

  1. தல்ல ஃகசீ வெருளி – Tallahasseephobia
    தல்லஃகசீ (Tallahassee) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தல்லஃகசீ வெருளி.
    தல்லஃகசீ, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம். இம்மக்கள், இம்மக்கள் தொடர்பானவை என அளவுகடந்த பேரச்சம் கொள்வதே தல்லஃகசீ வெருளியாகிறது.
    00
  2. தலை வலி வெருளி-Kefalalgiaphobia/Cephalalgiaphobia

தலைவலி குறித்த அளவுகடந்த பேரச்சம் தலைவலி வெருளி.
தலைவலி, ஒற்றைத் தலைவலி முதலான தலைநோவுகள் குறித்து அளவு கடந்த பேரச்சம் கொள்வர். இதனால் மருந்து அளவைக் கூடுதலாக எடுத்துக் கொண்டு மேலும் துன்புறுவர். தலைவலி மற்றொரு நோயின் அறிகுறி என, மற்றொரு நோய்குறித்து ஆராய்ந்து வரம்பற்ற பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். தலைவலி வரும் என்று கவலைப்பட்டுத் தலைவலி வெருளிக்கு உள்ளாவோரும் உள்ளனர்.
cephalic, algia ஆகிய இலத்தீன் சொற்களுக்கு முறையே தலை, வலி எனப் பொருள்கள். இதன் ஒலிப்பு முறை மாற்றம்தான் Kefalalgia என்னும் சொல்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

++

நாலடி நல்கும் நன்னெறி 25 : சமயங்கள் வெவ்வேறு: உணர்த்தும் நெறி ஒன்றே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 February 2026      கரமுதல



(நாலடி நல்கும் நன்னெறி 24: நிலையான பயன் தரும் அறம் செய்க!: தொடர்ச்சி)

நாலடி நல்கும் நன்னெறி 25

சமயங்கள் வெவ்வேறு: ஆயினும் அவை உணர்த்தும் நெறி ஒன்றே!

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்

ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு.

நாலடியார் பாடல் 118

கருத்து:

பசுக்கள் வெவ்வேறு வண்ணங்களை உடையனவாக இருந்தாலும் அவை தரும் பாலின் நிறம் வெண்மைதான். அதுபோல், சமயங்கள் வெவ்வேறு வகையில் இருந்தாலும் அவை அறிவுறுத்தும் அறநெறி ஒன்றே!

பதவுரை:

ஆ = பசுக்கள்; வேறு உருவின = நிறத்தாலும் வடிவத்தாலும் வெவ்வேறு உருவங்களைக்; ஆயினும்=கொண்டிருப்பினும்; ஆ பயந்த பால் = பசுக்கள் தரும் பாலும் பால் மூலம் பெறும் தயிர், நெய் முதலிய பாற் பொருள்களும்; வேறு உருவின= வெவ்வேறு வண்ணங்களை; அல்லவாம் = உடையன அல்லவாம்; அறநெறி = அறத்தின் வழி; பால்போல்=பால் போன்று;ஒருதன்மைத் தாகும்= ஒத்ததன்மையுடையனவாகும்; ஆபோல் = பசுக்கள் போல் ; உருவு பலகொளல் ஈங்கு=பல வேடங்களையுடைய சமயங்களும் இங்கு

சமயங்கள் கொள்கையினால், வழி பாட்டு முறைகளினால், சடங்குகளால், நோன்பு முறைகளால், நூல்களால், வெவ்வேறாக உள்ளன. ஆனால் அவை உணர்த்தும் அடிப்படை அறநெறி ஒன்றுதான். இவ்வுண்மையையே பசுக்கள் பல வண்ணமாக இருந்தாலும் அவைதரும் பாலின் நிறம் ஒன்றுதான் எனக் கூறி உணர்த்துகிறார் பாடலாசிரியர்.

இப்பாடல் சமயப்பொறைக்கு வழி காட்டுகிறது. வெவ்வேறு சமயத்தவர் தத்தம் சமயமே உயர்ந்தது என்றோ தங்கள் சமயம் கூறும் படைப்புக் கடவுளை உயர்ந்ததாகவோ கூறக்கூடாது. வழிபாட்டு முறைகளினாலும்  நடைமுறைகளாலும்  ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு வகையாகத் தோன்றலாம். சமயக் கடவுள்களின் தோற்றங்களும் வெவ்வேறு நிலையாக இருக்கலாம். ஆனால், அவை உணர்த்தும் அடிப்படை நெறி ஒன்றே. அவ்வாறிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று சொல்லாட, போராட வேண்டிய தேவை என்ன?  எனவே, சமயங்களின் அடிப்படை ஒருமை உணர்வைப் புரிந்து கொண்டு சமயப்பொறையுடன் வாழ வேண்டும் என நாலடியார்ப் பாடல் உணர்த்துகிறது எனலாம்.

நாடெங்கும் சமயச்சண்டைகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை நிறுத்துவதற்கு இப்பாடலைப் பொருளுடன் விளக்கி உணர்த்தலாம். சமயப் பொறையே நமக்குத் தேவை. சமயக்கருத்துகளில் உள்ள வேண்டாதனவற்றை விலக்கி உட்கருத்தான அறநெறியை உணர்ந்து போற்றுவோம்!

 இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages