"சங்கசெம்மல்" விருது பெறுகிறார் பேராசிரியர் பாண்டியராஜா

252 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 16, 2024, 8:37:32 PM1/16/24
to மின்தமிழ்

dr pandiyaraja.jpeg

"சங்க செம்மல்"  விருது பெறுகிறார் பேராசிரியர் பாண்டியராஜா

தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். சங்கத்தமிழ் செய்யுட்களுக்குத் தொடரடைவுகளையும் அருஞ்சொற் களஞ்சியத்தையும் எளிய முறையில் சங்கத் தமிழை விளக்கும் கட்டுரைகளையும் எழுதி சங்கத் தமிழ் செய்யுட்களைப் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஆய்வாளர்களுக்கும் உதவும் வகையில் வழங்கியிருக்கும் பேராசிரியர் ப பாண்டியராஜா அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்.

ஒரு கணிதத் துறைப் பேராசிரியராக, பின்னர் கணினித் துறை இயக்குநராக, பின்னர் கல்லூரி துணைமுதல்வராக என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றியவர் இவர். ஆனால் தமிழின் மேல் கொண்ட ஆழமான ஈர்ப்பால்  சங்கத் தமிழை எளிய முறையில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என செயல்படத் தொடங்கினார்.
 
பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கின்ற சங்கத்தமிழ் தொடரடைவுகளும் அருஞ்சொற்கள் களஞ்சியம் வலைப் பக்கங்களும் முறையாகப்  பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஒரு சிறப்பு வலைப்பக்கத்தை உருவாக்கி அதன் வழி பேராசிரியர் பாண்டியராஜா அவர்களது அனைத்து ஆக்கங்களையும் சேகரித்து வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம்.
dr pandiyaraja 2.jpg
"சங்கம்பீடியா" என அழைக்கப்படும் இந்த வலைப்பக்கம் திறப்பு விழா வருகின்ற 22 ஜனவரி 2024 ஆம் தேதி அன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக நூல் திறனாய்வு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த வலைப்பக்கத்தைத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
 
அவரோடு மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர்களுள் ஒருவரான டாக்டர் சண்முகம் இஆப, திரு ஆர் பாலகிருஷ்ணன் இஆப(ஓய்வு), முனைவர் அருள் நடராஜன் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு "சங்கசெம்மல்" என்ற விருதினை வழங்க உள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.

அனைவரும் இந்தத் தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். தமிழ்ச் சான்றோரை வாழ்த்தும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் நேரில் வந்து கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.
அன்புடன்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
dr pandiyaraja 2.jpeg
______________________________________________________

Books ppt.jpg
------------------------------------------------------------------------------------------------------------------------------

Jean-Luc Chevillard

unread,
Jan 17, 2024, 3:24:22 AM1/17/24
to mint...@googlegroups.com
பேராசிரியர் பாண்டியராஜாவுக்குப் பாராட்டுக்கள்

-- ழான் (Jean-Luc)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a681edc6-d0e1-4f7c-91df-6b45a5bec930n%40googlegroups.com.


Mohanarangan V Srirangam

unread,
Jan 17, 2024, 5:24:08 AM1/17/24
to mint...@googlegroups.com
விருது பெறும் பேராசிரியருக்கு வாழ்த்துகள் 🙏

***

தேமொழி

unread,
Jan 17, 2024, 5:59:25 AM1/17/24
to மின்தமிழ்
ref : https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0mgjh8PXevM685EZLJLBnvUzy2LjLoHBh28h5KbVLuxQZi1HY8e86B9wbLNgynks7l


சங்கத்தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு.
நாள்/தேதி: திங்கட்கிழமை, 22.1.2024
நேரம்: மாலை 4:30
இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம்,
புத்தகத் திறனாய்வு அரங்கம்
****
1. சங்கம்பீடியா வலைப்பக்கம் வெளியிடு
2. 3 சங்கத் தமிழன் நூல்கள் வெளியீடு
- பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் 1
- பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் 2
-நக்கீரர் நடைப்பயணம்
3. பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்கு சங்கச்செம்மல் விருது வழங்குதல்.
****
தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மாணவர்கள் ஆய்வுத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் கலந்து கொள்ள வாருங்கள்.
இந்த அறிவிப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

dr padiyaraja award event.jpeg
dr padiyaraja award event2.jpeg
-------------------------------------------------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Jan 17, 2024, 9:52:19 AM1/17/24
to mint...@googlegroups.com
ஐயா பாண்டியராஜா அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்து.
உங்கள் தொண்டு, தமிழ் சமூகத்தின் பேறு.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 17, 2024, 5:12:04 PM1/17/24
to mint...@googlegroups.com
சங்கச் செம்மல ்விருது பெறும் சொற்களஞ்சியர் பாண்டியராசாவிற்கு வாழ்த்துகள்.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

K R A Narasiah

unread,
Jan 18, 2024, 6:33:28 AM1/18/24
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள் திரு. பாண்டியராஜா.
நீடூழி வாழ்ந்து தமிழுக்குத் தாங்கள் சேவை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்
அன்புடன்

நரசய்யா 

Raman M P

unread,
Jan 18, 2024, 8:45:08 AM1/18/24
to mint...@googlegroups.com
தமிழுக்கு நிலைத்த சேவை செய்த  பேராசிரியர் பாண்டியராஜா அவர்களுக்கு தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் கடப்பாடுடைத்து.
வாழ்த்துகள் 
எம். பி. இராமன்  

Chandra Sekaran

unread,
Jan 18, 2024, 10:09:28 AM1/18/24
to mint...@googlegroups.com
பேராசிரியர் பாண்டியராஜாவுக்குப் பாராட்டுக்கள்.


K. Jeyapalan

unread,
Jan 18, 2024, 11:17:31 AM1/18/24
to மின்தமிழ்

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 11:55:57 AM1/18/24
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா


Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 11:57:22 AM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா
என்சைக்ளோபீடியா என்பதிலிருந்து எடுத்தது. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 11:58:49 AM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா


Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 11:59:04 AM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 11:59:30 AM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, அம்மா.
ப.பாண்டியராஜா

On Wed, Jan 17, 2024 at 8:22 PM Dr. Mrs. S. Sridas <selvam...@gmail.com> wrote:

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 12:00:05 PM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 12:00:42 PM1/18/24
to mint...@googlegroups.com
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2024, 12:00:58 PM1/18/24
to mint...@googlegroups.com
  மிக்க நன்றி, ஐயா.
ப.பாண்டியராஜா


On Thu, Jan 18, 2024 at 7:15 PM Raman M P <mpr...@gmail.com> wrote:

இசையினியன்

unread,
Jan 18, 2024, 2:23:57 PM1/18/24
to மின்தமிழ்
  • தகவலுக்கு நன்றிகள் தேமொழி. 
  • ஐயா பாண்டியராஜா அவர்களை காண, விழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

தேமொழி

unread,
Jan 19, 2024, 1:14:58 AM1/19/24
to மின்தமிழ்

#வாட்சப் செய்தி 

முக்கிய அறிவிப்பு

குழுவினர் கவனத்திற்கு .. வருகின்ற திங்கட்கிழமை 22.1.2024  நமது தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் பேரா.ப.பாண்டியராஜா அவர்களது நூல்கள் வெளியீடு சங்கம்பீடியா வெளியீடு  சென்னையில் நடைபெற உள்ளது.  ஆகவே  அந்த நிகழ்ச்சியில் சில பணிகளுக்கு உதவி தேவைப்படுகிறது.  பேஸ்புக் லைஃப், மேசை தயாரிப்பு... ஜூம் ஆரம்பித்தல் இப்படி பல பணிகள் உள்ளன.  குழுவில் உள்ளோர் ஆர்வம் உள்ளவர்கள் வந்து உதவ முடிந்தோர் விரைந்து என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. அல்லது இங்கேயே உங்கள் பெயர்களை அளித்து விடுங்கள்.

நன்றி
-- சுபா 

_______________________________________________________________________________

குழுவில் உள்ளோர் அனைவருக்கும் மீண்டும் ஒரு நினைவூட்டல்..

வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் திறனாய்வு அரங்கில் நமது சங்கம்பீடியா வலைப்பக்க திறப்பு விழா மற்றும் 3 சங்கத் தமிழ் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு தொடங்கி விடும்.

பேரா ப. பாண்டியராஜா அவர்களுக்கு சங்கச்செம்மல் விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

22 ஆம் தேதி அரை நாள் விடுமுறை என்பதால் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
dr padiyaraja award event.jpeg
dr padiyaraja award event2.jpeg

  நன்றி
-- சுபா 

____________________________________________________________________



Jeyapal K

unread,
Jan 20, 2024, 11:18:51 AM1/20/24
to mint...@googlegroups.com
சங்கம்பீடியா - புரிந்தது ஐயா. 
தங்கள் சேவைக்கு இதற்கு மேலும் புகழடைய வாழ்த்துகிறேன்.


You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jnuvrmwVQs0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAVBAPcj3k5KLO70x4NRhAkX4NLYF9ub2i8JdsaC2oyyQQ%40mail.gmail.com.

சக்திவேலு கந்தசாமி

unread,
Jan 20, 2024, 2:05:36 PM1/20/24
to mint...@googlegroups.com
மரபை காக்கும் பேராசிரியரை அவர் தம் பணியினைப் போற்றும் தமிழ் மரபு கட்டளைக்கு நன்றி. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

mknp...@gmail.com

unread,
Jan 21, 2024, 7:33:22 AM1/21/24
to மின்தமிழ்
பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இவ்வேளையில் நன்றி நவில்கிறேன்.

அன்புடன்
மு. கமலநாதன்

தேமொழி

unread,
Jan 21, 2024, 3:23:04 PM1/21/24
to மின்தமிழ்

வெள்ளி, 19 ஜனவரி, 2024
வாழ்த்து மடல்
 

"சங்கச்செம்மல்" விருது பெறும்

பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர்

ப.பாண்டியராஜா அவர்களுக்கு

ஒரு வாழ்த்து மடல்

----------------‐---------------------------------------

சொற்கீரன்.


சங்கத்தமிழா?

அப்படியும் ஒரு தமிழ் இருக்கிறதா?

என்று

தமிழனின் வரலாற்று மிச்ச சொச்சம்

ஒரு இருளில் மண்டிக்கிடக்கும் போது

மின்னல் வெட்டாய்

தங்கள் "தொடரடைவுகள்" எனும்

படைப்புகள் மூலம்

பேரொளி பாய்ச்சிய

தமிழ்ஞாயிறே!

எங்கள் நெஞ்சங்களில்

தமிழின் ஆயிரம் இமயங்கள்

விம்மிப் புடைக்கும்

ஒரு பெருமிதத்தை

நல்கி விட்டீர்களே!

நன்றி நன்றி

கோடி நன்றி தங்களுக்கு!

அந்த பனை ஓலைக‌ளி‌ல்

புதைந்து கிடந்த

தமிழின்

"கிம்பர்லி"வைரங்களை

சுடர் விடும்படி எங்களுக்கு

தந்து விட்டீர்கள்.

இல்லாவிட்டால் நா‌ங்க‌ள் அ‌ந்த

கூச்சல் மொழி ஈசல்கள் போல

இறகு உரிந்து கிடப்போம்.

மீட்டுத்  தந்தீர்கள் உயர்

வானத்து    நம் செந்தமிழை !

-------------------------------------------------

கவிஞர் ருத்ரா 

Pandiyaraja Paramasivam

unread,
Jan 22, 2024, 12:05:46 AM1/22/24
to mint...@googlegroups.com
சங்கக் கவிஞர் ருத்ரா அவர்களுக்கு மிக்க நன்றி.
பாராட்டுக் கவிதை மிக அருமை.
ப.பாண்டியராஜா
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 22, 2024, 12:15:18 AM1/22/24
to மின்தமிழ்
ref :  https://www.facebook.com/subashini.thf/posts/pfbid0M8K5Fdzu5A6zanVAfyH3a3SyyrdDFjWsqZJ3RRGTgFi9WY926SdR6EFnxTDqLs5Gl


இன்று மாலை 5 மணிக்கு
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டு அரங்கத்தில்.
சங்கத் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு நாள்.
அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி சிறப்பிக்க வாழ்த்துங்கள்.

தேமொழி

unread,
Jan 23, 2024, 1:56:09 PM1/23/24
to மின்தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்களது 
பேஸ்புக் பக்கத்தில் நேற்றைய நமது நிகழ்வு பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.



தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் சங்கம்பீடியா வலைப்பக்கத்தினை தொடங்கி வைத்து, சங்கச் செம்மல் விருது வழங்கி, நூல்களை வெளியிட்டோம்.
sangachsemmal 1.png
sangachsemmal 2.png
sangachsemmal 3 .png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 23, 2024, 2:02:57 PM1/23/24
to மின்தமிழ்
ref :
https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02pKrPGRXRcs3XJez7i1aFCpJsKDSPPWxrX4ZpTQikJ6V67yzx4nnTHfksKEz9JxdGl


நேற்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்திய சங்கம்பீடியா வலைப்பக்க வெளியீட்டு நிகழ்ச்சி புகைப்படங்கள் சில.. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம் எம் அப்துல்லா அவர்களும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஔவை அருள் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

sangachsemmal 4.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 23, 2024, 2:14:33 PM1/23/24
to மின்தமிழ்


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில்
பேராசிரியர் பாண்டியராஜா அவர்களின் சங்கத்தமிழ் படைப்புகளுக்கான ஒரு தளம் "சங்கம்பீடியா" ..
வலைப்பக்கம் திறப்பு விழா -
திரு ஆர் பாலகிருஷ்ணன் இஆப அவர்களின் வாழ்த்துரை
rbsir.png
https://youtu.be/-zUxwM745ZM
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 23, 2024, 2:19:48 PM1/23/24
to மின்தமிழ்
ஊடக செய்தியில் விருதுவிழா செய்தி  . . . 
22 01 2024 MONDAY 
TAMIL HERITAGE FOUNDATION INTERNATIONAL 
PLACE CHENNAI KOTTURPURAM LIBRARY
media news.png
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 23, 2024, 8:33:59 PM1/23/24
to மின்தமிழ்
ref:  https://www.facebook.com/narayanan.kannan.37/posts/pfbid02WR9wQrEwtwvCAXwBt8UMpbrKUHxuRAyhfijDzth7Bd24DJ8uGzZG7LtVUkszQXUdl


