தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
தமிழ் மரபுத் திணை மாதாந்திர இதழ்—39[ஜனவரி — 2026]
திருவள்ளுவர் ஆண்டு 2056 - தை
வெளியீடு. . .
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வெளியிடும் மாதாந்திர மின்னிதழ்…
தமிழ் மரபுத் திணை இதழ்—39[ஜனவரி — 2026] இன்று வெளியீடு காண்கிறது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “தமிழ் மரபுத் திணை” மாதாந்திர மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “தமிழ் மரபுத் திணை” மாதாந்திர இதழ் தொகுக்கப்படுகின்றது.
தமிழ் மரபுத் திணை இதழ் வரிசையில் இந்த 39வது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இதழின் பொறுப்பாசிரியர் திரு. மரிய ஜெரின் அவர்கள்.
இதழ் இந்தப் பதிவின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
https://archive.org/details/tamil-marabu-thinai-39-january-2026
சுட்டியில் இணையம் வழியாகவும் படிக்கலாம்
ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : திரு. மரிய ஜெரின்
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு