முதலாம் இராஜேந்திர சோழன்

85 views
Skip to first unread message

ஓலைச்சுவடி

unread,
Dec 11, 2008, 2:43:45 PM12/11/08
to மின்தமிழ்
மின்தமிழ் அன்பர்களுக்கு கனிந்த வணக்கங்கள்,

அண்மையில் நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்' எனும் நூலில் முதலாம்
இராஜேந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஆனால்
முதலாம் இராஜேந்திரன் எந்த வயதில் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார், எந்த
வயதில் உயிர் நீத்தார் போன்ற குறிப்புகள் அங்கு இல்லாமல் இருந்தது.
அச்சோழ மன்னன் (1012-1044) 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக மட்டுமே
குறிப்புகள் இருந்தன.

மின்தமிழ் அன்பர்கள் பல நூல்களை ஆய்ந்திருப்பீர்கள். முதலாம்
இராஜேந்திரன் முடிசூட்டிக் கொண்ட வயதும் உயிர்நீத்த வயதும் அறியத்
தந்தீர்களானால் எனக்கு மிகப் பயனாக இருக்கும்.

நன்றி.

கி.சதீசு குமார்
http://olaichuvadi.blogspot.com/

vj kumar

unread,
Dec 11, 2008, 9:35:11 PM12/11/08
to minT...@googlegroups.com
சோழ அரசர்களின் வயதுகளுக்கு குறிப்புகள் இல்லை - அவர்களின்
மெய்கீர்த்தி ஆட்சி ஆண்டை தரும். ராஜ ராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின்
முக்கிய ஆண்டுகள் இணைத்துள்ளேன்.


958 சுந்தர சோழர் அரியணை ஏறுகிறார்.

959 சேவூர் போர் - ஆதித்ய கரிகாலன் சிங்கக்குட்டி போல பாண்டிய படைகளுடன் போரிட்டது

964 ராஜேந்திர சோழர் பிறந்த ஆண்டாக இருக்கலாம்.

969 ஆதித்ய கரிகாலன் கொலை

970 உத்தம சோழர் அரியணை ஏறுவது

973 சுந்தர சோழர் மறைவு

985 அருள் மொழி வர்மர் அரியணை ( உத்தம சோழருடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து
என்று ஒரு தகவல் )ராஜ ராஜர் என்ற பெயர் பெறுதல்

987 உத்தம சோழர் மறைவு / அல்லது பதவி நீத்தல்

993 ராஜ ராஜர் இலங்கை படை எடுப்பு

994 ராஜ ராஜர் சேர படை எடுப்பு ( கண்டலூர் சாலை ??)
???? மாலத்தீவு படை எடுப்பு

999 கங்கபாடி , நுரம்பபாடி படை எடுப்பு ( தற்போதைய கர்நாடகம் )

999 வெங்கி படைஎடுப்பு

1001 செம்பியன் மாதேவி மறைவு ( உத்தம சோழர் தாய் - பல கோவில்களை
கற்றளியாக மாற்றிய அற்புத அம்மை )

1003 சாளுக்ய ரட்டபாடி படை எடுப்பு ( ராஜேந்திரன் தலைமையில் )

1007 ஹோட்டுர் படை எடுப்பு ( ஹோட்டுர் கல்வெட்டு - ராஜேந்திரனின்
தலைமையில் - கொடூரமான காரியங்களை செய்ததாக கல்வெட்டு )

1008 உதகை படை எடுப்பு ( சேர போர் )

1010 பெரிய கோவில் பனி நிறைவு

1012 ராஜேந்திரர் அரியணை ஏறுவது - தன் தந்தையுடன் சேர்த்து ஆட்சி புரிதல்

1014 ராஜேந்திரர் அரசர் - ராஜ ராஜர் மறைவு ?? ( இருபத்தி ஒன்பது ஆட்சி ஆண்டுகள் )

1015 முதல் சோழ பிரதிநிதி கூட்டம் சீன சங் அரசவைக்கு விஜயம்

1018 ராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து ஆட்சி புரிதல் , இலங்கை படை எடுப்பு

1019 கங்கை நோக்கி

1020 இலங்கை போரில் வெற்றி - பாண்டிய குல ஹாரம் மீட்பு, இலங்கை அரசன்
மகிந்தன் மற்றும் அவன் மனைவி சிறை பிடிப்பு ( மதுரையில் பன்னிரண்டு
ஆண்டுகள் சிறை வைப்பு )

1021 மேலை சாளுக்ய படை எடுப்பு

1025 ஸ்ரீ விஜயம், கடாரம் கடல் வழி படை எடுப்பு

1031-௩௫ மேலை சாளுக்ய போர் வெற்றி, வெங்கி , களிடண்டி போர்

1033 இரண்டாவது குழ சீன சென்றடைகிறது . இதனுடன் ராஜேந்திர சோழர் போர்கள்
முடிவு - கங்கை கொண்ட சோழ புறத்தில் இருந்து செயல் படுத்தல்

1035 கங்கை கொண்ட சோழ புறம் கோவில் நிறைவு பெறுதல்

1044 ராஜேந்திர சோழர் மறைவு

i have factored the ages / dob - based on reasoning. since Rajathiraja
ascended throne in 1018 - you can back work what would have been his
age and his fathers age and arrive at the dates above.

rgds
vj

annamalai sugumaran

unread,
Dec 11, 2008, 9:51:01 PM12/11/08
to minT...@googlegroups.com
//994     ராஜ ராஜர் சேர படை எடுப்பு ( கண்டலூர் சாலை ??)
????    மாலத்தீவு படை எடுப்பு//
 
இது  காந்தளூர் கலமறுத்தால் அல்லவா ?
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

2008/12/12 vj kumar <vj.ep...@gmail.com>

ஓலைச்சுவடி

unread,
Dec 11, 2008, 10:46:18 PM12/11/08
to மின்தமிழ்
அன்பர் விஜே அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் இராஜேந்திரனின் வயதைக் கேட்டதற்கு காரணம், அண்மையில் மன்னன் மகள்
நாவலில் கீழ்கண்டவாறு படித்தேன்..

மன்னன் மகள்

அத்தியாயம் 35
பக்கம் 354
உருவிய வாள்கள், உரத்த குரல்கள்

// வந்தியதேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம்
பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர
அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை
அதிகமாகத் தட்டவில்லை//

இதில் அவருக்கு அகவை 60 என குறிப்பிடுகிறார் சாண்டில்யன்.

முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறிய சமயம் அவருக்கு அகவை 48. மன்னன் மகளில்
இராசராசர் உயிரோடில்லை. இராஜேந்திரன் அரியணையேறிய மூன்றாம் ஆண்டில்
இராசராசர் இறந்ததாகக் கணிக்கப்படுகிறது. அப்பொழுது இராஜேந்திரனுக்கு அகவை
ஐம்பதாக இருக்கலாம்..

இராசராசரின் தமக்கையை மணம் புரிந்த வந்தியதேவரின் அகவை 60, அதாவது தன்
மாமாவின் வயது தன்னைவிட 10 வயதுதான் அதிகம் என்று கூறுவது பொறுத்தமாக
இல்லை.

எனவே, சாண்டில்யன் தன் நாவலில் வந்தியதேவரின் வயதை தவறாகக்
குறிப்பிட்டிருக்கிறார்.

ஓலைச்சுவடி

unread,
Dec 11, 2008, 10:54:37 PM12/11/08
to மின்தமிழ்
இருப்பினும் ஒரு மனிதனின் பாதி வயது என்று எதைக் கூறுகிறார்கள். 60 வயதை
பாதி வயது பூர்த்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். இந்த சந்தேகத்தை
யாராவது தீர்த்து வைக்க முடியுமா?

அப்படி பார்த்தால்,

// வந்தியதேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம்
பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர
அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை
அதிகமாகத் தட்டவில்லை//

வந்தியதேவருக்கு அகவை எழுபதாக இருக்குமோ..?

மனிதன் தன் மணவாழ்க்கையை ஆயுளின் பாதியைக் கடந்துவிட்டதன் நினைவாக
அறுபதாம் கல்யாணமாகக் கொண்டாடுகிறார்களோ?