சங்கம், சங்க காலம் என்பதெல்லாம் "அக்கறை" எனும் சொல்லுக்கு உதாரணங்களாகும். அக்கறை உடைய தமிழன் தொகுத்துக் கொடுத்தது பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற சங்க நூல்கள். யாருக்கோ இப்பாடல்களை தொகுக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே?
அடுத்து சங்கம் என்பது ஒரு peer review committee அல்லது academy. இங்குதான் தமிழ் இலக்கியத்தின் தரம் பற்றிய அக்கறை தெரிகிறது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்" எனச் சொல்லும் தரக்கட்டுப்பாடு. இந்த அக்கறை நேற்றைய நிகழ்வில் தெரிந்தது.
பேரா.பாண்டியராஜ கணிதத்துறை, கணித்துறை. ஆனால், தமிழின் அத்தனை இலக்கியத்திற்கும் எளிய தேடுதளம் அமைக்க வேண்டுமெனத் தோன்றியிருக்கிறதே? ஏன்? "அக்கறை".
அவர் தனி மனிதனாக பாடுபட்டு செய்த ஒரு சரித்திரச்செயலை பாதுகாக்க வேண்டும், அச்செயலுக்கு " தொடர்ச்சியை" த் தரவேண்டுமென சுபா தலைமையில் நடக்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஏன் தோன்றியது? நாளைய தமிழ்ச் சமூகத்தை நோக்கிய அக்கறை!
சங்க இலக்கியம் இருப்பதால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து! அதை நாம் பரிட்சியப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாண்டியராஜா ஆசைப்படுகிறார். அதற்காக அமைக்கப்பட்டதே தமிழ் மரபு அறக்கட்டளையின் சங்கப்பீடியா தளம். அத்தளம் நேற்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சாமிநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துறைக்கான இயக்குநர் திரு.ஔவை அருள் உடனிருந்தது சிறப்பு. ஒரு பல்கலைக்கழகம் மானியம் பெற்றுச் செய்ய வேண்டிய செயலை பாண்டியராஜா செய்திருக்கிறார். அதற்கென ஒரு துறை உருவாகி செய்ய வேண்டியதை தமிழ் மரபு அறக்கட்டளை செய்திருக்கிறது!
இந்த சரித்திர பூர்வமான நிகழ்வை வாழ்த்தி திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, (ஒரிசா), டாக்டர் தேமொழி (அமெரிக்கா), ஔவை அருள், அருணேஷ்குமார் (தள நிர்வாகி), பாராளுமன்ற உருப்பினர் திரு.அப்துல்லா போன்றோர் நேரடியாகவும், மெய்நிகராகவும் வாழ்த்தினர். திருமிகு டாக்டர் சுபாஷினி தலைமையுரை ஆற்றினார்.
ஒரு சரித்திரம் உருவாவதை அரங்கு நிறைந்த அக்கறைப்பட்ட தமிழர்களும், அயலகத் தமிழர்களும் கண்ணுற்றனர்.
81 வயதிலும் தளராது தமிழ்த் தொண்டாற்றும் பேரா.பாண்டியராஜா அவர்களுக்கு "சங்கச் செம்மல்" எனும் விருதை தமிழ் மரபு அறக்கட்டளை நேற்று வழங்கியது. அடக்கத்துடன் அவர், "நானொரு கணியன்! தமிழ் ஆசான் (செம்மல்) இல்லை" என ஏற்புரையில் சொன்னது பண்டைய தமிழ்ப் பண்பாட்டின் எச்சமாக எதிரொலித்தது.
உவப்பத்தலை கூடி உள்ளத்தால் பிரிந்த நிகழ்வென்று ஒன்று உண்டென்றால் அது நேற்று நடந்த நிகழ்வுதான். நெகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

தேமொழி

unread,
Jan 23, 2024, 8:44:55 PM1/23/24
to மின்தமிழ்
ref: https://www.facebook.com/nana.shaam.9/posts/pfbid023KJ295yqiDQSW9473VAU8ZVT6zLxMDA4HeLRxFvSLUX2MmsAyLgXJtHaznkcvWmgl

