
ref :
https://x.com/CICTOfficial/status/2037506993389510715சங்க இலக்கிய அகராதி நீண்ட நெடிய தமிழ் அகராதி வரலாற்றின் தொடர்ச்சியில் சங்க இலக்கியச் சொற்களுக்குப் பொருளுடன் கூடிய அகராதி ஒன்றைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அகராதியில், சங்க இலக்கியச் சொற்களுக்கு, அந்தந்த நூல்களுக்கு அமைந்த பழைய உரைகளை அடிப்படையாகக் கொண்டு பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அகராதியில் உள்ள சொற்களுக்குத் தரப்பட்டுள்ள பொருள் ஆங்கிலத்திலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. தற்காலத்தார் சங்க இலக்கிய நூல்களைக் கற்பதில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையவும், சங்கப் பாடல்களைத் தேர்ந்துத் தெளியவும் பெருந்துணையாக இந்த அகராதி அமையும்.
திருமதி வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் அவர்கள் இந்த அகராதியை நேர்த்தியாக உருவாக்கி அளித்துள்ளார்கள்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் சிறப்பான முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அகராதியின் விலை ரூ. 1500/- ஆகும். 50% கழிவு விலையில் ரூபாய் 750/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அகராதியை வாங்க விரும்புவோர்
+91 78458 74314 என்ற செம்மொழி நிறுவன எண்ணிற்குத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
சங்க இலக்கிய அகராதி
ஆசிரியர்: வைதேகி ஹெர்பர்ட்
விலை: ரூ. 1500/
கழிவு: 50%
தொடர்பு எண்:
+91 78458 74314