நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தமிழ் அறிஞரிடம் "ஒரு" மற்றும் "ஓர்" ஆகிய வடிவங்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்று கேட்டேன். அவர் ஆங்கிலத்தில் a மற்றும் an போல்தான் என்றார். அதாவது, vowelக்கு முன் "ஓர்" என்பதும், consonantக்கு முன் "ஒரு" என்பதும் பயன்படுத்தப்பட வேண்டும். அதிலிருந்து அந்த விதிமுறையை அணுசரித்து வருகிறேன். வேறு யாராவது இதற்கு மாற்றாகப் பயன்படுத்தினால், இதை ஒரு பிழையாக எடுத்துக் கொள்வேன்.ஆனால், தமிழ் மொழி மீது ஆளுமை வைத்திருப்பவர்கள் சிலர் இந்த விதிமுறையைத் தாண்டும்போது மனம் குழம்புகிறது. எடுத்துக் காட்டாக, திருமதி தேமொழி சுட்டியிருக்கும் பறநானூற்றுக் கட்டுரையில் இவ்வாறு உள்ளது "பரவலாக உள்ள ஓர் கருத்து". இதை எவ்வாறு புரிந்து கொள்வது?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுபா அவர்களுக்கும் தேமொழி அவர்களுக்கும் நன்றி.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கோயில் திருப்பதிகம் – எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
சுபா அவர்களுக்கும் தேமொழி அவர்களுக்கும் நன்றி.இன்னும் சில வார்த்தைகள் எழுதுவதில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணம், சரியாகப் பாதி பேர் கருத்துகள் என்றும் பாதி பேர் குருத்துக்கள் என்றும் எழுதுகிறார்கள். பெரும்பான்மை பக்கம் சாயக் கூட முடியவில்லை. இரண்டும் 50-50
இது ஒலி நயத்துக்காக. அவ்வளவே.
'ஒரு' பின் உயிர் நான் பார்த்ததில்லை. 'ஓர்' பின் உயிர்மெய் ஏராளம். சங்கப்பாடல்களில் பல உண்டு.
rnk
rnk
rnk
ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்கு முன் an பயன்படுத்தக் காரணம் என்னென்றால் இரண்டு உயிரெழுத்துகளை தொடர்ந்து உச்சரிப்பதைவிட அவற்றுக்கு இடையில் ஒரு மெய் எழுத்து சேர்த்துவிட்டால் எளிதாக உச்சரிக்க இயலும். இங்கிலாந்தில் "draw and"யை "draw r and" உச்சரிப்பார்கள், அதாவது இரண்டு உயிரெழுத்துகளுக்கும் இடையே " r " சேர்ந்துவிடும். இதற்கு பெயர் Intrusive r. இதைப் பற்றி ஒரு காணொளியைப் பார்ப்போம் -
தேமொழி அவர்களே நீங்கள் செய்யுள் பகுதிகளிலிருந்து எடுத்துரைக்கும் எடுத்துக் காட்டுகள் பொருந்துமா என்பது தெரியவில்லை.
கண்மணி அவர்களே,
Tamilconcordance.in வழி பார்த்ததை எழுதினேன். தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள்- இவற்றில் ஓர் பின் உயிர்மெய் ஏராளம், ஏராளம்.
| Source:
http://tamilconcordance.in/SANGconc-1-oo1.html#%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D |
||||||||||||
| 1 | X | வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்/நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு - முல் 43,44 | ||||||||||
| 2 | X | ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை - மலை 229 | ||||||||||
| 3 | X | வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் - நற் 32/4 | ||||||||||
| 4 | X | எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் - நற் 62/7 | ||||||||||
| 5 | X | உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே - நற் 310/11 | ||||||||||
| 6 | X | ஓர் யான் மன்ற துஞ்சாதேனே - குறு 6/4 | ||||||||||
| 7 | X | ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு - குறு 28/2 | ||||||||||
| 8 | X | பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்/தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு - குறு 246/3,4 | ||||||||||
| 9 | X | செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே - குறு 304/8 | ||||||||||
| 10 | X | காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே - குறு 308/7 | ||||||||||
| 11 | X | செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே - குறு 377/5 | ||||||||||
| 12 | X | யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் - ஐங் 237/2 | ||||||||||
| 13 | X | இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை - பதி 19/24 | ||||||||||
| 14 | X | போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு - பரி 7/56 | ||||||||||
| 15 | X | அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் - பரி 9/75 | ||||||||||
| 16 | X | ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் - பரி 11/93 | ||||||||||
| 17 | X | கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் - பரி 11/100 | ||||||||||
| 18 | X | புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை - பரி 24/51 | ||||||||||
| 19 | X | உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா - பரி 29/1 | ||||||||||
| 20 | X | காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர்/தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக - கலி 36/18,19 | ||||||||||
| 21 | X | தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்/நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் - கலி 37/11,12 | ||||||||||
| 22 | X | தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/13 | ||||||||||
| 23 | X | தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/17 | ||||||||||
| 24 | X | புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/21 | ||||||||||
| 25 | X | புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் - கலி 47/2 | ||||||||||
| 26 | X | வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் - கலி 47/6 | ||||||||||
| 27 | X | நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் - கலி 51/4 | ||||||||||
| 28 | X | ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர்/வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் - கலி 56/6,7 | ||||||||||
| 29 | X | பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர்/நல்கூர்ந்தார் செல்வ மகள் - கலி 56/11,12 | ||||||||||
| 30 | X | இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்/ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் - கலி 65/24,25 | ||||||||||
| 31 | X | ஓர் யாட்டு ஒரு கால் வரவு - கலி 71/26 | ||||||||||
| 32 | X | தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்/புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு - கலி 82/23,24 | ||||||||||
| 33 | X | கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே - கலி 92/2 | ||||||||||
| 34 | X | தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்/பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே - கலி 92/25,26 | ||||||||||
| 35 | X | நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய - கலி 93/34 | ||||||||||
| 36 | X | ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்/வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி - கலி 96/35,36 | ||||||||||
| 37 | X | முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர்/புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் - கலி 97/6,7 | ||||||||||
| 38 | X | முறுவலார்க்கு ஓர் நகை செய்து - கலி 98/38 | ||||||||||
| 39 | X | அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்/வெள் ஏற்று எருத்து அடங்குவான் - கலி 104/18,19 | ||||||||||
| 40 | X | நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் - கலி 105/57 | ||||||||||
| 41 | X | மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர்/ஆயனை அல்லை பிறவோ அமரருள் - கலி 108/11,12 | ||||||||||
| 42 | X | தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் - கலி 108/27 | ||||||||||
| 43 | X | களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ - கலி 108/29 | ||||||||||
| 44 | X | காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை - கலி 108/49 | ||||||||||
| 45 | X | புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்/முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் - கலி 115/4,5 | ||||||||||
| 46 | X | கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர்/மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் - கலி 117/6,7 | ||||||||||
| 47 | X | மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்/போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள - கலி 117/7,8 | ||||||||||
| 48 | X | வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் - கலி 120/17 | ||||||||||
| 49 | X | குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ - கலி 135/8 | ||||||||||
| 50 | X | வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ - கலி 135/11 | ||||||||||
| 51 | X | புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ - கலி 135/14 | ||||||||||
| 52 | X | நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் - கலி 146/15 | ||||||||||
| 53 | X | வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்/தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் - அகம் 7/11,12 | ||||||||||
| 54 | X | நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - அகம் 20/16 | ||||||||||
| 55 | X | உடை மதில் ஓர் அரண் போல - அகம் 45/18 | ||||||||||
| 56 | X | ஓர் யான் ஆகுவது எவன்-கொல் - அகம் 82/17 | ||||||||||
| 57 | X | ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ - அகம் 86/22 | ||||||||||
| 58 | X | கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே - அகம் 96/10 | ||||||||||
| 59 | X | ஓர் எயில் மன்னன் போல - அகம் 373/18 | ||||||||||
| 60 | X | விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்/தலைப்பாடு அன்று அவன் ஈகை - புறம் 70/17,18 | ||||||||||
| 61 | X | இன்னும் ஓர் யான் அவா அறியேனே - புறம் 137/3 | ||||||||||
| 62 | X | இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்/பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் - புறம் 140/7,8 | ||||||||||
| 63 | X | பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்/தேற்றா ஈகையும் உளது-கொல் - புறம் 140/8,9 | ||||||||||
| 64 | X | செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் - புறம் 150/7 | ||||||||||
| 65 | X | பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் - புறம் 152/13 | ||||||||||
| 66 | X | நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்/வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - புறம் 152/23,24 | ||||||||||
| 67 | X | காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்/வாணிக பரிசிலன் அல்லேன் பேணி - புறம் 208/6,7 | ||||||||||
| 68 | X | இன்னது ஓர் காலை நில்லலன் - புறம் 216/11 | ||||||||||
| 69 | X | இனையது ஓர் காலை ஈங்கு வருதல் - புறம் 217/6 | ||||||||||
| 70 | X | இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்/கரம்பை சீறூர் நல்கினன் எனவே - புறம் 285/16,17 | ||||||||||
| 71 | X | சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்/தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே - புறம் 311/6,7 | ||||||||||
| 72 | X | பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்/தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட - புறம் 320/4,5 | ||||||||||
| 73 | X | ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே - புறம் 338/12 | ||||||||||
| 74 | X | சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்/பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு - புறம் 394/14,15 | ||||||||||
| 75 | மயில் ஓர் அன்ன சாயல் மாவின் - மது 706 | |||||||||||
| 76 | வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி - நற் 25/10 | |||||||||||
| 77 | உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி - நற் 37/2 | |||||||||||
| 78 | ஓர் எயின் மன்னன் போல - நற் 43/11 | |||||||||||
| 79 | உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் - நற் 72/3 | |||||||||||
| 80 | குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன - நற் 271/8 | |||||||||||
| 81 | மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் - நற் 301/4 | |||||||||||
| 82 | கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் - நற் 301/5 | |||||||||||
| 83 | பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்/ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து - நற் 318/6,7 | |||||||||||
