சிந்தனை செய் மனமே
__________________________________________
சிந்தனை செய் மனமே
என்ற அருமையான பாட்டு.
இனிமைக்கு குறைச்சலே இல்லை.
ஆனால் அது
எதை சிந்திக்கச்சொல்கிறது?
பிறந்து பிறந்து நையாதே.
கந்தனைப்பற்றிக்கொள் என்கிறது.
கடலில் மூழ்குபவனுக்கு ஒரு துரும்பு போல்
என்கிறது.
மேலும் "மனிதப்பிறவியே வேண்டாம் என
வெறுப்பு கொள்"என்கிறது.
இது என்ன சிந்தனை?
கடவுள் சிந்தனைக்குள் மூழ்கிவிடு என்கிறது.
கடவுள் என்றால் என்ன?
என்று சிந்திக்கத்தொடங்கு என்றா சொல்கிறது?
இல்லை.
உன் அறிவுப்பாதை இங்கே முற்றுப்பெற வேண்டும்.
கடவுள் என்ற முட்டுச்சந்து தான்
உன் சொர்க்கம் என்று
மாய வலைகளை பின்னுகிறது.
மனிதன் என்று பிறப்பதே
தொடர்ந்து தொடர்ந்து
"அறிவு" எனும் உயரத்தையும்
மற்றும் ஆழ அகலங்களையும்
அகழ்ந்து செல் என்ற குறிப்பு மட்டுமே
அதில் இருக்கிறது.
உன் துன்பங்களுக்கு எல்லாம்
இந்த மனித பிறப்பு என்று
உன்னை திசை திருப்புவது மூலம்
உன்னை நீயே அழித்துக்கொண்டு விடு என்று
உன்னை இந்த பிரபஞ்சத்திலிருந்து
எங்கோ தள்ளி வைக்க முனைகிறது.
இது "கடவுள் மறுப்பு" எனும் சிகரத்தை
நீ அடைந்து விடக்கூடாது
என்று ஒரு நோக்கத்தை உன்னில்
விதைக்கிறது.
உண்மையில் கடவுள் மறுப்பு என்பது என்ன?
று
"கடவுளை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொள்"
கடவுளை உன்னுள் விதைத்துக்கொள்.
எதையும் ஏன் எப்படி என்று அறி என்பதன்
மொழிபெயர்ப்பே "கடவுள் மறுப்பு".
இது ஒரு எதிர்நீச்சல்.
அறிவின் வளர்ச்சிக்கு இதுவே ஒரு பயிற்சி.
இது தான் வள்ளுவன் சொன்ன
கேடில் விழுச்செல்வம் என்பது.
"அறியாமையில் விழு" என்னும்
மூளித்தனமான சிந்தனை அல்ல அது.
மனிதன் ஒரு கற்பனையான உறக்கத்தில்
ஆழ்ந்து
சிந்திக்க மறுத்து அல்லது மரத்துப்போவதே
"சொர்க்கம்" அல்லது கைலாசம் வைகுண்டம்
போன்ற சொற்போதைகள்.
இதை விதைத்தது யார்?
நிச்சயம் கடவுள் இல்லை.
கடவுள் என்றால் அறியாமையை கடந்து
உள் செல்வது
என்பதை மறுப்பதே
மறுமை அல்லது சொர்க்கம் என்பது.
இப்போது வேறு மாதிரியாய் சிந்தனை செய்.
கடவுள் என்ற சொல்
ஒரு "அறிவியில் சொல்லான " குவாண்டம்
என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் குவாண்டம் பற்றிய கோட்பாடு
இன்று உரு மாறி கரு மாறி
"செயற்கை மூளை" எனும் ஒரு
புதிய அறிவு வடிவத்துக்கு தாவி விட்டது.
இப்படி "கடவுளுக்கு"
உடை மாற்றி உடை மாற்றியோ
அல்லது உடை உரித்து உடை உரித்து
அதன் உள் அணுக்கருவை
துருவுவதே தான் "கடவுள் மறுப்பு"
என்றும் ஒரு சிந்தனை உயர்ந்து ஓங்கி
நிற்கிறதல்லவா?
இப்படி மேல் கிளைக்குப்போன போது
வேண்டாம் மனிதப்பிறவி
என்று கீழ்க்கிளையை வெட்டச்சொல்வது தானே
இந்த பக்தி மார்க்கமும் சொர்க்கக்கூப்பாடுகளும்.
கோடி கோடி மக்கள்
இப்படிப் புழுக்களாய் நெளியவேண்டும்
என்பது ஒரு சமுதாய சூழ்ச்சிதானே.
ஒரு கொடுமையான ஆதிக்கத்து
நச்சு விதை தானே.
அரசன் மக்களை அடிமைப்படுத்திக்கொள்ள
இப்படி தர்மமாக்கினான்.
சட்டமாக்கினான்.
இதன் உள் மூளையாய் இருந்த
சூழ்ச்சிகளுக்கு தான்
"மந்திராலோசனை" என்று பெயர்.
இது ஏற்படுத்திய நச்சு ஏற்பாடு தான்
வர்ண சாஸ்திரமும் சனாதனமும்.
இப்போது தெரிகிறதா?
"கடவுள்"என்ற கருத்தின் "புதைகுழிச்சுழல்"
என்ன என்பது!
சிந்தனை செய் மனமே...
ஆம் சிந்தனை செய்யுங்கள்.
மாற்றி யோசியுங்கள் என்பதே
அந்த சிந்தனை.
______________________________________________
சொற்கீரன்