THF Announcement: த.ம.அ செய்தி - சென்னை மின்பதிப்பாக்கக் குழு பட்டறை 01/03/2009

0 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Feb 27, 2009, 1:00:02 PM2/27/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
மின் தமிழ் நண்பர்களே,
 
வருகின்ற மார்ச் 1ம் திகதி, ஞாயிறு காலை சரியாக 11 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள MIT campus, மிட் வளாகத்தில் உள்ள ஏயுகேபிசி மையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை  சென்னை மினப்திப்பாக்கக் குழு ஏற்பாட்டில் இவ்வாண்டின் முதல் மின்பதிப்பாக்கப் பட்டறை நடைபெற உள்ளது.
 
இடம்:  MIT campus. Chrompet, chennai.
நேரம்: 11 காலை
 
தொடர்புக்கு: டாக்டர்.திவா (
agni...@gmail.com ) அல்லது 93 676 12063 (கைப்பேசி)

பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். முன்னதாகவே உங்கள் பெயரை திரு.திவா அவர்களுக்கு  மின்னஞ்சல் / தொலைப்பேசி வழியாக தெரிவித்துக் கொள்ள வேண்டுகிறோம்.
 
மின் தமிழ் நண்பர்களே, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
 

Narayanan Kannan

unread,
Mar 1, 2009, 6:05:34 AM3/1/09
to minT...@googlegroups.com
தேனீயாரே!

இத்தலைப்பில் இவ்விழை தொடரட்டும்

படங்கள் பட்டறை சிறப்பாக நடந்ததைக் காட்டுகிறது

நம் திவா தனது magic box கடலூரிலிருந்து கொண்டு வந்து இருக்கிறார்
போலுள்ளதே? பெரிய வேலைதான்

பழைய வீடியோவில் இதன் நுணுக்களை அறிந்து கொண்டேன் It is ingenious! இந்த
குட்டி டப்பாவில் மிகச்சிறந்த புத்தகப்படங்களை உருவாக்கியிருக்கிறார்
மேலும் இதைத் தயாரிப்பதற்கு பின்னுள்ள அவரது அறிவுத்தேட்டம் என்னைக்
கவர்ந்தது ஒரு டெலஸ்கோப் இல்லாமலே சனிக்கிரகத்தின் சுற்றுச்சுழல் பற்றிப்
பேசியவர்கள் நம் முன்னோர்கள் ஆரியபட்டா வந்த மண்ணில் திவாக்கள் உருவாவது
ஆச்சர்யமில்லைதான்

சரி, மேல் விவரங்கள் சொல்லுங்கள்!!

க>

Subashini Tremmel

unread,
Mar 6, 2009, 3:50:05 PM3/6/09
to minT...@googlegroups.com
நண்பர்களே,
 
கடந்த ஞாயிற்றுக் கிழமை தமிழ் மரபு அறக்கட்டளையின் சென்னை மின்பதிப்பாக்கக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மின்பதிப்பாக்கப் பட்டறை சிறப்பாக நடந்தது. இந்த பட்டறைப் பற்றிய செய்திகத் தமிழ்த்தேனீயார் மற்றும் டாக்டர்.திவா ஆகியோர் வழங்கிழிருந்தனர்.  இதோ உங்கள் வாசிப்பிற்காக:
-சுபா
 
 
தமிழ்த்தேனீ
 
அன்புள்ள நண்பர்களே திட்டமிட்டாற்போல் நம் தமிழ் மரபு அறக்கட்டளையின்,மின்னாக்கப் பட்டறை நல்லபடி நடந்தது
 
மதிப்பிற்குறிய திருமூர்த்தி வாசுதேவன் அவர்கள் மின்னாக்க பெட்டியின்
செயல்பாட்டை நடைமுறையில் செய்தே காட்டினார்
பிறகு செயல் முறையை விளக்கினார்
 
நண்பர்கள் திரு வாமுசே ஆண்டவர் பச்சையப்பா கல்லூரியிலிருந்து  பல மாணவ, மாணவிகளை அழைத்து வந்திருந்தார், அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு செயல் பாட்டில் தாங்களே இறங்கி நேரிடையாக செய்து பார்த்தனர்
 
திரு ஓகை நடராஜன் அவர்கள், திரு சந்திர சேகரன்,திரு தேவராஜன் என்கிற தேவூ அவர்கள்,திரு  யுவராஜன் அவர்கள், மற்றும் பச்சையப்பா கல்லுரியில் படிக்கும்
ஆர் நாகராஜன், இரா நாகராஜன்,க சசி, பூ சங்கரி, இரா ஷண்முகப்ரியா, பா பத்மாதேவீ,
சு மகேந்திரன்,அனைவரும் கலந்து கொண்டனர் பட்டறை  முடிய மணி இரண்டாகிவிட்டது

இடம்,  கணிணி, திரை ஒளி பாய்ச்சி போன்றவைகளை ஏற்பாடு செய்த திரு ஆமாச்சு அவர்களுக்கு மின்தமிழ் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்
நல்ல வேளை திரு ஓகை நடராஜன் அவர்கள் என்னை மாம்பலம் வரை காரில் அழைத்து வந்து விட்டுவிட்டுப் போனார், அவருக்கும் நன்றி

திரு சந்திர சேகரன் அத்துணை செயல்களுக்கும் உதவியாக இருந்தார்
 
அடிக்கடி இது போன்ற பட்டறைகளை நடத்தினால் மிகவும் உபயோகமாக இருக்கும்
 
 
 
டாக்டர்.திவா
 
நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு துவங்கிவிட்டது. வளாகத்தில் இடம் கண்டு பிடிக்க சிரமப்பட்டு சிலர் தாமதம்.

பச்சையப்பன் கல்லூரி திரு வாமுசே ஆண்டவர் தன் மாணவ மாணவியரை (8 பேர்)அழைத்து வந்து இருந்தார்.

சந்திரா சரியாக 10 -59 க்கு வந்தார்! ஓகை நடராசன் அவருடன். மேலும் தேனீ, யுவராஜ் தேவ் வந்தார்கள்.
அமாச்சுவுக்கு திடீர் வேலை வந்துவிட்டதால் பொறுப்பாக முன்னாலேயே போய் மடிக்கணினி ப்ரொஜெக்டர் எல்லாவற்றையும் அமைத்து தயாராக வைத்துவிட்டு என்னிடம் தெரிவித்துவிட்டு போய்விட்டார். நிகழ்ச்சியின் பின் பகுதியில் சேர்ந்து கொண்டார்.
 
வந்திருந்த மாணவ மாணவியர் தமிழ்தாய் வாழ்த்து பாட நிகழ்ச்சி துவங்கியது.
முதலில் சுய அறிமுகம். பின் சந்திராவின் சிறு தொடக்க உரை.
அடுத்து ஏன் மின்னாக்கம் என்று பேச்சு தொடங்கி செயல் முறையில் முடிந்தது.
மின்னாக்கத்துக்கு உதவும் பெட்டி (மேஜிக் பாக்ஸ்!) செய்து காட்டப்பட்டது.

அனைவரும் காமிராவை எப்படி கையாளுவது என்று செய்து பார்த்து புரிந்து கொண்டனர்.
சந்தடி சாக்கில் ஒரு சிறு புத்தகம் 30 பக்கங்கள் மின்னாக்கப்பட்டது. அது தவிர ஹரி வம்சம் என்ற புத்தகம் பல பக்கங்கள் மின்னாக்கப்பட்டன.

பின்னர் அவற்றை மடிக்கணினிக்கு மாற்றி அந்த படங்கள் ப்ரொஜக்டர் மூலம் எவ்வளவு தெளிவாக வந்து உள்ளன என்பது காட்டப்பட்டது.
 
சுமார் 1 மணிக்கு முடிக்க உத்தேசித்து இருந்தது. அதனால் கணினி ப்ராஸஸிங் மிக விரிவாக காட்டப்படவில்லை. கருப்பு வெள்ளை ஆக்கலாம், படத்தை நிமிர்த்தலாம் என்பவை மட்டுமே மனதில் பதிய வைக்கப்பட்டது.

சுமார் 1 மணி 30 நிமிடத்துக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.
வந்தவர்களுக்கு அறிவுப்பசிக்கு உணவு கிடைத்ததே தவிர வயிற்றூக்கு கொடுக்க சிந்தனையோ, அது வந்த போது வாய்ப்போ இல்லாமல் போயிற்று. குழந்தைகள் அம்பத்தூர் முகப்பேர் என்று நெடுந்தூரத்தில் இருந்து வந்து இருந்தனர்.
 
ஆண்டவர் பச்சையப்பன் கல்லூரியில் இருந்த பல   புத்தகங்கள் இட மாற்றம் செய்கையில் சரியான கருத்தின்றி செய்ததால் அழிந்து போனதாக தெரிவித்தார்.
 
அன்புடன்
திவா 

Subashini Tremmel

unread,
Mar 7, 2009, 10:58:25 AM3/7/09
to minT...@googlegroups.com
கடந்த வாரம் ஞாயிறு அன்று நடைபெற்ற த.ம.அறக்கட்டளையின் சென்னை மின்பதிப்பாக்கக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மின்பதிப்பாக்கப் பட்டறையின் புகைப்படங்கள் இப்போது நமது வலைப்பக்கத்தில் இணைக்கபப்ட்டுள்ளன. இவற்றைக் காண http://thfcms.tamilheritage.org/ சென்று வலது பக்கத்தில் உள்ள படக்கூடம் பகுதியில் நிகழ்வுகள் 2009 பகுதிக்குச் செல்லவும். அதில் சென்னை மின்பதிப்பாக்கப் பட்டறையைத் தட்டினால் இந்த படங்களைக் காணலாம். அதில் ஒரு படத்தை அழுத்தினால் படம் பெரிதாக்கப்படும். அதில் slideshow ஆரம்பிக்க முக்கோண வடிவத்தை அழுத்தவும்.
 
இந்த படங்களை அனுப்பி வைத்த தமிழ்த்தேனீயார், சந்திரா ஆகியோருக்கு நன்றி.
 
அன்புடன்
சுபா

2009/3/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages