அறிவியல் அறிஞர்களே!
MAY FLOWER என்றழைக்கப்படும் தீப்பிழம்பு போன்ற மலர் மரத்திற்கும்
மகிழ்ச்சியைக் கிளம்பி விடக்கூடியது.
உத்திரத்திற்கு உதவாதவை என்று (சில மனிதர்களைப் போன்று) ஒதுக்கப்படும்
ஒதிய மரமும் கூந்தலைப் படர விட்டு பச்சை மலர்களை அவிழ்த்துவிட்டு
இலைகளில்லாமல் அழகுடன் காட்சி தருகிறது.
ஆனால், கொன்றை என்றழைக்கப்படும் ---மஞ்சள் பூக்களைக் கோடையில் அள்ளித்
தரும் --- அதை ஆங்கிலத்தில் GOLDEN SHOWER,INDIAN LABURNUM என்ற
பெயர்களால் அழைப்பார்கள். தாவரவியலார் CASSIA FISTULA என்று
குறிப்பிடுவார்கள்.
தேவாரப் பாடலில் சிவன் அணிந்ததாகக் கூறப்படும் இந்தக் கொன்றை மலர் சங்க
காலப் புலவர்களால் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.
குறுந்தொகையில் (21ஆது) ஒதலாந்தையார் எழுதிய அழகுணர்வு நிறைந்த
இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
பாடல்:
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூக் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
-ஒதலாந்தையார்
பொருள்:
அப்படிப்பட்ட கொன்றை பூத்து இது கார் காலம் (மழைக்காலம்) வந்தது என்று
அறிவித்தாலும் நான் அதை நம்ப மாட்டேன்.
ஏனென்றால் கார் காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற என் கொழுநர்
இன்னும் வீடு திரும்பவில்லை; அவர் பொய் சொல்ல மாட்டார். இந்த மரங்கள்தான்
கார் வரும் முன்பே பூத்து விட்டன என்பதாகும்.
இந்த நூலை ஏட்டுச் சுவடிகளிலிருந்து சேகரித்த உ.வே.சாமிநாதையர் அவர்கள்
மேலும் பல சங்க நூல்களில் இவ்வாறு கொன்றை மரம் கார் காலத்தில் பூக்கும்
என்றும், கார் காலமாவது ஆவணி, புரட்டாசி மாதங்களாகும் (ஆகஸ்ட்,
செப்டம்பர்) என்றும் கூறுகிறார்.
இப்போதோ கொன்றை மரம் ஏப்ரல், மே மாதங்களில்தான் பூக்கிறது.
தமிழ் நாட்டில் இம்மாதங்களில் எந்த இடத்திலும் மழைப் பருவமில்லை.
அக்டோபர், நவம்பருக்கு ஆறு மாதம் முன்பே கொன்றை பூப்பதால் இதை அறிவியல்
ஞானிகள்தான் ஆராய்ந்து கூற வேண்டும்.
பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
வேண்டும்.
மேலும் இதைப் பற்றிக் கூற புலவனுக்கும் முனைவனுக்கும் அறிவு ஏது?
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
"கலிகாலம்"
பருவம் மாறிப் போச்சு மச்சான்,
பருவம் மாறிப் போச்சு!
பட்டணத்துக் கோழி, பகலில் கூவுது........
எட்டடுடுக்கு மாடியா, ஏரி குளமெல்லாம் ,
உருவம் மாறிப்போச்சு ,....
_ பருவம்
பத்து வயசுப் பொண்ணு, கள்ளப் பார்வையா ,
எட்டி எட்டி பாக்குது, - எதிர் வீட்டுக் காளைய
எட்டி எட்டி பாக்குது,.......
படிக்கிற வயசுலெ , காதல் காதல்னு-
புத்தி கெட்டு போயி அலையுது
_ பருவம்
படிக்கிற படிப்ப , கூவி விக்கிறான்...
குடிக்கிற தண்ணீயை, காசுக்கு விக்கிறான்....