| 84 | பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் - நற் 328/4 | |||||||||||
| 85 | யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை - குறு 31/4 | |||||||||||
| 86 | பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே - குறு 31/6 | |||||||||||
| 87 | அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் - குறு 33/1 | |||||||||||
| 88 | நீர் ஓர் அன்ன சாயல் - குறு 95/4 | |||||||||||
| 89 | தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே - குறு 95/5 | |||||||||||
| 90 | ஓர் ஏர் உழவன் போல - குறு 131/5 | |||||||||||
| 91 | ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த - குறு 172/5 | |||||||||||
| 92 | வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி - குறு 211/5 | |||||||||||
| 93 | ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் - குறு 231/1 | |||||||||||
| 94 | கன்று இல் ஓர் ஆ விலங்கிய - குறு 260/7 | |||||||||||
| 95 | ஓர் இல் பிச்சை ஆர மாந்தி - குறு 277/3 | |||||||||||
| 96 | கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை - குறு 282/2 | |||||||||||
| 97 | ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை - குறு 295/4 | |||||||||||
| 98 | நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் - குறு 312/4 | |||||||||||
| 99 | தமர் ஓர் அன்னள் வைகறையானே - குறு 312/8 | |||||||||||
| 100 | ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை - பதி 90/14 | |||||||||||
| 101 | யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே - பதி 90/52 | |||||||||||
| 102 | நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65 | |||||||||||
| 103 | நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65 | |||||||||||
| 104 | மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய - பரி 5/25 | |||||||||||
| 105 | ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ - பரி 6/37 | |||||||||||
| 106 | தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர்/யாறு உண்டோ இ வையை யாறு - பரி 6/92,93 | |||||||||||
| 107 | தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் - பரி 16/25 | |||||||||||
| 108 | நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் - பரி 20/65 | |||||||||||
| 109 | ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் - கலி 5/14 | |||||||||||
| 110 | தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்/அவலம் படுதலும் உண்டு - கலி 19/12,13 | |||||||||||
| 111 | வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலி 23/9 | |||||||||||
| 112 | அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் - கலி 23/11 | |||||||||||
| 113 | சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் - கலி 23/13 | |||||||||||
| 114 | இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை - கலி 49/13 | |||||||||||
| 115 | ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின் - கலி 66/19 | |||||||||||
| 116 | ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி - கலி 68/7 | |||||||||||
| 117 | ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் - கலி 71/11 | |||||||||||
| 118 | யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்/ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை - கலி 89/1,2 | |||||||||||
| 119 | என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று - கலி 89/4 | |||||||||||
| 120 | பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்/ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ - கலி 147/10,11 | |||||||||||
| 121 | இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே - அகம் 12/5 | |||||||||||
| 122 | ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் - அகம் 86/20 | |||||||||||
| 123 | தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் - அகம் 117/12 | |||||||||||
| 124 | முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் - அகம் 212/5 | |||||||||||
| 125 | எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் - அகம் 257/4 | |||||||||||
| 126 | ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ - அகம் 305/8 | |||||||||||
| 127 | குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் - அகம் 335/14 | |||||||||||
| 128 | ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் - அகம் 369/24 | |||||||||||
| 129 | தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் - அகம் 385/1 | |||||||||||
| 130 | என் ஓர் அன்ன தாயரும் காண - அகம் 385/2 | |||||||||||
| 131 | நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் - புறம் 5/4 | |||||||||||
| 132 | நும் ஓர் அன்ன வேந்தர்க்கு - புறம் 45/8 | |||||||||||
| 133 | நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே - புறம் 47/11 | |||||||||||
| 134 | அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி - புறம் 51/4 | |||||||||||
| 135 | ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல - புறம் 176/10 | |||||||||||
| 136 | பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் - புறம் 183/3 | |||||||||||
| 137 | பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே - புறம் 189/6 | |||||||||||
| 138 | நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன - புறம் 192/3 | |||||||||||
| 139 | ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் - புறம் 194/1 | |||||||||||
| 140 | ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் - புறம் 194/1 | |||||||||||
| 141 | நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும் - புறம் 198/14 | |||||||||||
| 142 | நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் - புறம் 227/8 | |||||||||||
| 143 | நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே - புறம் 246/15 | |||||||||||
| 144 | ஓர் இல் கோயின் தேருமால் நின்னே - புறம் 300/6 | |||||||||||
| 145 | உளன் என வெரூஉம் ஓர் ஒளி - புறம் 309/6 | |||||||||||