கணிதம் ஒரு நுண்ணிய குகையில் குடி கொண்டிருக்கிறது. அது ஒரு புழுக்கூட்டு வழி என்று புதிர் மொழி காட்டிவிட்டு சென்றார் ஐன்ஸ்டீன். பெருக்கலும் பெருக்கலின் பெருக்கலும் மற்றும் எக்ஸ்பொனென்ஷியல் எனும் வானமே பொத்துக்கொண்டு போகும் சங்கிலிப்பெருக்கலும் கணிதத்தை நம் மண்டை உடையச் செய்து விட்ட பிறகு "ஹில்பர்ட்ஸ் நுண் வெளி" எல்லையின்மையை ஒரு இல்லை இன்மையாய் நம் கையில் உருட்டித்தந்து பந்து விளையாடச்சொல்லி விட்டது. கடவுள்களும் பில்லியன் பில்லியன் தலைகள் முளைத்த பூச்சிகளாய் மினுக்கி இருட்டி பிதுக்கும் கண்களின் ஃபோட்டான்களில் குவாண்ட அண்டங்களின் சமன்பாடுகள் புரியாமல் தவித்துக்கிடக்கின்றன. அந்த ஹில்பர்ட் ஸ்பேஸ் கெர்னல்களின் சோழிக்குலுக்கல் ஒலிகள் நம் நிகழ்தகவு இருத்தலியங்களை பூச்செண்டுகள் ஆக்கி புல்லரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. ____________________________________________ சொற்கீரன்.