(வெருளி நோய்கள் 401-405 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 406-410
உடுப்பு மாட்டி(coat hanger) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடுப்பு மாட்டி வெருளி.
உடுப்பு மாட்டி குறித்துத் தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சமே இது.
Kremastra என்னும் சொல் உடை மாட்டியைக்/ உடுப்பு மாட்டியைக் குறிக்கிறது.
00
உடுமீன்(starfish) மீதான அளவுகடந்த பேரச்சம் உடுமீன் வெருளி
விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும். விலங்கு வெருளியின் உட்பிரிவே இதுவும்.
நட்சத்திர மீன் என்று சொல்வதைவிட உடுமீன் என்பது சுருக்கமாக உள்ளது. எனவே, அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது.இரண்டும் ஒன்றுதான்.
00
உடைப் பேழை குறித்த வரம்பற்ற பேரச்சம் உடைப் பேழை வெருளி.
உள்ளறை/மறைவறை/ஒதுக்கறை/ உள்ளகப் பேழை முதலான அடைபகுதிகள் (Closets)குறித்த அளவில்லாப் பேரச்சம் உடைய அடைபகுதி வெருளி(Kamarakiphobia) உடையவர்களுக்கும் பெட்டி/பேழை/சிற்றறை மீதான பேரச்சம் உடைய இழுவைப் பெட்டி வெருளி(Cistulaphobia) உடையவர்களுக்கும் அறைகலன் வெருளி(Epiplaphobia) உடையவர்களுக்கும் உடைப் பேழை வெருளி(Vinitophobia) வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
00
உடைமைக்குறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடைமைக்குறி வெருளி.
நிறுத்தற்குறியீடுகள் குறித்த வெருளி உடையவர்களுக்கும் (pistaphobia) காற்புள்ளி வெருளி உடையவர்களுக்கும்(virguphobia) உடைமைக்குறி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
உட் கூரை (ceiling) குறித்த அளவுகடந்த பேரச்சம் உட் கூரை வெருளி.
தாழ்கூரை வெருளி(Minicelarophobia), உயர்கூரை வெருளி(Altocelarophobia) உள்ளவர்களுக்கு உட் கூரை வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5