அடிக்கு மட்டும்தான், மனுஷன் பதுங்குறான்,
ஆம்பளை யெல்லாம், வீரம் தொலைச்சாச்சு...
பொம்பளை யெல்லாம், மானம் தொலைச்சாச்சு....
மனுஷத்தன்மையே , மறைஞ்சு போச்சுது,
மிருக வெறி தான் அதிகமாச்சுது.... _ பருவம்
அப்பனும் பிள்ளையும், அதுக்கு அலையுறான்,
தப்பா வந்து பொறந்து தொலைச்சுட்டான்,
உப்பக் கூட, இப்போ கவரில் விக்கிறான்,
தப்ப மட்டும்தான், பணம் பண்ணுறான்... _ பருவம்
சாதி ஜனங்க, ஓட்டு போடுது-கவர்மென்ட்டு
புள்ளி வைக்குது , -மையிலெ
புள்ளி வைக்குது,.....-
ஆதி மூலமும், வேடிக்கை பாக்குது,
அதுவும் கூடதான், லஞ்சம் கேட்குது..... _ பருவம்
பனிக் காலத்திலெ , காத்தடிக்குது.....
வரண்ட காத்தடிக்குது...
மழை காலத்துலெ . பூமி காயுது-.
தண்ணயிலாமெ பூமி காயுது..... _ பருவம்
பசுமாடல்லாம் , போஸ்டர் தின்னுது..-
பசும்பாலைக்கூட, இப்பொ- மிஷினு கறக்குது,
வேலிகளெல்லாம் பயிர மேயுது,
ஆப்த நண்பனும் அடுத்துக் கெடுக்குறான்
ப்ராப்தம் இதுதான்னு கதைய அளக்குறான்
பரிகாரம் செய்யவே நம்மைத் தூண்டுறான்
பணம் பண்ணவே வழியத் தேடுறான் - பருவம்
பருவம் மாறவேணும் மச்சான் பருவம் மாறவேணும்
நல்ல பருவத்திலெயே மழையும் பெய்யவேணும்
பச்சை வயலும் விளையவேணும்
பஞ்சம் தீர வேணும் பசுமைப் புரட்ச்சி
மலரவேணும்
பட்டிக்காட்டுக் கோழிகூட கருக்கலில் கூவோணும்
வேலியே பயிர மேய்ஞ்சுட்டு போற
வக்கரிப்பும் தீரவேணும்
அதுக்கு மனசுலெ ஈவு இரக்கம் வேணும்
நியாயம் தர்மம் வேணும்,
நாடு நிச்சயம் நல்லா வளரும்
பழைபடி இப்போ சந்தோஷம் மலரும்
பட்டிக்காட்டுக் கோழியும் கருக்கலில் கூவும் -
பருவம் மாறிப்போகும் மச்சான் பருவம் மாறிப்போகும்
மனிதமும்,உலகமும் காப்போம்
பத்து வயசுப் பொண்ணு, கள்ளப் பார்வையா ,
எட்டி எட்டி பாக்குது, - எதிர் வீட்டுக் காளைய
எட்டி எட்டி பாக்குது,.......
படிக்கிற வயசுலெ , காதல் காதல்னு-
"கலிகாலம்"
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
இதைப் பற்றி வெற்றுப் போலிகளுக்கு ஏன் கவலை? உண்மையான புலவர்களும், முனைவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
--
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நீங்கள் ரொம்ப இளையவர் என்று
தெரிகிறது. முனைவர் இரவா
பழகுவதற்கு மிகவும் இனியவர். நம் குழுமத்தின் மூத்த உருப்பினர். நாம்
எல்லோரும் நட்புடன் உறவாட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்தை, கருத்தால்
எதிர்த்துப் பழகுவோம். எல்லோருள்ளும் குடிகொண்டிருக்கும் இறைமையை நாம்
மதிக்க வேண்டும். ப்ளீஸ்...
கண்ணன்
2008/7/15 Srivatsan R <vaid...@gmail.com>:
> (அய் மச்சி! கொஞ்சமாவது மூளை இருக்கும்னு பாத்தா சுத்த
> பைத்தியக்காரத்தனமா இருக்குது இவுரு எழுதறது.)
அறிவுரையாக அன்று. அன்புரையாகக் கொள்ளுங்கள் ஸ்ரீவத்ஸன். எதற்கும் பதிலுக்கு பதில் உரைப்பது என்பது நியாயத்திற்கு ஒத்துவரும். ஆனால் பலசமயம் நயத்திற்கு ஒத்துவருவதில்லை. உங்களுடைய கோபத்தில், ஆவேசத்தில், அல்லது உங்களுடைய மொழியில் சொன்னால் plain and naive replyயில் தவறு என்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் ஏதோ ஒன்று அதில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். அதற்கு வருவதற்கு முன் ஒருசில தெளிவுகளைப் பேசிவிட்டு வருவோம்.முதலில் இதைப் போன்ற வாக்குவாதங்களுக்கு ஜாதி என்பது ஒரு அடிப்படையாக அமைக்கப் படுகிறது. ஒருவேளை ஜாதி என்ற பிரச்சனை இல்லாது இருந்திருந்தால் அப்பொழுது மதம், இனம், குடி என்று ஏதாவது ஒரு விஷயத்தைப் பிரச்சனையாக்கி பேத உணர்ச்சிகளையும், வெறுப்புக் கலாச்சாரத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இது இப்படித்தான் இருக்க வேண்டுமா? என்றால் ஆக்கபூர்வமான, எதிர்காலக் கனவுகளோடு கூடிய கருத்தூக்கங்கள் இல்லாத தலைமுறைகளில் வெறுப்புதான் வெற்றிடத்தை நிரப்புவதாய் வாய்க்கிறது. மனிதனும் மற்ற உணர்ச்சிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட வெறுப்புக்குத் தீனி போடத்தான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறான். இந்த வெறுப்பைக் கடைந்து வெப்பக் கங்குகளை கிளப்ப 'நாம்' 'மற்றவர்கள்' என்ற இரண்டுதான் மத்துகளாய் இருந்து கடைகின்றன. இந்த 'நாம்' 'மற்றவர்கள்' என்ற பிளவுப் பசிக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வடிவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதைச் செய்பவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் ஆக்கபூர்வமான உத்வேகம், படைப்பூக்கம் மிக்க மன எழுச்சி ஏதும் அற்றவர்கள் இவர்கள்தான் இருப்பார்கள்.இந்த வெட்டியான சமுதாய அணுகுமுறைச் சுழல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்கள்தான் மின்தமிழில் உள்ள அனைவருமே. யாரோ முடுக்கி விட்டதற்கு வாயோசை எழுப்பும் சடப் பொறிகளாய் ஆகக் கூடாது என்ற அக்கறை திரு கண்ணன், திரு கண்ணன் நடராசன், திரு தமிழ்த்தேனி, திரு திவாகர், திரு வேந்தன் அரசு முதலிய அனைத்து நண்பர்களுக்கும் உண்டு. அதனால்தான் ஜாதிப் பிரச்சனையை எடுத்து என்றோ புரோகிதர்களின் ஆதிக்கம் என்பதைப் பற்றிப் பேச்சு வரும்பொழுது திரு கண்ணனோ, திரு தமிழ்த்தேனியோ அந்தப் பிரச்சனையைப் பார்க்கத் தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் கூறுவது, ஏன் மின்தமிழ் நண்பர்கள் மிகப்பலர் கருதுவது - 'இனிவரும் உலகிற்கு இளைய தலைமுறையை நடத்திச் செல்ல, இன்றைய உலகின் எதிர்ப்பே இல்லாமல் கொழிக்கும் தீமைகளை விவாதம் செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு என்றோ இருந்த, மீண்டும் மீண்டும் 1500 ஆண்டுகளாக பல பெரியோர்களாலும், சமுதாய சீர்திருத்த வாதிகளாலும் பேசி, சாடி, கண்டிக்கப்பட்டு வரலாற்றின் தகவல் மட்டுமேயாய் மாறிக்கொண்டிருக்கும் ஒன்றை வேறு விஷயமே இல்லாததுபோல் வளர்த்துக் கொண்டிருப்பது அருவருக்கத் தகுந்தது' என்பது.