நான் பேச நினைத்ததெல்லாம் ( நேற்றைய சம்பவம்)
34.jpeg
சங்கம் வளர்த்த மதுரை – அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துணை முதல்வர்
முனைவர் ப.பாண்டியராஜா Pandiyaraja Paramasivam அவர்கள் நூல் வடிவிலும் ..கணினி வழியிலும்.. தமிழுக்குச் செய்தளித்த
பணிகள் ஏராளம். அவரது http://tamilconcordance.in/ ஆய்வு மாணவர்களுக்கு ஃபாஸ்ட் ஃபுட் கடை போல…
அதில் ’ கை’ ஒரு எழுத்தை தட்டச்சு செய்து தேடினால் .. கைமாறு, கையறு, கையுறவு, கைவிளக்கு என நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லாடல் கொண்ட சங்கப் பாடல்கள் உங்கள் கை முன் வந்து கைகட்டி நிற்கும்… ஒரு அலாவுதீனின் பூதத்தை உருவாக்கிய அற்புத ஆற்றல் மிக்க ஆசானுக்கு நம் நன்றி.
(நம் என்று சொல்லும் உதடுகள் ஒட்டுதா என்பதை ’நம்ம்ம்ம்ம்’ என்று மீண்டும் அழுத்திப் பரிசோதித்துக்கொண்டு தொடரவும்)
Retired என்ற வார்த்தையை RE- TYRED செய்து புதுப்பித்த சக்கரமாக்கி சுழற்றும் நாள் முழுதும் அசராத ஐயாவின் வேகத்தை கணிதவியல் நூல் தயாரிப்பில் அருகில் இருந்து அனுபவித்தேன். அம்மா அவர்களின் கைமணம் விருந்தோம்பல் மறக்க இயலாது. அவர் வீட்டு கதவிலக்கம் எண் B- 4 போல எதிலுமே … ஒன் ஸ்டெப் BEFORE! ( விழா நடக்கும் அரங்கத்துக்கும் !)
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு..( THFi) முன்னெடுப்பில் அவருக்குச் ’சங்கச் செம்மல்’
விருதினை மதுரை பாண்டியருக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்களின் கரங்களால் அளிக்கப்பட்டது.. அது தமிழ்நாடு அரசே கௌரவப்படுத்தியது போன்ற பெருமையான நிகழ்வு..
பாண்டியராஜா ஐயாவுக்கு அவர் வாழுகின்ற காலத்திலேயே
1. சங்கம் பீடியா வலைப்பக்க வெளியீடு
2. அவர் எழுதிய 3 நூல்கள் வெளியீடு
3.சங்கச் செம்மல் விருது விழா
என முப்பெரும் விழா ஒன்றை நடத்திட வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் க. சுபாஷிணி Subashini Thfஅவர்களுக்கு எண்ணம் சூல் கொண்ட நாள் முதல்… நாள் குறித்து தள்ளிப்போடப்பட்டு பல சிரமங்கள் வந்தன. அதையெல்லாம் தாண்டி ..இதனை இவன் கண் விடல்
( இப்போ எதுக்கு திருக்குறள் என் யோசிப்பவரகள் …அதை தாறுமாறாக இந்தியில் எழுதி வைத்துப் பேசி ட்ரெண்டிங் செய்வதை நினைத்து ஆறுதல் கொள்ளவும்!) so எங்கே விட்டேன்--… இதனை இவன் கண் விடல் என ..எங்கள் யார் எதில் திறமையுள்ளவர் என்ற கோணத்தில் விழா வேலைகள் விருப்பத்துடன் பரபரப்பாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு நேற்று அது நிறைவேறிய தருணம். மகா உன்னதம்!
(என் பங்காக அழைப்பிதழ் மற்றும் விருது வடிவமைப்பு உதவியுடன் மணிமணிவண்ணன் அவர்களின் பாராட்டைப் பெற்ற !!! நன்றியுரையும்)
பின்னணியில் எங்கள் ( THFi) குழுவினரின் சத்தமில்லாத ‘ரிலே’ ரேஸ். முயலும் ஆமையும் தண்ணீரிலும் நிலத்தில் கைகோர்த்து ஓடி வெற்றிபெற்ற டீம் வொர்க்…ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி தேநீர் அருந்தி…( தமிழ்ப்பால் கலந்து!) விடைபெற்றோம். அது ஒரு அலாதியான தனிச் சுவை..தனி சுகம்!
சங்கத்தமிழுக்கு – சங்கச் செம்மலுக்கு.. விழா முன்னேற்பாடுகளை முன்னின்று செய்ய மதுரையிலிருந்தும் வேலூரிலிருந்து Ammu Raja வந்து சிறப்புச் சேர்த்தது ( THFi) குழு! நெறியாள்கை …ஆசிரியை சுலைகா பானு ஆரம்பிக்க…தமிழ்த்தாய் வாழ்த்தை கணினி வழி ஒலிபரப்பவேண்டாம் என நாம் எல்லோரும் பாடலாம் என நமது எம்.பி அவர்கள் ஆரம்பிக்க… கோரஸா நாங்களும் பாட...
( தமிழணங்கே….என்ற வரியில் புல்லரித்தது எனக்குமட்டும் தானா? )
துவங்கியது விழா!
அமெரிக்காவிலிருந்து முனைவர் தேமொழி தே மொ ழி, ஒடிசாவிலிருந்து திரு.ஆர். பாலகிருஷ்ணன் Balakrishnan R காணொளி வாயிலாகவும்.. நேரில் கலிபோர்னியாவிலிருந்து வந்த திரு மணிமணிவண்ணன் மணி மணிவண்ணன், திரு. இனிய நேரு Iniya Nehru, திரு. ஒளிவண்ணன் Olivannan Gopalakrishnan, திரு. கௌதம சன்னா G Sanna .திருமதி தாயம்மாள் அறவாணன், அ.கா. ஈஸ்வரன், கண்ணன் Narayanan Kannan என நீளும் அது மிகப் பெரிய ஆளுமைகளின் பட்டியல்! நேரம் கருதி ‘கட்’
சிறப்புரையில் தமிழ் இரத்தத்தைச் சுண்டிவிட்ட ’எங்கள் புதுக்கோட்டை சகோ’ திரு. எம்.எம். அப்துல்லா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், மூன்று தலைமுறை தமிழ் பாரம்பரியம் மிக்க முனைவர் ஔவை அருள் Arul Natarajan (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மதுரை தமிழ்ச்சங்கம்.). தமிழின் புகழை உலகம் முழுதும் கொண்டுசென்று வியக்கவைக்கும் எங்கள் குழுவின் ராணித்தேனி- தலைமையுரையாக முனைவர் க. சுபாஷிணி Subashini Thf , சங்கம்பீடியா … வலைப்பக்க விளக்கம் தந்த சங்கம்பீடியா வலைப்பக்க வடிவமைப்பாளர் திரு. அருணேஷ் குமார், வலைப்பக்க வெளியீடு மற்றும் சங்கச் செம்மல் விருதினை வழங்கி…சிறப்புரையாற்றிய மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் (அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை) இப்படியாக இந்த ’லிஸ்ட்’ படி எல்லோருக்கும் ஒரு நீண்ட நன்றியுரையை என்னைச் சொல்லவிடாமல் …அவரே .. அதாவது..
மீடியா வெளிச்சத்தை விரும்பாத ‘சங்கச் செம்மல்’ - முனைவர் ப.பாண்டியராஜா அவர்கள் தனது ஏற்புரையில் நான் பேச நினைத்ததெல்லாம் அவரே பேசிவிட்டதால் …
..இதுவரை நான் நன்றி சொல்வேன் என நம்பி ..எழுதி வைச்சது வேஸ்ட் ஆகிடக் கூடாது என்பதே…
இந்தப் பதிவின் உள்நோக்கமே தவிர …வேரொன்றும் அறியேன் பராபரமே!
(இனிமேல் நன்றியுரையை தமிழ்த்தாய் வாழ்த்து முடிஞ்சவுடன் வைக்கணும்னு ஒரு மனு ..எழுதிட்டிருக்கேன்..பாதிக்கப்பட்டவர்கள் வந்து ஆதரவுக்கரம் நீட்டவும்)

தேமொழி

unread,
Jan 23, 2024, 8:53:32 PM1/23/24
to மின்தமிழ்
rbsir.png
"சங்கம்பீடியா" வலைப்பக்கம் திறப்பு விழா
- திரு ஆர் பாலகிருஷ்ணன் இஆப அவர்களின் வாழ்த்துரை
https://youtu.be/-zUxwM745ZM
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 23, 2024, 8:55:23 PM1/23/24
to மின்தமிழ்
themozhi - .png

"சங்கம்பீடியா" வலைப்பக்கம் திறப்பு விழா 
- அறிமுகவுரை முனைவர்  தேமொழி
https://youtu.be/tFyubv0MeeE

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 24, 2024, 12:38:46 AM1/24/24
to மின்தமிழ்
sangampedia.jpg
முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு "சங்கச் செம்மல்"
விருது வழங்கும் விழா
: முழுநீள விழாக் காணொளி
https://youtu.be/Qpxy0VvOm2s
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


sangachsemmal 1.png
முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு "சங்கச் செம்மல்"
விருது வழங்கும் விழா
[22 ஜனவரி 2024] 10 நிமிடம் 
https://youtu.be/Q0jB3hvtvII
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Dr.Jansy Paulraj

unread,
Jan 24, 2024, 12:40:48 AM1/24/24
to mint...@googlegroups.com
வாழ்த்துகள்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 24, 2024, 1:40:31 AM1/24/24
to மின்தமிழ்
ulagath thamizh sangam pedia.png
இந்த வாரத்தின்(24-01-2024) உலகத்தமிழ் வார இதழின் 216ஆம் பக்கம் 'சங்கம்பீடியா' வலைப்பக்கத் திறப்புவிழா, முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு  'சங்கச்செம்மல்' விருது வழங்கல், அவருடைய நூல்கள் வெளியீடு குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. நன்றி உலகத்தமிழிதழ்

