Fwd: [வல்லமை] கரூர் மாவட்டம் முன்னூரில் கண்டறியப்பட்ட 10 - ம் நூற்றாண்டு கிரந்தக் கல்வெட்டு

60 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Oct 20, 2019, 2:05:45 AM10/20/19
to mintamil, தமிழ் மன்றம், thamizayam
நூ த லோ சு
மயிலை
 ---------- Forwarded message ---------
seshadri sridharan <ssesh...@gmail.com>
 Sun, Oct 20, 2019 at 10:51 
கரூர் மாவட்டம் முன்னூரில் கண்டறியப்பட்ட 10 - ம் நூற்றாண்டு கிரந்தக் கல்வெட்டு 
பதிவு: அக்டோபர் 16,  2019 04:30 AMகரூர் அருகே 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
 திருப்பூர்,

இந்திய வரலாற்றை அறிந்துகொள்ள கல்வெட்டு மிகச்சிறந்த முதன்மை சான்றாக விளங்குகிறது. கல்வெட்டு என்பது பொதுவாக
 கல்லின்மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அவை தரும் செய்திகளையும் தொகுத்து படிக்கும் ஓர் ஆவணம் ஆகும்
. கல்வெட்டு சான்றுகள் மூலம் பண்டைய வரலாறு, மொழியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை நாம் 
அறிய முடிகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பு அக்கால மக்களின் கருத்தினை தாங்கி நின்ற எழுத்து வரி வடிவங்களாக 
நமக்கு குறியீடுகள் தான் கிடைத்துள்ளன.

குறியீடுகளுக்கு அடுத்துக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ் பிராமி வரிவடிவம் ஆகும். தமிழ்பிராமி எழுத்து வடிவம் தமிழகத்தில்
 கி.மு 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது. கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் இவ்வரிவடிவம்
 தனது அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளத்தொடங்கியது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் இந்த எழுத்து வரிவடிவம் வட்டவடிவ
 தன்மையை பெற்றது. அதனால் இந்த எழுத்து வட்டெழுத்து எனப் பெயரிடப் பெற்று அழைக்கப்பட்டது. கி.பி. 11-ம் நூற்றாண்டு
 வரை இந்த வட்டெழுத்துக்கள் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தன.

கி.பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட சோழப் பேரரசு வட்டெழுத்துக்கு மாற்றாக தமிழ் எழுத்துக்களைப்
 பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. சோழப்பேரரசு தமிழகம் முழுவதுமாக மாமன்னன் ராஜராஜசோழன் தலைமையில் விரிவடைந்தது.
 அதற்குப்பின் தமிழ் எழுத்தைத் தமிழகம் முழுவதுமான ஒரே சீரான வரிவடிவமாக ஏற்படுத்தினர். ஒரு சில மாற்றங்களுடன் இந்தத்
 தமிழ் எழுத்துக்கள் இன்றுவரை தமிழகத்தில் தொடர்கின்றன.

"தமிழகத்தில் கிரந்த எழுத்து" "கிரந்தம்" என்ற சொல் வடமொழியில் நூல் என்று பொருள்படும். எனவே நூலை எழுதுவதற்கு அடிப்
படையாக உள்ள எழுத்தையும் கிரந்தம் என்றே குறிப்பிடுகின்றனர். தமிழ் கல்வெட்டுகளில் வடமொழிச் சொல்லைப் பயன்படுத்தும்
 போது அந்த வடமொழிச் சொற்களுக்குரிய வரிவடிவங்கள் தமிழில் இல்லாததால் இவற்றை எழுத கிரந்த எழுத்தை தமிழ்நாட்டில் 
பயன்படுத்தி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த எழுத்துக்கள் பல்லவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எழுத்துக்கள் தமிழகத்தில் கி.பி. 4-ம் நூற்றாண்டு 
முதல் நாயக்கர் காலம் ஆன கி.பி. 17-ம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தன. இந்த நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் 
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, 
ரா.குமரவேல், சு.சதாசிவம், ரா.செந்தில்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது கரூருக்கு 12 கிலோமீட்டர் மேற்கே
 அரவக்குறிச்சி தாலுகாவில் க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரில், 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மந்திரக்கல்வெட்டு ஒன்றைக்
 கண்டெடுத்து உள்ளனர்.

இது பற்றி ஆய்வுமைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கரூரும் ஒன்று. கரூர் பண்டைய நாளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக
 விளங்கியது. வடக்கில் கங்கைச் சமவெளியில் இருந்து வந்த தட்சிணபதம் (இன்றைய பெருவழி- 7) கன்னியாகுமரி வரை சென்றது. 
இப்பெருவழியைப் பற்றி கவுடில்யர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்கு கடற்கரையிலிருந்து பாலக்காட்டு கணவாய் வழியாக 
வந்த கொங்கப் பெருவழி கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை சென்றது. இவ்விரு பெருவழிகளும் கரூரில் சந்தித்தன.

எனவே முதலில் வேளிர்களின் தலைநகராக இருந்த கரூர், சங்ககாலத்தில் சேர வேந்தர் படையெடுப்பில் சேர அரசர்களின் தலைநகர
மாக நிலைப்பெற்றது. எனவே வட இந்தியாவுடன் ஏறத்தாழ 2,300 ஆண்டுகளாக கரூருக்கு தொடர்பு இருந்துள்ளது.

இங்கு நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டு 110 செ.மீ உயரமும், 43 செ.மீ அகலமும் கொண்டதாகும். 6 வரிகளில் கிரந்த எழுத்துக்கள் 
இதில் உள்ளன. கிரந்த எழுத்துக்களில் ஒப்பற்ற வடிவையும் எழிலையும் தோற்றுவித்தவன் கி.பி. 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
 ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் ஆவான். கிரந்த எழுத்துக்களை மயில் போலும் அன்னப்பறவை போலும் பாம்பு போலும் 
பல்வகைக் கொடி போலும் எழிலார்ந்த சித்திரங்களைப் போலும் எழுதி மகிழ்ந்த தமிழ் மன்னன் இவனே. இந்த வகை எழுத்துக்கள்
 உள்ள இந்தக் கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு மற்றும் குளம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கல்வெட்டை வாசித்த வரலாற்றுப் பேராசிரியர் ஏ.சுப்புராயலு கூறியதாவது:-

பொதுவாகத் தந்திர வழிபாட்டோடு தொடர்புடைய எழுத்துக்கள், உருவங்கள் ரகசியமாகவே போற்றப்படும். இங்கும் அவ்வாறே 
காணப்படுகின்றன. இதில் ஒரு வரி படிக்கக் கூடிய நிலையில் இல்லை. எழுத்து அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 
கி.பி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

இவ்வாறுஅவர் கூறினார்
karuvoormanthirak kalvettu2.gif
karuvoormanthirak kalvettu.gif
munnoor iruppiTam.gif

N D Logasundaram

unread,
Oct 20, 2019, 2:50:35 AM10/20/19
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai
நூ த லோ சு
மயிலை
 "ஒருவரிகூட படிக்கக்கூடியதாக இல்லை " சுப்பராயலு
இருக்கட்டும் அதனில் உள்ள வரிகளில் காணும் படிக்கக் கூடி  கிரந்த எழுத்துக்கள் இவை
இவை என இந்த வரிகளில் உள்ளன என முடிந்ததை காட்டுவதில் என்ன இடர்பாடு ?? 
முதலில் படிப்பு பின்தான் பொருள் காண்டல் அல்லவா?? 

அன்புள்ள கோவை கல்வெட்டு அறிஞர் துரை  சுந்தரம் 
தங்களுக்கு தெரிந்தவரை கிரந்த எழுத்துக்களை வெவ்வேறு நிறங்களில் இவை கிரந்தம்
 இவை இயலாதவை ( ??????) என  கிட்டியபடி ஆவணமாகப் பதியலாம் எனக்கேட்டுக்
கொள்கிறான் முன்பே செய்தும் இருக்கலாம் 
-------------------------------------------------------------------------------------
கூக்கால் உதவியுடன் இருப்பிட வரைபட ப்படம் காட்டல் நூ தா லோ சு மயிலை 
காவிரிதெற்காக ஓடியது இந்த முன்னூருக்கு வடக்காக உள்ள கொடுமுடி அருகு  கிழக்கத் திரும் புகின்றமைக்  காணலாம்   

karuvoormanthirak kalvettu2.gif
karuvoormanthirak kalvettu0.gif
munnoor iruppiTam.gif

N D Logasundaram

unread,
Oct 20, 2019, 11:43:21 AM10/20/19
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai
நூ த லோ சு
மயிலை

கீழே காண்பவை
 உயர் திரு இராச வேலு அவர்கள்வைத்த கருத்து 

இது பேராசிரியர் சுப்பராயலு சொல்வது போல் மந்திர சொற்கள் உள்ள கல். பொதுவாக தமிழகத்தில் இதுபோன்ற கற்கள் ஊரின் பகுதியில் நடப்பட்டிருக்கும். சில நேரங்களில் கட்டங்கள் இட்டு எழுத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆவினத்திற்கு ( மாட்டிற்கு) நோய் வரும் பொழுது இந்த கல்லை சுற்றி மாட்டை அழைத்து வந்து வேண்டுதல் செய்வர். இதை மாட்டுக்கல் என்பர். மாட்டைத் தாக்குகின்ற கோமாரி போன்ற நோய்களைத் தடுக்கும் இது போன்ற வழிபாட்டு முறைகள் என கருதுவர். இக்கல்வெட்டு முழுவதுமாக 10 ஆம் நூ. கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளதுஓம் கிரிம் கிம்பிம்  என இறுதியில் முடிந்துள்ளது. இவை எந்த வரலாற்றுச் செய்தியையும் தராது. காலம் மட்டுமே கணிக்க இயலும். இக்கல்வெட்டு எழுத்துக்களை படிக்கலாம். மேலே உள்ள வரிகள் அழிந்துள்ளன. 
சு.இராசவேலு  
-------------------------------
மேலும் இது பற்றி தேடியதில் இணைய பக்கத்தில் கண்டது இது
 இது ஒரு கோமாரிக்கல் திருப்பத்தூரில் (5 கிமீ எலவம் பட்டியில் காண்டுபிடித்டுல்லனடர்) கண்டது 14 ம் நூற்றாண்டு 

image.png

சென்னை அருகே கால்நடைகளின் நோய் தீர்க்கும் 'கோமாரிக்கல்'கண்டுபிடிப்பு


image.png
 


 

N D Logasundaram

unread,
Oct 20, 2019, 12:26:46 PM10/20/19
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai
தொடர்ச்சி 
மேலும் 
கோமா ரிக்கல்( = சந்யாசிக் கல்)   இரண்டு 

(3) (4) 
தாம்பரம் சேலையூர் பெருமாள் கோயில்  குளம் அருகு இரண்டு 


===========================================================

komarikkal sanyasikkal 3.gif
Komarikkal sanyasikkal selaiyurfirst.gif

dorai sundaram

unread,
Oct 21, 2019, 4:08:28 AM10/21/19
to mint...@googlegroups.com
இது போன்ற ஒரு மந்திரக்கல்லைக் கண்டறிந்த நிகழ்வு எனக்கும் ஏர்பட்டுள்ளது.
கால் வலி நீங்க, மக்கள் மந்திரக்கல்லின் மீது காலை வைத்துத் தேய்த்துள்ளனர்.
அது பற்றிய கட்டுரையை (2014-ஆம் ஆண்டு எழுதியது) இங்கு பகிர்கிறேன்.

சுந்தரம்.


மருத்துவம் சொல்லும் கல்வெட்டு

                                                      


         19.09.2014 அன்று,  தொல்லியல் ஆர்வலரும் பள்ளி ஆசிரியருமான கிருஷ்ணகுமார், கோவை-சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள சரவணம்பட்டியில் ஒரு சிறிய கல்வெட்டு இருப்பதாகவும், எழுத்துகள் அண்மைக்காலத்தனவாக இருப்பதாகவும் அங்கு சென்று அதைப்படித்துத் தருமாறும் கேட்டிருந்தார். எனவே, இன்று காலை (20.09.2014) அங்கு சென்றிருந்தேன். ஊருக்குள் செல்லும் ஒரு சிறிய சாலையில்  மளிகைக்கடை ஒன்றின் முன்புறம் அக்கல் நிறுத்தப்பட்டிருந்தது. சாலையை விட்டுத்தள்ளியிருந்த மண் பகுதியில் பதிக்கப்பட்டிருந்தாலும் கல்லைச் சுற்றி சிமெண்ட்’ கொண்டு பூசப்பட்டிருந்தது. கல்லின் மேற்புறம் பூமாலை சாத்தப்பட்டிருந்தது. கல்லின் அடியில் ஓரிரு அகல் விளக்குகள் காணப்பட்டன. மேற்புறம் அகன்றும் கீழ்ப்புறம் குறுகியும் காணப்பட்ட அக்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்ட பரப்பு நன்கு மட்டப்படுத்தப்படாமல் சற்றே குழியும் மேடுமாக இருந்ததாலும், எழுத்துகள் தெளிவான வடிவத்தில் வெட்டப்படாததாலும் முதல் பார்வையில் படிக்க இயலவில்லை. எனவே, கல்லைத் தண்ணீர் விட்டு  நன்கு கழுவித் தூய்மையாக்கி சுண்ணப்பொடி பூசிக் காயவைத்தபின் பார்க்கையில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன.


         கல்லில் ஐந்து வரிகளில் எழுத்துகள் இருந்தன. உச்சியில் இரு எழுத்துகளின் வடிவம் இருப்பினும் இனம் காண இயலவில்லை. ஐந்து வரிகள் முடிந்த நிலையில் ஆறாவது வரியில் ‘ம்  என்னும் ஒற்றை எழுத்து இருந்தது. முதல் இரு வரிகள் படிக்க இயன்றது. அடுத்த இருவரிகள் படிக்க இயலவில்லை. ஐந்தாவது வரி மற்றும் இறுதியில் உள்ள ஒற்றை எழுத்தும் சேர்ந்து படிக்கமுடிந்தது. கல்வெட்டுப்பாடம் வருமாறு:



               ............................................

   1 கால்லு

                2 தைத்து  ( தைத்தா)

                3 ..........................................

                 4 ...........................................

  5 நீங்கு

6  ம்


         அப்பகுதியில் சந்தித்த, அகவையில் மூத்த ஒரு சிலரிடம் இக்கல் பற்றிக்கேட்கையில் சுவையான ஒரு செய்தியைச் சொன்னார்கள். முன்பு இங்கு வாழ்ந்திருந்த வேளாளர் வகுப்பைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், இப்பகுதி மக்களின் சிறு சிறு உடல் நலக்குறைகள் நீங்க மருந்து கொடுத்தும், உடல் நலத்தில் சுணக்கம் அடைந்த  குழந்தைகளுக்கு ஓதியும் ( கொங்குப்பகுதியின் நாட்டார் வழக்கில் இதை மந்திரித்தல் என்பார்கள்) மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிகிறோம். அவர், இந்தக் கல்லை நட்டுவைத்தார் என்று கூறுகிறார்கள். கால்வலி போன்ற கால் தொடர்பான துன்பங்கள் நீங்க கல்லில் ஏதோ ஒரு ஆற்றலை ஏற்றி நட்டுவைத்தார் என்றும் அவ்வாறே  இந்தக்கல்லின் மீது காலை வைத்துச் சிறிது நேரம் மனத்தில் அமைதி காத்தால் துன்பம் நீங்கும் என்னும் நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் செய்து வந்துள்ளனர் என்றும் சொன்னார்கள். பலரும் இச்செவிவழிச் செய்தியைச் சொன்னமை கல்வெட்டில் காணப்படும் சொற்றொடரோடு பொருந்திவருவதைக் காண்கிறோம். கால் கொண்டு கல்லை மிதித்தலைக் கல்வெட்டு “கால்லுதைத்து  என்றும், நோய்த்துன்பம் அகலும் என்பதைக் கல்வெட்டு  நீங்கும் என்றும் குறிப்பிடுகிறது.


         இவ்விடத்தில், விவேக சிந்தாமணி” என்னும் தமிழ் நூலில் காணப்படும் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. புலவர் ஒருவருக்குக் காலில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது. ஆனால், அதை மிகைப்படுத்தி ஊர் மருத்துவரிடம் சென்று பாம்புக்கடிக்கு மருத்துவம் நாடி வந்ததைப்போலத் தன் புலமையை நுழைத்து, முள் தைத்ததைப் பாடல்வழியே அவர் புலப்படுத்தினார்.


அப்பாடல் வருமாறு:


                                          முக்காலைக் கையில் எடுத்து

                       மூவிரண்டுக்கு ஏகையிலே

                       அக்காலை ஐந்துதலை நாகம்

                       ஆழ்ந்து கடித்தது காண்.


மருத்துவரும் மதிநுட்பம் நிறைந்தவர். புலவரின் பாணியிலேயே அவரும் ஒரு

புதிர்ப்பாடல் வழியே முள் தைத்தமைக்கு மருத்துவம் சொன்னார். மருத்துவரின் மருந்து பின் வரும் பாடலில் காண்க.

                                                               


                     



                     பத்துரதன் புத்திரனின் மித்திரனின்

                     சத்துருவின் பத்தினியின்

                     கால் வாங்கித் தேய்.


முள் தைத்ததைப் புலவர் சொன்ன பாங்கை நோக்குக. முக்கால் என்பது மூன்றாவது காலான தடி அல்லது கோல். மூவிரண்டு என்பது ஆறு. ஐந்துதலை நாகம் என்பது ஐந்து பிரிவாகப் பிரிந்த தோற்றத்தில் அமைந்துள்ள நெருஞ்சி முள். கோலை ஊன்றியவாறு ஆற்றுக்குப் போகும் வழியில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது என்பது செய்தி.


இப்போது மருத்துவரின் மருத்துவம் என்ன என்று பாருங்கள். பத்துரதன் என்பவன் பத்து ரதங்களையுடைய தசரதன். அவனுடைய புத்திரன்(மகன்) இராமன். இராமனின் மித்திரன்(நண்பன்) சுக்கிரீவன். சுக்கிரீவனின் சத்துரு(பகைவன்) வாலி. வாலியின் பத்தினி(மனைவி) தாரை என்பாள். தாரை என்பதில் காலை எடுத்துவிட்டால் தரை என்றாகிறது. எனவே, முள் தைத்த காலைத் தரையில் தேய்க்க முள் அகன்றுவிடும் என்பது இதன் பொருள். என்னே புலமை தரும் இன்பம்!





நன்றி : விவேக சிந்தாமணி”  நூலில் வரும் பாடல் குறிப்பைத் தந்து

         உதவியவர் திரு. வெ.சின்னராசு, கருவம்பாளையம், திருப்பூர்.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி: 9444939156.






--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85h_h-Oi1dYQrGxg0gqBp1-dwgAtL6TvZofGbx%3Ds90A38g%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages