சொற்கீரன் கவிதைகள்

16 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Apr 3, 2026, 12:47:19 AM (yesterday) Apr 3
to மின்தமிழ்

சொற்கீரன் கவிதைகள்

----------------------------------------------03.04.26



அமெரிக்கா இஸ்ரேல் ...

ஈரான் ....

அந்த ஏவுகணைகள் எல்லாம் 

பசித்தீயுடன் 

எங்கள் அடுப்புகளில்.

______________________________________1


சிவலிங்கங்களை

அங்கே கொண்டு போங்கள்.

மறைக்காதீர்கள்!

சம்போ மகாதேவ 

சிலிண்டர்களே 

நமோ நமக!

________________________________________2



மைக்குகள் முன்

வாயசைப்பவர்களுக்கு

குரல் கொடுப்பவர்களே!

இந்தக்காலத்து 

கணிப்பொறிகளுக்கு 

அந்தக்காலத்தில் 

சொல்வோம்

பாழுங்கிணறுகள் என்று.

உங்கள் குரல்களை 

அந்த கிளிக்குகளில் 

போட்டு விடுங்கள்.

செல்லரித்த அந்த உண்டியல் 

உங்களால் 

எப்போதாவது 

உடைக்கப்படும்போது 

பார்த்துக்கொள்ளலாம்.

________________________________________3

Reply all
Reply to author
Forward
0 new messages