தமிழ்ப் பல்கலைக்கழகம் நூல்கள் 50% தள்ளுபடி விலையில்-15.09.2025 முதல் 14.10.2025 வரை

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 14, 2025, 12:22:01 AM (6 days ago) Sep 14
to மின்தமிழ்
tamil university books on sale.jpeg
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாப் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நான் தொடங்கப்பட்டது. இத்தொடக்கநான் விழாவினை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் 15ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியீட்டு நூல்கள் 50 விழுக்காடு (50%) தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பார்வையில் கண்டுள்ள ஆணையின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் தொடக்கநாள் விழா மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நான் விழாவினை முன்னிட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியீடுகள் 15.09.2025 அன்று காலை 11.00 மணிக்கு மாண்பமை துணைவேந்தர்(பொ)குழு தலைமையில் விற்பனைப் பிரிவில் (நிர்வாகக் கட்டடம் அருகில்) விற்பனை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இவ்விற்பனை 15.09.2025 முதல் 14.10.2025 முடிய ஒரு மாத காலம் நூல்கள் 50% தள்ளுபடி விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நல்வாய்ப்பினை, பொதுமக்கள் பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages