நன்னூல் தொடரடைவு

30 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jan 10, 2023, 2:12:52 AM1/10/23
to மின்தமிழ்
நன்னூல் தொடரடைவு
-----------------------------

அன்புடையீர்,
இன்று (10-1-2023) சற்று நேரத்திற்கு முன், நன்னூல் நூலுக்கான தொடரடைவு
உருவாக்கும் பணி நிறைவுற்று அனைத்துக் கோப்புகளும் எனது
tamilconcordance.in என்ற இணயதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன.
நான் எடுத்துக்கொண்ட நூல்கள் அனைத்திலும் இதுவே மிகச் சிறிய நூல்
என்பதால் தொடங்கிய நான்கு நாள்களுக்குள் இப்பணி நிறைவுபெற்றது.

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

என்றார் மகாகவிஞர் பாரதியார். இது பாப்பாக்களுக்குரிய பாடல் என்றாலும்,
என்னால் ஓடியாட விளையாட முடியாது என்றாலும் ”ஓய்ந்திருக்கலாகாது”
என்ற சொல் எனக்காகவே எழுதப்பட்டது என உணர்கிறேன்.

எனக்கென்று கிடைக்கும் நேரம் அனைத்தையும் இப்பணிக்காகவே
செலவிடுகிறேன். ஒவ்வொரு பணியும் முடியும்போதும் இன்னும்
செய்யவேண்டிய பணிகளையே எண்ணிப்பார்க்கிறேன்.

The woods are lovely, dark and deep,  
But I have promises to keep,  
And miles to go before I sleep,  
And miles to go before I sleep.

என்ற  ROBERT FROST - இன் அழகிய பாடல் என்னைப்போன்ற
ஒவ்வொருவருவருக்காகவும் எழுதப்பட்டது.

Yes, I have miles to go before I sleep.

இது தமிழ்மக்களுக்கு நான் அளிக்கும் பொங்கல் பரிசு.

பொங்கலோ பொங்கல்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.

அன்புடன்,
ப.பாண்டியராஜா


தேமொழி

unread,
Jan 10, 2023, 2:41:46 AM1/10/23
to மின்தமிழ்
பொங்கல் பரிசுக்கு நன்றி ஐயா.  
பொழுதைப் பயனுள்ள வகையில் செலவழிக்க உங்களை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். 
மீண்டும் பல பரிசுகளை எதிர் நோக்கியுள்ளேன். 
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். 
அன்புடன் 
தேமொழி 

Eskki Paramasivan

unread,
Jan 12, 2023, 10:03:49 AM1/12/23
to மின்தமிழ்
அன்பு நிறை தமிழ்ச்செம்மல் திரு பாண்டியராஜா அவர்களே

உங்கள் தொடரடைவு நூல்கள் எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் உள்ள ஆரியன் காவு குகை வழி இருப்புப்பாதையைத் 
தான் நினைவு படுத்துகிறது.அது ஒரு வித அச்சத்தையும் இருட்டையும் தான் அந்தச்சிறு
வயதில் என் முன் நிறுத்தும்.அதன் பின் வருகின்ற காற்றும் வெளிச்சமும் மிகவும் நன்றாகவே இருக்கும்.
நம் தமிழ் இலக்கியங்கள் அப்படியொரு அயல் மொழி அடைசலில் சிக்கி யிருந்தது."அந்த ஆரியன் காவு"
வை நான் பின்னோக்கி தள்ளி விட்டு ஓடுவதாக நினைக்கிறேன்.அதற்கு உங்கள் தொடரடைவுகள் பெரிதும்
உதவுகின்றன.அந்த குகைவழி எனும் ஏதோ ஒரு மலைப்பாம்புக்குள் விழுங்கப்படாமல் தடுப்பதற்காகவே
உங்கள் தமிழ் நூல்கள் அணி அணியாய் வலம் வருகின்றன.
ஓய்வின்றி உழைப்பதாக எழுதியிருந்தீர்கள்.அது உண்மையிலும் உண்மை.அதற்கு தமிழர்கள் யாவரும்
கடமைப்பட்டுள்ளார்கள்.

Yes, I have miles to go before I sleep.
என்று ராபர்ட் ஃப்ராஸ்டின் வரிகளை ஒரு ஊக்கத்தின் அடையாளமாக அடைகாத்துக்கொண்டிருக்கிறீர்கள்
என்பதை அறியும்போது எங்களுக்கும் அது எழுச்சி ஊட்டுகிறது."நன்னூல்" மட்டும் அல்ல. இன்னும் இது போன்ற 
நூல்கள் பெருமளவில் உங்களோடு தொடரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
அந்த வரிகள் உங்களைப்பொறுத்த அளவில் இப்படித்தான் இருக்கும்.
"யெஸ் ஐ ஹேவ் "நூல்ஸ்" டு கோ பிஃபோர் ஐ ஸ்லீப்"
உங்கள் தமிழ்த்தொண்டு எங்களை சிலிர்க்க வைக்கிறது.மனமார்ந்த பாராட்டுகள்.

இப்படிக்கு
அன்புடன்
சொற்கீரன்
எனும் ருத்ரா இ பரமசிவன்.





செவ்வாய், 10 ஜனவரி, 2023அன்று பிற்பகல் 1:11:46 UTC+5:30 மணிக்கு தேமொழி எழுதியது:

Pandiyaraja Paramasivam

unread,
Jan 13, 2023, 3:14:00 AM1/13/23
to mint...@googlegroups.com
அன்புள்ள ருத்ரா அவர்களுக்கு,
தங்களுடைய நீண்ட கடிதமும் பாராட்டுரையும் கண்டேன். மிக்க நன்றி. தங்களைப் போன்றோரின் ஊக்கமொழிகள் என்னை மேலும் மேலும் பணிசெய்யத் தூண்டிவிடுகின்றன. தங்களைப் போன்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவனாக இருக்க முயல்கிறேன். மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gFoO2M9b0Uw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/12ccef7c-42a9-496c-ac38-216d6cc9047fn%40googlegroups.com.

Chandra Sekaran

unread,
Jan 13, 2023, 3:19:04 AM1/13/23
to mint...@googlegroups.com
தமிழுலகம் மறக்க முடியாத மீசெயல் தங்கள் செயல். 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAWeUvm5X3LEKnL%2BqO_6NO9Zmi8iC4m52xugBpUrC02Xjw%40mail.gmail.com.

Sethuraman Muthusamandi

unread,
Jan 13, 2023, 6:32:22 AM1/13/23
to mint...@googlegroups.com
நன்னூல்தொடரமைவு பொங்கலபரிசாக அளித்த உங்களைமிகப்பாராட்டுகின்றேன். அவ்வை எம்முளன் ஒரு பொருநன் என அதிகமானைப்பாராட்டியது
நினைவுக்கு வருகின்றது.

Pandiyaraja Paramasivam

unread,
Jan 18, 2023, 12:09:36 PM1/18/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா.

Reply all
Reply to author
Forward
0 new messages