216.png

தேமொழி

unread,
Jan 25, 2024, 1:32:43 AM1/25/24
to மின்தமிழ்
திங்களன்று சங்கம்பீடியா வலைப்பக்கம் திறப்புவிழாவில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்களாக நேரம் கிடைக்கும்போது https://sangathamizh.tamilheritage.org/ வலைப்பக்கத்தில் உலவிக்கொண்டிருந்தேன். இது மிகப்பெரிய முயற்சி, சங்கப்பாடல்களில் கரை கண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆகச்சிறந்த உதவி. இதை செய்தது ஒரு தனி மனிதர் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சங்கச்செம்மல் பேராசிரியர் முனைவர் பாண்டியராஜா அவர்கள் இப்பட்டதிற்கு மிகப்பொருத்தமானவரே. ஐயாவுக்கு நன்றி! 🙏 இதை முன்னெடுத்த தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துகளும். 🙏💐
Ravichandar Kannan
#WhatsApp Message 

தேமொழி

unread,
Jan 28, 2024, 1:39:05 AM1/28/24
to மின்தமிழ்


சங்கம்பீடியா - பகுதி 1
நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை நாம் நம்பவே ஆதார் கார்ட், ரேஷன் கார்டெல்லாம் தேவைப்படும் இன்றைய காலத்தில் தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே சீரிளமையுடன் இருந்தது என்பதை(யும்) நிரூபிக்க முன்னோர்கள் விட்டுச் சென்ற அடையாள அட்டைகள் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் மட்டும் இல்லையென்றால் தமிழே கூட வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது, தேசத்தைப் பிரிக்க சர்வதேச சதி என்று வாட்சப்பில் வாந்தியெடுக்க ஆரம்பித்திருப்பார்கள். அல்லது வேறு ஒரு மொழியின் ரேஷன் கார்டில் தமிழையும் சேர்த்துவிட்டு எஸ். தமிழ் ஒரு இனிஷியலைப் போட்டுவிட்டிருப்பார்கள். (ஒருகாலத்தில் போட்டும் இருந்தார்கள்.)
சங்க இலக்கியங்களைப் படைத்தது, உரை எழுதியது, தொகுத்தது, தொலைத்தது, கண்டுபிடித்தது, அச்சில் ஏற்றியது, கடைசியாக அச்சில் இருந்ததைச் சுச்சைத் தட்டி டிஜிட்டலில் ஏற்றியது என்று இந்த சங்க இலக்கிய வரலாற்றில்பல முக்கிய மைல்கற்கள் உண்டு. அவற்றை அடைய வைத்தவர்கள் உண்டு. பெரும்பாலும் தனித்தனியே முரண்தொடையாகச் செய்த கூட்டுமுயற்சி. இதுவரை அடைந்த இந்த மைல்கற்கள் எல்லாம் அவற்றைப் பட்டுச்சேலை போல காப்பாற்றிவைக்க உதவியிருக்கின்றன.
ட்ரங்குப் பெட்டியில் வைத்து தலைமுறை தலைமுறையாகப் பட்டுப்புடவைகளைப் பொத்திவைத்து கடைசியில் சேலை கட்டப்பழகாத தலைமுறையின் கையில் அவை வந்து சேர்வது போல 2K கிட்ஸ் கையில் இப்போது சங்க இலக்கியங்களைக் கொண்டுவந்து வந்து சேர்ந்திருக்கிறோம். தமிழ் ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சி வந்திருந்தாலும் இரட்டைக்காப்பிங்கள் எவை என்றால் சீறாப்புராணமும் பெரியபுராணமும் என்றான் ஒரு சிறுவன் (யூட்யூபில் பார்த்தது). இவர்கள்தான் அடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டும். கணியன் பூங்குன்றனார் யார் தெரியுமா, கம்பர் யாரென்று தெரியுமா என்று கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் நாமல்ல. இன்னும் கொஞ்ச காலத்தில் நெஞ்சுவலி வந்தோ, நரம்பு தேய்ந்தோ அல்லது மூச்சுக்குழாய் சளியால் மூடியோ நம் காலம் முடிந்துவிடும். (மனிதர்கள் ப்ராணயாமா, யோகாவெல்லாம் செய்து எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்தாலும் கடைசியில் இந்த மூன்றில் ஏதோ ஒரு ஃப்யூஸ்தான் பிடுங்கப்படுகிறதாம்.)
எல்லாத் தாக்குதலிலும் எப்படியோ தப்பித்து வாழ்ந்துவிடும் திறமை தமிழுக்கு உண்டு என்றாலும் அதன் அடையாள அட்டைகளான சங்க இலக்கியங்களை அடுத்த தலைமுறை டிஜிட்டல் காட்டில் (மறுபடியும்) தொலைத்துவிட்டால் அதற்கு முழுப் பொறுப்பு இன்று வாழும் நாம்தான். எதையும் தேடாமல் விடுவதும் தொலைப்பதும் ஒன்றுதான். அப்படித் தேடாமல் விடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. புத்தகங்களோ, டிஜிட்டல் காப்பிகளோ, முகநூல் முக்கல்களோ, வாட்சப் வியாக்கியானங்களோ அடுத்த ஐம்பது ஆண்டுகள் கூட தாண்டாது. நாம் நம்பியிருக்கும் இந்த கடைகளையெல்லாம் அவற்றின் ஒனர்கள் எப்போது வேண்டுமானாலும் மூடிவிட்டு வேறு வியாபாரங்களுக்கு ஓடிவிடலாம். டெக்னாலஜி, வியாபாரம் மாறிக்கொண்டே இருக்கும். இன்டெர்நெட்டே கூட காணாமல் போய் டோக்கன்நெட் வந்துவிடும் என்கிறார்கள். இன்றைய டெக்னாலஜிக்குள் சங்க இலக்கியங்களை ஏற்றிவிட்டோம், அதனால் அவை தானாகவே save ஆகிவிடும் என்று நினைப்பதில் உள்ள ஆபத்து ஒரு word ஃபைலை save செய்துவிட்டு சில நாட்களுக்குப் பிறகு எங்கே save செய்து வைத்தோம் என்று கட்டிலுக்கடியிலெல்லாம் தேடி அனுபவப்பட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
இப்படி பல ரிஸ்குகள் இருக்கும் பட்சத்தில் சங்க இலக்கியங்களை எப்படி வருங்காலத்திற்குக் காப்பாற்றி வைப்பது? அதற்கான வழியையும் சங்க இலக்கியங்களைப் படைத்தவர்களே அந்த காலத்தில் காண்பித்துவிட்டார்கள். அவை மக்கள் இலக்கியங்களாக மக்களோடு உலாவ வேண்டும். மக்கள்தான் அவற்றைப் புழக்கத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். டிஜிட்டல் ட்ரங்குப் பெட்டிகளோ, புத்தகத் தலையணைகளோ அல்ல. தமிழப்பண்டிதர்களிடமும், இலக்கிய ஆர்வலர்களிடமும் மட்டுமே முடங்கிக் கிடக்கும் இந்த சங்க இலக்கியங்களை குமுதம், ஆனந்தவிகடனில் தமிழ் வாசித்த, முகநூல், வாட்ஸப்பில் தமிழ் வாசிக்கும் எட்டு+ கோடி எளிய மக்களிடம் சங்க இலக்கியங்களை விரித்து வேர்விடச் செய்ய வேண்டும். அதற்காக நாம் அடைந்திருக்கும் சங்க இலக்கிய வரலாற்றின் அடுத்த மைல்கல்தான் சங்கம்பீடியா!
தொடரும்…

தேமொழி

unread,
Jan 30, 2024, 4:51:31 PM1/30/24
to மின்தமிழ்

சங்கம்பீடியா - பகுதி 2

சங்கம்பீடியா குறித்து மருதன், தாமோதரன் என்ற இருவரின் கேள்வி-பதில் உரையாடல். மருதன் சங்கம்பீடியாவை மேய்ந்துவிட்டவர். தாமோதரன் புதியவர். தமிழ் கற்றுப் பிற்காலத்தில் தமிழ் இலக்கியங்களைப் படைக்கப் போகிறவர்.