அன்புடன்,

vj kumar

unread,
Dec 11, 2008, 11:02:14 PM12/11/08
to minT...@googlegroups.com
dear satheesh

History is very much diff from historic fiction. If you want to pick
holes - you can pick many even in ponniyin selvan. Just work out the
age of Arul mozhi / rajendra - most probably Rajendra was born before
the assasination of adithya karikaala.

rgds
vj

2008/12/12 ஓலைச்சுவடி <Sathi...@gmail.com>:

--
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

Message has been deleted

annamalai sugumaran

unread,
Dec 11, 2008, 11:33:59 PM12/11/08
to minT...@googlegroups.com
//இருப்பினும் ஒரு மனிதனின் பாதி வயது என்று எதைக் கூறுகிறார்கள். 60 வயதை

பாதி வயது பூர்த்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். இந்த சந்தேகத்தை
யாராவது தீர்த்து வைக்க முடியுமா?//
 
 
அன்புள்ள சதிஷ்
 
நமது ஜோதிட முறைப்படி , மனிதனுக்கு அவன் பிறக்கும் பொது உள்ள கோளின் நிலைப்படி ,பலன்கள்  அந்த்த கோள்களின் காலம் ,திசை வரும்போது தான் நடக்கும் எனக் கண்டிருக்கிறார்கள் .
அதன்படி மொத திசைகளின் காலம்  12 0 வருடம் .
எனவே அவன் ஆயுளில் பாதி  60 ,
ஷச்டியப்ப்த பூர்த்தி என்பது .
பாதி  ஆயுள் முடிந்த  60  வயது .
நேற்றுகூட ஒரு நண்பரின்  ஷச்டியப்ப்த பூர்த்திக்கு திருக்கடையூர் சென்றிந்தேன் .
அந்தசாக்கில் ஒரு பயணம் .
திசைகள் முறை நம் இந்திய ஜோதிட முறைக்கு மட்டும் உள்ள தனி முறை .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

2008/12/12 ஓலைச்சுவடி <Sathi...@gmail.com>
இருப்பினும் ஒரு மனிதனின் பாதி வயது என்று எதைக் கூறுகிறார்கள். 60 வயதை

பாதி வயது பூர்த்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். இந்த சந்தேகத்தை
யாராவது தீர்த்து வைக்க முடியுமா?

அப்படி பார்த்தால்,

--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com

Narayanan Kannan

unread,
Dec 11, 2008, 11:54:33 PM12/11/08
to minT...@googlegroups.com
2008/12/12 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> அதன்படி மொத திசைகளின் காலம் 12 0 வருடம் .
> எனவே அவன் ஆயுளில் பாதி 60 ,
> ஷச்டியப்ப்த பூர்த்தி என்பது .
> பாதி ஆயுள் முடிந்த 60 வயது .

அட! அப்படியா!! அப்புறம் என்ன 60 வயசு கிழடு என்பது? 40 வயதில் நம்ம ஊர்
பெண் கிழவி என அழைக்கப்படுகிறாள். இது கொடுமை!

ஜெர்மனியில் 40 வயதுக்காரர் இளைஞர். மூத்தோர் என்றால் 80க்கு மேலே என்று பொருள்.

அப்படியெனில் ஜோதிஷ முறைப்படி இராமானுஜர் ஒருவர்தான் 120 கணக்கைத்
தொட்டவர்! ஆச்சர்யம்!! ஆதிசேஷன் ஆச்சே!!

க.>

Tthamizth Tthenee

unread,
Dec 12, 2008, 8:10:21 AM12/12/08
to minT...@googlegroups.com
அறுபது வருடங்கள் இருக்கின்றன
ஒரு மனிதன் அறுபது வயதை அடைந்தவுடன் அவன் ஒரு சுற்று முடித்துவிட்டான் என்று பொருள்
 சர்வதாரி வருடத்தில் பிறந்த ஒருவர் மீண்டும் சர்வதாரி வருடம் முடியும் வரை இருந்தால் ஒரு சுற்று முடிகிறது
மொத்த ஆயுள் காலம் 120 வருடங்கள் என்றால்
அந்த மனிதர் பாதி ஆயுளைக் கடந்துவிட்டார் என்று பொருள், அடுத்த சுற்று ஆரம்பித்து மீண்டும் சர்வதாரி வருடம் வரை இரண்டாவது சுற்று
ஆகவே பாதி வயது என்பது அறுபதாகிறது
 
அறுத்தல் என்றால் இரண்டாக்குதல் என்று பொருள்
ஆக இரண்டாக்கப்பட்ட 120 ஆண்டுகளில் ஒரு பகுதியாகிய 60 வருடங்களை பாதி ஆயுள் என்று கொள்ளலாமே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 

இமலாதித்தன்

unread,
Feb 16, 2010, 2:21:34 AM2/16/10
to minT...@googlegroups.com






தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2008/12/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--~--~---------~--~----~------------~-------~--~----~
 "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---


Reply all
Reply to author
Forward
0 new messages