வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்

3 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 13, 2026, 5:45:58 PM (21 hours ago) Jun 13
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ       அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன் 
     14 June 2026      



(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1566-1570

  1. படிப் பொறி வெருளி – Balticophobia /Xeroxophobia

ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.
சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும் நிறுவனம் ஒன்றின் பெயர். அதன் உருவாக்கமான படிப்பொறியில் எடுக்கப்படும் படிகளையும் நாம் அதே பெயரிலேயே அழைக்கிறோம்.
00

  1. படிப்புக் குறைபாட்டு வெருளி – Dyslexiaphobia

அறிதிறன் குறைவாக இருந்து படிப்பில் குறைபாடு நேர்வதால் (dyslexia) ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் படிப்புக் குறைபாட்டு வெருளி.
00

  1. பட்டான் வெருளி – Bataanphobia

பட்டான் மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் பட்டான் வெருளி.
பட்டான் (Bataan) அல்லது பட்டஆன்(Battaan) என்பது பிலிப்பீன்சில் மத்திய உலூசோன் மண்டலத்தில் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இதன் தலைநகரம் பலங்கா(Balanga) ஆகும்.
00

  1. பட்டாணி வெருளி – Arakaphobia

பட்டாணி மீதான அளவுகடந்த பேரச்சம் பட்டாணி வெருளி.
Araka என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பட்டாணிகள் எனப் பொருள்.
00

  1. படுக்கை நனைப்பு வெருளி – Nyctourinariphobia

படுக்கை நனைப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் படுக்கை நனைப்பு வெருளி.
சிறுவர் சிறுமியர் படுக்கையில் சிறுநீர் இருந்துவிட்டால் கடுமையாக அணுகினால் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி வேறு சில பாதிப்புகள் ஏற்படும். கனிவாக நடந்து கொண்டும் இரவு படுப்பதற்குச் செல்வதற்கும் தண்ணீர் அருந்துவதற்கும் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
Nyctourinari = Nyct – ourinari = இரவில் சிறுநீர் கழித்தல். அஃதாவது இரவுநேரம் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
காண்க: படுக்கை வெருளி(Clinophobia); ஈரக்கனவு வெருளி(Oneirogmophobia)
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages