கவிஞர் ஈரோடு தமிழ் அன்பன் நேற்று தன் 92 ஆவது வயதில் காலமாகி விட்டார் .
அவரைப்பற்றி ஒரு சில செய்திகள் :
கவிஞர் ஈரோடு தமிழ் அன்பன் வானம்பாடி இயக்க கவிஞர்களில் ஒருவர் .
மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களோடு சென்னை புது கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி செய்தவர் .
கவிஞர் வாலி அவர்களின் ஒரே மகனான பாலாஜி அவர்களின் தமிழ் பேராசிரியர் .
கவிஞர் கண்ணதாசன் எழுதிய "வாராதிருப்பாரோ வண்ணமலர் கண்ணன் அவன் “எனத்தொடங்கும் பாடலில் ,
கண்ணதாசன் உள்ளூரில் இல்லாத நிலையில் மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி அவர்கள் பாடல் வரிகளில் மெட்டுக்குள் இட்டு நிரப்ப இன்னும் ஒரு சிறு வார்த்தை தேவை படுகிறது என்ன செய்வது ?என்று தவித்து கொண்டு இருந்தபோது அங்கெ கதை விவாதத்திற்கு வந்த ஈரோடு தமிழ் அன்பன் அவர்கள் சொன்ன வார்த்தைதான் “அவன்”