
மெலியும் என் நெஞ்சு
செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெருவரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே! (குறுந். 187)
கபிலர்
பொருள்:
தோழி! சிவந்த மலைச் சாரலில் வருடை மான் குட்டி,
தன் தாய்மடியில் பாலை வயிறு நிறையக் குடித்துவிட்டு
மலையின் நிழலில் துள்ளி விளையாடும் நாட்டிற்குத் தலைவன்,
மலையை விடவும் வலிமையானவன் என்று கருதாமல்
என்னுடைய மனம், அவனை எண்ணி எண்ணி மெலிகிறது.
The man from the country-where a mountain goat kid
Drinks its mother's abundant, sweet milk to the full,
And romps around in the steep mountain's shade-
Is tougher than rock, my friend.
My heart is suffering,
Not considering that he is strong.