தமிழில் தட்டச்சு செய்வதற்கு . . .

15 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 7, 2026, 2:51:35 PM (2 days ago) Oct 7
to மின்தமிழ்
tamil typing.jpg

கடந்த சில நாட்களாக கணினியில் தமிழில் தட்டச்ச முடியவில்லை. காரணம் புதிய மடிக்கணினி. இதில் விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருப்பதால் பழைய தமிழ் தட்டச்சு மென்பொருள் வேலை செய்யவில்லை.
தமிழ் தட்டச்சு செய்ய இதுவரை நான் NHM Writer மென்பொருளைப் பயன்படுத்தி வந்தேன். ஆகவே அதனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யலாம் என்று முயற்சி செய்தால் அனைத்தும் தோல்வி. இப்போது இந்த மென்பொருளை ”கீழடி” என்ற பெயரில் புதிதாக மாற்றி இருக்கின்றார்கள். பழைய மென்பொருள் வலைப்பக்கத்தில் எங்கு வலைவீசி தேடினாலும் கிடைக்கவில்லை. புதிய மடிக்கணினி வந்தால் A-Z எல்லா மென்பொருள்களையும் மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டி வரும். அந்த வகையில் தமிழ் எழுத்துருவை தட்டச்சு செய்ய கடந்த சில நாட்களாக செய்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது.
தோழர் நாணாவிடம் பேசினால் ஏதும் யோசனை கிடைக்குமே என்று கேட்டுப் பார்த்தேன். கீழடி மென்பொருளைப் பயன்படுத்துங்கள். தமிழ் இணையக் கல்வி கழக வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லி லிங்க் அனுப்பி வைத்தார்.
உடனே இன்ஸ்டால் செய்து சோதித்துப் பார்த்தேன். அழகாக தட்டச்சு செய்ய முடிகிறது.
இதனை சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்த பிறகு ”கீ” என்ற அழகிய கிறுக்கல் எழுத்து தெரிகிறது. இதனை உருவாக்கியவர் நானா தான் என்று அறிந்து கொண்டேன். கலைஞரின் கையெழுத்தில் இந்த எழுத்தை வடிவமைத்திருக்கின்றார்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி!
இது விண்டோஸ் 10, 11 இரண்டிலும் வேலை செய்கிறது.
புதிதாக தமிழ் தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தக் கீழடி மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
-சுபா

 தமிழ் தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்க  . . .
https://www.tamilvu.org/ta/unicode

தமிழ் எழுத்துரு . . .
https://tamilfontstudio.net/fonts


இள. பைந்தமிழ் ராஜா

unread,
12:34 AM (3 hours ago) 12:34 AM
to mint...@googlegroups.com

வணக்கம் அம்மா,

நான் என் கணினியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் கூறும் முறையையே பயன்படுத்துகிறேன், இந்த முறை மிகவும் எளிமையாக உள்ளது. எழுத்துருவாக RMRL (ம) Onemai Foundation இணைந்து வெளியிட்ட கொற்கை (Korkai) எழுத்துருவை பயன்படுத்துகிறேன், அவர்கள் குறிப்பிட்டது போலவே இந்த எழுத்துரு காண்பதற்க்கும் படிப்பதற்க்கும் – ஒரு அமைதியை கொடுப்பதாக தோன்றுகிறது.

காணொளி: https://youtube.com/shorts/qr61-BiXVgY?si=6SVMKhhvfKi771D_ 

கொற்கை எழுத்துரு: https://tamilfontstudio.net/fonts


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/137809d7-8032-42b6-b823-6361a06e72adn%40googlegroups.com.


--
E. Painthamizh Raj​a
----------------------------------
​​"Steadfast in Aṟam​"


@PainthamizhRaja
Reply all
Reply to author
Forward
0 new messages