ஈழத்தில் சோழர் தடயங்கள்

210 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 18, 2023, 2:41:07 AM8/18/23
to மின்தமிழ்

பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்
 -- மார்க்கண்டு தேவராஜா

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் படைகளை அனுப்பி முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த ஆட்சி கி.பி 1070 வரை நீடித்தது.

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 – கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் ‘இராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 – கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் ‘இராஜேந்திர சோழவழநாடு’ என அழைக்கப்பட்டிருக்கிறது.

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.

கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.

வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.

இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

இராசராசப் பெரும் பள்ளி

(இராசராசப் பெரும்
பள்ளி / வெல்கம் விகாரை)
(கல்வெட்டுக்கள்)
(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)
(நீர்த் தொட்டி)
(மருத்துவத் தொட்டி)
திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.

திருகோணமலையில் இந்து – பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.
‘மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.’ என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், ‘சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்’ என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.

வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் – வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்,பத்தாம் நூற்றாண்டின் இலங்கையில் சோழர் ஆட்சி தமிழ் கல்வெட்டுக்களின் ஆதாரம்.

தொகுப்பு ,மார்க்கண்டு தேவராஜா (LLB)MP.TGTE.Switzerland.



தேமொழி

unread,
Aug 18, 2023, 2:49:52 AM8/18/23
to மின்தமிழ்
நன்றி:   http://nakkeran.com/index.php/2018/05/19/raja-raja-buddhist-vihara-in-trincomalee/

இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்

பாலசுகுமார் சேனையூர்
மேனாள் முதன்மையர் கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

தமிழ் நாட்டில்  பௌத்தத்தின் தாக்கம் இருந்த காலகட்டத்தில் ஈழத்தின் வடக்கு கிழக்கு  தமிழர் வாழும்  பிரதேசங்ளில் தமிழ் பௌத்தச் செல்வாக்கு இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவை சிங்கள பௌத்த பண்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு பண்டுத் தளம். ஆனால்  இன்று அவை தமிழர் அடையாளங்கள் அல்லாமல் சிங்கள அடையாளங்களாகவே  மாற்றப்பட்டுள்ளமை  இனவாத நோக்கு நிறைந்தததே.

பரணவிதான போன்ற  தொல்பொருள் பேராசிரியர்கள் வரலாற்று திரிபு வாதத்தை மேற் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.

திருகோணமலை வரலாற்று ஆராயச்சியாளர்களின் சொர்க்கபுரி என்று சொல்லும் அளவுக்கு  கல்வெட்டுகளும் தொன்மைக்கால வாழ்வியல் ஆதாரங்களும் கலாசார சின்னங்களும்  நிறைந்த இடம். மக்கள்   மக்கள் பண்டைய காலங்களில் வாழ்ந்த   இடங்கள்  காடுகளில் மறைந்து கிடக்கின்றன. அந்தவகையில் 1929 ஆம் ஆண்டளவில் தொல் பொருளியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இடம் வெல்கம் விகாரை எனப்படும் இராஜ இராஜப் பெரும்பள்ளியாகும். பௌத்தர்கள் இதனை வில்கம் விகார என அழைத்தாலும் தமிழர்கள் இதனை நாதனார் கோயில் என அழைக்கின்றனர்.

கோயில் போன்ற அமைப்புகளும் விகாரைக்குரிய அழிபாடுகளும் திராவிடக் கட்டிடக் கலை மரபுகளையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டிடத் தொகுதி காணப்படுகிறது. அரண்மனை கோயில் விகாரை என மூன்று கட்டிடத்தொகுதியின் அடையாளங்களாக பரவிக் கிடக்கின்றன. இங்கு கிடைக்கும் தொல் பொருளியல் சான்றுகள்.

திருகோணமலை நகரத்திலிருந்து சிலகல் தொலைவில் இந்த பழைய நகரம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் பன்குளத்துக்கு முன்னதாக கன்னியாவைத் தாண்டிப் போகும்போது நாம் இராஜராஜப் பெரும்பள்ளியை அடைய முடியும்.

பிராமிக் கல் வெட்டுக்களும் தமிழ் கல்வெட்டுக்களும் இந்த இடத்தின் வரலாற்றுக் காலத்தை உறுதிப்படுத்துகின்றன.  கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிக்கப்பட்டு நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிப்பு இன்றி அழிபாடுகளைக் கண்டுள்ளமையும் அறிய முடிகிறது.

கி.பி.ஒன்பதாம் நூற்றண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தமையும் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆளுகைக்குக்  கீழ் கொண்டு வந்தமையும் தமிழர் பகுதி எங்கும் அவர்கள் ஆட்சிக்கு சான்றாக கல்வெட்டுக்களும் கட்டிட எச்சங்களுமாக உள்ள இடங்களில் இராஜராஜப் பெரும்பள்ளி எனும் நாதன் கோயில் முக்கியம் பெறுகிறது.

இங்கு உள்ளது போலவே சேற்றுவில்(சேருவாவில ) விகாரையில் உள்ள தமிழ்க் கல்வெட்டு இராஜ இராஜ சோழன் அதனை புனரமைத்த கதையைக் கூறுகிறது.

இந்த இடத்துக்கு வந்த சோழர்கள் இதனைப் புனரமைத்து இராஜ இராஜப் பெரும் பள்ளி எனவும் பெயரிட்டு பலவகையான கொடையும் அளித்ததாக பேராசிரியர் பத்மநாதன் தன்னுடைய இலங்கை தமிழ் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இராஜ ராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களும் சோழப் பிரதானிகளின் கல்வெட்டுக்களும் இதில் அடங்கும். இங்கு பதினாறு கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தை மேலும் ஆய்வு செய்கிற போது இன்னும் பல கல்வெட்டுக்கள் வெளியே வரலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல
தானம் வழங்கப்பட்டதையும் கொடை அளித்தமைப் பற்றியுமே பேசுகின்றன.

கட்டிட இடிபாடுகள் ஈழத்தில் வேறு இடங்களில் கிடைக்காத பல பாவனைப் பொருட்கள் கல்லில் செய்யப்பட்டதாக அடையாளம் காணப்படுகின்றன. இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அரண்மனைத் தொகுதியை அண்மித்ததாகவும் ஒரு வணிக மையத்தை கொண்டதாகவும் இருந்திருக்க கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் கல்பெட்டகம் குளிக்கப் பயன்படுத்தப்படும் கற்தொட்டி, சித்திர வடிவக் கற்களும் குண்டான் வடிவிலான குடைந்து தோண்டி எடுத்த தனியான கல் குண்டானும் இங்குள்ள சிறப்பம்சங்களாகும். பிரதானமான கட்டிடத் தொகுதி கோயில் போன்ற அமைப்பையே சுட்டி நிற்கிறது அதற்கடுத்ததாக இருக்கும்பகுதியே விகாரையின் அமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலாதாக்கம் இருந்த காலகட்டத்தில் இப்பிரதேசங்ளில் தமிழ் பௌத்த இன்று அவை தமிழர் அடையாளஙகளாக செல்வாக்கு இருந்ததற்கான  ஆதாரங்கள் காணப் படுகின்றன. அவை சிங்கள பௌத்த  பண்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு பண்பாட்டுத் தளம்.

தொல் பொருளியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இடம் வெல்கம் விகாரை எனப்படும் இராஜ இராஜப் பெரும் பள்ளியாகும். பௌத்தர்கள் இதனை வில்கம் விகார என அழைத்தாலும் தமிழர்கள் இதனை நாதனார் கோயில் என அழைக்கின்றனர். கோயில் போன்ற அமைப்புகளும் விகாரைக்குரிய அழிபாடுகளும் திரவிடக் கட்டிடக் கலை மரபுகளையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டிடத் தொகுதி காணப்படுகிறது. அரண்மனை கோயில் விகாரை என மூன்று கட்டிடத் தொகுதியின் அடையாளங்களாக பரவிக் கிடக்கின்றன.  இங்கு கிடைக்கும் தொல்பொருளியல் சான்றுகள்.

திருகோணமலை நகரத்திலிருந்து சில கல் தொலைவில் இந்த பழைய நகரம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் பன்குளத்துக்கு முன்னதாக கன்னியாவைத் தாண்டிப் போகும்போது நாம் இராஜ இராஜப் பெரும் பள்ளியை அடைய முடியும்.

பிராமிக் கல் வெட்டுக்களும் தமிழ் கல்வெட்டுக்களும் இந்த இடத்தின் வரலாற்றுக் காலத்தை உறுதிப்படுத்துகின்றன கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கி.பி இரண்டாம் நூற்றண்டு காலகட்டங்களில் பராமரிக்கப்பட்டு நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிப்பு இன்றி அழிபாடுகளைக் கண்டுள்ளமையும் அறிய முடிகிறது.

கி.பி.ஒன்பதாம் நூற்றண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தமையும் தமிழர் பகுதி எங்கும் அவர்கள் ஆட்சிக்கு சான்றாக கல்வெட்டுக்களும் கட்டிட எச்சங்களுமாக உள்ள இடங்களில் இராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் நாதன் கோயில் முக்கியம் பெறுகிறது.

இங்கு உள்ளது போலவே சேற்று வில்(சேருவாவில) விகாரையில் உள்ள தமிழ் கல்வெட்டு இராஜ இராஜ சோழன் அதனை புனரமைத்த கதையைக்
கூறுகிறது.

இந்த இடத்துக்கு வந்த சோழர்கள் இதனை புனரமைத்து  இராஜ இராஜப் பெரும் பள்ளி எனவும் பெயரிட்டு பலவகையான கொடையும் அளித்ததாக பேராசிரியர் பத்மநாதன் தன்னுடைய இலங்கை தமிழ் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களும் சோழப் பிரதானிகளின் கல் வெட்டுக்களும் இதில் அடங்கும். இங்கு பதினாறு கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தை மேலும் ஆய்வு செய்கிற போது இன்னும் பல கல்வெட்டுக்கள் வெளியே வரலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல தானம் வழங்கப்பட்டதையும் கொடை அளித்தமைப் பற்றியுமே பேசுகின்றன.

கட்டிட இடிபாடுகள் ஈழத்தில் வேறு இடங்களில் கிடைக்காத பல பாவனைப் பொருட்கள் கல்லில் செய்யப்பட்டதாக அடையாளம் ணப்படுகின்றன. இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அரன்மனைத் தொகுதியை அண்மித்ததாகவும் ஒரு வணிகமையத்தை கொண்டதாகவும் இருந்திருக்க கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் கல் பெட்டகம் குளிக்கப் பயன்படுத்தப்படும் கற்தொட்டி, சித்திர வடிவக் கற்களும் குண்டான் வடிவிலான குடைந்து தோண்டி எடுத்த தனியான கல் குண்டானும் இங்குள்ள சிறப்பம்சங்களாகும்.

பிரதானமான கட்டிடத் தொகுதி கோயில் போன்ற அமைப்பையே சுட்டி நிற்கிறது அதற்கடுத்ததாக இருக்கும்பகுதியே விகாரையின் அமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான கட்டிட இடிபாடுகள் சோழர் காலக் கட்டிடப் பாணியயையே பின்பற்றியுள்ளமை தமிழர் கலாசார அடையாளங்களின் நீட்சியை சொல்லி நிற்கிறது.

“வெல்காமமே” பின்னர் “வெல்கம்” என மாறியதாக சிலரின் கருத்துக்களும் கவனத்துக்கு உரியதே.

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் இராஜ இராஜப் பெரும் பள்ளி தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

Arangam News E-paper 18-May-2018.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages