மாங்குடி கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் " கடவுளும் இலவே" என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்?

1.268 Aufrufe
Direkt zur ersten ungelesenen Nachricht

R Muthusamy

ungelesen,
14.05.2019, 03:59:1514.05.19
an மின்தமிழ்
பாடியவர் மாங்குடி கிழார் 
திணை:  வாகை; துறை: மூதின் முல்லை

அடலருந் துப்பின் .. .. .. .. 
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு                                    

இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறநானூறு 355 புலவர் மாங்குடி கிழார்)

சங்ககாலத்தில் கடவுள் என்பது இயற்கை வழிபாடே என்ற கருத்தை வலியுறுத்த இந்தப் பாடலை பலர் மேற்கோள் கட்டுவதுண்டு.

அழித்தற்கரிய வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை. 
கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவும் இல்லை.  
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை.  
மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர,  நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை. என்று மாங்குடி கிழார் பாடியுள்ளார். இந்தப் பாடல் தொடக்கப் பகுதியில் சிதைந்துள்ளது.

இசையினியன்

ungelesen,
14.05.2019, 10:41:3214.05.19
an மின்தமிழ்
/// ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
/// ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்     
/// கல்லே பரவின் அல்லது
/// நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
/// (புறநானூறு 355 புலவர் மாங்குடி கிழார்)

முதலில் தங்களுக்கு நன்றிகள் பல. 

மாங்குடி கிழார் கடவுள் இல்லவே இல்லை என்று கூறவில்லை. நெல்லை உதிர்க்கும் "கடவுளும் இலவே" என்கிறார். அதாவது வேறு ஒன்று கடவுளாக உள்ளது. அதோடு சேர்த்து நெல்லை உதிர்க்கும் இதையுமா கடவுள் என்கிறீர்; என்கிறார். (உம் விகுதி சிறப்பு.)

கடவுள் உண்டு அக்கடவுள் யார் என்றே விளக்குகிறார். 

சரி கடவுள் யார்?

வெல்ல முடியாத பகைவர் முன்னர், சிங்கம் போல நின்று; 
ஒளிர்கின்ற கொம்பினை ஏந்தி நிற்கும் களிற்றை (வேல் கொண்டு) எறிந்து; பகைவரின் படைக்கதிரில் உள்ள களிரை உதிர்த்து; பின்னர் களிறின் தாக்குதலால் வீழ்ந்து
(தரையில் கிடக்கும்) கற்கள் இடையே கலந்து விட்டவனே கடவுள்; அவன் அல்லாமல்
நெல் கதிரில் உள்ள நெல்லை உதிர்த்து; அதில் கலந்திடும் கடவுள் இல்லவே இல்லை. (வஞ்சப் புகழ்ச்சி)

நம்ம ஊரு மொழியில் விளக்கம்:

இந்த நெல்லு கதிர்மணியில இருக்குற நெல்லை உதிர்ப்பவன் கடவுளா என்ன? அல்லவே அல்ல. பகைவரின் படைமணியில் இருக்குற பேராற்றல் படைத்த களிரை உதிர்ப்பவனே கடவுள். அவனே தரையில் கிடக்கும் கல்லின் மேல் பரவி நிற்கிறான்.

அருஞ்சொல்:

  1. ஒன்னார்: [ oṉṉār ] பகைவர்.. [295488]
  2. தெவ்வர்: பகைவர். [369807]
  3. விலங்கிறை: [ vilangkiṟai ] சிங்கம்.. [292133]
  4. ஒளிறு: [ oḷiṟu ] , s. splendour, light, ஒளிர்வு.. [248952]
  5. ஏந்துதல்: [ ēntutal ] தாங்கல்.. [270711]
  6. மருப்பு: [ mruppu ] s. A horn of a beast, விலங்கின் கொம்பு. 2. Ginger, இஞ்சி. (p.) யானைமருப்பு. An elephants tusk.. [315078]
  7. களிறு: [ kaḷiṟu ] , s. a male elephant ஆண்யானை; 2. a boar; 3. a male shark, ஆண் சுறா; 4. the 13th lunar asterism, அஸ்த நக்ஷத்திரம்.. [249958]
  8. எறி: [ eṟi ] பெ. எறி-. [M. eṟi.] 1. Throw,fling; வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான். 2. Kick; உதை. 3. Blowing, as the wind; அடிக்கை.சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11). 4.Hint, allusion, insinuation, innuendo; குறிப்பாகச்சொல்லுகை. ஒர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும். (J.). [142864]
  9. பரவி: கலந்து
  10. உகுதல்: [ uku- ] 6 வி. intr. [K. ugu.] 1. Toshed or part with, as leaves from a tree; toshed, as feathers or hair; to become separated; உதிர்தல். போயுகு மிலைகள் (சி. சி. 1, 15). 2. To bestrewed, scattered; சிதறுதல். உண்க வுகாஅமைநன்கு (ஆசாரக். 21). 3. To be spilled; to fall.pour out; சிந்துதல். அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் (குறள், 720). 4. To trickle gently, aswater from a spring, or gush forth, as milk fromcows udder; சுரத்தல். (J.) 5. To wear off, passaway; to be lost; கெடுதல். இளமை யுகாநின்றமேனியும் (திருநூற். 45). 6. To fall down, fig. todie; சாதல். உக்கார் தலைபிடித்து (தேவா. 641, 4). 7.To melt, pine, languish, wither; கரைந்து தேய்தல். உக்கு விடுமென் னுயிர் (கலித். 138). 8. Toset, as heavenly bodies; அஸ்தமித்தல். உதயக்குன்றி னின்றுகு குன்றில் (கம்பரா. இராவணன்றா.39). 9. To fly about; பறத்தல். ஊதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான் (சீவக. 2014). 10. Tobe agitated; நிலைகுலைதல். நெஞ்சுக . . . கண்ணீர்மல்க (தஞ்சைவா. 150).. [138998]


kanmani tamil

ungelesen,
14.05.2019, 11:13:5614.05.19
an mintamil
இந்தப் பாடல் முதல் பகுதி சிதைந்துள்ளது; ஆதலால் எஞ்சிய பகுதிக்கு அனுமானித்தே பொருள் சொல்ல இயல்கிறது.

இது தமிழ் மண்ணில் வேந்தர் தலையெடுக்கும் முன்னர்; வேளிர் பரவி இருந்து நெல் வேளாண்மை செய்யும் முன்னர்; திணை மாந்தர் வாழ்ந்த காலத்து விளைச்சல், உணவுமுறை, வழிபாட்டு முறை, மக்கட்பிரிவுகள் முதலியவற்றை வரிசைப்படுத்துவதாக நான் உணர்கிறேன். 

இது ஒரு ஐயப்பொருள்; மேல்விவரத்திற்கு பல பாடற்பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பொருள் கண்டால் தான் தெளிவாகச் சொல்ல இயலும். 

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
நடுகல் வழிபாடு தான் காலத்தால் முற்பட்டது. அதாவது முன்னோர் வழிபாடே முதன்மை பெற்ற காலம் ஒன்று இருந்தது.

சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f6512be2-540d-4119-a9fc-378d07878361%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

ungelesen,
15.05.2019, 01:42:4315.05.19
an மின்தமிழ்
மிகவும் விசாரத்திற்கு உரிய பாடல். நமக்காக சிறப்பானச் செயல் புரிந்து மாண்ட ( நம் மூதாதையர், உறவினன், சுற்றியள்ள) அந்த மனிதனைப் போற்று. நான் உனக்கு இப்பூசை செய்கிறேன்- நீ எனக்கு இதைத் தா என வணங்கப்படும் எத்தெய்வமும் இல்லை என்பதே பொருள்.

( பாலும் தெளி... மூன்றும் தா) எனும் பாடலோடு இணைத்துப் பாருங்கள்.

rnk

MUNISAMY MK NATHAN

ungelesen,
15.05.2019, 03:34:1715.05.19
an மின்தமிழ்
"நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

வேதாந்த தத்துவம் கூறுவதாவது பிரம்மத்தை அவிச்சை மறைத்ததால் அறியாமை ஏற்பட்டது. ஆகையால் பிரம்மமே ஆன்மாவாகப் பொய்த்தோற்றமளிக்கின்றது. இதுவே வேதாந்த கடவுட் கோட்பாடு. ஆகையால் ஆன்மா இறைவன் என்னும் இரு பொருள் இல்லை மாறாக பிரம்மம் என்னும் ஒரு  பொருள் மட்டுமே உண்டு என்பதே அவர்தம் மத கோட்பாடு.  

இதை பரமான்மா சீவான்மா என்று பிரித்துக் கூறுவார். சீவான்மாவிற்கு அறியாமை நீங்கினால் அதுவே பரமான்மாவாகக் தோற்றமளிக்கும் அல்லது பிரம்மமாகி வியாபகத் தன்மைபெறும் என்பார் வேதாந்திகள். 

அத்தகைய வேதாந்த கோட்பாட்டை மறுத்துக் கூறப்பட்டதே அந்த பாடலின் இறுதி அடியாக இருக்க முடியும். .

உமியை அறியாமையை ஏற்படுத்தும் ஆணவம் என்னும் பொருளாக உவமைப்படுத்திக்  கொண்டு அரிசியை ஆன்மாவாக உருவகப்படுத்தி பாடப்பெற்றதே அவ்வரி.

உமியானது அரிசியை மறைத்திருக்கும் போது அரிசியின் உண்மைத் தன்மையை அறிய முடியாது. உமி நீங்க அரிசியின் உண்மைத் தன்மை தாமாகவே வெளிப்படும். அதற்காக அரிசியையே மூலப் பொருள் என்று கூற முடியுமா? அரிசி வித்தாக இயலாதே!  

அதுபோல ஆணவத்தால் ஏற்படும் அறியாமையை திருவருள் நீக்கிட ஆன்மா வியாபகத் தன்மையைப் பெற்றாலும் கூட அதுவே கடவுளாக முடியாது என்பதே இவ்வரியின் விளக்கமாக இருக்க முடியும்.

சைவ சித்தாந்தத்தை முறையாகப் பயின்றிருந்தால் இவ்வரியின் பொருளை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

அதற்கு மேல் வரியில் 'அல்லது' என்னும் சொல் உள்ளதால் அதற்கு முந்திய சொற்றொடர்களாலும் இதே போன்று வேறு உவமைகளையும் அப்புலவர் மறுத்துக் கூறியததாகத்தான் இருக்க முடியும்.

மு. கமலநாதன்
Allen antworten
Antwort an Autor
Weiterleiten
0 neue Nachrichten