இன்றைய இளைய தலைமுறைகளை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனை நிச்சயமாக ஜாதி இல்லை. அதை இளைய தலைமுறை உணர்ந்தாலும், அதை வைத்துக் கொண்டே பெரும் செல்வாக்கும், செல்வமும் ஈட்டிவிட்ட முதிய தலைமுறைகள் பழகிப் போன வாய்ப்பாட்டை விட்டு விலக விரும்புவதில்லை. உதாரணத்திற்கு மதநம்பிக்கை என்ற பெயரால் மனித குலத்திற்கே பெருத்த நாசத்தைச் செய்யத்தயங்காத தீமையைப் பற்றிப் பேசலாம். ஆனால் முதிய தலைமுறை பேசாது. காரணம் பேசினால் தொல்லை. எந்த செல்வாக்கும், லாபமும் இல்லை. நமக்கேன் வம்பு? பழைய வியாபாரமே ஓடுகிற வரை ஓடட்டுமே. பதில் விளைவு எதுவும் இல்லை. மக்களும் அறிவைப் பயன் படுத்துவதே இல்லை. எனவே வியாபாரத்திற்கு தங்குதடையே இல்லை.ஆனால் இன்றைய இளைய தலைமுறைகள் எதிர்நோக்கும் பிரச்சனை ஊழல், திறமையின்மை, உழைப்புக்கு ஏற்ற மதிப்பில்லாத கொடுமை, கல்வி என்பதே அறிவுக்குச் சம்பந்தமில்லாத வியாபாரம் ஆகிவிட்ட வேதனை, பழமையின் உயர்ந்த அம்சங்களோடு முற்றிலும் தொடர்பு துண்டிக்கப் பட்டமை, அதற்குக் காரணமாய் அமைந்த வெறுப்புப் பட்டறைகள் முதலியவையே. இதில் பழமையின், மரபு என்ற பெருங்கொடை, பலவடிவம் கொண்ட வெறுப்புப் பிரசாரங்களால் இன்றைய தலைமுறைகளுக்கும், இனிவரும் தலைமுறைகளுக்கும் தவிர்க்கப் படுதல் கூடாது என்ற அக்கறையின் காரணமாகத்தான் திரு கண்ணன் போன்றவர்கள் மின்தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளை போன்றவற்றை உண்டாக்கியதும், பல சொல்லடிகள் பட்டாலும் விடாது இயங்கிக் கொண்டிருப்பதும். இந்தத் தெளிவுகள் எல்லாம் நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். மேலும் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பைஎங்களை விட நீங்களே மிகச் சரியாக உணர்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.எனவேதான் ஆக்க பூர்வமான ஊக்கங்களையும், பேச்சுகளையுமே உங்கள் ஈடுபாடாய்க் கொள்ளுங்கள். உங்களுக்கு வழிகாட்டவேண்டிய தலைமுறைகள் வழிதவறிப்போன தலைமுறைகளாய் ஆகிவிட்டனஎன்று கருதினாலும் உங்களுடைய வாழ்வையும் வாக்கையும் எதிர்ப்புகளாலேயே நிரப்பிக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் உங்களை எதிரியங்க வைத்தே குறுகிய அடைப்புக்குள் சுற்றிவருபவராய் ஆக்கும் தன்மை இந்த வெறுப்புச் சூழ்நிலைகளுக்கு உண்டு.மேலும் ஒரு விஷயம். நாம் ஏற்கனவே பலர் இந்த மின்தமிழில் நினைவுறுத்திக் கொண்டு வந்ததன் படியே இந்த மின்தமிழ், அடிப்படையில், மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள், தொழில் நுட்ப வாய்ப்புகள், மரபுச் செல்வங்களைப் பற்றிய அறிமுகங்கள், விளக்கங்கள், மரபின் வழிவழிப் பேறுகளை அணுக வேண்டிய மனோபாவங்களின் செம்மையும் தெளிவும் --- இத்தகைய அம்சங்களைக் கருத்தாடல்களில் முக்கியப் படுத்துவதுதான் ஒருவர் விவாதத்தில் அடையும் வெற்றி. இந்த அடிப்படையில் உங்கள் செயல்பாடுகள் ஆக்கமிக அமையட்டும். என்ன மிகவும் போரடித்து விட்டேனோ?