தா: சங்க இலக்கியங்களை வாசிக்க ஆசைதான். தமிழில் எழுதியிருந்தாலும் சென்னைக்காரரும் கன்னியாக்குமரிக்காரரும் பேசுவது போல வேறு வேறு பாஷையில் இருக்கிறதே. அவற்றை எப்படிப் புரிந்து கொள்வது? உரையுடன் இருக்கும் புத்தகங்களை வாங்கினால் மூளை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. சாம்பார் சாதம் கேட்டால் முதலில் சோற்றைச் சாப்பிடக் கொடுத்துவிட்டு அதன் பின் சாம்பாரைக் குடிக்கத்தருவது போல செய்யுளை பாதி புத்தகத்திற்கு பரப்பி வைத்துவிட்டு மீதி பாதியில் உரையை நிரப்பி வைத்திருக்கிறார்கள். எந்த வரிக்கு எந்த உரை என்று புத்தகத்தை மேலேயும் கீழேயும் தட்டிக் குலுக்க வேண்டியிருக்கிறது. அதிலும் சில உரையாசிரியர்கள் உரையுடன் சேர்த்து உருட்டவும் செய்திருக்கிறார்கள். ‘நாற்பெரும் தெய்வத்து நல்நகர் நிலைஇய’ என்று செய்யுளில் வந்தால் இவர்களாக அந்த நான்கு தெய்வமும் யாரென்று லிஸ்ட் போட்டு ஃபயர் விடுகிறார்கள். அவர்கள் தேவலோகத்திலிருந்து உலகத்தைக் காக்கிறார்கள் என்கிறார்கள். இந்த நாலுவார்த்தைக்குள் இவ்ளோ கதை எழுதியிருக்கிறார்களா என்று சந்தேகப்படும் அளவு… அதாவது, என் ஊரிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்திபேசும் தலைவர் யாராவது, “பாரத் மாதா கீ ஜே” என்றுதான் சொல்லியிருப்பார். அதைத் தமிழில் மொழிபெயர்த்து கூடவே உரையாற்றுபவர், “பாரதத் தாயே வாழ்க. தமிழ்த்தாயே வாழ்க. உன் காலடியை வணங்குகிறேன்” என்று கூட இரண்டு பிட்டுகளை இழுத்துப் போடுவாரே, அது போல. சங்க இலக்கியங்களை அணுக உருப்படியான வேறு வழியே இல்லையா?

ம: சங்கம்பீடியாவில் எல்லா சங்க இலக்கியங்களுக்கும் வரிக்கு வரி இன்றைய தமிழில் என்ன அர்த்தமோ அது அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, உங்கள் கேள்வியில் குறிப்பிடப்பட்ட திருமுருகாற்றுப்படையில் வரும் ‘நாற்பெரும் தெய்வத்து நல்நகர் நிலைஇய’ என்ற வரிக்கு அப்படியே ‘நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள’ என்று வேறு எதுவும் டின்களைக் கட்டாமல் அர்த்தம் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. வாசிப்பவர்கள் அதைவைத்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொள்ள எளிது. செய்ய வேண்டியதெல்லாம் சங்கம்பீடியா இணையத்தளத்தில் ‘சங்கச்சோலை > பத்துப்பாட்டு எட்டுத்தொகை’ லிங்கை தட்ட வேண்டும். திருமுருகாற்றுப்படையிலிருந்து மலைபடுகடாம் வரை பத்து நூல்கள், அதன் பின் நற்றிணை, குறுந்தொகை என்று புறநானூறு வரை எட்டு நூல்கள் என்று ஒவ்வொரு இலக்கியத்திலுமுள்ள ஒவ்வொரு வரிக்கும் இன்றைய தமிழில் ரீல் சுற்றாத அர்த்தம் நேருக்கு நேரே கிடைக்கிறது. ‘வண்டு பட தைந்த கண்ணி…’ என்றால் ‘வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலை…’ என்று பக்கத்துப் பக்கத்திலேயே இன்றைய தமிழில். வெப் பேஜில் எங்கேயாவது நடுவே சிக்கிக் கொண்டால் மறுபடியும் மேலே வந்து தேவையான பாடல் எண்ணைத் தேர்ந்தெடுத்து மறுபடியும் உள்ளே சென்று சிக்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வாசித்துக் கொண்டிருக்கும் போதே ப்ரேக் போட்டுவிட்டு ரோமானியர்கள் போல தமிழர்களும் அந்த காலத்தில் தலையில் மலர்க்கிரீடம் அணிந்திருக்கிறார்கள், அதன் பெயர் கண்ணி என்ற தகவலையும் அசைபோடலாம். ஏன் தமிழர்களிடமிருந்து ரோமானியர்களுக்கு அந்த பழக்கம் போயிருக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியைத் தொடங்கலாம். அவர்கள் அணிந்தது இலை, நாம் அணிந்தது மலர் என்றும் வேறுபடுத்தலாம்.

தா: மேலே சொன்ன ‘கண்ணி’ போன்ற சங்க இலக்கியங்களில் வரும் பல வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் இன்றைய புழக்கத்தில் மாறிவிட்டன. மச்சக்கண்ணி என்று பாட்டெழுதுகிறார்கள். பல வார்த்தைகள் புழக்கத்திலேயே இல்லை. அர்த்தம் தேட இன்றைய தமிழ்-தமிழ் டிக்‌ஷனரிகளை வாங்கிப்பார்த்தால் ‘டிவி’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் ‘தொலைக்காட்சி’ என்ற ரேஞ்சில் பல அரிய வார்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள். பாகவதர் பாடல்கள் போல இன்றைய ஆட்களுக்கு ரசிக்காது என்று எஃப்எம் ரேடியோவில் ஒலிபரப்பாதது போல சங்க இலக்கிய வார்த்தைகளெல்லாம் டிக்‌ஷ்னரியிலேயே இல்லையே?

ம: சங்கம்பீடியாவில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட சங்க இலக்கிய வார்த்தைகளுக்கு தனித்தனியே பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. செய்ய வேண்டியதெல்லாம் சங்கம்பீடியா இணையத்தளத்தில் ‘சங்க இலக்கிய அருஞ்சொற் களஞ்சியம்’ என்ற இன்னொரு லிங்கைத் தட்ட வேண்டியதுதான். அதன்பின் கசடதபர வரிசையில் வேண்டிய எழுத்தைத் தட்டினால் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் சங்க இலக்கிய வார்த்தைகள் வரும். அந்த வார்த்தைகளைத் தட்டினால் அவற்றின் பொருள் இன்றைய தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ‘க > கண்ணி’யைத் தட்டினால் அது சங்க இலக்கியங்களில் ‘தலைமாலை - chaplet’ என்ற அர்த்தத்திலும், ‘பூமாலை - garland’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை உடனே அறிந்து கொள்ளலாம். தமிழுடன் ஆங்கிலவார்த்தைகளையும் ஓசியில் கற்றுக் கொண்டு பீட்டர் விடலாம்.

தா: சங்க இலக்கியங்களில் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் அவை உபயோகிக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பொறுத்து பொருள் மாறுவது போலத் தெரிகிறதே. சேரி என்ற சங்க இலக்கிய வார்த்தையைக்கூட பிரஞ்சு மொழி வார்த்தை என்கிறார்களே. எந்த இடத்தில் எந்தப் பொருளில் எந்த வார்த்தை வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஏதாவது டெக்னிக் இருக்கிறதா?

ம: ஏன் இல்லை? மேலே தடவிச் சென்ற அந்த அருஞ்சொற் களஞ்சியத்தில் வார்த்தைகளுக்கு அர்த்தம் மட்டுமல்ல, அந்த வார்த்தைகள் எந்தெந்தச் செய்யுள் வரிகளில் வருகிறது என்பது மட்டுமல்ல, அவைவரும் செய்யுள் வரிகளின் மொத்த அர்த்தமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கண்ணி’ என்ற வார்த்தை ‘மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்’ என்று பட்டினப்பாலையில் வருகிறது என்றும் அதன் அர்த்தம் ‘கணவர் சூடும் கண்ணியை மகளிர் தலையில் சூடிக்கொள்ளவும்’ என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே வார்த்தை ‘குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி…’ என்று திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது என்றும் அந்த வரியின் அர்த்தம்…என்னவென்று நீங்களே சங்கம்பீடியாவுக்குள் புகுந்து பார்த்துக் கொள்ளுங்கள். வார்த்தையின் அர்த்தம், வார்த்தை வரும் வரியின் அர்த்தமெல்லாம் தண்டுவடத்தை மேலும் சில்லிடச் செய்தால் ‘சங்கச்சோலை > பத்துப்பாட்டு எட்டுத்தொகை’ சென்று அந்தப் பாடல் எண்ணைத் தேர்ந்தெடுத்து மொத்தப் பாடலையும் வாசித்து கூடவே அர்த்தத்தையும் புரிந்து அந்த மெய்நிகர் உண்மை உலகத்திற்குள் எல்லாவற்றையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்கலாம். சங்கம்பீடியாவிற்குள் தமிழர்களெல்லாம் நுழைந்து உலாவ ஆரம்பித்துவிட்டால் எந்த டாஸ்மாக்கும் டார்கெட்டை அடைய முடியாது.

தா: சரி…சங்க இலக்கியங்களின் வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் சங்கப் புலவர்கள் சொற்களை நேரே சொல்ல மாட்டார்களே. உதாரணமாக, ஔவையார் ‘பாம்பு’ என்றால் வெறும் பாம்பு என்று சொல்லமாட்டார். ‘நெடு வரை மருங்கின் பாம்பு’ (உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்பு) என்று முன்னால் ஓர் அடையைச் சேர்த்து சொல்லுவார். இதை வைத்து அவர் குறிப்பிட்டது மலைப்பாம்பு என்றும், அது கிராஃபிக்ஸ் பாம்பல்ல என்றும் வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அது  மலை போல நீளமாக பெரிதாக இருக்கும் என்றும் நம் மனதுக்குள் உருவகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த வரியில் அவர் சொல்லும் அந்தப் பாம்பையே கொல்லும் அளவு இடிக்கும் இடி ஓசையின் வலிமை புரியும் (கடுவிசை உருமின் கழரு குரல்). அதன் பின் நாம் வானத்தைப் பார்த்து மல்லாக்கப் படுத்து ‘அடடா…மலைப்பாம்பைப் போட்டுத்தள்ளிய அந்த இடியின் சத்தத்தை அதன் குரல் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று சிலாகிக்க வேண்டும். இப்படிச் சொற்களின் மேல் சொற்களை அடைகளாக ஏற்றி அதனுள் உவமைகளைப் பின்னி வரும் சங்க இலக்கியங்களை புரிந்து கொள்ள அருஞ்சொற்பொருள் மட்டும் போதாதே?

ம: முக்கியமான கேள்வி. சங்க இலக்கியப் புத்தகங்களை கடையில் வாங்கினாலோ, பிடிஎப் டவுன்லோடு செய்தாலோ ஐம்பது வார்த்தை உள்ள செய்யுளில் ஐந்து வார்த்தைக்குப் பொருள் சொல்லிவிட்டு மீதி வார்த்தைகளுக்கு எக்கேடும் கெட்டுப் போங்கள் என்று விட்டுவிடுவார்கள். சங்கம்பீடியாவில் இந்தச் சிக்கலைத் தீர்க்க ‘தொடரடைவுகள்’ என்று ஒரு மிகப்பெரிய பகுதி இருக்கிறது. கடல் போன்றது. அதற்குள் சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங்காப்பியங்கள், சூளாமணி, நீலகேசி போன்ற ஐஞ்சிருகாப்பியங்கள், திருக்குறள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம், நீதி நூல்கள்…ஏன் பாரதியார் கவிதைகள் என்று ஏறக்குறை எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் எங்கெங்கே இப்படிப்பட்ட தொடரடைவுகள் வருகின்றன என்று பட்டியலிடப்பட்டு, அந்தத் தொடரடைவுகள் வரும் முழுப்பாடல்களையும் வாசிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்’ என்ற பாரதியாரின் தொடரடைவு ‘யெ’யைச் சொடுக்கினால் கிடைக்கும். பாரதியாருக்கும் ஜெகோவாவுக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய நேரமிருந்தால் அதிலேயே அவரது தோத்திரப்பாடல்களுக்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேண்டியவர்கள் போய் தோத்திரம் செய்து கொள்ளலாம்.

தா: சங்கம்பீடியா பற்றிய சில வீடியோக்களைப் பார்த்தேன். ‘சங்கம்’ என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் எங்கும் இல்லையாம். ‘சனாதனம்’ என்ற வார்த்தை கடலிலேயே (தமிழ் இலக்கியங்களிலேயே) இல்லையாம். இப்படிப்பட்ட சுவாரசியமான ஆராய்ச்சிகளையெல்லாம் சங்கம்பீடியா வைத்து செய்ய முடியுமா?

ம: புதிதாக அதற்கெல்லாம் அவசியமில்லை. சங்கம்பீடியாவில் தொடரடைவுகள்>கூட்டுத்தொடரடைவுகள் சென்றால் இலக்கியங்களை அவற்றுக்குள் ஒப்பிட்டு எந்த இலக்கியத்தில் உள்ள வார்த்தைகள், சொற்றொடர்கள் வேறு ஓர் இலக்கியத்திலும் இருக்கிறது; அல்லது வேறு எங்கு இல்லை என்பதெல்லாம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 1330 திருக்குறள்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகள் சங்க இலக்கியங்களில் உபயோகிக்கப்படாத வார்த்தைகள். பெரும்பாலும் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட வார்த்தைகள்.

தா: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மொத்தத் தமிழே இந்த சங்கம்பீடியாவிற்குள்தான் குடியிருக்கும் போலத் தெரிகிறதே?

ம: மேலே நான் சொன்னது பாதி கூட அல்ல. பல சங்கத் தமிழ் வார்த்தைகளை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல செய்யுட்களைப் புரிந்து கொள்ள கதை வடிவங்கள், பல வார்த்தைகளுக்குப் பட விளக்கங்கள் என்று ஏகப்பட்டவை உள்ளே உள்ளன. அது மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களை புள்ளியியல் (statistics) அடிப்படையில் மொத்தத்தையும் பிரித்து மேய்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் உள்ளன. சங்கம்பீடியா ஒரு கடல். இதற்குள் முத்துக்குளிக்கச் செல்லலாம். ஒருவேளை நான் சொன்னதைக் கேட்டு தவறிப்போய் விழுந்தாலும் முத்துகளுடன்தான் திரும்புவீர்கள். அந்த உத்தரவாதம் கொடுக்க முடியும்.

தா: இவ்வளவு பெரிய ஆராய்ச்சி வேலையை எத்தனை பேர் சேர்ந்து எத்தனை ஆண்டுகளாகச் செய்தார்கள்? எந்தத் துறை செய்த ஆராய்ச்சி?

ம: தனி ஒருவர். தன் வாழ்நாளில். அத்தனையையும் இலவசமாக அர்ப்பணித்திருக்கிறார். முனைவர் ப. பாண்டியராஜா. அவரது களஞ்சியத்தைக் கைச்செலவு, செர்வர் செலவு பார்க்காமல், நேரமும் பார்க்காமல் தன்னார்வத்துடன் மூன்று ஆண்டுகளாக உழைத்து இணையத்தில் ஏற்றியது தமிழ் மரபு அறக்கட்டளையினர்.

தொடரும்…

https://sangathamizh.tamilheritage.org

தேமொழி

unread,
Jan 31, 2024, 11:42:40 PM1/31/24
to மின்தமிழ்

சங்கம்பீடியா: பகுதி-3
இரண்டாம் பகுதிக்கு அதிக ஆதரவில்லாததால் மூன்றாவதுடன் முடித்துக் கொள்கிறேன்.
தமிழருக்கும் தமிழுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள்ளன. தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோருக்கும் தமிழ் தெரிந்திருக்க அவசியமில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் இன்றைய ல,ள,ழ வித்தியாசம் தெரிந்திருக்க அவசியமில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் செய்யுளோ அல்லது தமிழில் செய்தித்தாளோ கூட வாசித்திருக்க அவசியமில்லை. அப்படியே வாசித்திருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது தாயுமானவர் தவறாகக் கூடத் தெரிந்திருக்க அவசியமில்லை. தமிழராக இருக்க சினிமா, சீரியல் பார்த்துக் கொண்டு, மதத்தைக் குறை சொன்னால் புண்பட்டுக் கொண்டு, அரசியல் பேசிக்கொண்டு… மொத்தத்தில் வாழ்ந்தால் போதுமானது. தமிழர் வாழ்வதால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடாது.
அதேபோல தமிழுக்கும் தமிழருக்கும் அறுநூறு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் பேசத் தெரிந்தவரெல்லாம் தமிழராக இருக்க அவசியமில்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் ஒருவாரம் செலவழித்தேன். அதில் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் தமிழர் இல்லை. இந்தியரும் இல்லை. ரஷ்யர் ஒருவரிடம் வெளிநாட்டுக்காரர் என்று ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தேன். அவர், “தமிழில் பேசுகிறீர்களா? எனக்குத் தமிழில் பேச ஆசையாக உள்ளது”, என்றார். ரஷ்யாவில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ரஷ்யாவில் உங்கள் ஊர்ப்பையன்களுக்கு டிமான்ட், அதனால் தமிழுக்கும் டிமான்ட் என்று சொல்லிச் சிரித்தார். ஹங்கேரிய நண்பர் ஒருவர் சிலப்பதிகாரத்தின் ஹங்கேரிய மொழிபெயர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டு சிலப்பதிகாரத்தைத் தமிழில் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். சங்க இலக்கியங்களை ஹங்கேரிய மொழியில் பெயர்த்துக் கொண்டிருக்கிறார். பிரஞ்சு நாட்டு ஆய்வாளர் ஒருவர் யாழ் நூல் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். 1950-லிருந்து தமிழில் வெளியான ஐம்பது பைசா சினிமாப் பாடல் புத்தகங்களையெல்லாம் பொக்கிஷமாக சேகரித்து வைத்திருந்தார். “கடலுக்கு ஃபிஷ்ஷிங் நெட்டு. காதலுக்கு இன்டர்நெட்டு” என்றெல்லாம் தமிழில் பாடல்கள் இருப்பதாக மற்ற வெளிநாட்டு நண்பர்களிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். அமெரிக்க நண்பர் ஒருவர் கானல்வரிக்கு மெட்டமைத்துப் பாடிக்கொண்டிருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேளச்சேரியில் வாழ்ந்த சபாபதி சுவாமி பற்றி அவர் ஆராய்ச்சி செய்ததை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறது. எத்தனைத் தமிழர்களுக்கு சபாபதி சுவாமியையோ, தமிழ் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் பதிப்பிக்கப்படும் புத்தகங்களையோ தெரியும் என்று தெரியவில்லை. ஸ்வீடன் நாட்டுக்காரர், இத்தாலிக்காரர் என்று தமிழாராய்ச்சி செய்யும் பட்டப்படிப்பு மாணவர்களையும் அங்கே சந்தித்தேன். சங்க இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்தார்கள்.
இதெல்லாம் நம் ஊரிலுள்ள தமிழ்த்துறைகளுக்கோ, தமிழ் ஆராய்ச்சிகளுக்கோ சம்பந்தமில்லாத என் சொந்த அனுபவங்கள். பெரும்பான்மைத் தமிழருக்குத் தெரியாத ஒரு பெரிய தமிழ்கூறும் நல்லுலகம் ஒன்று இந்த உலகுக்குள் இருக்கிறது. இந்தியாவிலிருக்கும், தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களுக்கு அதிகம் தெரியாத, தெரிய ஆர்வமில்லாத உலகம் அது. சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் போது ‘வணக்கம்’ என்று ரயில்வே ஷ்டேசன் முன் தமிழில் எழுதியிருப்பார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து யாரோ வந்து எழுதி வைத்ததல்ல. தமிழின் வசீகரம் தமிழர் என்ற கூட்டத்தைத் தாண்டியது. தமிழர்கள் இல்லாமல் போனாலும், இந்தி, ஆங்கிலம் பேசுபவர்களாக மாறிவிட்டாலும் தமிழ் உலகில் எங்கேயோ பிழைத்து வாழ்ந்துவிடும். அதனால் அதை அம்போ என்றும் விட்டுவிடலாம். தண்டத்துக்குப் பெற்ற மொழிகளே கின்டர்ஜாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது (எந்த மொழியையும் குறை சொல்லவில்லை…I meant Java, C++ type) உலகின் பழைய மொழிக்குப் பழைய சோறாவது கிடைக்காதா என்ன?
செம்மொழியான தமிழுக்கென்று ஒரு நாள் இல்லாத பட்சத்தில் (ஒருவேளை இருந்தாலும்) எந்த நாளை தமிழுக்கான நாளாக வருங்காலங்களில் கொண்டாடலாம்? சந்தேகமே இல்லாமல், ஜனவரி 22. ஏன்? சங்கம்பீடியா உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். நன்றி! வணக்கம்!
Reply all
Reply to author
Forward
0 new messages