பாரம்பரிய இசையை கற்காமலேயே தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்மணி நஞ்சியம்மா

24 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 7, 2022, 11:46:57 PM8/7/22
to மின்தமிழ்
பாரம்பரிய இசையை கற்காமலேயே தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்மணி  நஞ்சியம்மா

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஆலங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது நஞ்சியம்மா. இவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி கிராமத்தில் வாழ்கிறார்.  "நாட்டார் பாடல்களைப் பாடுவதில் சிறந்தவர். பொது நிகழ்ச்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டார் பாடல்களைப் பாடி வருகிறார்.
Kalakkatha-Sandana-Meram.jpg
மலையாள திரைப்படமான "ஐயப்பனும் கோஷியும்" என்ற திரைப்படத்தில் இவர் பாடிய "கலக்காத்தா சந்தன மெரா" பாடலுக்காக [https://youtu.be/mR2wpadUDUA]   நாட்டின் 68-ஆவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது, கேரள அரசின் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இசையை கற்காமலேயே நஞ்சியம்மா விருது பெற்றுள்ளது இந்திய இசை உலகில் ஓர் அளப்பரிய சாதனை என்பதற்கு இதுவரை விருது பெற்றோர் பட்டியலைப் பார்த்தாலே தெரியவரும். 
National Film Award for Best Female Playback Singer

Lyrics

Kalakkatha Sandhanameram Veguvoka,
Poothirikkum, Poo Parikka Pokilamo Vimenathe, Pakkilamo,
Kalakatha Sandhanameram Veguvoka,
Poothirikkum, Poo Parikka Pokilamo Vimenathe, Pakkilamo,
La Laale Laale Laale, Laale Laale, Laala Le
La Laale Laale Laale, Laale Laale, Laala Le

Thekkatha Sandhanameram Veguvoka,
Poothirikkum, Pooparikka Pokilamo Vimenathe, Pakkilamo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo,

Vadakkatha Punka Meram, Puparikka Pokilamo,
Vadakkatha Punka Meram, Veguvika Poothirikkum,
Puparikka Pokilamo Vimenathe, Pakkilamo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo,

Mekkatha Nara Meram, Veguvoka Poothirikkum,
Poo Parikka Pokilamo Vimenathe, Pakkilamo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo,
Thille Le Le Le Le Le, Le Le Le Le Lo.

இசையினியன்

unread,
Aug 8, 2022, 2:40:42 AM8/8/22
to மின்தமிழ்
அப்படியா?

- பாரம்பரிய இசையை கற்பது என்றால் என்ன? கர்நாடக இசையைத் தான் பாரம்பரிய இசை என எண்ணுகிறீர்களா?
- பாரம்பரிய இசையை  https://en.wikipedia.org/wiki/National_Film_Award_for_Best_Female_Playback_Singer இவர்கள் கற்று உள்ளார்களா?
- மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்தான் பரம்பரை இசையைக் கற்காதவர்கள் எனத் தெரிகிறது. ஊர் மக்கள் பாடும் பாட்டுதான் பரம்பரை இசை என எனக்குத் தோன்றுகிறது. எதனை தாங்கள் பரம்பரை இசை என எண்ணுகிறீர்கள்?
- அதென்ன பழங்குடிப் பெண்? என்ற ஓட்டு தேவைதானா?

தேமொழி

unread,
Aug 8, 2022, 3:45:38 AM8/8/22
to மின்தமிழ்
///எதனை தாங்கள் பரம்பரை இசை என எண்ணுகிறீர்கள்?///

இசையினியன், பாரம்பரிய இசை என்பது ச  ரி க ம ப த நி ச 

என்று இசை வகுப்பில் சென்று  பயில்வதைக் குறிப்பிட்டேன் 


///அதென்ன பழங்குடிப் பெண்? என்ற ஓட்டு தேவைதானா?///

இசை என்று மேட்டுக்குடி சபாக்களில் எல்லோரும் மார்கழியில் இசைக் கச்சேரி  நடந்த 

ஒரு பழங்குடிப்  பெண் (கவனிக்க நான் அப்பெண்மணியின் இனம் குலம் என செய்திகளில் இருப்பதைக் குறிப்பிடாமல் வேறுபாடு காட்ட இவ்வாறு குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளேன்) பாடறியேன் படிப்பறியேன் பாணியில் தேசிய விருதைத் தட்டிச் சென்றதைக் குறிப்பிட இவ்வாறு  எழுதினேன்.  

Against All Odds என்று காட்டுவது மட்டுமே என் நோக்கம் 

தினமணியில் இந்த செய்தியைப் பார்த்தேன் 

என் பதிவு  தவறான புரிதலாகப் போகாமல் விளக்கமளிக்க நீங்கள் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி. 

தேமொழி

unread,
Aug 8, 2022, 3:52:40 AM8/8/22
to மின்தமிழ்
மாற்றுத்திறனாளி   அருணிமா சின்கா  எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார் என்பதில் அவரது உடற்குறையோடு சுட்டப்படும் நோக்கம் போலவே நான் எழுதியதும். 

[இளையராஜா விருது பெற்றபொழுது செய்தித் தாள்கள் உள்நோக்குடன் தலைப்புச் செய்தி போட்டது போல அல்ல] 

விருதாளரை நான் அவமதித்ததாகக் கருதினால் சொல்லுங்கள் இசையினியன் இந்த இழையையே நீக்கிவிடலாம் 
Reply all
Reply to author
Forward
0 new messages