2008/7/15 Narayanan Kannan <nka...@gmail.com>:
ஸ்ரீவத்சன்:
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நீங்கள் ரொம்ப இளையவர் என்று
தெரிகிறது. முனைவர் இரவா
பழகுவதற்கு மிகவும் இனியவர். நம் குழுமத்தின் மூத்த உருப்பினர். நாம்
எல்லோரும் நட்புடன் உறவாட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்தை, கருத்தால்
எதிர்த்துப் பழகுவோம். எல்லோருள்ளும் குடிகொண்டிருக்கும் இறைமையை நாம்
மதிக்க வேண்டும். ப்ளீஸ்...
கண்ணன்
வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் நாள் முதல் 15 நாள் வரை நாகர், குமரி பகுதிகளில் உள்ள மூலிகைத் தாவரங்களை ஆய்வு செய்யவும் படம் எடுக்கவும் செல்கிறேன்.5 ஆம் தேதி அன்று மாலை நாகர்கோயிலில் குமரி மாவட்ட மருத்துவர் பெருங்குழுவில் பேருரை நிகழ்த்துகிறேன்.
vAzhthukkaL.
I'm writing this from Incheon Airport, hence in English.
All the best for your tour! Try to meet Mr.Kumaran in a college close
to Nagarkoil. He showed me several palm leaf MS during my field trip.
Kannan
--
"Be the change you wish to see in the world." -Gandhi
Kannan
இப்படிச் சொன்னால் எப்படி?
விபரங்கள் முகவரி, அலை எண் எதையாவது வேண்டாமா?
பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
வேண்டும்.
உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை இருக்கும்.
.....
எல்லாவித தாவரங்களுக்கும் இனப்பெயர் அறியமுடியுமா என்று தெரியவில்லை.
முயற்சி செய்வோம். கிடைக்கலாம்.
2008/7/17, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
Kaempferia galanga L. (Zingiberaceae)
Vernacular Name: San: Chandramulika, sugandhavacha; Eng: East Indies galingale; Bin:
Chandramula; Beng: Chandumula; Tel: Kachoram; Tam: Kacholam, kacholakilangu; Kan:
Kachchura; Mal: Katjulam, kacholam.
Description: Perennial herbaceous plant, Rhizome includes little ovate tubers. Leaves: 2-3
with broad blade, spreading flat on the ground, appearing annually in rainy season, hairy
beneath, Flowers white tinged with violet, sessile, arising from the axil.
கள்வடிந்திடும் காரிருளில்
உள்ளிருப்பது என்னவென்று
சொல்வகுப்பவர் யாருமென்று
சொல்லுசொல்லடி ஞானப்பெண்ணே!
2008/7/17, Kannan Natarajan <thar...@gmail.com>:
--~--~---------~--~----~------------~-------~--~----~
2008/7/17, srirangammohanarangan v <ranga...@gmail.com>:
கண்ணன்
On 7/16/08, இரவா <vasude...@gmail.com> wrote:
இரவா! திட்டமிடாமல் செயல்படுதல் என்பதும் தமிழர்தம் குறை.
திரு.குமரன் தந்த
விசிடிங் கார்டு வீட்டில் இருக்கிறது.