இலஞ்சிக்கலி.

16 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Aug 16, 2025, 12:12:09 AM8/16/25
to மின்தமிழ்

இலஞ்சிக்கலி.

____________________________________________

சொற்கீரன்.


குரூஉத் துளி பொருது பொறிகல் திரங்க‌

குற்றாலப் பொங்கு வெள்ளருவி நுடங்க‌

பரலொடு இலையோடு பாசடை நடுங்க‌

குணில் பாய் முரசின் அன்ன ஆங்கு

சிதர்க்கல் மைக்கண் அதிர் அதிர் 

அறையும் பறையென ஆர்த்து வீழ‌

நீர்த்திரை மறைக்கும் நெடுவிழி ஓர்த்த

ஈரம் பொதி  பார்வையின் ஒருபால்

நோக்க குழையும் நோல்படுத்தாங்கு

இலஞ்சி சுனைய குண்டு நீராம்பல்

தாள் அவிழ் பெருமடம் நாணக்கவிந்து

ஒருநகை உதிர்க்கும் ஒள்வாய் இழியும்

மின்வாய் எதிர்க்கும்  நுங்கின் பிளந்த‌

நுடங்கு சொல் கொண்டு பீலிய வருடி

நெஞ்சம் கலித்த சில்பூ கிளர்ந்து

முகைவிரிக் களிப்பில் உரைத்தது என்..

(தொடரும்)

________________________________________



Reply all
Reply to author
Forward
0 new messages